Saturday, August 29, 2009

> ரஜினி காய் நகர்த்த மல்லுகட்டும் விஜய்-தனுஷ்



காங்கிரசில் சேரப்போகிறார் விஜய். இதுதான் தமிழ்நாட்டை பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கும் செய்தி. வேட்டைக்காரன் ரிலீசுக்கு முன்பே இந்த வைபவம் நடந்து விடும் போலிருக்கிறது. அதற்கு கட்டியம் கூறுவது போல அமைந்திருக்கிறது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் பதில். விஜய் காங்கிரசில் சேரப் போவதாக கூறப்படுகிறதே? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு “அவர் வந்தால் எங்களுக்கு பெரிய சந்தோஷம்” என்று பதிலளித்திருக்கிறார் அவர். சில தினங்களுக்கு முன் ராகுல் காந்தியை நேரில் சந்தித்தாராம் விஜய். இதை தொடர்ந்துதான் தீப்பிடித்திருக்கிறது காங்கிரஸ் வட்டாரங்களில்.

விஜய் ரசிகர்களை குறி வைத்திருக்கும் இளைஞர் காங்கிரஸ் அப்படியே ரஜினி ரசிகர்களுக்கும் வலை வீசி வருகிறது. இந்த லட்சணத்தில் விஜயின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட மறைமுகமாக முயல்கிறார் ரஜினி என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். அழகிய தமிழ் மகன் ரிலீஸ் நேரத்தில்தான் பொல்லாதவன் வந்தது. பொல்லாதவன் ஹிட். அ.த.ம தோல்வி.

வில்லு ரிலீஸ் நேரத்தில்தான் படிக்காதவன் வந்தது. தனுஷ் படம் ஹிட். விஜய் படம் தோல்வி. இந்த நிலையில் வேட்டைக்காரன் ரிலீஸ் நேரத்தில் தனுஷின் குட்டி வெளியிடப்படலாம். மறைமுகமாக நகர்த்தப்படும் இந்த காய்கள் ஒவ்வொன்றும் ரஜினியால் நகர்த்தப்படுகிறது என்பதுதான் கோடம்பாக்கத்தில் உலா வரும் பரபரப்பு செய்தி. அப்படியென்றால் மாப்பிள்ளை எப்போது வருமாம்? சந்தேகமே வேண்டாம். அந்த நேரத்தில் தனுஷின் மாப்பிள்ளை வரும் என்கிறார்கள் இந்த செய்தியை கிளப்பிவிடுகிற புண்ணியவான்கள்.

சிம்பு-தனுஷ் போட்டி என்று வெளியில் பேசப்படுவதை விட, தனுஷ் விஜய் போட்டி என்று பேசப்படுவதைதான் விரும்புகிறாராம் மாமனார். அதனால்தான் இந்த ராஜதந்திரம் என்று கூறப்படுகிறது. போகிற வேகத்தில், விஜய் காங்சிரசில் சேர்ந்தால் தனுஷ் பி.ஜே.பி யில் சேருவார் என்று புரளியை கிளப்பி விட்றாதீங்க சாமீகளா

மேலும் அறிய

Friday, August 28, 2009

>கணா காண்கிறேன் - ஆனந்த தாண்டவம்



கணா காண்கிறேன் - ஆனந்த தாண்டவம்

கணா காண்கிறேன் ஆனந்த தாண்டவம். என்னையும் இந்த பாட்டு கவுத்து விட்டது கவனமாக பார்க்கவும். பார்த்து விட்டு கருத்து கூறவும்.

மேலும் அறிய

Thursday, August 27, 2009

> 2009 அரையாண்டு படங்கள் ஓர் அலசல்

சென்ற வருடம் கிடைத்த பாடங்களிலிருந்து தமிழ் சினிமா எதையும் கற்றுக் கொண்டதாக‌த் தெ‌ரியவில்லை. 2008 வெளியான மொத்த திரைப்படங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 84. அதில் கரை சேர்ந்தவை ஏழே ஏழு.

தமிழ் சினிமாவின் வியாபாரத்தை விஸ்த‌ரிக்கும் என்று எதிர்பார்த்த குசேலன், பீமா, குருவி, ஏகன், சத்யம் என மெகா பட்ஜெட் படங்கள் அனைத்தும் பெருத்த நஷ்டத்தை சந்தித்தன. தமிழ் சினிமாவை ஓரளவு காப்பாற்றியவை என்றால் அது புதியவர்களின் சமரசமற்ற முயற்சிகளான சுப்பிரமணியபுரம், அஞ்சாதே, சரோஜா போன்ற பட்ஜெட் படங்கள் மட்டுமே.

சினிமாவின் முகத்தை ஹைடெக்காக மாற்றப் போவதாகக் கூறிய கார்ப்பரேட் ஜாம்பவான்கள் ஒருவர் பாக்கி இன்றி அனைவரும் மண்ணை கவ்வினர்.

எளிமையான கதை, சிறந்த திரைக்கதை, யதார்த்தத்தை மீறாத காட்சிகள். இவை இருந்தால் ஸ்டார் வேல்யூ இல்லாத படங்களும் வெற்றி பெறும் என்பது சென்ற வருடம் கிடைத்த பாடம். இந்த வருடத்தின் முதல் ஆறு மாத கால தமிழ் சினிமா வியாபாரம் அந்த பாடத்தை மீண்டும் உண்மையாக்கியிருக்கிறது.

ஜூன் 30 வரை ஏறக்குறைய 51 படங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் அனைத்து தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து கொடுத்தவை ஒன்பது. சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் நம்ப முடியாத முன்னேற்றம். ஆனால் இது போதுமா?

பஞ்ச் டயலாக், பரபர சண்டைக் காட்சிகள், கால் மணிக்கு ஒரு குத்துப் பாட்டு என ஸ்டார் வேல்யூ ஃபார்முலாவில் வந்த ஏறக்குறைய அனைத்துப் படங்களும் இந்த வருடமும் பணால். விஜய்யின் வில்லு, விஷாலின் தோரணை சிறந்த உதாரணங்கள். பழைய ஃபார்முலாவில் வெளிவந்த ம‌ரியாதைக்கும் வரவேற்பில்லை.

இந்த ஆறு மாத காலத்தில் வெற்றியை அறுவடை செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் புதுமுகங்கள். முதலில் வெண்ணிலா கபடிக்குழு. ஸ்டார் வேல்யூ இல்லாத சராச‌ரி நடிகர்களால் உருவான படம். இயக்குனர் சுசீந்திரனுக்கும் இதுவே முதல் படம். எளிமையான கிராமத்து இளைஞர்களின் கபடி ஆசையின் வழியாக அவர்களின் வாழ்க்கையை காட்சிப்படுத்திய இப்படம் அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்பட்டது. இதன் வெற்றி யதார்த்த சினிமாவுக்கான இருப்பை உறுதி செய்தது.

ஆவி கதையுடன் வந்த யாவரும் நலம் இந்த வருடத்தின் எதிர்பாராத ஆச்ச‌ரியம். மாதவன் என்ற ஹீரோ நடித்திருந்தாலும் இயக்குன‌ரின் பழமை தவிர்த்த புதுமை சிந்தனையே படம் வெற்றியின் படிக்கட்டில் ஏற உதவியது.

சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த சசிகுமா‌ரின் தயா‌ரிப்பில் வெளிவந்த படம் பசங்க. பதினாலு வயது சிறுவர்கள் நடித்த இந்தப் படம் ஸ்டார் வேல்யூ இல்லாமலே பாக்ஸ் ஆபிஸை கலங்கடித்தது.

பத்து இயக்குனர்கள் நடித்த மாயாண்டி குடும்பத்தார் பி அண்டு சி சென்டர்களில் ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளது. நஷ்டத்தை சந்திக்காத படங்களின் வ‌ரிசையில் இந்தப் படத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். சமீபத்தில் வெளியான நாடோடிகளும் ரசிகர்களின் பேராதரவுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

நாம் மேலே பார்த்த ஐந்து படங்களும் இரண்டிலிருந்து நான்கு கோடிக்குள் தயாரானவை. பிரமாண்டமான அரங்குகள், கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள், தேவையற்ற சண்டைக் காட்சிகள் போன்ற தமிழ் சினிமாவின் சாபக் கேடுகள் ஏதுமற்றவை. எளிமையான கதையையும், யதார்த்தமான காட்சிகளையும், அ‌ரிதாரம் பூசாத நடிகர்களையும் நம்பி எடுக்கப்பட்டவை.

