Monday, November 30, 2009

> WINDOWS 7 ற்கு பத்து இலவச மென்பொருட்கள்?

புத்தம் புதிய விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இன்னும் என்ன கூடுதல் வசதிகள் தர முடியும் என்று இந்த தலைப்பைப் பார்த்தவுடன் எண்ணலாம். விண்டோஸ் 7 செட்டிங்ஸ் அமைப்பினைச் சீர்படுத்தி, அதன் செயல்பாட்டினை மேம்படுத்த பல புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை இலவச புரோகிராம்களே. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். நீங்கள் இன்னும் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறவில்லை என்றாலும், இவற்றைக் குறித்து வைத்துக் கொள்வது, அல்லது டவுண்லோட் செய்து வைத்துக் கொள்வது நல்லது.

1. மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ்

விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு முன் வந்தவை போல, இந்த புதிய சிஸ்டத்திலும் மால்வேர், வைரஸ் மற்றும் ஸ்பைவேர் போன்ற கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களுக்கு எதிரான பாதுகாப்பினை வழங்கும் வசதிகள் எதுவும் விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் தரப்படவில்லை. பயர்வால் ஒன்று இணைத்துத் தரப்பட்டிருந்தாலும், வைரஸ் புரோகிராம்களுக்கு எதிரான நடவடிக்கையை அதனால் எடுக்க முடியாது. எனவே தான் நாம் கட்டணம் செலுத்தி மெக் அபி அல்லது சைமாண்டெக் போன்ற வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களை வாங்கிப் பயன்படுத்துகிறோம். ஆனால் இதே வேலையை மேற்கொள்ள மைக்ரோசாப்ட் தனியாக செக்யூரிட்ட் எசன்ஷியல்ஸ் என்ற புரோகிராமினைத் தருகிறது.




வீடுகளில் வைத்துப் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களுக்கு இது மிகச் சரியான பாதுகாப்பினைத் தருகிறது. இதுவும் இலவசமாகக் கிடைக்கிறது. இதனை டவுண்ட்லோட் செய்து இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். அல்லது எனக்கு தர்ட் பார்ட்டி ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தான் வேண்டும் என எண்ணுபவர்கள் ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை இலவசமாகப் பெற்று பயன்படுத்தலாம்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

2. நினைட் (Ninite)

எக்ஸ்பி சிஸ்டத்திலிருந்து விண்டோஸ் 7 க்கு மாறுபவர்கள், கிளீன் இன்ஸ்டால் செய்திட வேண்டியுள்ளது. அதாவது ஏற்கனவே இருந்த அனைத்து புரோகிராம்களையும் மீண்டும் ஒரு முறை,புதியதாக இன்ஸ்டால் செய்திட வேண்டும். இது ஒரு அநாவசியமான நேரம் எடுக்கும் வேலை ஆகும். இதற்குப் பதிலாக அனைத்து இலவச புரோகிராம் களையும் தானாக ஒரே வேலையாக இன்ஸ்டால் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!



இதனைத் தான் நினைட் தளம் மேற்கொள்கிறது. முதலில் கீழே உள்ள முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்று, உங்களுக்குத் தேவையான புரோகிராம்களைத் தேர்வு செய்திடுங்கள் (பயர்பாக்ஸ், ஸ்கைப், ஐட்யூன்ஸ் போல) அடுத்து நினைட் புரோகிராமினை இன்ஸ்டால் செய்து இயக்கவும். பின் அனைத்து புரோகிராம்களும் உங்கள் கம்ப்யூட்டரில் எந்தவித கூடுதல் வேலையும் இல்லாமல் இன்ஸ்டால் செய்யப்படும். நினைட் பெர்சனல் பயன்பாட்டிற்கு இலவசமாகக் கிடைக்கும்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

3.விண்டோஸ் போட்டோ காலரி (Windows Photo Gallery)

விஸ்டாவினால் நாம் சந்தித்த ஒரு பெரும் பிரச்னை, அதன் இயக்க வேகம் ஆகும். ஏகப்பட்ட துணை புரோகிராம்கள் உள்ளிணைந்து வடிவமைக்கப் பட்டதால், அதனை உருவாக்கிய கோடிங் வரிகள் அதிகமாகி, விஸ்டா பெரிய அளவில் அமைந்தது.




அதனால் அதன் இயக்க வேகம் தடைபட்டது. அதே போல விண்டோஸ் 7 சிஸ்டம் அநாவசியத்திற்குப் பெரிதாக அமைந்து விடாமல் இருக்க, மைக்ரோசாப்ட் சில புரோகிராம்களை விட்டுவிட்டது. அப்படி ஒரு புரோகிராம் தான் லைவ் போட்டோ காலரி. இது ஒரு போட்டோ மற்றும் வீடியோ பைல் மேனேஜர் மற்றும் போட்டோ எடிட்டர்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

4. விண்டோஸ் ஈஸி ட்ரான்ஸ்பர் (windows easy transfer)

நீங்கள் எக்ஸ்பி அல்லது விஸ்டாவிலிருந்து, விண்டோஸ் 7க்கு மாறுபவர்களாக இருந்தால், விண்டோஸ் ஈஸி ட்ரான்ஸ்பர் என்னும் மைக்ரோசாப்ட் இலவசமாகத் தரும் புரோகிராமினை, நிச்சயம் இயக்கிப் பார்க்க வேண்டும். பைல்களை ஒரு கம்ப்யூட்டரிலிருந்து மற்றொன்றுக்கு மாறுவதற்கு உதவிடுகிறது. இதில் ஒரு பைல் எக்ஸ்புளோரர் தரப்படுகிறது. நாம் காப்பி செய்திடக் கொடுக்கும் பைல், அதன் டைரக்டரியிலிருந்து எடுக்கப்பட முடியாமல், மாற்றப்பட முடியாமல் இருந்தால், உடனே இந்த எக்ஸ்புளோரர் முடங்காது. அதற்குப் பதிலாக பைல் மாற்றத்தை முடித்து, இறுதியில் எந்த பைலை ஏன் மாற்ற முடியவில்லை என்ற அறிக்கையைத் தரும். இந்த புரோகிராம் பைல்களைக் காப்பி செய்வதில்லை.


ஒரு கம்ப்யூட்டரிலிருந்து இன்னொன்றுக்கு, அவற்றை இணைக்கும் கேபிள் வழியே மாற்றுகிறது. கம்ப்யூட்டர் இணைக்கப்படவில்லை என்றால் பைல்களை எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் அல்லது பிளாஷ் டிரைவிற்கு மாற்றலாம். இந்த புரோகிராமை இயக்க கேபிள் அல்லது மேலே சொல்லப்பட்ட இந்த டிரைவ்கள் தேவை.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

5. அல்ட்டிமேட் விண்டோஸ் ட்வீக்கர் வி2 (Ultimate Windows Tweaker v2)

விண்டோஸ் 7 தொகுப்பின் இயக்கத்தினை, உங்கள் விருப்பப்படி அமைக்க வேண்டுமா? யூசர் இன்டர்பேஸ், நெட்வொர்க், செக்யூரிட்டி, சிஸ்டம் செட்டிங்ஸ் போன்றவை உங்கள் விருப்பத்தின்படி இயங்க வேண்டுமா! இந்த தொகுப்பைப் பயன்படுத்துங்கள். விஸ்டாவிலும் இதனைப் பயன்படுத்தலாம்.



இந்த புரோகிராம் உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எது என்பதை உணர்ந்து, அதற்கேற்ப உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும் வழிகளை மேற்கொள்கிறது. இதன் மூலம் பல செட்டிங்குகளை அமைக்கலாம். விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்களில் அல்ட்டிமேட் எடிஷன் பயன்படுத்துபவர்களுக்கு இது கூடுதல் வசதிகளைத் தருகிறது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

6.விண்ஸிப் 14 (WinZip)

விண்டோஸ் தொகுப்பிலேயே பைல்களைச் சுருக்கி விரிக்கும் வசதி இருக்கையில் விண்ஸிப் எதற்கு என்று நீங்கள் எண்ணலாம். இதே இதழில் விண்ஸிப் பதிப்பு 14 குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரையைப் படிக்கவும். விண்டோஸ் இயக்கம் தரும் வசதிகளுடன் கூடுதல் வசதிகளை இந்த பதிப்பு தருகிறது. எனவே இதனையும் கூடுதலாகப் பதிந்து இயக்கிக் கொள்ளலாம்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

7. என்ஹேன்ஸ் மை 7 (EnhanceMySeven)

விண்டோஸ் விஸ்டா மற்றும் எக்ஸ்பியைக் காட்டிலும் விண்டோஸ் 7 பயன்படுத்துவது மிகவும் எளிதாக இருக்கலாம். ஆனால் அதனைத் தொடர்ந்து நிர்வகித்தல் என்பது சற்று சிரமமான காரியம் என்பது போகப் போகத் தெரியும். இந்த வகையில் உதவுவதற்கு என என்ஹேன்ஸ் மை 7 தயாரிக்கப்பட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் எந்த பைல்கள் ஸ்டார்ட் அப் போல்டரில் இருக்க வேண்டும் என்பதனைத் தீர்மானிக்கலாம். ஹார்ட் டிரைவ் செயல்படும் விதம், வெப்ப நிலை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். ரிஜிஸ்ட்ரியில் மாற்றங்களை ஏற்படுத்தும் வேலையையும் மேற்கொள்ளலாம்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

8. இமேஸ் ரீசைஸர் (Image Resizer Powertoy Clone)

விண்டோஸ் 7 இயக்கத்தில் படங்களின் அளவை மாற்றி அமைக்க வேண்டுமா! இந்த இமேஜ் ரீசைஸர் புரோகிராம் இதற்கு உதவி வேலையை எளிதாக்குகிறது. இதனை இன்ஸ்டால் செய்த பின், பட பைல் ஒன்றின் ஐகான் மீது ரைட் கிளிக் செய்தால், அதில் நான்குவித அளவுகளுக்கான (small (640 by 480) ; medium (800 by 600); large (1024 by 768) ; மற்றும் handheld PC (240 by 320)) மெனு கிடைக்கும். இதில் தேவையானதைத் தேர்ந்தெடுத்தவுடன் அந்த அளவில் படம் கிடைக்கும். இவை தவிர நீங்கள் செட் செய்திடும் அளவிலும் படங்களை அமைக்கலாம்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

9. சிஸ்ட்ராக் டூல்ஸ் (Systerac Tools)

விண்டோஸ் 7 சிஸ்டம் எந்தவித பிரச்னையும் இன்றி இயங்க சிஸ்ட்ராக் டூல்ஸ் 16 டூல்ஸ்களைக் கொண்டுள்ளது. விண்டோஸ் இயக்கம், தோற்றம், மெமரி பயன்பாடு, சிஸ்டம் கிளீன், பைல் ஷ்ரெடிங் எனப் பல வசதிகளைத் தரும் டூல்ஸ்கள் இதில் அடங்கியுள்ளன. இந்த புரோகிராமின் முகப்பும் யூசர் இன்டர்பேஸும் அழகாகவும் பயன்படுத்தக் கூடிய வகையிலும் உள்ளன.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

10. விண்டோஸ் 7 அப்கிரேட் அட்வைஸர் (Windows7 Upgrade Advisor)

உங்கள் சிஸ்டத்தை விஸ்டா அல்லது எக்ஸ்பியிலிருந்து விண்டோஸ் 7க்கு அப்கிரேட் செய்திட திட்டமா? அப்படியானால் விண்டோஸ் 7 அப்கிரேட் அட்வைஸர் புரோகிராம் இயக்கிப் பார்க்காமல் செய்திட வேண்டாம். மைக்ரோசாப்ட் இணைய தளத்தில் இந்த புரோகிராம் இலவசமாகக் கிடைக்கிறது. உங்கள் கம்ப்யூட்டரின் அனைத்து பிரிவுகளையும் சோதனை செய்து அவை அனைத்தும் விண்டோஸ் 7 சிஸ்டம் ஏற்றுக் கொள்ள போதுமானவையா என்று காட்டுகிறது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

எழுதியவர் : கார்த்திக்
மேலும் அறிய

Saturday, November 21, 2009

> ( i -Phone)க்கு மைக்ரோசாப்ட் அப்ளிகேஷன்

தலைப்பு தவறு என்று எண்ணுகிறீர்களா! ஆமாம், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஐ போனுக்கு அப்ளிகேஷன் புரோகிராமினைத் தருமா என்ன? என்று நீங்கள் வியப்பது தெரிகிறது. ஆனால் உண்மை அதுதான். மைக்ரோசாப்ட் லைவ் லேப்ஸ் அத்தகைய ஒரு புரோகிராம் ஒன்றைத் தருகிறது.

