மட்டக்களப்பு வாலிப கிறிஸ்தவ சங்கத்தின் ஏற்பாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் பால்நிலை சமத்துவம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான மகா நாடு வாலிப கிறிஸ்தவ சங்கத்தின் பொது செயலாளர் டி.டி.டேவிட் தலைமையில் மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் இடம்பெற்றது.
பெண்கள் சமூக மட்டத்தில் பொருளாதார ரீதியிலும், தலைமைத்துவ பொறுப்புக்களிளும் மற்றும் பால்நிலை ரீதியிலும் அவர்களின் மனப்பாங்கை மாற்றி சமூக மட்டத்தில் பெண்களின் தலைமைத்துவ வீதத்தை அதிகரிக்கும் நோக்கில் பெண் தலைமைத்துவத்துக்கான கலந்துரையாடல்கள் இந்த மகாநாட்டு நிகழ்வில் இடம்பெற்றது.
இந்த மகாநாட்டு நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், கிழக்கு பல்கலைகழக விஞ்ஞான பீட விரிவுரையாளர் கலாநிதி அருட்சகோதரி ஜோசெப்பா,சேவ்த சில்ரன் தேசிய இயக்குனர் திலீபன் செல்லப்பா மற்றும் மண்முனை மேற்கு, ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக பிரிவுகளின் அரச உத்தியோகத்தர்கள், பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.