இந்த ஆறுமாத காலத்தில் வழக்கமான ஃபார்முலாவில் ஜெயித்த படங்கள் நான்கு. படிக்காதவன், சிவா மனசுல சக்தி, அயன், மாசிலாமணி. இவற்றில் படிக்காதவன், சிவா மனசுல சக்தி, மாசிலாமணி ஆகியவை வெற்றி பெற்றதில் அப்படத்தின் தயா‌ரிப்பாளர்கள் தண்ணியாக செலவழித்த விளம்பர பணத்துக்கு கணிசமான பங்குண்டு.

இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் என்றால் அது அயன். கே.வி.ஆனந்தின் இப்படம் தமிழ் சினிமாவுக்கு பழக்கமான கடத்தல் கதையை பிரமாண்டமாக காட்டியது. சூர்யாவின் நடிப்புக்கும், தொழில்நுட்பத்துக்கும் இந்த வெற்றியில் கணிசமான பங்குண்டு.

நல்லவனான ஹீரோ, கெட்டதை மட்டுமே செய்யும் வில்லன், டூயட்டுக்கு ஒரு ஹீரோயின் என்ற வழக்கமான அம்மாஞ்சித்தனங்கள் இந்த வருடம் வெற்றிபெற்ற படங்களில் இல்லை. விதிவிலக்குகள் படிக்காதவனும், மாசிலாமணியும்.

ஒரு படத்தின் வெற்றி இயக்குன‌ரின் கையில் இருக்கிறது. சிலர் நம்பிக் கொண்டிருப்பதுபோல் ஹீரோவோ, பிரமாண்டமோ அல்ல படத்தின் வெற்றியை தீர்மானிப்பது. எளிமையான கதையிலேயே எவரெஸ்டை தொடலாம். புதியவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். உணர்ந்து திருந்த வேண்டியது ஒவ்வொருவ‌ரின் கடமை.
மேலும் அறிய

Wednesday, August 26, 2009

> இம்சையால் அலுத்துக் கொள்ளும் நமீதா!

எழுத்து பிழையை மன்னிச்சிடலாம். கருத்துப் பிழையை மன்னிக்கலாமோ? “அதனால ரொம்ப பிரச்சனைங்க” என்றார் நமீதா. என்னவாம்? மும்பையிலே பிளாட் வாங்கியிருக்கார் நமீதான்னு எழுதறதுக்கு பதிலா, பிளைட் வாங்கியிருக்காருன்னு எந்த பிரகஸ்பதியோ எழுதி தொலைக்க, அவ்வளவு வசதியாயிட்டீங்களான்னு போன் அடிக்க ஆரம்பிச்சிட்டாய்ங்களாம் ரசிகர்கள். நான் பேசுற தமிழே தகராறு. இதில இவிய்ங்க வேறன்னு அலுத்துக் கொள்கிறார் நமீதா.

ரசிகர்களின் நீண்டகால கேள்விக்கு நீக்கமற மனசில நிறைய மாதிரி ஒரு பதிலையும் சொன்னார். எல்லாரையும் மச்சான் மச்சான்னு கூப்பிடுறீங்களே, ஏன்?

அதுவா? சிவாஜி சார் தன்னோட ரசிகர்களை பிள்ளைகளேன்னு கூப்பிடுவாருன்னு கேள்விப்பட்டேன். ரஜினி சார் தன்னோட ரசிகர்களை கண்ணான்னு கூப்பிடுறாரு. விஜய் சார் தன்னோட ரசிகர்கள் ங்ணா...ன்னு கூப்பிடுறாரு. நான் மச்சான்னு கூப்பிடுறேன். நமக்குன்னு ஒரு அடையாளம் வேணாமா? மச்சான்னு கூப்பிடுறதிலே இருக்கிற அந்நியோன்யம் வேற வார்த்தையிலே இருக்கா? இருந்தா சொல்லுங்க. கூப்பிடுறேன் என்றார். (சொல்லி கொடுத்திருக்கலாமோ?)

இளைச்சிட்டேன்னு இவரு எத்தனை முறை சொன்னாலும் யாரும் நம்ம மறுப்பதால், இளைச்ச பிறகு ஒரு போட்டோ செஷன் பண்ணியிருக்கிறார். விரைவில் பத்திரிகைகளுக்கு கொடுக்கிறேன் பாருங்க. அசந்திருவீங்க என்றார். இப்ப மட்டும் என்னவாம்?
மேலும் அறிய

Monday, August 24, 2009

> ரஜினியின் புகழுக்கு பேரிடர் தர முயன்ற அமைச்சர்

இலங்கையின் இயற்கை பேரிடர் துறை அமைச்சர் ஒருவரால் சூப்பர் ஸ்டார் ரஜினியின் புகழுக்கு பேரிடர் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் துவக்க நிலையிலேயே அமைச்சரின் இந்த கருத்துக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்கள் தமிழ்சினிமாவின் முக்கியஸ்தர்கள்.

அப்துல் ரிஷாத் பதியுதீன் என்ற அந்த அமைச்சர், விடுதலைப்புலிகளின் பணம் இலங்கையை சேர்ந்த லண்டன் தமிழர் ஒருவரால் தமிழ் சினிமாவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ரஜினியை வைத்து அவர் எடுக்கும் படத்திற்கு இந்த தொகையிலிருந்துதான் அட்வான்ஸ் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார். இதுதான் தமிழ்சினிமா உலகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று ரஜினி ஒதுங்கிக் கொண்டாலும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில், ரஜினி படத்தை தயாரிக்க விடுதலைப் புலிகள் பணத்தைப் பெற வேண்டிய அவசியம் இங்கு யாருக்கும் இல்லை. இப்படிப்பட்ட வழியில் படத்தில் நடித்துக் கொடுக்க வேண்டிய நிலையில் ரஜினியும் இல்லை.

அவரை வைத்துப் படம் எடுக்க எத்தனையோ தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது ரஜினி விடுதலைப் புலிகளின் பணத்தைப் பெற்றார் என்று கூறுவது அபத்தமானது, மலிவான விளம்பரமே தவிர வேறு ஒன்றும் இல்லை என்றார்.

அமைச்சர் சொல்லும் தயாரிப்பாளர் ஐங்கரன் கருணாஸ்தான் என்று பலரும் யூகிக்கிறார்கள். ஆனால் அவர்கள் தரப்பில் சொல்லப்படுவது என்ன? ரஜினியை வைத்து எடுப்பதாக சொல்லப்பட்ட அந்த படம் ஆரம்ப நிலையிலேயே கைவிடப்பட்டுள்ளது. உண்மை இப்படியிருக்க இதில் எங்களை சம்பந்தப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்கிறார்கள்.

ஆனால், ரஜினி பேரை சொன்னாலே போதும். படம் எடுக்க பணம் தானாக குவியும் என்ற நிலையில் அவர் விடுதலைப்புலிகளின் பணத்தில்தான் நடிக்க வேண்டும் என்று சொல்வது அபத்தத்திலும் அபத்தம்!
மேலும் அறிய

Thursday, August 20, 2009

> தில்லாலங்கடி என்றால் வெற்றி! தமன்னா-ரவி குஷி..

