
இதற்கு எதிராக பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் தனது கண்டனத்தை தெரிவித்தார். வி.சி.குகநாதனை எதிர்த்து ஆர்யாவுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டது.
இப்போது பெப்சி அமைப்பு அறிக்கை மூலம் தென்னிந்திய நடிகர் சங்கத்தை கண்டித்திருக்கிறது.
திரைத்துறைக்குள் இப்படி அறிக்கைப் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களும் ஆர்யாவுக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இவர்கள் நேற்று நீதிமன்ற வளாகத்துக்குள் கூடி ஆர்யாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஆர்யா தனது அதிகப்பிரசங்கித்தனமான பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.