ஸீ ட்ரேகன் என இதற்குப் பெயர் இட்டுள்ளது. இதன் மூலம் ஐ போன் பயன்படுத்துபவர்கள் 3ஜி அல்லது வை–பி வழியாக பெரிய அளவிலான போட்டோ லைப்ரேரிகளை எளிதாகப் பெற்று காண முடியும். இந்த சாப்ட்வேர் தொகுப்புடன் 50 படங்கள் இணைத்துத் தரப்படுகின்றன. சில படங்கள் 10 கிகா பிக்ஸெல்கள் அளவில் மிகப் பெரியதாக உள்ளன. இதில் சில சாட்டலைட் மூலம் எடுத்த படங்கள், சில ஸ்பேஸ் போட்டோக்கள், சில அதிக ரெசல்யூசனில் உள்ள கலைப் படங்களாகும்.

இந்த சாப்ட்வேர் தொகுப்பின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால் இது முற்றிலும் இலவசம். ஒரு சின்ன மாற்றம் இருந்தாலும் அடுத்த மேம்படுத்தப்பட்ட சாதனத்திற்கு மாறிக் கொள்ளுங்கள் என்று அட்வைஸ் வழங்கும் . மைக்ரோசாப்ட் இவ்வாறு இலவச தொகுப்பினை எப்போதும் பயன்படுத்தும் வகையில் வழங்குவது புதுமைதான்.

மேலும் தகவல்களுக்கு : இங்கே கிளிக் செய்யவும்

எழுதியவர் : கார்த்திக்
மேலும் அறிய

Friday, November 20, 2009

> அ‌ஜித் மனைவிக்கு அமிதாப் பாராட்டு

அமிதாப் பச்சன் நடிப்பில் விரைவில் வெளிவரயிருக்கிறது, பா. ஆர்.பாலகிருஷ்ணன் என்கிற பால்கி படத்தை இயக்கியிருக்கிறார். இதில் அமிதாப் பச்சன் அபிஷேக் பச்சனின் மகனாக நடித்திருப்பது அனைவருக்கும் தெ‌ரிந்த செய்தி.

இந்தப் படத்தை முன்னிட்டு தமிழக நினைவுகளை மீட்டெடுத்த அமிதாப், சென்னையை தனது மனதுக்கு நெருக்கமான இடமாக‌த் தெ‌ரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் நடிகைகளில் ஷாலினியை பெ‌ரிதும் பாராட்டியவர், அவர் திருமணத்துக்குப் பிறகு நடிப்பை கைவிட்டது மாபெரும் இழப்பு என்றும் கூறியிருக்கிறார். அந்தளவுக்கு ஷாலினி அ‌ஜித்தின் நடிப்பு இந்தி சூப்பர் ஸ்டாரை கவர்ந்திருக்கிறது.

அமிதாப்பின் இந்த வ‌ரிகளை முன்பும் பலர் குறிப்பிட்டிருக்கிறார்கள். ரசிகர்களின் இழப்பு, ‘தல’யின் வரவு. அதுதானே உலக நியதியும்கூட.
மேலும் அறிய

Thursday, November 19, 2009

> திரைப்பட நகரம் - முதல்வர் உறுதி

ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள் தொடர்பான வர்த்தக மாநாடு நேற்று சென்னையில் தொடங்கியது. நடிகர் கமல்ஹாசன் விழாவுக்கு தலைமை தாங்க, தமிழக முதல்வர் மாநாட்டை தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய கருணாநிதி,

28வது வயதில் திரையுலகில் நுழைந்த நான் இப்போதும் இரண்டு படங்களுக்கு வசனம் எழுதி வருகிறேன், அதில் கிடைக்கும் பணத்தை அடித்தட்டு மக்களுக்கும், அருந்ததிய மாணவர்களுக்கும், நலிந்த கலைஞர்களுக்கும் வழங்குகிறேன் என்றார். மேலும், தன்னைப்போல் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் பிறருக்கு உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

திரைத்துறைக்கு திமுக அரசு தந்த சலுகைகள், கட்டண‌க் குறைப்புகள், திரைத்துறையினருக்கு விருதுகள் ஆகியவற்றையும் முதல்வர் பட்டியலிட்டார். நமது ஸ்டுடியோக்கள் உலகத் தரத்திலானவை என்றவர், “பொழுதுபோக்கு தொழில்களில் உலக அளவில் தமிழகம் முக்கிய மையமாக திகழ வேண்டும் என்பது என் கனவு. இது நனவாக எல்லோரும் இணைந்து பாடுபட வேண்டும்” என்றார்.

திரைப்பட நகரம் அமைக்க தேவையான வசதிகள் செய்துதர தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் முதல்வர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

இந்த தொடக்க நாள் நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னிலை வகித்தவர் இந்திப்பட தயா‌ரிப்பாளர் யாஷ் சோப்ரா. மேலும், கே.எஸ்.ரவிக்குமார், சுரேஷ்கிருஷ்ணா, சரத்குமார் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினரும் கலந்து கொண்டனர்.
மேலும் அறிய

> நிறவெறி புகா‌ரில் ஏ.ஆர்.ரஹ்மான் படம்

நிறவெறி புகா‌ரில் மாட்டிக் கொண்டிருக்கிறது ரஹ்மான் இசையமைத்த படம். இந்த நிறவெறி பூதம் கிளம்பியிருப்பது சின்ன சினிமா போஸ்ட‌ரிலிருந்து என்பது நம்ப முடியாத உண்மை.

கப்பிள்ஸ் ‌ரிட்‌ரீட் என்ற ஹாலிவுட் படத்துக்கு ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். Peter Billinngsley படத்தை இயக்கியிருக்கிறார். அக்டோபர் மாதம் 9ஆ‌ம் தேதி இந்தப் படம் அமெ‌ரிக்காவில் வெளியானது. படத்தின் ‌ரிசல்ட்? சூப்பர் பிளாப்.

தற்போது இங்கிலாந்துக்கு இப்படம் வந்திருக்கிறது. இங்குதான் பிரச்சனை. பீட்ட‌ரின் இந்தப் படம் நான்கு ஜோடிகளைப் பற்றியது. அதாவது மொத்தம் எட்டு முக்கிய கதாபாத்திரங்கள். இந்த எட்டில் இருவர் மட்டும் கறுப்பர் இனத்தவர்.

இங்கிலாந்தில் படத்தின் பப்ளிசிட்டிக்கு வைத்த போஸ்டர்களில் இந்த இரு கருப்பர்கள் மட்டும் மிஸ்ஸிங். கேட்டதற்கு, போஸ்டரை இம்ப்ரூவ் செய்ததில் இருவரும் விடுபட்டுவிட்டதாக சல்ஜாப்பு சொல்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

இல்லை, அவர்கள் கருப்பர்கள் என்பதால்தான் போஸ்ட‌ரில் படத்தை நீக்கியுள்ளனர் என்கிறார்கள் ஒரு தரப்பினர். இந்த தரப்பினர் சொல்வதில்தான் நியாயம் இருக்க வாய்ப்பிருக்கிறது. அமெ‌ரிக்காவில் இந்த இரு நடிகர்களுக்கும் போஸ்ட‌ரில் சம வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

பிற நாடுகளில் இந்தப் படம் வெளியாகும் போதும் இந்த புதிய போஸ்டர்தான் பயன்படுத்தப்படும் என்று கூறியிருப்பது பிரச்சனையை விசிறிவிட்டிருக்கிறது.
மேலும் அறிய

Wednesday, November 18, 2009

> விஜய்யுடன் ஜோடி சேர விரும்பும் நடிகை

விஜய்யுடன் ஜோடி சேர யாருக்குதான் பிடிக்காது. எந்த நடிகை நெம்பர் ஒன் என்ற கான்டெஸ்டில் வெற்றிபெற அ‌ஜித், விஜய்யுடன் ஜோடி சேர்வதுதானே அளவுகோல்.
அசின், த்‌ரிஷா இருவரும் வடக்கு நோக்கி பயணப்பட்ட பிறகு இரண்டாம் வ‌ரிசை நாயகிகளின் காட்டில் பேய் மழை. நான்தான் நெம்பர் ஒன் என்று தமன்னா தம்பட்டம் அடிக்கும் அளவுக்கு இருக்கிறது வெள்ளப் பெருக்கு. போகட்டும். சுனேனா கதைக்கு வருவோம்.

காதலில் விழுந்தேன், மாசிலாமணி என சுனேனா நடித்த இரு படங்களும் சன் பிக்சர்ஸின் விளம்பரத்தால் ஓடியவை. மேலும், வேறு நடிகைகள் கிடைக்காமல் இவரை பல படங்களில் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

உதாரணம் வேண்டுமென்றால் நமது கமர்ஷியல் சிங்கம் பேரரசு‌வின் திருத்தணி இருக்கிறது. இதில் பரத் ஜோடியாக நடிக்க த்‌ரிஷாவைதான் கேட்டிருந்தனர்.

பேரரசு‌வின் அதிகபடி மசாலா உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது என்றோ, இந்திப் படம் இருக்கிறது என்றோ, த்‌ரிஷா கால்ஷீட் தரவில்லை. அந்த இடத்தை நிரப்ப சுனேனாவை போட்டிருக்கிறார்கள். அப்படி சப்டியூட்டாகதான் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், விஜய்யுடன் நடிக்க ஆவலாக இருக்கிறேன் என பிட்டை போட்டிருக்கிறார் சுனேனா. ஹீரோயின் பஞ்சம் அந்தளவுக்கு மோசமா என்று திகிலடித்துப் போயிருக்கிறது திரையுலகம்.
மேலும் அறிய

> Windows 7 ன் புதிய வசதிகள்

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம், விஸ்டா போல இல்லாமல் பல பயனாளர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனைப் பயன்படுத்த கம்ப்யூட்டரின் திறன் சற்று கூடுதலாக வேண்டும் என்றாலும், புதியதாக வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் கம்ப்யூட்டர்கள் இந்த தேவையை நிறைவேற்றுபவையாகவே உள்ளன. எனவே புதியதாகக் கம்ப்யூட்டர்கள் வாங்கிப் பயன்படுத்துவோர் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே தங்கள் பணிகளைத் தொடங்குகின்றனர். விண்டோஸ் 7 சிஸ்டம் தரும் சில புதிய வசதிகள் பற்றி ஏற்கனவே இங்கு தரப்பட்டது .மேலும் சில புதிய வசதிகளை இங்கு காணலாம்.

விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ஸ்லீப் மற்றும் ரெஸ்யூம் (தற்காலிகமாக நிறுத்திப் பின் மீண்டும் இயக்கும் வசதி) செயல்பாடு மிக நேர்த்தியாகவும் எந்த பிரச்னையுமின்றியும் செயல்படுகிறது. இதனால் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அடிக்கடி நிறுத்தி இயக்க வேண்டிய தேவை இல்லை.


விண்டோஸ் லோகோ கீயுடன் வலது மற்றும் இடது ஆரோ கீகளை இயக்குகையில் அப்போதைய விண்டோ அந்த திசைகளில் ஒதுங்கி இடம் பிடித்து மற்ற விண்டோக்களுக்கு இடம் தருகிறது. இதனால் இரண்டு செயல்பாடுகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடிகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு விண்டோவில் இன்டர்நெட் பிரவுஸ் செய்து கொண்டே, இன்னொன்றில் இமெயில் தொடர்புகளைக் காணலாம். ஒரே டாகுமெண்ட்டில் இரு வேறு இடங்களில் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ளலாம்.

திரைக் காட்சியை அப்படியே படம் பிடித்து பைலாக மாற்ற பல வழிகள் உள்ளன. விண்டோஸ் 7 ஸ்நிப்பிங் டூல் (Snipping Tool) என்ற ஒரு வசதியைத் தருகிறது. ஸ்நாப் ஷாட் எடுப்பது போல ஒரே கீ அழுத்தத்தில் இதனை மேற்கொள்ள முடிகிறது.

விண்டோஸ் 7, கம்ப்யூட்டரை புரஜக்டர் ஒன்றுடன் இணைத்து இயக்குவதை எளிதாக்குகிறது. விண்டோஸ் + ப்பி கீகளை அழுத்தினால், காட்சி கம்ப்யூட்டருக்கும் புரஜக்ஷன் ஸ்கிரீனுக்குமாக மாறுகிறது. இதில் இணைத்துத் தரப்படும் கால்குலேட்டரில் புதிய பல வசதிகள் தரப்பட்டுள்ளன. சயின்டிபிக் புரோகிராமர், புள்ளியியல் செயல்பாடுகள், யூனிட் மாற்றுதல் (கி.மீ –மைல், லிட்டர்–காலன், செல்சியல் – பாரன்ஹீட் ) போன்றவை தரப்பட்டுள்ளன.

இதில் தரப்பட்டுள்ள எக்ஸ்பி மோட் மிக மிகப் பயனுள்ளதாக இருப்பதாகப் பல பயனர்கள் தெரிவித்துள்ளனர். எக்ஸ்பியில் மட்டும் இயங்கும் பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்களை எளிதில் இதன் மூலம் இயக்க முடிகிறது.

விண்டோஸ் 7 விஸ்டா போலவே பல வழிகளில் இருந்தாலும் மேலே தரப்பட்டுள்ள பல புதிய வசதிகள், கூடுதல் பாதுகாப்பு, நிலையாக இயங்கும் தன்மை ஆகியவற்றிற்காக நிச்சயம் இதற்கு நம் கம்ப்யூட்டரை மேம்படுத்திக் கொள்ளலாம். விண்டோஸ் 7 தரும் சில புதிய டூல்களை இங்கு காணலாம்.

ப்ராப்ளம் ஸ்டெப்ஸ் ரெகார்டர் (Problem Steps Recorder (PSR)

விண்டோஸ் 7 சிஸ்டத் தினைக் காப்பாற்றும் ஒரு வசதி. உங்கள் கம்ப்யூட்டர் ஏதேனும் ஒரு பிரச்னையால் பாதிக்கப் படுவதாகத் தெரிந்தால், அந்த பிரச்னை உருவாகும் விதத்தினை இந்த வசதி பதிவு செய்திடும். இதன் மூலம் அந்த பதிவினை, பிரச்னையைத் தீர்க்கக் கூடிய நபருக்கு அனுப்பி, வழிமுறைகளைக் கேட்கலாம். இதற்கு நாம் செய்ய வேண்டியது


Problem Steps Recorder (PSR) என்பதனைத் திறந்து "Record" என்ற பட்டனை அழுத்த வேண்டியதுதான். இதனை அழுத்தியபின் ஒவ்வொரு மவுஸ் கிளிக் செய்திடும்போதும் ஒரு ஸ்கிரீன் ஷாட் எடுக்கப்படும். இவற்றுடன் நம்முடைய குறிப்புகளையும் இணைக்கலாம். இந்த ஸ்கிரீன் ஷாட்கள் அனைத்தும் அடங்கிய எச்.டி.எம்.எல். பைல் ஒன்று உருவாக்கப்படும். அது ஸிப் செய்யப்பட்டு டெஸ்க்டாப்பில் வைக்கப்படும். பின் அது தானாக பிரச்னையின் அடிப்படையில் வல்லுநர் ஒருவருக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த PSR பைலை psr.exe என்று டாஸ் கமாண்ட் புள்ளியில் கொடுத்தும் இயக்கலாம்.

கிரெடென்ஷியல் மேனேஜர்

இது விண்டோஸ் 7 இயக்கத்தில் தரப்பட்டுள்ள ஒரு புதிய வசதி. விஸ்டாவில் யூசர் அக்கவுண்ட்டில் தரப்பட்ட பாஸ்வேர்ட் மேனேஜர் போன்ற வசதியை விரிவாகத் தருகிறது. இந்த டூல் மூலம் நீங்கள் எந்த கம்ப்யூட்டரில் நுழைந்தாலும் அந்த செயல்பாட்டிற்கான கிரெடென்ஷியல் உருவாக்கப்பட்டு ஒரு போல்டரில் தக்கவைக்கப்படுகிறது.


இதே போல இமெயில் அக்கவுண்ட் மற்றும் வெப் அக்கவுண்ட் ஆகியவற்றிற்கும் உருவாக்கலாம். இவற்றை ஒரு யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவில் பதிந்து வைத்துக் கொண்டால், சிஸ்டம் கிராஷ் ஏற்படுகையில் இவற்றை மீண்டும் புதுப்பித்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் (System Repair Disc)

உங்களுடைய சிஸ்டம் கரப்ட் ஆகி, கம்ப்யூட்டர் பூட் ஆக மறுக்கையில் உங்களுக்கு வாழ்வு தரும் டிஸ்க்கினை உருவாக்கும் அருமையான வசதி இது. இந்த வசதியைப் பயன்படுத்தி சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ஒன்றை உருவாக்கலாம். அதன் மூலம் கிராஷ் ஆன கம்ப்யூட்டரை இயக்க முடியும். இதனை உருவாக்க ஸ்டார்ட் அழுத்தி சர்ச் பாக்ஸில் சிஸ்டம் ரிப்பேர் (System Repair) என டைப் செய்திடவும். பின் கிடைக்கும் விண்டோவில் ‘Create A System Repair Disc’ என்பதில் அழுத்தவும். இப்போது ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் உங்கள் சிஸ்டத்தில் உள்ள சிடி பர்னர் திறக்கப்படும். இதில் கிரியேட் டிஸ்க் (Create Disk) என்பதில் கிளிக் செய்திடவும். இனி உருவாக்கப்படும் டிஸ்க்கை எடுத்துப் பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.


சிஸ்டம் கிராஷ் ஆனால் இந்த டிஸ்க்கை எடுத்து, அதன் டிரைவில் போட்டு இயக்கவும். இயங்கத் தொடங்கியவுடன் ரெகவரி ஆப்ஷன்ஸ் ஒரு பட்டியல் கிடைக்கும். இதில் Startup repair, System restore, System image recovery, Windows memory diagnostic and Command prompt எனப் பல ஆப்ஷன்கள் கிடைக்கும். உங்களுக்கு எது தேவையோ அதனைக் கிளிக் செய்து, சிஸ்டத்தினை சரி செய்து கொள்ளலாம்.

பேக் அப் டூல் (Backup utility)

விஸ்டாவில் ஒரு பேக் அப் டூல் கிடைத்தது. அது விண்டோஸ் 7 சிஸ்டத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் நிறைய ஆப்ஷன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள பைல்களின் பேக் அப் காப்பியை அதே ஹார்ட் டிஸ்க்கின் இன்னொரு பகுதி, செருகி எடுத்துச் செல்லக்கூடிய ஹார்ட் டிஸ்க், ஆப்டிகல் டிரைவ் அல்லது நெட்வொர்க்கில் உள்ள இன்னொரு கம்ப்யூட்டரின் ஹார்ட் டிரைவ் ஆகிய ஒன்றில் பதிந்து எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு பேக் அப் செய்திடுகையில், பேக் அப் தேவையற்ற போல்டர்கள் மற்றும் டிரைவ்களை விலக்கியும் எடுக்கலாம்.


திரைத் தோற்றத்தை அமைத்தல் (Text tuning and color calibration)

விண்டோஸ் 7 சிஸ்டம் தரும் நல்ல டூல்களில் இதுவும் ஒன்று. நம்மில் பலர் சிஸ்டம் மானிட்டரில் என்ன காட்சி கிடைக்கிறதோ, அதனை அப்படியே வைத்துக் கொண்டு, கம்ப்யூட்டரை இயக்குகிறோம். நம் கண்களுக்கு இந்த தோற்றம் சரியாக உள்ளதா, எரிச்சலைத் தருகிறதா, வண்ணக் கலவை சரியாக உள்ளதா என்றெல்லாம் பார்ப்பதில்லை. கிடைக்கின்ற இமேஜை ஒன்றும் செய்திட முடியாது என்ற எண்ணத்துடன் செயலாற்றுகிறோம். விண்டோஸ் 7 இந்த இமேஜை எடிட் செய்திடும் டூல் ஒன்றை நமக்குத் தருகிறது. இந்த டூல் பெயர் ClearType Text Tuner. இதனை கண்ட்ரோல் பேனல் சென்று இயக்கலாம். இந்த டூல் மூலம், மானிட்டரில் தெரியும் காட்சியினை ட்யூன் செய்திடலாம்.



உங்கள் கம்ப்யூட்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர்கள் இணைக்கப்பட்டிருந்தால், ஒவ்வொரு மானிட்டரின் இமேஜையும் ட்யூன் செய்து வைத்திடலாம்.இவ்வாறு எடிட் செய்திடுகையில் வண்ணக் கலவையினை சரி செய்திட விண்டோஸ் 7 Display Color Calibration என்ற டூலைத் தருகிறது. கலர் இணைப்பு, பிரைட்னெஸ், காண்ட்ராஸ்ட் ஆகிய வசதிகள் இந்த டூல் மூலம் பெற்று வண்ணக் கலவையை நம் கண்கள் விரும்பும் வகையில் சரி செய்திடலாம்.