ஏவிஎம் ஸ்டுடியோவே குலுங்கிக் கொண்டிருந்தது. காரணம், தில்லாலங்கடி... ஜெயம் ரவி-தமன்னா நடிக்கும் இப்படத்தின் துவக்க விழாவுக்கு வாசலில் இருந்தே வரவேற்பு வைபோகத்தை துவங்கியிருந்தார்கள். இதற்கு முன்பே ரவியை வைத்து நாலு ஹிட் கொடுத்த ராஜா, முதல் பட பரபரபப்போடுதான் இருந்ததுதான் ஆச்சர்யம். என் ஒவ்வொரு படத்தையும் நான் செய்யுற முதல் படமாதான் நினைக்கிறேன். என்னுடைய முந்தைய படங்களை விட கொஞ்சம் காரமான படம் இது. சந்தோஷ் சுப்ரமணியம் படத்திற்கு பிறகு 15 மாதங்கள் நான் காத்திருந்தேன். அது வீண் போகவில்லை. இந்த படத்தின் ரீமேக் உரிமையை அப்பா வாங்கியதும் எனக்கு நிம்மதியாச்சு. பிரபு, சுஹாசினி, வடிவேலு, சந்தானம், இவர்களுடன் ரவியும் தமன்னாவும். இந்த நட்சத்திர கூட்டமே எனக்கு தனி உற்சாகத்தை கொடுக்குது.

டைரக்டர் ஷங்கரிடம் இன்விடேஷன் கொடுக்க போயிருந்தேன். தமன்னா நடிக்கிறார்னு தெரிஞ்சதும் “இப்போ அவங்கதான் டாப் ஹீரோயின் போலிருக்கே” என்றார். அவரே தமன்னாவை பற்றி அப்படி ஒரு சர்டிபிகேட் கொடுத்திருக்காருன்னா, எந்தளவுக்கு அவங்க எல்லாருடைய மனசிலேயும் இடம் பிடிச்சிருக்காங்கன்னு புரியும். என் படத்திலே ஹீரோவுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் இருக்குமோ, அந்தளவுக்கு ஹீரோயினுக்கும் இருக்கும். இந்த படத்திலேயும் அந்த உத்தரவாதத்தை என்னால தர முடியும் என்றார் ராஜா.

தெலுங்கில் வெளியான இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் ஷாம் நடித்திருந்தார். அதே கேரக்டரில் தமிழிலும் அவரே நடிக்கிறார். “உங்களை நம்பி ஒப்படைச்சிட்டேன். இனிமே உங்க பொறுப்பு” என்றாராம் ஷாம். அந்த நம்பிக்கையை காப்பாற்றுவேன் என்றார் ராஜா. அதுமட்டுமல்ல, தெலுங்கில் ஷாம் கேரக்டரில் இருந்த சின்ன சின்ன லாஜிக் மிஸ்டேக்கையும் இந்த படத்தில் சரி செய்திருக்கிறாராம்.

நானும் ஷாம் சாரும் நல்ல நண்பர்கள். இன்னும் சொல்லப் போனா சினிமாவுல என்னோட முதல் ஃபிரண்டுன்னா அவருதான். இந்த படத்திலே அவரும் நடிக்கிறாருங்கறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றார் ஜெயம் ரவி. தில்லாலங்கடி என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தமோ? ஆனால் துவக்க விழாவுக்கு வந்தவர்கள் பேசியதை கேட்டால், ஒன்று புரிகிறது. தில்லாலங்கடி என்றால் வெற்றி... சந்தோஷம்...

மேலும் அறிய

> ஆன்-லைனில் பணம் சம்பாதிக்க நம்பிக்கையான தளம்

திறமையுள்ளவர்களையும், ஏமாற்றாதவர்களையும் தேடும் நிறுவனங்களையும் இணைக்கும் விதமாக, புதிய வெப்சைட் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. சாப்ட்வேர், நிர்வாகத் திறமை உள்ளவர்களும், சிறிய, நடுத்தர நிறுவனங்களும், ஆன்-லைனிலேயே அனைத்து நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள உதவும் வகையில் தமிழ் இளைஞர்கள் குழு 8kmiles என்ற இணைய தளத்தை உருவாக்கி வழங்கியுள்ளது.

மேலும் இணைய தளம் மூலம் உங்கள் அலுவலகம் மற்றும் பிற வேலைகளுக்கான தகவல் தொழில் நுட்ப வசதிகளையும், திட்டங்களையும் குறைந்த செலவில் இந்த தளத்தில் பெற முடியும். இதனால் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களுக்கென கம்ப்யூட்டர், சர்வர் மற்றும் சாப்ட்வேர் தொகுப்புகளுக்கெனச் செலவழிக்கும் முதலீடு மிச்சமாகிறது. இவற்றை இந்த தளம் மூலம் பயன்படுத்துவதற்குத் தகுந்தாற் போல கட்டணம் செலுத்தினால் போதும். மற்றபடி தளத்தில் நம்மைப் பதிந்து கொள்வது, நம் தகுதிகளைப் பட்டியலிடுவது, நம்மைத் தேடிவரும் நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வது, வாடிக்கையாளர்களுடன் கான்பரசிங் செய்து முடிவெடுப்பது, அவர்களின் காண்ட்ராக்ட்களை மேற்கொள்வது, பணம் பெறுவது போன்றவற்றிற்கு எந்தவிதக் கட்டணமும் இல்லை என்பது இந்த தளத்தின் சிறப்பு.

நிர்வாக திட்டம் மற்றும் நிறுவனத் தேவைக்கான உயர்நிலை சாப்ட்வேர் தொகுப்புகளை, தேவைப்படும் நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தில், இத்தளத்திலிருந்து ஆன்-லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம். விண்டோஸ் மற்றும் லினக்ஸ் அடிப்படையில் அனைத்து அப்ளிகேஷன்களும் தரப்படுகின்றன.

சாப்ட்வேர் அப்ளிகேஷன் உருவாக்குதல்

கட்டடக் கலை

பொறியியல்

மல்டிமீடியா புரோகிராம் தயாரித்தல்

ஆடியோ, வீடியோ மற்றும் போட்டோ காட்சிகள் எடிட் செய்தல்

வர்த்தக நிறுவனங்களுக்கான ஆலோசனை வழங்குதல்

உட்பட பல பிரிவுகளில் திறமை உள்ளவர்கள், கல்வித் தகுதி, நிறுவனப் பிரிவு ஆகியவற்றுடன், வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், பான்கார்டு இதில் ஏதாவது ஒன்றை ஸ்கேன் செய்து, பதிவு செய்து கொள்ளலாம். இவை பரிசீலிக்கப்பட்டு, இவர்களின் தகுதிகள் வெளியிடப்படும். நிறுவனங்கள், வல்லுனர்கள் மட்டுமின்றி, புராஜக்ட் மேனேஜர்களும், இந்த இணைய தளம் மூலம், தேவைப்படும் நிறுவனங்களுக்கு, தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம். மேலும், பதியும் வல்லுனர், நிறுவனங்களுக்கு இமெயில் பரிமாற்றம், சாட் போர்டு, வீடியோ கான்பரன்சிங் வசதியை, இலவசமாக இந்த தளம் வழங்குகிறது.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

எழுதியவர் : கார்த்திக்

மேலும் அறிய

Wednesday, August 19, 2009

> சோனியா அகர்வால் தற்கொலை முயற்சியா ?

இயக்குநர் செல்வராகவனுடன் திருமண முறிவு மற்றும் விவாகரத்து குறித்த பரபரப்புச் செய்திகள் தொடர்ந்து வருவதால் மனம் உடைந்த நடிகை சோனியா அகர்வால் தற்கொலைக்கு முயன்றாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
நடிகை சோனியா அகர்வாலுக்கும் இயக்குநர் செல்வராகவனுக்கும் கடந்த 2006ல் திருமணம் நடந்தது. ஆனால் இவர்கள் திருமண வாழ்க்கையில் திடீரெனப் புகுந்த ஆண்ட்ரியா, பெரும் பூகம்பத்தை உருவாக்கிவிட்டார். இவருக்கும் செல்வராகவனுக்கும் இடையிலான ரகசிய உறவு அம்பலமானதால்தான் சோனியா அகர்வால் விவாகரத்து வரை போனதாகக் கூறப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்புதான் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெறுவதென்று முடிவு செய்து சென்னை முதன்மை குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்தச் செய்திதான் தற்போது மீடியாவை பிரதானமாக ஆக்கிரமித்துள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக நேற்று மாலை சோனியா அகர்வால் தற்கொலை செய்ய முயன்றதாக தகவல் பரவ, கோடம்பாக்கமே பரபரப்பாகிவிட்டது.

