![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhY3rZ-7btQNqtkSNMoeSxxyqh75fAr0g4on-PeZhFUirCImhvNfY6D30PvFk6pIVgzPSbgQcjKshzWswrMTds9qjnumFP1LcGX2Q3yaWIB_tJImaRsFYTS7wg88ZcFPm2MHmekTKHBah8/s320/Gowtham%252C+A.R.Rahman+Join+Again+with+Jeeva+new+movie.jpg)
கௌதம் வாசுதேவ் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியின் விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்கள் இன்றும் ரசிகர்களின் காதுகளில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது. தேன் பாயும் இன்னொரு செய்தி... மீண்டும் இந்தக் கூட்டணி இணைகிறது.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இந்தியில் இயக்கியிருக்கும் கௌதம் அடுத்து ஜீவா நடிக்கும் படத்தை தமிழில் இயக்குகிறார். படத்துக்கு நித்யா என்று பெயர் வைத்துள்ளார். ஹீரோயின் சமந்தா. இந்தப் படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் பணிபுரிந்தவர்களே இந்தப் படத்திலும் பணியாற்ற உள்ளனர். கேமரா மனோஜ் பரமஹம்சா, பாடல்கள் தாமரை, எடிட்டிங் ஆண்டனி. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.