கமல், கே.எஸ்.ரவிக்குமார் இணைந்து பணிபுரிந்திருக்கும் ஐந்தாவது படம், மன்மதன் அம்பு. ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார்.
மதன கோபாலுக்கு அம்புஜம் என்பவர் மீது காதல். சில காரணங்களால் இருவரும் பிரிகிறார்கள். நாட்கள் கடந்தாலும் மதன கோபாலுக்கு அம்புஜம் மீதான காதல் குறையவில்லை. அவளைத் தேடி கண்டுபிடிக்க நினைக்கிறார். மேலும் அம்புஜம் இப்போதும் தன்னை காதலிக்கிறாளா என்பது தெரிய வேண்டும்.
இதற்காக முன்னாள் கமேண்டோ வீரரும் இந்நாள் தனியார் துப்பறிவாளருமான ஆர்.மன்னாரின் உதவியை நாடுகிறார் மதன கோபால். மன்னாரும் தற்போது நடிகையாக இருக்கும் அம்புஜத்தை கண்டுபிடிக்கிறார். சொகுசு கப்பலில் நடக்கும் இந்த சந்திப்பில் மன்னார் இன்னொரு பெண்ணை காதலிக்க, அது தான் தான் என்று அம்புஜம் தவறாக நினைக்க... இனிமையான குழப்பமும், நகைச்சுவையும் சுற்றியடிக்க, இறுதியில் சுபம்.
வில் ஸ்மித்தின் ஹிட்ச், 1998ல் வெளிவந்த தேர் இஸ் சம்திங் அபௌட் மேரி ஆகிய படங்களின் தாக்கத்தில் மன்மதன் அம்பு கதையை கிரேஸி மோகனுடன் இணைந்து உருவாக்கியுள்ளார் கமல். மன்னார் (கமல்), மதன கோபால் (மாதவன்), அம்புஜம் (த்ரிஷா) ஆகியோரைப் பற்றிய கதை என்பதால் படத்தின் பெயர் மன் மதன் அம்பு.
கே.எஸ்.ரவிக்குமார் படத்தை இயக்கியுள்ளார் பார்சிலோனா உள்ளிட்ட வெளிநாடுகளில் படத்தை எடுத்துள்ளனர். பெரும் பகுதி காட்சிகள் சொகுசு கப்பலில் படமாக்கப்பட்டுள்ளது. கமல், மாதவன், த்ரிஷாவுடன் சங்கீதா, ரமேஷ் அரவிந்த், உஷா உதுப், ஓவியா ஆகியோரும் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றம் நடிகர் சூர்யா.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். யு சான்றிதழ் பெற்றிருக்கும் இப்படம் வரும் 23 திரைக்கு வருகிறது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.