ஆனால் இந்தச் செய்தியில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை என்றும், தங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

சோனியா அகர்வால் மற்றும் செல்வராகவன் குடும்பத்தின் தரப்பில் இதுகுறித்து யாரும் கருத்து தெரிவிக்கவில்லை.
மேலும் அறிய

Tuesday, August 18, 2009

> த்ரிஷா கொடுத்த பரிசு

ஆலமரத்தோட கிளை அடுத்த தெரு வரைக்கும் போனாலும், வேர் என்னவோ எங்க மனைக்கு உள்ளேதான் இருக்கு என்று தமிழக ரசிகர்கள் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். வேறொன்றுமில்லை, த்ரிஷா பற்றிய சந்தோஷமான சமாச்சாரம்தான் இது.

வளர்ந்து வரும் இளம் பேச்சாளர்களில் ரம்யாவும் ஒருவர். சமீபத்தில் சேனல் ஒன்றில் ஒளிபரப்பான சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளில் சாலமன் பாப்பையா தலைமையில் நடந்த பட்டிமன்றம் ஒன்றை கவனித்திருந்தால் ரம்யாவின் பேச்சை பற்றி அறிந்திருக்கலாம். சென்ற இடமெல்லாம் ‘செம கிளாப்ஸ்’ வாங்கும் நட்சத்திர பேச்சாளர் இவர். எத்திராஜ் கல்லூரியின் முன்னாள் மாணவி இவர். தமிழகம் முழுவதும் சுற்றி சுழன்று இலக்கிய மேடைகளிலும், பட்டிமன்றங்களிலும் பேசிவரும் ரம்யாவுக்கு த்ரிஷா அளித்த பரிசுதான் இந்த செய்தியின் சாராம்சம்.

இதே எத்திராஜ் கல்லூரியில் படித்தவர்தான் த்ரிஷாவும். சமீபத்தில் தங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவி என்ற முறையில் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள் த்ரிஷாவை. தடபுடலான வரவேற்பு. த்ரிஷாவே வெட்கப்படுகிற அளவுக்கு வரவேற்ற கல்லூரி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்ட கனவு தேவதை, அதே மேடையில் பேசிய ரம்யாவையும் கவனிக்க தவறவில்லை. இவ்வளவு அற்புதமான பேச்சாற்றலா என்று சந்தோஷப்பட்டவர், தனிப்பட்ட முறையில் ரம்யாவோடு நட்பை வளர்த்துக் கொள்ள விரும்பினாராம். அதுமட்டுமல்ல. அதே மேடையில், “இவ்வளவு அருமையாக பேசிய ரம்யாவுக்கு நான் ஒரு பரிசு கொடுக்க நினைக்கிறேன். அது பயனுள்ளதாக இருக்கணும் என்பதால் ஒரு ஸ்கூட்டி வழங்குகிறேன்” என்று உறுதியளித்தாராம்.

அடுத்த இரண்டு நாட்களில் ரம்யா வீட்டுக்கு டெலிவரி செய்யப்பட்டது ஸ்கூட்டி. இப்போதெல்லாம் முன்னிலும் சுறுசுறுப்பாக இலக்கிய மேடைகளில் காணப்படுகிறார் ரம்யா. அதற்கு காரணம் த்ரிஷா என்றால் நம்பவா முடிகிறது?
மேலும் அறிய

> சினேகாவுக்கு ஆசிட் அடிப்பேன் என்ற மிரட்டல்

அதென்னவோ தெரியவில்லை. பரபரப்புக்கும் சினேகாவுக்கும் அப்படியொரு சங்கிலி பிணைப்பு. கடந்த சில தினங்களாக சினேகாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய டுபாக்கூர் ஒருவர் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார். பெயர் ராகவேந்திரா. ஐயாயிரம் கோடிக்கு சொத்துகள் வைத்திருப்பதாக சினேகாவிடம் அளந்துவிட்டிருக்கிறார் மனிதர். (நிஜம் என்ன என்பதை காவல் துறையே புலனாயட்டும்) கடந்த ஆறு மாதங்களாக சினேகாவை நேரில் சந்தித்தும், எஸ்எம்எஸ் மூலமும் தனது காதலை வெளிப்படுத்தி வரும் அவர், ஒரு நாளைக்கு 100 க்கும் அதிகமான எஸ்எம்எஸ்களை அனுப்பி அவஸ்தைக்கு ஆளாக்கியிருக்கிறார். கொடுமை என்னவென்றால் என்னை கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்றால் முகத்தில் ஆசிட் அடிப்பேன் என்ற மிரட்டல் வேறு.

பொறுத்து பொறுத்து பார்த்த சினேகா, காவல் துறை ஆணையரிடம் நேரில் சென்று புகார் கொடுக்க, ராகவேந்திராவை ஒரே அமுக்! இப்போது சிறைக்கு பின்னால் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் இந்த காதல் மன்னர். “இப்பவும் நான் சினேகாவை காதலிக்கிறேன். எனக்கு எவ்வளவு துன்பம் கொடுத்தாலும், சிறையில் தள்ளினாலும் எல்லாவற்றையும் புன்னகையோடு ஏற்றுக் கொள்வேன். அவர் மனசில் இடம் பிடித்தால் போதும்” என்று பினாத்துகிறாராம் ராகவேந்திரா.

சினேகா என்ன சொல்கிறார்? “அவர் என்னை நேரில் சந்தித்தது ஆட்டோகிராப் இரண்டாம் பகுதியை எடுக்கலாம் என்றுதான். என் அப்பா சேரனிடம் அனுப்பி வைத்தார். ஆனால் இவர் நோக்கம் வேறு. படம் எடுப்பதற்காக வந்தவர் அல்ல என்பதை சேரனே எங்களிடம் கூறிவிட்டார். அதன்பின் என்னை சந்தித்த அவர், காதலிக்கிறேன் என்றும் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றும் கூறினார். எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை என்ற பிறகும் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். நான் செல்போனை ஆஃப் செய்தாலும் மறுபடியும் ஆன் செய்தவுடன் லைனுக்கு வருவார். படப்பிடிப்புக்கு எங்கே போனாலும் அங்கேயும் என்னை ஃபாலோ செய்தார். பொறுக்க முடியாமல்தான் போலீசுக்கு போனேன்” என்கிறார்.

இந்த நேரத்தில் இன்னொரு டூபாக்கூர் நபரை பற்றியும் வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும். லண்டனில் இருந்து இனியன் என்ற நபர் சினேகாவை தனது மனைவியாகவே பாவித்தும், கற்பனை செய்தும் ஒரு வலைப்பூவில் தொடர்ந்து எழுதி வருகிறார். (http://www.suhasinirocks.blogspot.com) இந்த பிளாக் தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பே சினேகாவுக்கு நெருக்கமான வட்டாரங்களுக்கு நாம் தெரிவித்தோம். அவர்களும் சினேகாவிடம் சொல்ல, கிறுக்கன் என்ற அளவிலேயே அவர் இந்த உளறல் பிளாக்கையும், இதில் எழுதுகிற நபரையும் கருதியதாக நமக்கு பதிலளிக்கப்பட்டது.

போகிற போக்கை பார்த்தால், அடுத்த ராகவேந்திராவாக மேற்படி நபர் மாறக்கூடும். ஆகவே சினேகா,

“எச்சரிக்கை ப்ளீஸ்....”
மேலும் அறிய

Wednesday, August 12, 2009

> நமீதா ஜெயிப்பார்.சரத் ஆசிர்வாதம்

ஜகன்மோகினி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடந்தது. வாசலில் பேய் பிசாசு வேடத்தில் நின்றவர்கள் அனைவருக்கும் வரவேற்பு கொடுத்தார்கள். ஆவிகள் பற்றிய படம் என்பதை வாசலிலேயே நினைவு படுத்ததான் இந்த யுக்தி. நல்லவேளையாக படத்தில் நடித்த நமீதாவும், நிலாவும் கவர்ச்சி கன்னிகளாகவே வந்திருந்ததால் ஆவி பயம் போய், ஜாலி மூடுக்கு வந்தார்கள் ரசிகர்கள்.

