செல்வராகவனின் இரண்டாம் உலகம் படத்தில் அனுஷ்கா இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இந்த ரகசியத்தை அனுஷ்காவே போட்டுடைத்திருக்கிறார்.
பல வருடங்களாக செல்வராகவன் இரண்டாம் உலகம் என்று சொல்லி வருகிறார். ஆண்ட்ரியாவை வைத்து இப்படத்தை தொடங்கிய அவர் பிறகு ஆண்ட்ரியாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் மயக்கம் என்ன படத்தை எடுத்தார். இதில் வரும் மலையோரக் காட்சிகள் பல இரண்டாம் உலகத்துக்காக எடுக்கப்பட்டவை.
ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் இரண்டாம் உலகத்தில் குடும்பத் தலைவியாகவும், மலைஜாதி பெண்ணாகவும் இரு வேடங்களில் அனுஷ்கா நடிக்கிறாராம். இதில் மலை ஜாதி பெண்ணாக வரும் கதாபாத்திரத்துக்கு சண்டைக் காட்சிகள் படத்தில் உள்ளது. இதற்காக ஸ்பெஷல் ட்ரெய்னிங் எடுக்கயிருக்கிறாராம் அனுஷ்கா.
சமீபத்தில் இந்தப் படத்தின் லொகேஷன் பார்ப்பதற்காக செல்வராகவன் பிரேசில் போய் வந்தது முக்கியமானது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.