மேத் இன்புட் பேனல் (Math Input Panel)

விண்டோஸ் 7 தொகுப்பை உங்கள் டேப்ளட் பிசி அல்லது டச் ஸ்கிரீன் கொண்ட மானிட்டருடன் இயக்குகிறீர்களா? அப்படியானால் சில மேத்ஸ் கால்குலேஷனை மேற்கொள்கையில் அதற்கான சிறப்பு கீகளைத் தேடிப் பயன்படுத்த வேண்டியதில்லை. திரையில் மேத்ஸ் சிம்பல் மற்றும் பார்முலாக்களை அமைத்தால், இந்த மேத் இன்புட் டூல் தானாக அதனை அறிந்து கொண்டு டெக்ஸ்ட்டாக மாற்றி, கணக்கினை செயல்படுத்துகிறது.


சாதாரண வழக்கமான திரை கொண்டு இயக்கிக் கொண்டிருந்தால், திரையில் மவுஸ் மூலம் இந்த பார்முலாக்களை எழுதியும் இந்த டூல் மூலம் முயற்சிக்கலாம்.

பிரைவேட் கேரக்டர் எடிட்டர் (Private Character Editor)

ஒரு சிலரின் கையெழுத்து அழகாக இருக்கும். அச்சிடுவதற்குப் பதிலாக இதனையே வைத்துக் கொள்ளலாமே என்று விரும்புவார்கள். கம்ப்யூட்டரில் ஒரு சில எழுத்துக்களில் நீங்கள் சிறிய மாற்றங்களை விரும்புவீர்கள். அல்லது எழுத்து வகைகளை நீங்களே மாற்றி அமைக்க ஆசைப்படலாம். அப்படிப்பட்ட விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த கேரக்டர் எடிட்டர் டூல் உதவுகிறது. கேரக்டர்களை எடிட் செய்து, பின் கேரக்டர் மேப் மூலம் இவற்றை இன்புட் செய்து டாகுமென்ட்களிலும் பிற பைல்களிலும் பயன்படுத்தலாம்.

விண்டோஸ் எக்ஸ்.பி - விண்டோஸ் 7 : சில வேறுபாடுகள்

நீங்கள் உங்கள் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்கிரேட் செய்திருந்தாலும், புதிய கம்ப்யூட்டர் ஒன்றை விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் வாங்கி இருந்தாலும், பெரும்பாலானவர்கள், விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்துதான் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் சந்திக்க நேரும் சில அடிப்படை வேறுபாடுகளை இங்கு காணலாம்.

1. விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள், தாங்கள் அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களை குயிக் லாஞ்ச் பாரில் கொண்டு வந்து வைத்துவிடுவார்கள். அதிலிருந்து கிளிக் செய்து, புரோகிராமினை இயக்கிச் செயல்படுவார்கள். இதற்காகவே சிலர் கீழாக உள்ள டாஸ்க் பாரில் அதிக ஐகான்கள் வைப்பதற்காக, அதனை டபுள் டெக்கர் பஸ் போல பெரிதாக வைத்திருப்பார்கள். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் குயிக் லாஞ்ச் பார் இல்லை. அதற்குப் பதிலாக பின்னிங் (Pinning) என்னும் வசதி தரப்பட்டுள்ளது. எந்த அப்ளிகேஷனிலும் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Pin என்னும் பிரிவை டாஸ்க் பார் அல்லது ஸ்டார்ட் மெனு அல்லது இரண்டிலும் இருக்குபடி செட் செய்திடலாம். மேலும் டாஸ்க்பாரில் உள்ள ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷன் இயங்கிக் கொண்டிருந்தால், அதன் ஐகானைச் சுற்றிச் சிறிய வட்டம் காட்டப்படுவதும் ஒரு புதுமையான வேறுபாடு.

2. விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தியவர்கள் மை ரீசண்ட் டாகுமெண்ட்ஸ் என்னும் பிரிவை அடிக்கடி பயன்படுத்தி, அப்போதைக்குப் பயன்படுத்திய புரோகிராம்களைப் பெற்று இயக்கியிருப்பார்கள். இந்த மெனு ஸ்டார்ட் மெனுவிற்கு வலது பக்கம் கிடைக்கப் பெறும். இதில் அப்போது பயன்படுத்திய பைல், அது டாக், ஜேபெக், எம்பி3 என எதுவாக இருந்தாலும், பட்டியலிடப்படும். அதில் கிளிக் செய்து பெறலாம். இதனை விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இன்னும் விரிவாக்கியுள்ளது மைக்ரோசாப்ட். ஒவ்வொரு அப்ளிகேஷனும் ஒரு மை ரீசண்ட் டாகுமெண்ட்ஸ் பட்டியலை ஜம்ப் லிஸ்ட் (Jump List) என்ற பெயரில் கொண்டுள்ளது. ஸ்டார்ட் மெனுவில் உள்ள புரோகிராம் அருகே ஒரு அம்புக் குறி உள்ளது. இதன் அருகே மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால், அந்த அப்ளிகேஷன் புரோகிராம் இயக்கிய தற்போதைய பைல்களின் பட்டியல் கிடைக்கிறது.

மேலும் இந்த ஜம்ப் லிஸ்ட்டில் ரைட் கிளிக் செய்து, குறிப்பிட்ட பைலை பின் செய்து கொள்ளலாம். இதனால் அந்த குறிப்பிட்ட பைல் இந்த பட்டியலின் சுழற்சியில் மறையாது.

3. விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தியவர்கள் பைல் மற்றும் போல்டர் களுக்குப் பழகிவிட்டனர். விண்டோஸ் வெளியாகும்போது, மைக்ரோசாப்ட் இதனைப் பயன்படுத்துபவர்கள், மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் தங்கள் பைல்களையும், மை பிக்சர்ஸ் போல்டரில் பட பைல்களையும் மியூசிக் பைல்களை மை மியூசிக் போல்டரிலும் மட்டுமே வைப்பார்கள் என எதிர்பார்த்தது. ஒருவகையில் பார்த்தால் அது தர்க்க ரீதியாக சரி என்றே தெரிகிறது. அதன்படி பைல்கள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தால், பேக் அப் எடுக்கவும் பைல்கள் எங்கு இருக்கின்றன என்று தேடிப் பார்க்கவும் எளிதாக இருந்திருக்கும். ஆனால் எல்லாம் நாம் திட்டமிட்டபடியாகவா நடக்கிறது! நாம் இஷ்டப்படி மை டாகுமென்ட்ஸ் போல்டருக்கு வெளியே போல்டர்களை உருவாக்கி, நம் இஷ்டத்திற்கும் வசதிக்கும் ஏற்றபடி பைல்களைப் பாதுகாப்பாக(!) வைக்கப் பழகிவிட்டோம். இதனால் டேட்டா அடங்கிய பைல்கள் டிரைவ்கள் எங்கும் சிதறிக் கிடக்க, பிரச்னைகளும் குவிந்தன.

இந்த பிரச்னைக்கு தீர்வாக விண்டோஸ் 7 லைப்ரரி என்ற ஒரு வழியைத் தந்துள்ளது. பைல்கள் சிதறிக் கிடந்தாலும், அவற்றை இந்த ஓர் இடத்தில் வைத்துத் தேடிப்பார்த்துப் பெறும் வகையில் லைப்ரேரி அமைக்கப்படுகிறது.

மேலும் இந்த லைப்ரரியில் பைல்கள் அமைக்கப்படுகையில், பைல்களின் தன்மைக்கேற்ப பைல்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பட பைல்கள் தம்ப்நெயில் படங்களுடன் காட்சி அளிக்கும்.

மேலே சொல்லப்பட்ட மூன்று வேறுபாடுகளும் சில அடிப்படை வேறுபாடுகளே. இன்னும் பல வேறுபாடு களை நீங்கள் பயன்படுத்துகையில் அறிந்து கொள்ளலாம்.

எழுதியவர் : கார்த்திக்

மேலும் அறிய

Tuesday, November 17, 2009

> மொபைலுக்கு வயது 26

மோட்டாரோலாவின் செங்கல் போன்ற மொபைல் போனிலிருந்து இன்றைய ஆப்பிள் 3ஜி ஐ–போன் வரையில் வளர்ச்சியைக் கொண்ட மொபைல் போனின் வயது26.

ஆம், 1983ல் முதன்முதலாக மோட்டாரோலா நிறுவனத்தின் பிரிக் (“BRICK”) என்ற மொபைல் போன் மூலம் வர்த்தக ரீதியான மொபைல் விற்பனைக்கு வந்தது. மொபைலில் முதன் முதல் அழைக்கப்பட்டவர் யார் தெரியுமா? தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம்பெல் உறவினரே அவர். அமெரிக்கன் மொபைல் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பாப் பார்னெட் தான் இந்த அழைப்பை ஏற்படுத்தினார்.

அப்போதெல்லாம் வெகுநாட்கள் வரை பெரும் செல்வந்தர்களின் சொகுசு சாதனமாக மொபைல் இருந்துவந்தது. இப்போது நம் அன்றாடவாழ்க்கையின் அத்தியாவசிய சாதனமாக அமைந்துவிட்டது. 2007 ஆம் ஆண்டில் வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் ஐ–போன் வடிவமைப்பிலும் இன்டர்பேஸ் இணைப்பிலும் மொபைல் போன் அதன் பயன்பாட்டில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மொபைல் போன் முதன் முதலில் வந்த பின் ஓராண்டு கழிந்த பின்னர் மொத்தம் ஏறத்தாழ 12 ஆயிரம் பேரே இந்த சேவைக்கு வாடிக்கையாளர்களாகப் பதிந்திருந்தனர். ஆனால் இன்று அனைத்து நாடுகளிலும் கோடிக்கணக்கான பேர் மொபைல் போனைப் பயன்படுத்தி வருகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக லேண்ட் லைன் போனை மொபைல் நீக்கிவருகிறது.

பேசுவதற்கு மட்டும் வந்த போன் இன்று டெக்ஸ்ட் மெசேஜ்களை அனுப்புவதற்கும் பெரும்பாலும் பயன்படுகிறது. இதனைத் தொடர்ந்து பெரிய அளவில் டேட்டா பரிமாற்றத்தை ஏற்படுத்த ஏற்பட்டதே இன்றைய 3ஜி மற்றும் வர இருக்கும் 4ஜி மொபைல் சேவைகள் ஆகும். இந்த புயல் வேக மாற்றங்கள் அடுத்த 25 ஆண்டுகளில் மொபைல் போனில் என்ன என்ன மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதைக் கற்பனையில் கூட எண்ணிப் பார்க்க இயலவில்லை.


எழுதியவர் : கார்த்திக்
மேலும் அறிய

> சூர்யாவை பின்னுக்கு‌த் தள்ளிய பரத்

சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் ஆதவனை பின்னுக்கு‌த் தள்ளி முதலிடத்தைப் பிடித்திருக்கிறது கண்டேன் காதலை. சமீபத்தில் வெளியான ஆறு படங்களில் இரண்டு படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆஃபிஸின் டாப் ஐந்தில் இடம்பிடித்திருப்பது கவலைக்கு‌ரிய விஷயம்.

5. தம்பிவுடையான்
காவி‌ரியைப் பற்றிய இந்தப் படம் சென்றவார இறுதியில் இரண்டு லட்சத்துக்கும் குறைவான வசூலை பெற்று ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. ஒருவார முடிவில் இதன் மொத்த வசூல் ஆறு லட்சங்கள்.

