ராம.நாராயணன் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததும், அடித்தது யோகம் என்று குறுக்கு வழியில் தலைவர் நாற்காலியில் உட்கார்ந்தார் எஸ்.ஏ.சந்திரசேகரன். குறுக்கு வழிக்கெல்லாம் அனுமதி கொடுக்க முடியாது என அவரது தலைவர் பதவிக்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது நீதிமன்றம்.
சங்க விதிகளுக்கு மாறாக எஸ்.ஏ.சந்திரசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பொதுக்குழு கூடி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை அவரது பதவிக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளரும் இயக்குனருமான பாபு கணேஷ் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகரன் தொடர இடைக்கால தடை விதித்துள்ளது. வட போச்சே...
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.