வேங்கை தவிர்த்து தமன்னா கையில் தமிழ்ப் படம் ஏதுமில்லை. அவர் அதிகம் எதிர்பார்த்தது பத்ரிநாத் படத்தை.
வி.வி.விநாயக் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்திருக்கும் இந்தப் படத்தில் தமன்னா ஹீரோயின். தெலுங்குப் படமான இதனை தெலுங்கில் வெளியாகும் அதேநாள் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். பையாவுக்கு பிந்தைய இடைவெளியை பத்ரிநாத் சரிசெய்யும் என்று நிம்மதியாக இருந்தார் தமன்னா.
துரதிர்ஷ்டவசமாக பத்ரிநாத் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் மட்டுமே வெளியாகிறது. தமிழ் பதிப்பு சில வாரங்கள் கழித்தே வெளியாகும் என தகவல் தருகிறது ஆந்திரா வட்டாரம். வரும் 10ஆம் தேதி பத்ரிநாத் தெலுங்கிலும், மலையாளத்திலும் மட்டும் ரிலீஸாகிறது. படத்துக்கு சென்சார் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.