கிராபிக்ஸ்சுக்காக எக்கச்சக்கமாக பணத்தை இறைத்திருப்பார்கள் போலிருக்கிறது. ஹாரிப்பார்ட்டர் படம் போல ஒரே மிரட்டல். விழாவில் பேசிய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், ஹாலிவுட்டுக்கே சவால் விடக்கூடிய அளவுக்கு தமிழ் படவுலகமும், தொ-ழல் நுட்ப கலைஞர்களின் திறமைகளும் திகழ்ந்து கொண்டிருக்கிறது. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் அமைந்த படத்தை பார்க்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக இருக்கின்றனர். திருட்டு வி.சி.டி யில் ரசிகர்கள் படம் பார்க்கக் கூடாது. தியேட்டருக்கு வந்து படம் பார்த்தால் தயாரிப்பாளர்கள் பலன் அடைவார்கள். அவர்கள் நன்றாக இருந்தால் ஏராளமான குடும்பங்கள் வாழும் என்றார்.

சரத்குமார் மறக்காமல் குறிப்பிட்ட ஒரு விஷயத்தைர கேட்ட நமீதாவின் முகத்தில் ஒரே சந்தோஷ சாரல். “குஷ்பு மாதிரி நமீதாவுக்கு திறமைகள் அதிகம். அவர் ஜெயிக்காமல் விட மாட்டார்” இதுதான் சரத் குறிப்பிட்ட அந்த முக்கியமான விஷயம்.
மேலும் அறிய

> நடிகை சுயம்வரம்? -தத்தளிக்கப் போகும் தமிழ்நாடு!

அப்ளிகேஷன் போட்டாலே போதும். ஆயுளுக்கும் பெருமை! கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் நடத்திய சுயம்வரத்தில் கலந்து கொள்ள முயற்சி செய்த ஏராளமான இளசுகளின் இன்ப பெருமூச்சு இது. ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட போட்டியில், ராக்கி ஒருவரை தேர்ந்தெடுத்திருக்கிறார். இவர்தான் ராக்கி என்ற கவர்ச்சி கோடவுனுக்கு இனிமேல் காவல் தெய்வம்!

வடநாட்டில் புயலை கிளப்பிய இந்த சுயம்வரம் அப்படியே ரயிலேறி நம்ம ஊருக்கும் வந்திருக்கிறது. பல ஆண்டுகளாகவே மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கும் நடிகை ரம்பா, தனக்கான சுயம்வரத்திற்கு நாள் குறித்துவிட்டாராம்.

தன்னுடன் ஒரே நேரத்தில் கடையை போட்ட மீனா, சங்கவிக்கெல்லாம் கூட மாப்பிள்ளை கிடைத்துவிட்டார்கள். தனக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தில் ஒரு சுற்று இளைத்தே போய்விட்ட ரம்பா, வீட்டில் வாஸ்துபடி ஏராளமான மாற்றங்களை செய்தார். வாஸ்து செய்த மாயமோ, அல்லது அவரது சகோதரர் வாசு செய்த மாயமோ? இந்த சுயம்வரத்தை பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்ப முன் வந்திருக்கிறதாம்.

இதன் மூலம் கிடைக்கிற வருவாய் ஒரு பக்கம் இருக்கட்டும்... ரம்பாவின் வாடிய மனசுக்கு வான்மழையாய் வருவாரா அந்த ஒன் அண் ஒன்லி பர்சன்?
மேலும் அறிய

> நடிகையை துரத்திய பன்றிக்காய்ச்சல்....

பட உலகையும் விட்டு வைக்கவில்லை பன்றி காய்ச்சல் பீதி. தமிழ் படவுலகை விட இந்தி படவுலகம்தான் ஆடிப் போயிருக்கிறது. மும்பை, புனே போன்ற இடங்களில் இக்காய்ச்சலின் அறிகுறி அதிகமாகவே இருப்பதால், சில படப்பிடிப்புகள் கேன்சல் செய்யப்பட்டிருக்கிறதாம். இந்நிலையில் அழகு தேவதை சமீரா ரெட்டி பற்றிய ஒரு வதந்தி, குலை நடுங்க வைத்திருக்கிறது.

அசல் படப்பிடிப்புக்காக சிங்கப்பூர் சென்றிருந்த சமீரா ரெட்டி ஊருக்கு திரும்பிவிட்டார். வந்த சில நாட்களில் அவருக்கு சாதாரண காய்ச்சல். அவ்வளவுதான்... பன்றி காய்ச்சலாக இருக்குமோ என்று சந்தேகத்தை கொளுத்தி விட்டார்கள். எள் முனையளவு நெருப்பிருந்தால் போதும். எரிமலையாக்கி பார்க்கவென்றே ஒரு கும்பல் இருக்குமல்லவா? பன்றி காய்ச்சல் என்றே பரப்பி விட்டார்களாம்.

போன் கால்களில் ஆரம்பித்து, பொக்கேக்கள் வரைக்கும் பன்றி காய்ச்சல் பற்றியே விசாரிக்க, கன்றி போனது சமீராவின் முகம். நல்லவேளையாக ஜூரம் விட்டது அவருக்கு. பிரச்சனையும் விட்டது. இதற்கிடையில் அசல் படத்திற்காக சிங்கப்பூர்-மலேசியாவை சுற்றி வந்த யூனிட், சென்னை திரும்பிவிட்டது. மீண்டும் செப்டம்பர் முதல் வாரம்தான் மலேசியா கிளம்புகிறார்களாம்.
மேலும் அறிய

Wednesday, August 5, 2009

> உளுந்து பற்றிய ஆரோக்ய குறிப்பு

இந்திய உணவு வகைகள் உலக உணவு வகைகளில் முதன்மையானது. சீன உணவு வகைகளில் பெரும்பாலும் அசைவம் நிறைந்திருக்கும். ஆனால் முழுக்க முழுக்க மூலிகைகள் நிறைந்த சைவ உணவே இந்திய உணவாகும்.

இந்திய உணவில் இரண்டு வகை உண்டு.

தென்னிந்திய உணவு வகை,

வட இந்திய உணவு வகை.

தென்னிந்திய உணவுகளை விருந்தோம்பல் உணவு என்பார்கள். அறுசுவை கொண்ட உணவு இதுதான். குறிப்பாக தமிழக மக்களின் பிரசித்திபெற்ற உணவு இட்லிதான். தமிழக இட்லியை விரும்பி உண்ணாதவர் உலகில் எவரும் இருக்க முடியாது.

குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இட்லிதான். இவை உடலுக்கு தெம்பையும் புத்துணர்ச்சியையும் கொடுத்து உடலை பாதுகாக்கிறது.

இந்த இட்லியில் இவ்வளவு மருத்துவக் குணம் உள்ளதற்குக் காரணம் உளுந்துதான். மனிதனுக்கு தேயைõன அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்த உணவுகளுள் உளுந்தும் ஒன்று. இதன் வெளித் தோல் கருப்பாகவும், உட்புறம்நன்கு வெண்மையாகவும் காணப்படும்.

இந்தியாவில் அனைத்து பகுதியிலும் பயிராகும் ஒருவகை செடியாகும். பணப்பயிர்களில் இதுவும் ஒன்று.

இதற்கு உளுந்து, மாடம், மாஷம் என்ற பெயர்களும் உண்டு. இதன் விதை (பருப்பு) வேர் மருத்துவப் பயன் கொண்டது.

கூச்ட்டிடூ - க்டூதணஞீத

Tamil - Ulundu

English - Blackgram

Mlayalam - Vulunnu

Telugu - Minumu

Sanskrit - Masha

Botanical Name - Vinga mungo

செய்ய உருந்திற்குச் சிலேத்மவனி லற்பிறக்கும்

வெய்யபித்தம் போமந்தம் வீறுங்காண் -மெய்யதனில்

என்புருக்கி தீரும் இடுப்புக் கடுபலமாம்

முன்பு விருத்தியுண்டாய் முன்

(அகத்தியர் குணபாடம்)

நோயின் பாதிப்பு நீங்க

கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும்.

இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.

உடல் சூடு தணிய

இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.

உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

தாது விருத்தியாக

உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.

உளுந்து வடை

வெறுமுளுந்திற் செய்வடைக்கு மேன்மேலும் -வாதம்

உறும்பித்தம் சற்றே யொடுங்கும்-நறுந்தீ

பனம்போம் புசிப்பியு பருகநன்றாம் வாலி

யனம்போ னடையாயறி

(அகத்தியர் குணபாடம்)

உளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும்.

எலும்பு முறிவு இரத்தக் கட்டிகளுக்கு

தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.

நடுக்கு வாத தைலம்

உறுதியுள்ள உளுந்ததுவும் பலம் ஈரைந்து

ஓதிய சேவகன் மூலம் பலமிரண்டு

சுறுதியுடன் முக்குறுணி சலத்திலிட்டு

சுண்டவே கஷாயமது படிமூன்றுக்குள்

பொறுதயுடன் நல்லெண்ணெய் படியோரொன்று

புகட்டி அதில் ஆவின்பால் படி இரண்டு

அறுதியாய் கலந்தணில் மருந்தைக் கேளு

ஆனசிறுபுள்ளடி சாரணையின் வேரே

வேரான அசுவகெந்தி சிற்றரத்தை

விளைந்த அகில்முக்கடுகு இந்துப்பு தானும்

சீரான வசம்பு சதகுப்பை யோடு

செவ்விய மோர் வகை கழஞ்சு திறமாயாட்டி

நேரான எண்ணெயதில் கரைத்துக் காய்ச்சி

பிசகாமல் மெழுகு பதம்தனில் வடித்து

மேரான உடல்பூச நடுக்கு வாதம்

விட்டகலும் இன்னமொரு விவரம் கேளே...

உளுந்து பத்து பலம் (350 கிராம்)

சிற்றாமுட்டி வேர் இரண்டு பலம் (70 கிராம்)

தண்ணீர் மூன்று குறுணி (16 லிட்டர்)

சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து நான்கில் ஒரு பங்காக அதாவது 4 லிட்டராக வரும் வரை காய்ச்சி அதனுடன் ஒருபடி நல்லெண்ணெய் (1.3 லிட்டர்) இரண்டுபடி (2.6 லிட்டர்) பசுவின் பாலில் கலக்கவும். அதனுடன் சிறுபுன்னை, சாரணையின் வேரும் மேலும்

அதனுடன் அசுவகெந்தி, சிற்றரத்தை, அகில் திரிகடுகு, இந்துப்பு, வசம்பு, சதகுப்பை, செவ்வியம் இவற்றை வகைக்கு ஒரு கழஞ்சு (5 கிராம்) எடுத்து அரைத்து, எண்ணெயில் கரைத்து அடுப்பேற்றிக் காய்ச்சி, மெழுகு பதம் வரும்போது வடித்து உடம்பில் பூச நடுக்கு வாதம் குணமாகும்.

(சுக்கிர சிந்தாமணி நூலிலிருந்து)

இடுப்பு வலுப்பெற

சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.

இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

குழந்தைகளுக்கு

சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.

பெண்கள்

நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

அல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.

உளுந்தின் பயன்களைப் பற்றி தனிப் புத்தகமே எழுதும் அளவுக்கு மருத்துவப் பயன் உள்ளது.

உளுந்தை தினமும் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.

உளுந்து பற்றிய ஆரோக்ய குறிப்பு அறிந்து கொளவேண்டிய ஒன்றாகும்.
மேலும் அறிய

Tuesday, August 4, 2009

> ரஜினின் அரசியல் முடிவு எந்திரனுக்குப் பிறகு

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து எந்திரன் படத்துக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக ரஜியினின் ஒவ்வொரு படம் ரிலீசுக்கு முன்பும், தேர்தலுக்குத் தேர்தலும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து செய்திகள் வருவது வழக்கம்.

அந்த வகையில் இப்போது எந்திரன் படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டுள்ள நிலையில், ரஜினியின் அண்ணன் இதைத் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த ஆண்டியப்பனூரில் உள்ள பாப்பாத்தியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடிப் பெருக்கு விழாவில் அன்னதானம் வழங்க வந்த அவர் அளித்த கூறுகையில்,

எங்கேயோ பிறந்து, தமிழகம் வந்து அனைவரின் மனதிலும் தம்பி ரஜினி நீங்காத இடம் பிடித்துவிட்டார். அவருக்கு நல்லது செய்ய மட்டும்தான் தெரியும். எப்போதும் மக்களைப் பற்றி சிந்திக்கும் இதயம் ரஜினிக்கு.

மக்கள் விரும்பினால் அவர் அரசியலுக்கு வருவார். இது குறித்து எந்திரன் படம் வெளிவந்த பிறகு விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்.

அவரே இதுபற்றி தெளிவாகக் கூறிவிட்டதால் (!), ரசிகர்களாகிய நீங்கள் எந்த குழப்பத்துக்கும் (!!) ஆளாகத் தேவையில்லை. நிச்சயம் உங்களுக்கு நல்லது எதுவோ அதைத்தான் தம்பி செய்வார்.

தம்பி வந்தால், நிச்சயம் இன்றைக்கு உள்ள பண அரசியலுக்கு முடிவு கட்டுவார். அவருக்கு இதுபோன்ற சூழலே பிடிக்காது. பார்ப்போம்… ஆண்டவன் என்ன கட்டளை இடப் போகிறாரோ…

தற்போது கிருஷ்ணகிரி அருகே நாச்சியார்குப்பத்தில் எங்கள் தாய், தந்தை நினைவாக திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. நூலகம், மக்களுக்கு முழுமையாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ளோம். எந்திரன் படம் வெளிவந்த பிறகு மணி மண்டபம் கட்ட இருக்கிறோம் என்றார் சத்யநாராயணா.

வேலூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ரசிகர் மன்றங்களின் வேண்டுகோளுக்கிணங்க சத்யநாராயணா ராவ் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் அறிய

> சிம்புவிடமிருந்து போன்... சிலிர்க்கும் அருண் விஜய்

கிட்டதட்ட 80 பிரிண்டுகள். அத்தனையும் சொந்த ரிலீஸ். மலை மலை படத்தின் மூலம் தனது மருமகனை மலை போல தாங்கி நிற்கிறார் அருண் விஜய்யின் மாமனார். இவர் எதிர்பார்த்ததை போலவே எல்லா இடங்களிலும் படத்திற்கு செம ரெஸ்பான்ஸ் என்கிறார்கள்.

சிம்புவிடமிருந்து முதல் பாராட்டு வந்ததாம் அருணுக்கு. மாப்ளே, இதே ரூட்டை பிடிச்சுக்கோடா. பெரிய இடத்தை பிடிப்பே என்று அவர் வாழ்த்த ஆர்யா, ஜீவன் என்று அடுத்தடுத்து வந்த போன் கால்களால் அசந்து போயிருக்கிறார் அருண். நாங்க எல்லாருமே ஒரே குடும்பம் மாதிரி பழகுற பிரண்ட்ஸ். எங்களுக்குள்ளே போட்டி இருக்குமே தவிர பொறாமை இருக்காது. முதல் நாளே படத்தை பார்த்திட்டு போன் பண்ணுற அவங்களோட அன்பு என்னை இன்னும் உற்சாகப்படுத்தியிருக்கு என்றார் அருண் விஜய்.

