நாடளாவியல் ரீதியில் தற்போது இடம்பெற்று வருகின்ற சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக சமூக மட்டங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் கிழக்கிலங்கை தன்நம்பிக்கை சமூக எழுச்சி நிறுவனமும் இணைந்து வோர் சைல்ட் ஹொலன்ட் (War Child Holland) நிதி உதவியுடன் சிறுவர்கள் மற்றும் இளவயதினரை வலுவூட்டும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பல வழிப்புணர்வு நிகழ்வுகளை நடாத்தி வருகின்றது.
இதன் கீழ் மட்டக்களப்பு மண்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள ஜீவ ஒளி விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவின் கீழ் இயங்கி வருகின்ற வானம்பாடிகள் கலைக் கழகம் நடத்திய சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகம் இடம்பெற்றது.
இதன் போது தற்போது இடம்பெற்று வருகின்ற சிறுவர் மற்றும் பெண்கள் துஸ்பிரயோகங்கள் தடுத்து நிறுத்தப்படவேண்டும் , இனிவரும் காலங்களில் பெண்கள்,சிறுவர்கள் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படக்கூடாது என்ற நோக்கிலும் இந்த விழிப்புணர்வு வீதி ஓர நாடகம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மண்முனை வடக்கு சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ் . உதயராஜ் , கிழக்கிலங்கை தன்நம்பிக்கை சமூக எழுச்சி நிறுவன உத்தியோகத்தர்கள் , மண்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவு கிராம சேவை உத்தியோகத்தர் , வானம்பாடிகள் காலைக் கழக மாணவர்கள் , கிராம பெண்கள் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.