விஜய் நடித்திருக்கும் காவலன் படத்தை திரையிட ஆறு வார காலத்திற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
காவலன் படத்தின் வெளிநாட்டு உரிமையை தந்த்ரா என்ற நிறுவனத்துக்கு தயாரிப்பாளர் விற்றிருக்கிறார். பிறகு படத்தின் ஒட்டுமொத்த விநியோக உரிமையை தயாரிப்பாளரும், இயக்குனருமான ஷக்தி சிதம்பரம் வாங்கியுள்ளார். இவர் ஒட்டுமொத்த உரிமையை வாங்கிய பிறகு தந்த்ரா நிறுவனம் வாங்கிய வெளிநாட்டு உரிமையை ரத்து செய்ததாக தெரிகிறது. இதனை எதிர்த்து தந்த்ரா நிறுவனம் நீதிமன்றம் செல்ல, அதனைத் தொடர்ந்து இந்த இடைக்காலத் தடையை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும் இது குறித்து தயாரிப்பாளரிடம் விளக்கமும் கேட்டுள்ளது.
ஷக்தி சிதம்பரம் இயக்கிய ராஜாதிராஜா மோசமான படம் என்று சுஹாசினி விமர்சனம் செய்தபோது அதனை படத்தின் ஹீரோ லாரன்ஸ், ஷக்தி சிதம்பரம் உள்பட அனைவரும் எதிர்த்தனர். கஷ்டப்பட்டு கடன் வாங்கி வெளியிட்ட படத்தை சுஹாசினி தனது விமர்சனம் மூலம் மேலும் நஷ்டப்படுத்திவிட்டார் என்பது அவர்களின் முக்கிய குற்றச்சாற்றாக இருந்தது.
அதன் பிறகு ஷக்தி சிதம்பரம் பெரிதாக படம் எதுவும் இயக்கவில்லை. குரு சிஷ்யன் என்ற ஒரேயொரு படம் மட்டுமே வெளிவந்தது. இந்நிலையில் நஷ்டப்பட்ட ஷக்தி சிதம்பரம் பல கோடி ரூபாய் கொடுத்து காவலன் படத்தின் உரிமையை வாங்கியிருப்பது திரையுலகிலும் வெளியிலும் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதில் முக்கியமான விஷயமாக, குரு சிஷ்யன் படத்தில் கதைக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு புலியை காண்பித்து, இது சுகர் வந்த புலி, புல் திங்கிற புலி என ஒரு குமட்டல் காட்சியை ஷக்தி சிதம்பரம் வைத்திருந்ததையும், காவலன் படத்தில் அசின் நடித்திருந்ததால் படத்திற்கு ஈழத் தமிழர் சார்பில் எதிர்ப்பு கிளம்பி படத்தை யாரும் வாங்க முன் வராத நிலையில் ஷக்தி சிதம்பரம் தாமாக முன்வந்து படத்தின் ஒட்டுமொத்த உரிமையை வாங்கியதையும் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
ஈழப் போராளிகளின் பணம் தமிழ் சினிமாவில் முதலீடு செயப்படுவதாக கூக்குரல் எழுப்பிய போலி இறையாண்மை காவலர்கள் இதனைக் கண்டு கொள்ளாமல் இருப்பதையும் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.