டைட்டிலில் இவருக்கு இளம் சூரியன் என்ற பட்டம் கொடுத்திருக்கிறார்கள். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள இதெல்லாம் தேவைப்படுது. என்ன நேரத்திலே இப்படி ஒரு பட்டப் பெயர் கொடுத்தாங்களோ, லைஃப் பிரைட்டா சூரியன் மாதிரி பிரகாசிக்க ஆரம்பிச்சிருக்கு. இனிமே இது மாதிரியே கமர்ஷியல் படங்களில் நடிக்கலாம்னு முடிவெடுத்திருக்கேன். அதுமட்டுமில்லே, இதே கூட்டணி அப்படியே அடுத்த படத்திலேயும் தொடருது என்றார் அருண் விஜய். ஆனால், முன்னணி நாயகி ஒருவரை ஜோடியாக நடிக்க சொல்லி அழைத்திருக்கிறார்களாம். முன்பு தயங்கிய சிலர், மலை மலை படத்திற்கு பிறகு கண்டிப்பா நடிக்கிறோம் என்று உத்திரவாதம் கொடுத்திருக்கிறார்களாம்.

பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா...!
மேலும் அறிய

Monday, August 3, 2009

> வடிவேலு வின் அடுத்த அதிரடி என்ன?

சிரிக்க வைக்க மட்டுமல்ல. சீரியஸ் ஆன கேள்விகளை கூட சிக்கல் இல்லாம அவிழ்க்க தெரியுது வடிவேலுவுக்கு. "உங்க கூட இருந்தவங்க இப்போ வரிசையா காலி பண்ணிட்டாங்க போலிருக்கே?" என்றால், "ஆமாங்க. எல்லாரும் நமக்கே ஆப்பு வச்சிட்டாய்ங்க"ன்னு பதில் சொல்வார் என்றுதானே எதிர்பார்ப்போம். நம்மை அப்படி நினைக்க வைக்கிற மாதிரியேதான் அமைந்தது வடிவேலுவுடன் இருந்தவர்கள் செய்த சில வேண்டாத காரியங்கள். ஆனால், ரொம்ப பக்குவமாகவே பதில் சொல்கிறார் வடிவேலு.

அவங்களும் வெளிச்சத்துக்கு வரணுமில்லையா? தெரிஞ்ச முகமாயிட்டாங்க. வேற வேற படங்களில் நடிக்க வாய்ப்பு வருது. போய் பண்ணுறாங்க. அவங்கள்ளாம் எனக்கு அறிமுகம் ஆகும்போது புதுசாதான் அறிமுகம் ஆனாங்க. அதே போல் இப்போ நிறைய புதுமுகங்களை நான் கொண்டு வர்றேன். புதிய காமெடிகளும் வந்துகிட்டேயிருக்கு. வேற வேற மாதிரி வெரைட்டியா நடிச்சதானே ஜனங்களை தொடர்ந்து சிரிக்க வைக்க முடியும். அழகர் மலையிலே என்னோட புது கூட்டணி போட்டிருக்கிற ஆட்டத்தை பாருங்க. என்னோட அடுத்த அதிரடி இந்த படம்தான்.

எல்லாம் அவன் செயல் படத்திலே நானும் ஆர்.கே வும் போட்ட காமெடிய பார்த்திட்டு இன்னும் வயிறு வலிக்க சிரிச்சிட்டு இருக்காங்க. இப்போ அழகர் மலை படத்திலே மறுபடியும் ஒரு புயலை கிளப்பியிருக்கோம் பாருங்க என்ற வடிவேலு சொன்ன இன்னொரு தகவல், ரொம்ப நெகிழ்ச்சிக்குரியது.

சேலத்தை சேர்ந்த ஒரு குழந்தை விபத்தில் சிக்கி கோமா ஸ்டேஜில் இருந்ததாம். டிவியிலே என்னோட காமெடி சீன்களை போட்டு கோமாவில் இருந்து எழுப்பியிருக்காங்க. இதை கேட்கும் போதே மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்திச்சு என்றார்.

வாங்கய்யா, வைத்தியாரய்யா... !
மேலும் அறிய

> படத்தையே வேண்டாம் என்று மறுத்த நயன்தாரா

சிங்கம் சிங்கிளாதான் வரும். அடுத்த வார்த்தையை சொன்னா அடிதடியாகிவிடும் என்பதால் இதோடு நிறுத்திக் கொள்வோம். சிங்கிள் ஹீரோயினாக மட்டுமே நடிக்க பிரியப்படும் நயன்தாரா, மணிரத்னம் படத்தையே வேண்டாம் என்று மறுத்திருக்கிறார்.

எந்த நடிகர் நடிகைகளிடம் பேட்டியெடுத்தாலும், சம்பிரதாயமாக ஒரு கேள்வி கேட்கப்படும். நீங்க யாரு டைரக்ஷன்லே நடிக்க ஆசைப்படுறீங்க? மணி ரத்னம், ஷங்கர் என்று அவர்களும் கிளிப்பிள்ளை போல பதில் சொல்வார்கள். இதே கேள்விக்கு நயன்தாராவும் பலமுறை இந்த பதிலை சொல்லியிருக்கிறார். ஆனால் அவரே அழைத்தபோது, டேட்ஸ் இல்லையே என்று ஒதுங்கிக் கொண்டதை என்னவென்று சொல்வது?

ராவணா படத்தில் திருமதி ராவணனாக நடிக்கதான் நயன்தாராவை அழைத்திருந்தார் மணிரத்னம். சுஹாசினியே நயனிடம் பேசினாராம். யோசித்து சொல்கிறேன் என்று பதிலளித்த நயன், தனது பதிலை தெளிவாக கூறிவிட்டார். மணி சார் படத்திலே நடிக்கணும்ங்கிறது என்னோட லட்சியம். ஆனால் தமிழில் ஆதவன், தெலுங்கில் இரண்டு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டதால், இப்போ என்னால முடியாது. தயவு செய்து பொறுத்துக்கணும் என்றாராம்.

விக்ரமுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா, அவரை தொடர்ந்து ப்ரியாமணி ஆகியோர் இருக்கும் போது தனக்கான முக்கியத்துவம் எந்தளவுக்கு இருக்கும்? இந்த ஐயத்தில்தான் அவர் மறுத்தார் என்கிறது திரையுலக வட்டாரம். பேசாம இவங்களை திரைக் ‘கலக’ வட்டாரம்னுதான் அழைக்கணும் போலிருக்கு!
மேலும் அறிய

Saturday, August 1, 2009

> ஒரு பில்லியன் பேர் டவுன்லோட் செய்த பயர்பாக்ஸ்

பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பினை மொஸில்லா நிறுவனம் வழங்குகிறது. மொஸில்லாவின் ஒரு சோதனை திட்டமாகத்தான் பயர்பாக்ஸ் பிரவுசர் திட்டம் தொடங்கியது. தவே ஹையாட், பிளேக் ராஸ் ஆகிய இருவரும் இதில் அதிக ஆர்வம் காட்டினார்கள். முதலில் மொஸில்லா சூட் என்ற கூட்டுத் தொகுப்பில் ஆர்வம் இருந்தாலும் பின்னர் தனி பிரவுசராக மொஸில்லா பயர்பாக்ஸில் தனிக் கவனம் செலுத்தினார்கள். 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பயர்பாக்ஸ் மற்றும் தண்டர்பேர்ட் தொகுப்புகளில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்தனர்.

முதலில் இந்த திட்டத்திற்கு பீனிக்ஸ் (Phoenix) என்று பெயரிட்டனர். இந்த பெயர் பீனிக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வர்த்தகப் பெயருடன் பிரச்சினை ஏற்பட்டதால் பயர்பேர்ட் (Firebird) எனப் பெயரிட்டனர். இதற்கும் பயர்பேர்ட் டேட்டா பேஸ் சாப்ட்வேரிடமிருந்து எதிர்ப்பு வந்தது. இதற்குப் பதிலளிக்கையில் பிரவுசரின் பெயர் மொஸில்லா பயர்பேர்ட் என்றுதான் எப்போதும் இருக்கும் என்று மொஸில்லாவின் சார்பில் எடுத்துச் சொல்லப்பட்டது. இதனால் பயர்பேர்ட் சாப்ட்வேர் தொகுப்புடன் பிரச்சினை இருக்காது என்று விவாதிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து அந்நிறுவனத்திடமிருந்து வற்புறுத்தல்களும் ஆட்சேபணைகளும் வந்ததனால் மொஸில்லா பயர்பேர்ட், மொஸில்லா பயர்பாக்ஸ் என மாற்றப்பட்டது. இதுவே எளிமையாக பயர்பாக்ஸ் என அழைக்கப்பட்டது. மொஸில்லா இதனைச் சுருக்கமாக அழைக்கையில் Fx அல்லது fx என அழைக்கப்பட வேண்டும் என விரும்பியது. ஆனால் சுருக்கமாக இதனை FF என அழைப்பதே வழக்கமாகிவிட்டது.


