மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> செல்வராகவன் நடத்திய ஓட்டெடுப்பு.

படம் எடுப்பதைவிட கடினம் எப்போது படத்தை வெளியிடுவது என்பதை தீர்மானிப்பது. பல நல்ல படங்கள் தவறான நேரத்தில் வெளிவந்து மண்ணை‌க் கவ்வியிருக்கின்றன. மோசமான சில படங்கள் ச‌ரியான நேரத்தில் வந்து கலெக்சன் அள்ளியிருக்கின்றன.

செல்வராகவனுக்கு தனது மயக்கம் என்ன படத்தை எப்போது வெளியிடுவது என்பதில் குழப்பம். ஒருகட்டத்தில் ரசிகர்களிடமே இந்தப் பொறுப்பை விடுவது என முடிவெடுத்து தனது பிளாக்கில் இது குறித்து ஓட்டெடுப்பு நடத்தினார். படத்தை எப்போது வெளியிடுவது. தீபாவளிக்கு முன்பா? தீபாவளி அன்றா? தீபாவளிக்குப் பிறகா?

செல்வராகவனின் ரசிகர்கள் தங்களது மேலான கருத்துக்களை தெ‌ரிவித்திருக்கிறார்கள். இந்த ஓட்டுக்களின் அடிப்படையில் ‌ரிலீஸ் தேதியை மறுமுடிவு செய்யவிருக்கிறாராம். அப்படியே கதைக்கும் இந்த முறையை பின்பற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.