அன்னா ஹசாரேயின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ்த் திரையுலகினர் நேற்று அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். மிகச் சிலரே இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
அன்னாவின் போராட்டத்தை அதன் ஆரம்ப நிலையிலேயே ஆதரித்தவர் ரஜினி. அவர் தற்போது ஓய்வில் இருப்பதால் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதேநேரம் தனது சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அன்னா தனது ஹீரோ என்று கூறியிருக்கும் ரஜினி, அன்னா ஹசாரே குழுவினருக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். இந்தியா போன்ற ஒரு நாட்டில்தான் இப்படியான ரத்தமில்லா புரட்சி சாத்தியம் என்றும் தனது அறிக்கையில் ரஜினி தெரிவித்துள்ளார்.
அருமை...
ReplyDelete