பயர்பாக்ஸ் பிரவுசர் திட்டம் பல மாற்றங்களுக்கு உள்ளாகி பயர்பாக்ஸ் பதிப்பு 1, 2004 நவம்பர் 9 அன்று வெளியானது. இதன் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு அதன் சிறப்பான அப்டேட் பயர்பாக்ஸ் பதிப்பு 1.5 நவம்பர் 29, 2005 அன்று வெளியானது. தொடர்ந்து முன்னேறி அண்மையில் ஜூலை முதல் வாரத்தில் பயர்பாக்ஸ் 3.5 வெளியானது நம் அனைவருக்கும் தெரியும்.இதன் புதிய வசதிகள் பற்றி பலரும் ஏற்கனவே இணையத்தில் அலசி இருந்ததாலும் சில முக்கியமான தகவல்களை இங்கு பார்ப்போம்.

பரயர்பாக்ஸ் ரசிகர்களின் பலவகையான வேண்டுகோள்களையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில் பயர்பாக்ஸ் 3.5 முழுமையான பதிப்பு வெளியாகியுள்ளது. சபாரி பிரவுசரின் பதிப்பு 4 வெளியாகியுள்ள நிலையில் இந்த தொகுப்பு வந்துள்ளது பிரவுசர் தயாரிக்கும் நிறுவனங்களிடையே நிலவும் கடுமையான போட்டியைக் காட்டுகிறது. உலகின் இரண்டாவது பிரபலமான பிரவுசர் என்ற பெயரை பயர்பாக்ஸ் மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இயங்கும் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.தற்போதைய பிரவுசிங் தொழில் நுட்பமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் வெளியான பயர்பாக்ஸ் பதிப்பு 3 ஐக் காட்டிலும் பெரிய அளவில் இதில் மாற்றங்களோ வேகமோ இல்லை என்றாலும் சில புதிய வசதிகள், பிரவுசர் சந்தை போட்டியில் பயர் பாக்ஸைத் தொடர்ந்து தூக்கி நிறுத்துகின்றன.

இதில் பல புதிய வசதிகள் இருந்தாலும் அவை ஒன்றும் ஆச்சரியத்தைத் தரும் வகையில் இல்லை என்பதே பலரின் கணிப்பு. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ரசிகர்களுக்குப் பழக்கமான InPrivate மற்றும் குரோம் பிரவுசர் தரும் Incognito ஆகிய Private Browsing வசதியினை பயர்பாக்ஸ் 3.5 தாங்கி வந்துள்ளது. ஏற்கனவே டிசம்பர் 2008 முதல் பீட்டா தொகுப்பினைப் பெற்று பயன்படுத்திய 8 லட்சம் பேர் இந்த வசதியினை அனுபவித்தனர். இப்போது பொதுவாக அனைவரும் பயன்பெறும் வகையில் பதிப்பு 3.5ல் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் இந்த பிரவுசர் மூலமாகப் பார்த்த தளங்கள் குறித்த குறிப்புகள், அந்த தளங்களில் நாம் தந்த நம் பெர்சனல் தகவல்கள் ஆகியவை பதியப்பட மாட்டாது. இதனால் நாம் பார்த்த தளங்களின் பட்டியல் யாருக்கும் கிடைக்காது. எனவே பொதுவான கம்ப்யூட்டர் மையங்களில் நாம் மற்றவர் அறியாமல் நம் பிரவுசிங் வேலையை மேற்கொள்ளலாம். இந்த வகை பிரவுசிங் போது புக்மார்க்குகளை அமைக்கலாம். பிரவுசரை மூடும்போது இவை புக் மார்க் பட்டியலில் ஏற்றப்படும்.


இந்த வகையில் குரோம் மற்றும் பிற பிரவுசர்களில் பிரைவேட் மற்றும் பப்ளிக் பிரவுசிங் ஆகிய இரண்டு வகை பிரவுசிங்குகளையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளலாம். பயர் பாக்ஸில் அந்த வசதி இல்லை. பயர்பாக்ஸ் 3.5 பதிப்பு தொழில் நுட்ப அடிப்படையில் மற்றவற்றைக் காட்டிலும் சிறப்பான ஒரு அம்சத்தைக் கொண்டிருப்பதாக இணைய தள வடிவமைப்பாளர்கள் கூறி உள்ளனர். எச்.டி.எம்.எல்.5 லோக்கல் ஸ்டோரேஜ், சி.எஸ்.எஸ்.மீடியா டேக்ஸ், இறக்கிப் பயன்படுத்தக் கூடிய வகையில் எழுத்துக்கள் வசதி என டெவலப்பர்களுக்குப் பயன் தரக்கூடிய பல வசதிகள் தரப்பட்டுள்ளன.

இந்த புதிய பதிப்பில் ஜியோ லொகேட்டிங் என்னும் வசதியும் உள்ளது. இதனால் நீங்கள் உலகின் எந்தப் பகுதியில் இருந்து இயக்குகிறீர்கள் என்பதனை பிரவுசர் உணர்ந்து கொள்ளும். பிரவுசர் கிராஷ் ஆனால் மீண்டும் அதனை இயக்கும் போது அப்போது இயங்கிக் கொண்டிருந்த அனைத்து டேப்களும் திறக்கப்பட வேண்டுமா என்று கேட்கப்பட்டு அவை அனைத்தும் திறக்கப்படும். ஆனால் தற்போது அதிலும் எந்த டேப்கள் திறக்கப்பட விரும்புகிறோமோ அவற்றை மட்டும் திறக்கலாம். மேலும் கிராஷ் ஆகும்போது ஏதேனும் வெப் படிவத்தில் டெக்ஸ்ட் டைப் செய்து கொண்டிருந்தாலும் அந்த டெக்ஸ்ட்டும் மீண்டும் தரப்படும்.


இந்த பதிப்பின் வேகம் குறித்து சொல்லியே ஆக வேண்டும். சன் ஸ்பைடர் ஜாவா ஸ்கிரிப்ட் பெஞ்ச் மார்க் என்னும் சோதனை மூலம் இதனைச் சோதித்த போது இது பயர்பாக்ஸ் பதிப்பு 3 ஐக் காட்டிலும் இரண்டு மடங்கு வேகத்தில் இயங்கியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டேப் பிரவுசிங் பழக்கத்திற்கு வந்த நாள் முதல் பிரவுசர்கள் அனைத்தும் தங்கள் டேப் பாரில் ஏதாவது முன்னேற்றமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்த பதிப்பில் சபாரி பிரவுசரில் உள்ளது போல டேப்களை அதன் வரிசையை மாற்றி அமைக்கலாம். இழுத்து நீக்கலாம். ஒரு டேப்பை இழுத்து புதிய விண்டோ ஒன்றில் அமைக்கலாம்.

பயர்பாக்ஸ் பதிப்பு இப்போது தமிழ் உட்பட 70க்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது. இன்னும் சில மொழிகளிலும் இதனைத் தர வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ப்யார் பாக்ஸின் அனைத்து தொகுப்புக்களையும் இதுவரை உலகெங்குமுள்ள ஒரு பில்லியன் மக்கள் தரவிறக்கம் செய்த்துள்ளனர். இதனை சமிபத்தில் மொஸில்லா நிறுவனத்தினர் கொண்டாடினார்கள். இது தொடர்பான மேலதிக தகவல்களை கேளே உள்ள இணைய முகவரியில் அறிந்தது கொள்ளலாம்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

எழுதியவர் : கார்த்திக்

மேலும் அறிய

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.