
ஓடி முடிந்தப் படத்துக்கு அப்படி என்னப்பா சிக்கல் என்று விசாரித்தால் பெயரி பூகம்பமே ஏற்படும் போலிருக்கிறது.
சினிமாவுக்கு வெளியேதான் நிஜமான சினிமா ஆர்வலர்கள் இருக்கிறார்கள். நம்ம தமிழ் சினிமா ஹாலிவுட்டை காப்பி அடிச்சே சீரழியுதே என பலருக்கு கவலை. இதில் ஒருவர் கருந்தேழ் என்ற பெயரில் எழுதி வருகிறார். வேலை பார்ப்பது பெங்களூருவில். இவரும் இவரது நண்பர் ஒருவரும் சேர்ந்து தெய்வத்திருமகள் படத்தின் மூலமான ஐ யம் சேம் படத்தின் தயாரிப்பாளருக்கு மெயில் அனுப்பியிருக்கிறார்கள். அய்யா இந்த மாதிரி உங்க படத்தை தமிழில் விஜய்ங்கிறவர் சுட்டுட்டார் என்று விரிவாக எழுதியிருக்கிறார்கள்.
ஹாலிவுட் படத்தை சுட்டதற்காக ஏற்கனவே பாலிவுட்டில் இருவர் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். விரைவில் விஜய்க்கும் ஆப்பு வரலாம்.
கொசுறு செய்தி கருந்தேழுக்கு. படம் பார்த்து கதை சொல் என்றொரு படம் தயாராகி வருகிறது. இது கொரியன் படமான டெய்சியின் அப்பட்டமான காப்பி. மெயிலை தட்டிவிடுங்க பாஸ்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.