4. அதே நேரம் அதே இடம்
ஜெய், விஜயலட்சுமி நடித்திருக்கும் இப்படம் சென்ற வார இறுதியில் 4.6 லட்சங்களையும், ஒரு வார முடிவில் 23 லட்சங்களையும் வசூலித்துள்ளது.

3. பேராண்மை
எஸ்.பி.ஜனநாதனின் படத்துக்கு இன்னும் பரவலான வரவேற்பு இருக்கிறது. சென்ற வார இறுதியில் 14.7 லட்சங்களை வசூலித்த இப்படம், நான்குவார இறுதியில் 2.25 கோடிகளை தனதாக்கியுள்ளது.

2. ஆதவன்
ரெட் ஜெயண்டின் இப்படம் சென்ற வார இறுதியில் 16 லட்சங்களுக்கு மேல் வசூலித்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. நான்குவார இறுதியில் இதன் வசூல், 4.31 கோடிகள்.

1. கண்டேன் காதலை
சென்றவார இறுதியில் சன் பிக்சர்ஸின் இந்தப் படம் 21.5 லட்சங்களை வசூலித்துள்ளது. ஒருவார முடிவில் இதன் வசூல் 1.15 கோடிகள்.

வரும் வெள்ளிக்கிழமை பழசிராஜா வெளியாவதால் பாக்ஸ் ஆஃபிஸில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
மேலும் அறிய

> பாவனா பாவம்

ஜெயம் கொண்டானுக்குப் பிறகு பாவனாவுக்கு தமிழில் சுத்தமாக வாய்ப்பில்லை. இந்நிலையில்தான் அசல் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தது. சர்க்கரை இல்லாத ஊ‌ரில் இலுப்பை பூ தானே உசத்தி. யோசிக்காமல் ஓகே சொல்லி நடித்து வருகிறார்.

நிலைமை இப்படியிருக்க, அசலில் நீங்க இரண்டாவது ஹீரோயின்தானே என்று கேட்டால் மட்டும் பாவனாவின் மூக்கு சிவக்கிறது. அசலில் இரண்டு ஹீரோயின்கள். அதில் ஒருத்தி நான். எனக்கு அ‌ஜித்துடன் இரண்டு டூயட்கள் இருக்கு. அப்படி என்றால் யார் ஹீரோயின் என்று கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள் என்று கேள்வியை நமக்கு திருப்பிவிடுகிறார்.

மூமைத்கானே ஹீரோவுடன் ஒரு பாடலுக்கு ஆடும் காலம் இது. போனால் போகிறது என்று பாவனாவுக்கு ஒன்று சோர்த்து கொடுத்திருக்கிறார்கள். இதை வைத்து அவர்தான் நாயகி என்று சொல்ல முடியுமா? அ‌ஜித்தின் ஜோடி சமீரா ரெட்டிதான் என்று யூனிட்டிலேயே கட்டியம் கூறுகிறார்கள்.

பாவம் பாவனா, வேறென்ன சொல்ல.
மேலும் அறிய

> 100 புதுமுகங்கள் ஒரு படம்

கதையில் புதுமை செய்கிறார்களோ இல்லையோ, படம் எடுக்கும் விதத்தில் புதுசு புதுசாக சிந்திக்கிறார்கள். நெல்லு என்ற புதிய படத்தில் மொத்தம் நூறு புதுமுகங்களை அறிமுகப்படுத்துகிறார்கள்.

மிருகம் படத்தை தயா‌ரித்த கார்த்திக் ஜெய் மூவிஸ் நெல்லு படத்தை தயா‌ரிக்கிறது. புதுமுகங்களான சத்யா, பாக்யாஞ்சலி நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எம்.சிவசங்கர்.

கந்தா படத்துக்குப் பிறகு தஞ்சையை பின்புலமாக வைத்து இந்தப் படம் தயாராகிறது. தஞ்சை இளைஞனின் காதல் போராட்டம்தான் கதை.

ஸ்ரீபவன் சேகர் ஒளிப்பதிவு செய்ய, எஸ்.எஸ்.குமரன் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நூறு புதுமுகங்களை அறிமுகப்படுத்துவதாக தெ‌ரிவித்தார் இயக்குனர் சிவங்கர்.

கின்னஸில் இடம்பெறாமல் விடமாட்டாங்க போல.
மேலும் அறிய

Sunday, November 15, 2009

> விஜய், தமன்னா ஆட்டம்

ஹைதராபாத்தில் சுறா படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லன், தேவ் கில். மஹாதீரா படத்தில் வில்லனாக நடித்தவர். தெலுங்குப் படத்தில் பிஸியாக இருப்பவர் ஷூட்டிங் ஹைதராபாத்தில் என்பதால் கவலையில்லாமல் கலந்து கொள்வார் என்கிறார்கள்.

ஹைதராபாத் கிளம்பும்முன் சுறாவின் முக்கிய காட்சிகளை ஏவிஎம் ஸ்டுடியோவில் படமாக்கினர். வேறொன்றுமில்லை, விஜய், தமன்னா ஆடிப்பாடிய பாடல் காட்சிதான் அது.. விஜய் முருகன் உருவாக்கிய காஸ்ட்லி அரங்கில் இந்த ஆட்டம் பாட்டம் படமாக்கப்பட்டது. விஜய் தமன்னாவுடன் ஆடிப் பாடியது இதுதான் முதல்முறை.

வேட்டைக்காரன் டிசம்பர் 18 திரைக்கு வரும் நிலையில், விஜய் பேசிய சில அரசியல் பஞ்ச் வசனங்களை படத்திலிருந்து நீக்கியிருக்கிறார்கள். அரசியலில் குதிக்கப் போறேன் என்று ஸ்டேட்மெண்ட் விட்டதோடு, ராகுல் காந்தியை சந்தித்ததற்காக பெ‌ரிய இடம் கொடுத்த பனிஷ்மெண்டாம் இது. கேட்கவே சூப்பரா இருக்குல்ல?
மேலும் அறிய

> ஹனிரோஸ் - ‌‌ஜீவாவின் புதிய ஜோடி

சிங்கம்புலி படத்தை ரொம்பவும் எதிர்பார்க்கிறார் ‌‌ஜீவா. முதல் முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கும் படம். மீன் வெட்டுகிறவன், வக்கீல் என முற்றிலும் மாறுபட்ட இரு வேடங்கள்.

பொதுவாக இரண்டு வேடப் படமென்றால், ஒரு வேடத்துக்கான காட்சிகளை முதலில் எடுத்துவிட்டு பிறகு இரண்டாவது கேரக்டருக்கான காட்சிகளை எடுப்பார்கள்.

ஆனால் இந்தப் படத்தில் இரண்டு கேரக்டர்களையும் ஒரே நேரத்தில் எடுத்து வருகிறார்கள். ‌ஜீவாவின் இரு தோற்றங்களுக்கிடையே அதிக வித்தியாசம் இல்லாததுதான் இதற்கு காரணமாம்.

சிங்கம்புலியில் ஹீரோயின் திவ்யா ஸ்பந்தனா. இன்னொரு ஹீரோயின் யார் என்பது முடிவாகாமல் இருந்தது. தற்போது ஹனிரோஸிடம் கால்ஷீட் வாங்கியிருக்கிறார்கள். ஹனிரோஸ் ‌‌ஜீவா ஜோடியாக நடிப்பது இதுவே முதல்முறை.
மேலும் அறிய

Saturday, November 14, 2009

> ஒரு நடிகையின் நல்லெண்ணம்

தன்னைப் பற்றி வந்த கிசுகிசுவுக்கு விளக்கம் அளித்திருக்கிறார் லட்சுமிராய். தோனியுடன் காதல் என்று எழுதிய போதும் கலங்காதவர், இப்போது விளக்கம் தர அவரது நல்ல உள்ளம்தான் காரணம்.

லட்சுமிராய் விரைவில் இந்திப் படத்தில் நடிக்கிறார். இதற்காக கடும் உடற்பயிற்சி செய்து எடையை குறைத்து வருகிறார். அவருக்கு ட்ரெய்னராக இருப்பவர், பிரசாத் என்பவர்.

படப்பிடிப்புக்காக வெளியூர் போகும் போது பிரசாத்தின் பயிற்சியை தவறவிடக் கூடாது என்பதற்காக அவரையும் தன்னுடன் அழைத்து சென்று வந்தார் லட்சுமிராய். இதற்கு காது, மூக்கு வைத்து சிலர் எழுதிவிட்டார்கள்.

தோ‌னியுடன் காதல் என்று எழுதியதும், ஆர்யாவுடன் தனிக்குடித்தனம் என்று எழுதியதும் சம்பந்தப்பட்டவர்களை துளியும் பாதிக்காது. ஆனால் பிரசாத் விஷயம் அப்படியல்ல. அவருக்கு இப்போதுதான் பெண் பார்த்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த வதந்தி அவரையும், அவரது குடும்பத்தையும் கடுமையாக பாதிக்கும். அதற்காகவே அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று விளக்கம் அளித்துள்ளேன் என்றார் லட்சுமிராய்.

உண்மையிலேயே லட்சுமிராய்க்கு பெ‌ரிய மனசுதான்.
மேலும் அறிய

Friday, November 13, 2009

> மீடியா தமிழ் நெட்வோர்க் இன்போ


மீடியா தமிழ் நெட்வோர்க் இன்போ பல்சுவை தகவல் வீடியோகள் மற்றும் செய்தி தொகுப்புகள்



கோவா டிரைலர்

மேலும் அறிய

> 31 கோடியில் ஒரு படம்

ஆறு கோடி பட்ஜெட்டில் ஒரு படம் ஆரம்பிக்கிறீர்கள். ஒருவேளை பட்ஜெட் ஏழு கோடி ஆகலாம். அல்லது எட்டு, பத்து. ரொம்ப ரொம்ப மோசமாக திட்டமிட்டால் அதிகபட்சம் 12 கோடி வரை ஆகலாம். அதற்கு மேலும் பட்ஜெட் எகிறினால், பட்ஜெட் போட்டவரை என்னவென்று சொல்வது?

ஆயிரத்தில் ஒருவன் படத்தை தொடங்கும்போது செல்வராகவன் தயா‌ரிப்பாள‌ரிடம் சொன்ன பட்ஜெட் ஆறு கோடி. ஒவ்வொரு கட்டத்திலும் பட்ஜெட் மானாவ‌ரியாக எகிறி இறுதியில் 31 கோடியில் வந்து நிற்கிறது. படத்தை வெளியிட இன்னும் சில கோடிகள் தேவைப்படுமாம்.

ஒரு படம் மட்டுமே நடித்திருக்கும் கார்த்தியை வைத்து இந்த மெகா பட்ஜெட்டை திருப்பி எடுக்க முடியுமா என்பது தயா‌ரிப்பாள‌ரின் ஸ்பெஷல் கவலை. அதற்காக கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்துவிட முடியாதில்லையா? தில்லாக படத்தை புரமோட் செய்யும் வேலையில் இறங்கியிருக்கிறார்.

