கடந்த 2013 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் 100 கோடி எண்ணிக்கையிலான ஸ்மார்ட்போன்களை அத்துறை சார்ந்த நிறுவனங்கள் ஏற்றுமதி செய்துள்ளதாக ஐடிசி எனப்படும் இன்டர்நேஷனல் டேடா கார்ப்பரேஷன் கூறியுள்ளது. அதற்கு முந்தைய 2012 ஆம் ஆண்டில் இருந்ததைவிட இது 38.4% உயர்வாகும்.
கணக்கிட்டு காலத்தில் நடைபெற்ற ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் சாம்சங் ஏற்றுமதியின் பங்களிப்பு 31.3% ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் போட்டி நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் பங்களிப்பு 18.7% லிருந்து 15.3% ஆக குறைந்துள்ளதாக ஐடிசி தெரிவித்துள்ளது. 2வே டெக்னாலஜிஸ், எல்ஜி எலக்ட்ரானிக்ஸ், லினோவா ஆகிய நிறுவனங்களின் பங்களிப்பு தலா 5% ஆக உள்ளது என்றும் ஐடிசி குறிப்பிட்டுள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.