மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஜெயம் ரவி கண்ணன் இயக்கத்தில்?

கண்ணன் இயக்கிய ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை இரண்டும் சுமாராகவே போனது. மூன்றாவது படம் வந்தான் வென்றான் இன்னும் வெளியாகவில்லை. என்றாலும் கண்ணன் இயக்கத்தில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் விருப்பமாகவே உள்ளனர். கண்ணனின் மேக்கிங் ஸ்டைல் யாரையும் கவரக்கூடியது.

வந்தான் வென்றான் ஆடியோ விழாவில் கண்ணன் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக ஜெயம் ரவி தெ‌ரிவித்தார். அவரது விருப்பம் உடனே நிறைவேறும் போல் தெ‌ரிகிறது.

தற்போது ஆதிபகவான் படத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி அடுத்து பூலோகம் படத்தில் நடிக்கிறார். இவ்விரு படங்களுக்குப் பிறகு அவர் கண்ணன் இயக்கத்தில் நடிப்பார் என நம்பிக்கையான தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. கண்ணன் கூறிய ஒன் லைன் ஜெயம் ரவிக்குப் பிடித்திருப்பதே இந்த நம்பிக்கைக்கு காரணம்.

ஜெயம் ரவி ஜனநாதனின் புதிய படத்தில் நடிக்க கால்ஷீட் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.