நிகழ்காலத்தில் தொடங்கி பின்னோக்கி 12ஆ‌ம் நூற்றாண்டுக்கு பயணிக்கிற கதை. அதனால் இந்த பட்ஜெட் கண்டிப்பாக தேவைதான் என்று தனக்குத்தானே தேறுதல் சொல்வதுபோல் பத்தி‌ரிகைகளிடம் விளக்கமளித்துள்ளார்.

மேலும், தமிழர் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகிற படம் என்பதால் உலகம் முழுக்க படத்தை வெளியிடப் போறேன் என்று சில வாயில் நுழையாத நாடுகளின் பெயர்களை பட்டியலிடுகிறார்.

இதன் மூலம் நமக்குக் கிடைக்கும் நீதி என்னவென்றால், ஆறு கோடி பட்ஜெட்டை 31 கோடியாக்கும் இயக்குனர்கள் இருந்தால் அப்பாவி தயா‌ரிப்பாளர் அண்டார்டிகாவில் கூட படத்தை வெளியிடும் நிலை வரும்.
மேலும் அறிய

> ஜோதிகாவின் சீதா கல்யாணம்

ஜோதிகாவின் நடிப்பைதான் இப்போது கேரளாவில் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். நடிப்பை நிறுத்தி நாலு வருஷமாச்சு, இப்போது எதற்கு பாராட்டு? உங்களைப் போலதான் நமக்கும் குழப்பம்.

ஜெயராம் ஜோடியாக பல வருடங்கள் முன் ஜோதிகா ஒரு படத்தில் நடித்தார். சீதா கல்யாணம் என்ற அந்தப் படம் இதுவரை வெளியாகவில்லை. படப்பிடிப்பு முடிந்து ஆறு வருடங்களாக பெட்டிக்குள் தூங்குகிறது.

பாட்டில் பூதத்துக்கு ஒரு அலாவுதீன் கிடைத்த மாதி‌ரி, சீதா கல்யாணத்துக்கும் யாரோ விமோசனம் அளித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் ஜோதிகாவின் நடிப்பைப் பார்த்து வியக்காதவர்களே இல்லையாம். அப்படியே படத்தை டப் செய்து தமிழிலும் வெளியிடுவதுதானே. பாவம், தமிழ் ரசிகனும் பார்த்து ரசிக்கட்டுமே.
மேலும் அறிய

Thursday, November 12, 2009

> கமல் - நிருபர்கள் சந்திப்பு

முதல் முறையாக இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சென்னையில் இரண்டு நாள் மாநாடு மற்றும் கருத்தரங்கு நடத்துகிறது. நவம்பர் 18, 19ஆம் தேதிகளில் நடைபெறும் இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக கமல்ஹாசன் உள்ளார்.

இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சென்னையில் இப்படியொரு மாநாடு நடத்துவது இதுவே முதல் முறை. கமல்ஹாசனின் தனிப்பட்ட முயற்சியால் இது சாத்தியமாகியுள்ளது.

இந்த மாநாட்டுக்காக தமிழக அரசு சார்பில் முதல்வர் கருணாநிதி 50 லட்ச ரூபாய் அளித்துள்ளார். மேலும், 18 ஆம் தேதி மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் சிறப்புரையாற்றுகிறார்.

இந்த மாநாடு மற்றும் கருத்தரங்கில் உலகம் முழுவதிலிருந்தும் வரும் அறிஞர்கள் கலந்து கொள்கிறார்கள். சினிமா குறித்த பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற உள்ளது.

கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கமல், இந்த மாநாட்டில் ர‌ஜினி, மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்வதாக கூறினார்.
மேலும் அறிய

Tuesday, November 10, 2009

> ஆந்திர மக்களுடன் இருப்பேன் ர‌ஜினி

கலை இரவு என்றால் காத தூராம் ஓடுகிறவர் ர‌ஜினி. அவர் வேண்டி விரும்பி ஒரு நட்சத்திர கலை இரவில் கலந்து கொண்டிருக்கிறார்.

சில வாரங்கள் முன் பெய்த மழை ஆந்திராவை துவைத்து எடுத்தது. லட்சக்கணக்கானவர்கள் வீடு இழந்தனர். மழை பலரது உயிரை பறித்தது. ஆந்திர வெள்ளத்தை தேசிய பேரழிவாக அறிவிக்க வேண்டும் என்று கோ‌ரிக்கைகள் எழுந்தன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட பலரும் முயற்சி எடுத்த நிலையில் நட்சத்திர‌‌க் கலை இரவு நடத்துவதென ஆந்திர திரையுலகம் முடிவு செய்தது. தமிழக கலைஞர்கள் இல்லாமல் நட்சத்திர கலை விழாவா? அவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது.

நேற்று முன்தினம் நடந்த நட்சத்திர‌க் கலை இரவில் ர‌ஜினி, சூர்யா, ராதாரவி போன்றேhர் கலந்து கொண்டனர். தயா‌ரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ரூபாய் பத்து லட்சம் நிவாரண நிதி அளிக்கப்பட்டது.

சூர்யா ஐந்து லட்சமும், விஷால் 2.5 லட்சமும், விஜய் 2 லட்சமும், ஜெயம் ரவி ஒரு லட்சமும் நிதி அளித்துள்ளனர். விழாவில் பேசிய ர‌ஜினி, எனது குரு தாச‌ரி நாராயண ராவ் அழைத்ததால் இங்கு வந்தேன். ஆந்திர மக்களுக்கு ஒரு துன்பம் வரும்போது, நான் அவர்களுடன் இருப்பேன் என்று தெ‌ரிவித்தார்.
மேலும் அறிய

> ஆந்திராவை தாண்டும் அனுஷ்கா புகழ்

நவம்பர் 7 கமல்ஹாசனுக்கு மட்டுமல்ல, அனுஷ்காவுக்கும் பிறந்தநாள். ரொம்ப விம‌ரிசையாகவே இந்த பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். விரைவில் வேட்டைக்காரன் வெளியாக இருக்கும் சந்தோஷம்தான் காரணம்.

அருந்ததிக்குப் பிறகு ஆந்திரா, தமிழ்நாடு இரண்டு மாநிலங்களிலும் வெல்கம் போர்ட் வைக்காத குறையாக விரும்பி அழைக்கிறார்கள் அனுஷ்காவை. இதற்கு அவர் செய்யும் பதில் ம‌ரியாதை இருக்கே... ரொம்ப டேஸ்ட்.

வேட்டைக்காரன் படப்பிடிப்பு முடிந்த அன்று யூனிட்டில் உள்ள அனைவருக்கும் சொந்த செலவில் பி‌ரியாணி ட்‌ரீட் கொடுத்திருக்கிறார். இந்த அப்ரோச்சால் தொழிலாளிகளிடமும் அனுஷ்காவுக்கு நல்ல பெயர்.

அருந்ததி படத்தை இந்தியில் தயா‌ரிக்க முடிவு செய்துள்ளனர். அதிலும் அனுஷ்கா நடிக்கவே அதிக வாய்ப்புள்ளது. அதே நேரம் தனது அடுத்தப் படத்துக்கு தென்னிந்திய கதாநாயகியை தேடி வரும் ஷாருக்கான் பார்வையிலும் விழுந்திருக்கிறார் அனுஷ்கா.

எப்படியானாலும், அடுத்த பிறந்த நாள் மும்பையில்தான் என்கிறார்கள் அனுஷ்காவை அறிந்தவர்கள்.
மேலும் அறிய

> நியூசிலாந்து பறக்கும் பரத், சுனேனா

அமைஞ்சிக்கரை கதை என்றாலும் அமெ‌ரிக்காவில் டூயட் வைப்பது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நோயாகிவிட்டது. அதற்கென்ன இப்போ என்கிறீர்களா? காரணம் இருக்கிறது.

தனது அடுத்தப் படத்தை விறுவிறுப்பாக சென்னையில் தொடங்கியிருக்கிறார் பேரரசு. திருத்தணி என பெயர் வைத்திருக்கும் படத்தில் பர‌த்துடன் ரா‌ஜ்கிரணும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நாயகி சுனேனா. கதை?

பேரரசு படத்தில் கதையைப் பற்றி எனன கேள்வி வேண்டி கிடக்கிறது. ஹீரோவை வில்லன் வம்புக்கிழுப்பான். ஹீரோ அவனை புரட்டி எடுப்பான். இதையே வேறு வேறு பெயர்களில் வேறு வேறு நடிகர்களை வைத்து எடுப்பார். பார்க்க வேண்டியது ரசிகர்களின் கொடுமை... ஸாரி, கடமை.

திருத்தணியில் ஹீரோ பரத்தை வம்புக்கிழுக்கும் அரசியல்வாதியாக நடிக்கிறார் ஆசிஷ் வித்யார்த்தி. சென்னையிலும் திருத்தணியிலும் படத்தை எடுப்பது பேரரசின் திட்டம். டூயட்டுக்கு மட்டும் நியூசிலாந்து என்று பிக்ஸ் செய்திருக்கிறார். விரைவில் கனவுப் பாடலுக்காக பரத்தும், சுனேனாவும் கடல் கடக்க இருக்கிறார்கள்.
மேலும் அறிய

Sunday, November 8, 2009

> உலகின் 100 ஆபத்தான இணையத்தளங்கள்

நம் கணினியை செயலிழக்கச் செய்யும் மிக மோசமான வைரஸ்களை பரப்பு‌ம் 100 அபாயகரமான இணையதளங்களின் பெயர்களை இணையதள பாதுகாப்பு நிறுவனமான நார்ட்டான் சைமன்டெக் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.

இந்த பெயர்களில் உள்ள இணையதளங்களுக்குள் நாம் செல்லும்போதே நமது கணினியை மோசமான வைரஸ்கள் தாக்கி செயலிழக்கச் செய்துவிடும் அபாயம் இருப்பதாக சைமன்டெக் நிறுவனத்தின் உயரதிகாரி நடாலி கான்னர் எச்சரித்துள்ளார்.

மேலும் இந்த இணையதளங்களுக்குள் சென்றாலே நமது சொந்த விவரங்கள் தீயசக்திகள் கையில் சிக்கும் என்று அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.

கடந்த 6 மாதங்களில் கணினி உலகை பாடு படுத்தி வரும் வைரஸ்களை பரப்பியதில் இந்த பட்டியலில் உள்ள இணையதளங்களுக்கு பெரும் பங்கு உண்டு என்று சைமன்டெக் மேலும் எச்சரித்துள்ளது.

அச்சிடமுடியாத அசிங்கமான பெயர்களைக் கொண்ட இந்த இணையதளங்கள் முழுக்க முழுக்க ஆபாச படங்களை தன்னிலே கொண்டுள்ளது, மேலும் காமம் பற்றிய ஆபாச பொருளடக்கங்களைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.


மற்ற இணையதளங்கள் ஐஸ் ஸ்கேட்டிங், மான் வேட்டை, சமையல், சட்டச் சேவைகள் என்ற பெயர்களில் நடத்தப்படுகிறது.

இந்த இணையதளங்களை நாம் திறந்தாலே போதுமானது, ஹேக்கர்கள் கீ ஸ்ட்ரோக் லாகிங் மென்பொருளை வைத்து எந்த ஒரு கணினியிலிருந்தும் நம் சொந்த விவரங்களை திரட்டி விடுவர்.

