![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgT2d3XPnm00956DmBupIHqKAuiMhmw2yLHjzSnPzT-k_aVr_DK8BSydGyWsRRpdQMUyM84tiPtZK46imd-CHufE3TPtt8G-4lDDSaO0vdvaJhM2lCbXTgoq4Ogaw_PsWoCZqDCx5xn_YM/s400/Osthi+Release+Trouble+Continues+download+watch+online+osthi+HQ+Stills.jpg)
தீபாவளிக்கு வெளியாவதாகச் சொல்லப்பட்ட ஒஸ்தி இன்னும் திரைக்கு வரவில்லை. பல ரிலீஸ் தேதிகளைக் கண்ட இந்தப் படம் இறுதியாக வரும் 8ஆம் தேதி வெளியாகும் என்றார்கள். ஆனாலும் படம் வெளிவருமா என்பது சந்தேகமே.
சன் பிக்சர்ஸ் திரையரங்கு உரிமையாளர்களிடமிருந்து வசூலித்த டெபாசிட் தொகையான 2.4 கோடியை இன்னும் திருப்பித்தரவில்லை. இதனால் சன் பிக்சர்ஸ் வெளியிடும் படங்களுக்கு மட்டுமின்றி அவர்களுக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் கொடுக்கும் படங்களையும் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தார்கள்.
ஒஸ்தியின் வெளியீட்டு உரிமையை வாங்கிய ரிலையன்ஸ் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் பிக்சர்ஸுக்கு விற்றுள்ளது. இதனால் ஒஸ்தியை திரையிட விட மாட்டோம் என்று சிலர் கொடி பிடிக்கிறார்கள்.
8ஆம் தேதியும் ஒஸ்திக்கு கண்டம்தான்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.