
5. அய்யனார்
ஆதி ஹீரோவாக நடித்திருக்கும் இப்படம் வெளியான முதல் மூன்று தினங்களில் 10.77 லட்சங்களை வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. படத்தின் பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் இது மிக மோசமான வசூல் என்றே சொல்ல வேண்டும்.
4. சித்து பிளஸ் டூ
திரைக்கதை மன்னன் பாக்யராஜ் தனது மகனுக்காக எழுதி இயக்கிய படம். பாக்யராஜ் பழங்கதையாகிவிட்டதையே படத்தின் முதல் மூன்று நாள் வசூல் காட்டுகிறது. இதன் மூன்று நாள் சென்னை வசூல் 12.55 லட்சங்கள் மட்டுமே.
3. விருதகிரி
ஆளும் கட்சி முன்பு உலகம் சுற்றும் வாலிபனை தடுத்தார்கள். அதுபோல் விருதகிரியையும் தடுக்கிறார்கள் என எம்ஜிஆருடன் தன்னை ஒப்பிட்டுப் பேசினார் விஜயகாந்த். ஆனால் உலகம் சுற்றும் வாலிபனின் பக்கத்தில்கூட விருதகிரி வருமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது படத்தின் முதல் மூன்று நாள் வசூல். இப்படம் வசூலித்திருப்பது 14.40 லட்சங்கள்.
2. ரத்த சரித்திரம்
முதல் வாரத்திலிருந்து தடாலடியாக படுபாதாளத்துக்கு சென்றுள்ளது ரத்த சரித்திரத்தின் வசூல். முதல் வார இறுதியில் 60 லட்சத்துக்கு மேல் வசூலித்த இப்படம் சென்ற வார இறுதியில் 26.27 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இதுவரையான இதன் சென்னை வசூல் 1.48 கோடி.
1. சிக்கு புக்கு
சென்ற வார இறுதியின் சூப்பர் ஸ்டார் ஆர்யாதான். இவரது சிக்கு புக்கு முதல் வார இறுதியைவிட அதிகம் வசூலித்துள்ளது. அதாவது சென்ற வார இறுதியில் மட்டும் இப்படம் 31.51 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரையான இதன் மொத்த சென்னை வசூல் 79 லட்சங்கள்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.