சைமன்டெக் வெளியிட்டுள்ள இது போன்ற ஆபத்தான இணையதளங்களின் ஒரு சிலவற்றின் பெயர்கள் வருமாறு:

Sample of Dirtiest Web Sites:

* 17ebook.com
* aladel.net
* bpwhamburgorchardpark.org
* clicnews.com
* dfwdiesel.net
* divineenterprises.net
* fantasticfilms.ru

* gardensrestaurantandcatering.com
* ginedis.com
* gncr.org
* hdvideoforums.org
* hihanin.com
* kingfamilyphotoalbum.com
* likaraoke.com
* mactep.org

* magic4you.nu
* marbling.pe.kr
* nacjalneg.info
* pronline.ru
* purplehoodie.com
* qsng.cn

* seksburada.net
* sportsmansclub.net
* stock888.cn
* tathli.com
* teamclouds.com
* texaswhitetailfever.com
* wadefamilytree.org
* xnescat.info
* yt118.com

இவற்றை பற்றிய மேலும் அறிந்த்துகொள்ள : இங்கே கிளிக் செய்யவும்

எழுதியவர் : கார்த்திக்

மேலும் அறிய

> கோவாவில் நயன்தாரா

தேனியைச் சேர்ந்த சில இளைஞர்கள் ட்‌‌ரீட் கொடுப்பதற்காக கோவா வருகிறார்கள். அங்கு அவர்களுக்கு ஏற்படும் காதல், மோதல், காமெடி அனுபவங்களை திரைப்படமாக்கியிருக்கிறார் வெங்கட்பிரபு.

ஜெய், பிரேம்‌ஜி, வைபவ், அரவிந்த் ஆகாஷ், சினேகா நடித்திருக்கும் இந்தப் படத்தில் வெளிநாட்டு நடிகையும் உண்டு. யுவன் இசை.

கோவாவின் ஸ்பெஷல் அட்ரா‌க்சன், நயன்தாரா. படத்தின் ஒரு காட்சியில் நயன்தாரா தோன்றுகிறார். அந்த‌க் காட்சி என்ன என்பது சஸ்பென்ஸ்.

சிவகாசி படத்தில் நயன்தாரா ஒரு பாடலுக்கு ஆடினார், படம் ஹிட். சிவா‌ஜியில் ஒரு பாடலுக்கு ஆடினார், படம் சூப்பர்ஹிட். கோவாவில் ஒரு காட்சியில் நடிக்கிறார், படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் என இப்போதே நயன ஜோசியம் படிக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
மேலும் அறிய

> இரண்டாம் வருகை -சதா

அழகிருக்கு, திறமையும் இருக்கு, ஆனால் சதா கைவசம் படங்கள் மட்டும் இல்லை. உட்காந்து யோசித்தும் ஒன்றும் பு‌ரியாமல் இந்திப் பக்கம் தாவினார். அங்கும் ச‌ரியான ரெஸ்பான்சில்லை.

என்ன செய்யலாம் என்று கூட்டாக யோசித்தவர், பிரைவேட்டாக போட்டோசெஷன் நடத்தி தயா‌ரிப்பாளர்கள், இயக்குனர்கள் பார்வைக்கு அனுப்ப இருக்கிறாராம்.

தமிழில் சதாவுக்கு சுத்தமாக வாய்ப்பில்லை. பல வருடங்களுக்கு முன் மாதவன் ஜோடியாக நடித்த லீலை, நான் அவள் அது என்று பெயர் மாற்றப்பட்டு ‌ரிலீஸுக்காக காத்திருக்கிறது.

இந்தப் படம் வெளியானால் தமிழ் சூழலில் தனது முகம் மீண்டும் நினைவுக்கு வந்துவிடும் என்று காத்திருக்கிறார்... காத்திருக்கிறார்... படம் வரும் வழியை காணோம்.

நாலாபுறமும் கதவடைக்கப்பட, சதா தேர்வு செய்த புதிய வழிதான், கிளாமர் போட்டோசெஷன். ஆக, திரைப்படத்தில் வந்தவர் புகைப்படமாக வலம்வரயிருக்கிறார். எப்படியோ, இரண்டாவது வருகையாவது இனிமையாகட்டும்.
மேலும் அறிய

Friday, November 6, 2009

> பிரபுதேவாவின் பா‌‌ரீஸ்

ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்குகிறார் பிரபுதேவா. இந்தியில் இயக்கிய வான்டட் மிகப் பெ‌ரிய வெற்றியை‌ப் பெற்றுள்ள நிலையில் பிரபுதேவாவின் புதிய தமிழ்ப் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயம் ரவி தற்போது தனது அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் தில்லாலங்கடி படத்தில் நடித்து வருகிறார். இது தெலுங்கில் வெற்றி பெற்ற கிக் படத்தின் ‌‌ரீமேக்.

இதையடுத்து ரவி நடிக்கும் படத்தை பிரபுதேவா இயக்குகிறார். இதில் ரவியின் ஜோடியாக நடிக்க பிரபுதேவா சிபா‌ரிசு செய்தது நயன்தாராவை. இதற்கு ரவி தரப்பில் எதிர்ப்பு தெ‌ரிவிக்கப்பட்டதாக தெ‌ரிகிறது. இதனைத் தொடர்ந்து கமல்ஹாசனின் மகள் ஸ்ருதியிடம் கால்ஷீட் கேட்க முடிவு செய்துள்ளனர்.

இந்த புதிய படத்துக்கு பா‌‌ரீஸ் என்ற பெயர் ப‌ரிசீலனையில் உள்ளது.
மேலும் அறிய

> விக்ரமுக்கு புதுப் பிரச்சனை

சமீபமாக பெயர் சொல்லும் எந்தப் படமும் விக்ரமுக்கு அமையவில்லை. மஜா தோல்வி, இரண்டு வருடம் உழைத்த பீமா ப்ளாப்.. இதையெல்லாம் ச‌ரி செய்யும் என்று நினைத்த கந்தசாமியும் காலைவார, முட்டு‌ச் சந்தில் மாட்டிக் கொண்ட நிலை.

இந்நேரம் செல்வராகவன் ஒரு கதையை சொல்ல, அதில் மெய் மறந்த சீயான் எதையும் யோசிக்காமல் லடாக் கிளம்பிவிட்டார் படப்பிடிப்புக்கு. இந்த திடீர் ட்‌ரிப்பால் கடுப்பில் இருக்கிறார் தயா‌ரிப்பாளர் மோகன் நடராஜன்.

மணிரத்னத்தின் ராவண் படத்துக்குப் பிறகு மோகன் நடராஜன் தயா‌ரிப்பில் விக்ரம் குமார் இயக்கும் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தார் விக்ரம். நடுவில் செல்வராகவன் வர, கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு லடாக் பறந்துவிட்டது பட்சி.

அதிர்ச்சியான மோகன் நடராஜன், விக்ரம் மீது தயா‌ரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுக்கும் எண்ணத்தில் இருக்கிறார். விரைவில் பஞ்சாயத்து மணி ஒலிக்கலாம்.
மேலும் அறிய

Thursday, November 5, 2009

> பிரேம்‌ஜியை நாயகனாக்கும் சோனா

எண்ணி பத்து படம்தான் நடித்திருப்பார். அதற்குள் படம் தயா‌ரிக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் சோனா. இவர் ஓடு மச்சி ஓடு என்ற படத்தை தயா‌ரிப்பதாக சில வாரங்கள் முன்பு கூறப்பட்டது. அதனை இந்த மாதம் சோனா உண்மையாக்குகிறார்.

சோனா தயா‌ரிக்கும் படத்தில் பிரேம்‌ஜி அமரன் ஹீரோவாக நடிப்பார் என தெ‌ரிகிறது. முக்கியமான வேடம் சோனாவுக்கும் உண்டு. புதுமுகம் ஒருவர் படத்தை இயக்குகிறார். மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.

இம்மாதம் 10 ஆ‌ம் தேதி படம் குறித்து அதிகார‌ப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளார் சோனா. படத்தின் நாயகி யார் என்பதையும் அன்று தெ‌ரிவிப்பாராம். ஓடு மச்சி ஓடு பெயர் அனேகமாக மாற்றப்படலாம் என்கின்றனர்.
மேலும் அறிய

> ஆஸ்கர் தயா‌ரிப்பில் விஜய்

விஜய்யின் 51வது படத்தின் தயா‌ரிப்பாளர், இயக்குனர் யார் என்பதற்கான விடை கிடைத்திருக்கிறது.

விஜய் தற்போது சுறா படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 50வது படம். இதையடுத்து அவர் யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது கேள்விக்குறியாக இருந்தது.

ஜெயம் ராஜாவிடம் கதை கேட்ட விஜய், கண்டிப்பாக படம் பண்ணுவோம் என அவ‌ரிடம் உறுதி அளித்திருந்தார். 49வது படமான வேட்டைக்காரன் தொடங்கிய போதே உறுதி செய்யப்பட்ட விஷயம் இது.

இந்நிலையில் லிங்குசாமியும் விஜய்க்காக கதை தயார் செய்து வைத்திருக்கிறார். விஜய் கால்ஷீட் கொடுத்தால் பையாவுக்குப் பிறகு விஜய் படத்தை இயக்கலாம் என்பது லிங்குசாமியின் எண்ணம்.

ஆனால், முன்பே திட்டமிட்டபடி ஜெயம் ராஜா இயக்கும் படத்தில் நடிப்பதென்று விஜய் முடிவு செய்துள்ளார். இந்தப் படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயா‌ரிக்கிறார்.

படத்துக்கு இசையமைக்க பலரது பெயர்கள் ப‌ரிசீலனையில் உள்ளன. என்றாலும் தரணின் பெயர்தான் விஜய்யின் சாய்ஸாம். ஈரம் படத்தில் தரணின் இசை விஜய்க்கு பிடித்திருந்ததுதான் இதற்கு காரணமாம்.
மேலும் அறிய

> அதே நேரம் அதே இடம்

ஜமால் சினி கி‌ரியேஷன்ஸ் சார்பில் ஜமால் சையத் இப்ராஹிம் வழங்க, லட்சுமி பிக்சர்ஸ் ராமகிருஷ்ணா தயா‌ரித்துள்ள படம், அதே நேரம் அதே இடம். ஜெய், விஜயலட்சுமி நடித்துள்ளனர். கதை, திரைக்கதை எழுதி எம்.பிரபு இயக்கியிருக்கிறார்.

படித்துவிட்டு வேலை தேடும் ஜெய்யும், கல்லூ‌ரியில் படிக்கும் விஜயலட்சுமியும் காதலிக்கிறார்கள். இந்த‌க் காதல் ஏற்படுத்தும் மாற்றங்கள்தான் கதை.

இந்தப் படத்தை பார்க்கிறவர்களுக்கு அவர்களின் காதலும், அவர்கள் தங்கள் காதலன், காதலியை முதலில் சந்தித்த இடமும் நினைவுக்கு வருமாம். அதே நேரம் அதே இடம் என்று படத்துக்கு பெயர் வைத்ததற்கான காரணம் இதுதானாம்.

முதல்முறையாக கவர்ச்சியாக நடித்திருப்பதுடன் முத்தக் காட்சியிலும் நடித்துள்ளார் விஜயலட்சுமி. விக்கல் வரும்போது அதிர்ச்சியான தகவலை சொன்னால் விக்கல் நின்றுவிடும்.

