பிரபுதேவா தனது இரண்டாவது இந்திப் படமான ரவுடி ரத்தோரை தொடங்கியிருக்கிறார். முதலில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.
பிரபுதேவாவின் முதல் இந்திப் படம் சல்மான்கான் நடித்த வான்டட். தெலுங்கிலும், தமிழிலும் வெளியான போக்கிரி படத்தின் ரீமேக். இந்தப் படத்தின் வெற்றியால் சிங்கம், காக்க காக்க படங்கள் இந்திக்கு சென்றன. தற்போது ரவுடி ரத்தோர் என்ற படத்தை அக்சய் குமார், சோனாக்சி சின்கா நடிப்பில் பிரபுதேவா தொடங்கியிருக்கிறார். இதுவும் போக்கிரி போல தெலுங்கு, தமிழிலிருந்து சென்ற கதைதான்.
தெலுங்கில் விக்ரமார்க்குடு என்ற பெயரில் வெளிவந்து, தமிழில் சிறுத்தை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட படத்தைதான் ரவுடி ரத்தோர் என்ற ஜெய்சங்கர் காலத்து பெயரில் இந்தியில் ரீமேக் செய்கிறார்கள். இந்தமுறையும் மாஸ்டரின் படம் பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையக் கிளப்பினால் அதிர்ஷ்டம்தான்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.