முகமூடி படத்தின் ஆரம்ப விழா ஆர்ப்பாட்டமாக தொடங்கியது. இந்தப் படத்தை இப்படியே விடமாட்டேன். பார்ட் ஒன், பார்ட் டூ என முகமூடி பல பாகங்கள் வரும் என மிஷ்கின் தெரிவித்தார்.
தமிழின் முதல் சூப்பர்ஹீரோ படமான முகமூடியில் ஜீவா ஹீரோ. மிஷ்கின் 90 நாட்கள் கால்ஷீட் கேட்க, 120 நாட்கள் தருகிறேன் என தாராளம் காட்டினார். பேச்சில் அவர் இடையில் செருகிய கிண்டல்தான் எல்லாவற்றையும்விட கவனிக்க வைத்தது.
அஞ்சாதே படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்க மிஷ்கின் என்னைதான் கேட்டார். சரியா மீசைகூட முளைக்கலை நானெல்லாம் எப்பிடி போலீஸா நடிக்கிறதுன்னு வேண்டாம்னுட்டேன் என்றார்.
ஒஸ்தியில் சிம்பு மீசையில்லாத போலீஸாகதான் நடித்திருக்கிறார். ஜீவாவின் டார்கெட் இப்போது தெரிகிறதா.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.