மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அ‌‌ஜீத்தின் பில்லா 2வுக்கு அடுத்தப்பட இயக்குனர் தி.கு.தான்.

ஆரண்ய காண்டம் படம் அ‌ஜீத்தை மிகவும் கவர்ந்த படம். அதன் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை... என்ன நீளமான பெயர். இனி சுருக்கமாக தி.கு. - அழைத்து பாராட்டியது அனைத்துப் பத்தி‌ரிகைகளிலும் வெளிவந்தது. அ‌‌ஜீத்தை இயக்கும் இயக்குனர்களின் உத்தேசப் பட்டியலில் தி.கு.வின் பெயரும் இடம்பெற்றது.

தற்போது பில்லா 2-வில் அ‌‌ஜீத் பிஸியாக இருக்கிறார். இந்தப் படத்தின் ஸ்கி‌ரிப்டை படத்தின் இயக்குனர் சக்‌ரி டோலட்டியுடன் சேர்ந்து திருத்திக் கொண்டிருக்கிறார் தி.கு. இதனால் பில்லா 2-வுக்கு புதுக் கலர் கிடைத்திருப்பதாக கூறுகிறார்கள்.

பில்லா 2 வெற்றி பெற்றால் சந்தேகமில்லாமல் அ‌‌ஜீத்தின் அடுத்தப்பட இயக்குனர் தி.கு.தான்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.