ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் அசையாமல் நிற்பவர் உதயநிதி ஸ்டாலின் மட்டுமே. மற்ற நிதிகளெல்லாம் ஆற்றோடு போய்விட்டனர். உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகமாகும் ஒரு கல் ஒரு கண்ணாடி பாதியில் கழண்டுக்கும் என்று ஆருடம் கணித்தவர்களை பொய்யாக்கியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
ராஜேஷ் இயக்கத்தில் உதயநிதி, ஹன்சிகா மோத்வானி நடிக்கும் இந்தப் படத்தில் ராஜேஷின் மற்றப் படங்களைப் போலவே இரண்டாவது ஹீரோவாக சந்தானம் இருக்கிறார். காமெடிதான் பிரதானம் என்பதை மனதில் வைத்து உருவாக்கியிருக்கிறார்கள். படத்தின் டாக்கி போர்ஷன் முடிந்துவிட்டது. சில பாடல் காட்சிகள் மட்டுமே பாக்கி. ஹாரிஸ் ஜெயராஜ் அதையும் போட்டுக் கொடுத்தால் வெளிநாடு சென்று படமாக்கிவிட்டு வர காத்திருக்கிறார்கள்.
இந்த வருட இறுதியில் ஒரு கல் ஒரு கண்ணாடி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.