மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஜீவா அ‌‌ஜீத்துக்கான கதையில் ‌?

பெ‌ரிய இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று முடிவு செய்திருக்கிறார் ஜீவா. அவரை பெ‌ரிய மனிதனாக்கிய படம் கோ.

ஜீவாவின் விருப்பத்திற்கேற்ப கௌதம், மிஷ்கின், ஜனநாதன் என பெ‌ரிய இயக்குனர்கள் ஜீவாவை வைத்து படம் செய்ய ஆசைப்படுகிறார்கள். மிஷ்கின் தனது முகமூடி கதையை ஜீவாவை வைத்து இயக்க நினைக்கிறார். சூர்யா நடிப்பதாக இருந்து பட்ஜெட் காரணமாக கைவிடப்பட்ட படம் இது. ஜீவாவால் 35 கோடி பட்ஜெட்டை தாங்க முடியாது என்பதால் மறுபடியும் நொண்டியடிக்கிறது முகமூடி.

ஜனநாதன் இயக்கவிருப்பது ச‌ரித்திரப் படம். மெகா பட்ஜெட். ஜீவாவுடன் வேறு ஹீரோக்களும் நடிக்க வாய்ப்புள்ளது.

கௌதம் இயக்கத்தில் ஜீவா நடிப்பார் என்பது பரவலான பேச்சு. அ‌‌ஜீத்துக்காக கௌதம் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் கதைதான் இது என்கிறார்கள். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்தி ‌ரீமேக்குக்குப் பிறகு தனது அடுத்தப் படம் மற்றும் ஹீரோ குறித்து அறிவிக்க இருக்கிறார் கௌதம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.