வேங்கை டைட்டிலை முதலில் சேம்பரில் பதிவு செய்தவர் கலைசெல்வம். ஏக சக்கரா நிறுவனத்தின் தயாரிப்பாளர். பாலசுப்பிரமணியம் என்ற அறிமுக இயக்குனரின் படத்துக்காக இவர் சேம்பரில் பதிவு செய்த பெயர்தான் வேங்கை.
இந்த உண்மை தெரிந்தும் ஹரி தனது படத்துக்கு வேங்கை என்று பெயர் வைத்து விளம்பரமும் தந்தார். படம் ஜூலையில் வெளியாகிறது.
இந்த அத்துமீறலை கோர்ட்டுக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள் கலைசெல்வமும், பாலசுப்பிரமணியமும். இவர்களின் புகாரில் அடிப்படை முகாந்திரம் இருப்பதாகக் கூறி வேங்கைக்கு ஒருவார கால இடைக்காலத் தடை விதித்திருக்கிறது நீதிமன்றம்.
வேங்கை ஹரிக்கா இல்லை கலைசெல்வத்துக்கா? பொறுத்திருந்து பார்ப்போம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.