இந்தப் படத்தில் ஒரு காட்சியில் கதாநாயகி விஜயலட்சுமிக்கு விக்கல் வருகிறது. விக்கலை நிறுத்துவது எப்படி என்று யோசிக்கும் நாயகன் ஜெய் விஜயலட்சுமியை இறுக அணைத்து உதட்டோடு உதடு பதித்து முத்தமிடுகிறார். அந்த அதிர்ச்சியில் விக்கல் நின்றுவிடுகிறது. அப்புறமென்ன.. பாடல்தான்.

வெண்ணிலவு ஜன்னல் பார்க்க
பின்னிரவில் மெல்லிசை கேட்க
கண்களிரண்டில் காமம் பூக்க
உன்னை நானும் அணைத்தேனே...

இந்தப் பாடல் மட்டுமின்றி படத்தின் அனைத்துப் பாடல்களையும் லலிதானந்த் எழுதியிருக்கிறார். படத்துக்கு இசையமைத்திருப்பவர் பிரேம்‌ஜி அமரன்.

வெள்ளிக்கிழமை வெளியாகும் இந்தப் படத்துக்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
மேலும் அறிய

Wednesday, November 4, 2009

> சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்- அசத்தும் ஆதவன்

சென்னை பாக்ஸ் ஆஃபிஸின் முதல் ஐந்து இடங்களிலிருந்து உன்னைப்போல் ஒருவன் வெளியேற்றப்பட்டிருக்கிறது. தொடர்ந்து அசத்தலான வசூலுடன் முதலிடத்தை பிடித்திருப்பது ஆதவன்.

5. ஈரம்
அறிவழகனின் இந்தப் படம் உன்னைப்போல் ஒருவனுக்கு முன்பே வெளியானது. இருந்தும் உன்னைப்போல் ஒருவன் பாக்ஸ் ஆஃபிஸிலிருந்து வெளியேறிய பிறகும் தாக்குப் பிடிப்பது ஆச்ச‌ரியமான விஷயம். ஏழு வாரங்கள் முடிவில் இப்படம் 1.94 கோடியும், சென்றவார இறுதியில் 1.65 லட்சமும் வசூலித்துள்ளது.

4. ஜகன் மோகினி
நமிதாவின் மோகினிக்கு அவ்வளவாக வரவேற்பில்லை. இரண்டு வாரங்கள் முடிவில் 52 லட்சங்களை மட்டுமே இப்படம் வசூலித்துள்ளது. சென்ற வார இறுதி வசூல் 5.53 லட்சங்கள்.

3. பேராண்மை
ஜனநாதனின் படத்துக்கு ரசிகர்களின் பேராதரவு இருக்கிறது. இரண்டு வாரங்களில் 1.52 கோடிகளை இப்படம் சென்னையில் மட்டும் வசூலித்துள்ளது. சென்றவார இறுதி வசூல், 22.9 லட்சங்கள்.

2. கண்டேன் காதலை
சென்ற வாரம் வெளியான இப்படம் சன் பிக்சர்ஸின் விளம்பரத்தால் முதல் மூன்று தினங்களில் 24.33 லட்சங்களை வசூலித்திருக்கிறது. ரொமாண்டிக் காமெடியான இப்படம் ரசிகர்களை பெ‌ரிதும் கவர்ந்திருப்பது விநியோகஸ்தர்களுக்கு இனிப்பான செய்தி.

1. ஆதவன்
தொடர்ந்து முதலிடத்தில் ஆதவன். கதை, திரைக்கதை என அனைத்து விஷயங்களிலும் பொத்தல் விழுந்த இந்தப் படம் வசூலை அள்ளி‌க் குவிப்பது தமிழ் சினிமாவை ஆச்ச‌ரியப்படுத்தியிருக்கிறது. இரண்டு வாரங்கள் முடிவில் 3 கோடியை சென்னையில் மட்டும் தாண்டியிருக்கிறது இப்படம். சென்ற வார இறுதி வசூல், 40.5 லட்சங்கள்.
மேலும் அறிய

> ப்‌ரியதர்ஷனின் அனிமேஷன் படம்

ஒரே நேரத்தில் மூன்று படம் கூட இயக்குவார் ப்‌ரியதர்ஷன். மூன்றையும் வெற்றிபெற வைக்கும் திறமையும் அவருக்கு உண்டு.

கட்டா மிட்டா படத்தை சில நாட்கள் முன்பு தொடங்கினார் ப்‌ரியதர்ஷன். இந்தப் படம் தவிர அ‌க்சய்குமார் நடிக்கும் இரு படங்களை இயக்கவுள்ளார். அமீர்கானை வைத்து இயக்கும் எய்ட்ஸ் படம் வேறு இருக்கிறது.

இந்த பிஸியான ஷெட்யூ‌லில் அனிமேஷன் படம் இயக்கவும் ஒப்பந்தம் போட்டிருக்கிறார் என்பது ஆச்ச‌ரியமான விஷயம். கேரளாவைச் சேர்ந்த டூன்ஸ் அனிமேஷன் நிறுவனத்துடன் இணைந்து Twinergy என்ற அனிமேஷன் படத்தை ப்‌ரியதர்ஷன் இயக்குகிறார். அமிதாப் இந்தப் படத்தில் நடிப்பார் என தெ‌ரி‌கிறது.

இப்படியே போனால் இந்தியாவில் அதிக திரைப்படங்களை இயக்கியவர் என்ற பட்டம் ப்‌ரியனை தேடி வரலாம்.
மேலும் அறிய

> ஜாக்கிசான்,மல்லிகா ஷெராவத் ஜோடி

ஜாக்கிசான் நடிக்கும் ஒரு படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயா‌ரிக்கிறார். தசாவதாரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு ஜாக்கிசான் தமிழகம் வந்தபோது இதற்கான முதல் விதை போடப்பட்டது.

ரவிச்சந்திரன் ஆரம்ப காலத்தில் ஜாக்கிசானின் படங்களை வாங்கி விநியோகித்தவர். ஜாக்கியின் அறிமுக காட்சியில் ரசிகர்கள் ஆரவாரம் செய்வதையும், காசுகளை வீசுவதையும் பல வருடங்களுக்கு முன்பே வீடியோவில் பதிவு செய்து ஜாக்கிசானிடம் போட்டு காண்பித்திருக்கிறார். அப்போதிலிருந்தே இருவரும் நண்பர்கள்.

ஜாக்கிசான் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மல்லிகா ஷெராவத்தை தேர்வு செய்துள்ளனர். இவர் ஏற்கனவே ஜாக்கிசானுடன் மித் படத்தில் நடித்துள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என தெ‌ரிகிறது.

ஜாக்கிசான் படத்தை தயா‌ரிப்பதால் விஜய் உள்பட முன்னணி நடிகர்களை வைத்து ரவிச்சந்திரன் தயா‌ரிக்க இருந்த படங்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
மேலும் அறிய

Tuesday, November 3, 2009

> WINDOWS 7ல் புதுசா என்ன இருக்கு?

மிகப் பெரிய அளவிலான தொழில் நுட்ப மாற்றங்களுடன் சென்ற அக்டோபர் 22 அன்று, மைக்ரோசாப்ட் உலக நாடுகள் அனைத்திலும் தன் புதிய விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. புதிய வசதிகள், தொழில் நுட்ப மாற்றங்கள் ஆகியவற்றினால், இதன் வெளியீடு ஏறத்தாழ 18 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

புதிய வசதிகளாக வேடிக்கை அம்சங்கள், எளிமையான இயக்கம் மற்றும் இதுவரை இல்லாத வகையில் கூடுதல் பாதுகாப்பு எனப் பல முனைகளில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமைக்கப் பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

புதிய வசதிகளை உருவமைக்க ஏறத்தாழ 600 வகையான கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டன. இதன் சோதனைத் தொகுப்பினை, இதுவரை ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரலாற்றில் இல்லாத வகையில், 80 லட்சம் பேர் உலகின் பல நாடுகளில் சோதனை செய்தனர். அவர்கள் அளித்த அறிவுரைகளுக்கேற்ப இவற்றில் இருந்த பல பிரச்னை களுக்குத் தீர்வுகள் காணப்பட்டன. இதற்கு முன் வெளிவந்த விஸ்டா சிஸ்டம், வாடிக்கையாளர்களிடம் இடம் பெறாமல் போவதற்குப் பல காரணங்கள் இருந்தன. கம்ப்யூட்டர் கட்டமைப்பில் பல புதிய கூடுதல் வசதிகளை விஸ்டா எதிர்பார்த்ததால், பலர் தங்களின் கம்ப்யூட்டர்களை 2001ல் வெளியான விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திலேயே தொடர்ந்து இயக்கி வந்தனர். இதனை மனதில் கொண்டே விண்டோஸ் 7 உருவாக்கப்பட்டது.


விண்டோஸ் 7 அதன் பாதுகாப்பிற்கென பல அம்சங்களைக் கொண்டிருப்பதால், இனி இதற்கென பிற நிறுவனங்கள் அமைத்து வழங்கும் பாதுகாப்பு புரோகிராம்கள் தேவையில்லை எனப் பல நிறுவன வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். இந்த வகையில் பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்களை விலை கொடுத்து வாங்க வேண்டியதில்லை என்பதால், முதலீடு செலவு கணிசமாகக் குறையும். பல முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கம்ப்யூட்டர்களை விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மாறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த புதிய பதிப்பு வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்ற ஆறு வகைகளில் வெளிவந்துள்ளது.

அவை விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், புரபஷனல், ஸ்டார்ட்டர், ஹோம் பேசிக், என்டர்பிரைஸ் மற்றும் விண்டோஸ் 7 அல்ட்டிமேட். இவற்றில் எது நம் தேவைகளுக்குச் சரியானதாக இருக்கும் எனக் கண்டறிந்து அறிவதே, தற்போதைய கேள்வியாக பலருக்கு உள்ளது. இவற்றின் விலை ரூ.5,800 முதல் ரூ.11,000 வரை உள்ளது. இந்த சிஸ்டம் இயக்கத்திற்குத் தயாராகும் நேரம் மிகவும் குறைவாக இருக்கும்படி அமைக்கப் பட்டுள்ளது. இது பல வாடிக்கையாளர்களுக்குத் திருப்தி அளிக்கிறது. கம்ப்யூட்டர் சுவிட்சை ஆன் செய்துவிட்டு தயாராகும் நேரத்தில், டீயில் பாதி குடிக்கும் வேலை எல்லாம் இனி இருக்காது.

இந்த புதிய சிஸ்டத்தில் அனைத்து மல்ட்டி மீடியா வேலைகளும், புதிய முறையில் இனிமை யாகவும் எளிமையாகவும் இயக்கும் முறையில் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

பல கம்ப்யூட்டர் நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்திடும் கம்ப்யூட்டர்களிலும், குறிப்பாக நெட்புக் கம்ப்யூட்டர்களிலும், விண்டோஸ் 7 பதிப்பை பதிந்து தரத் தயாராகிவிட்டன. குறிப்பாக எச்.பி. இந்தியா, எச்.சி.எல்., ஏசர் ஆகியவை இவ்வகையில் ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எச்பி இந்தியா நிறுவனம் விண்டோஸ் 7 சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டர்களை ரூ. 27,990 முதல் ரூ. 90,000 வரையிலான விலையில் அறிவித்துள்ளது. ஏசர் பி.சி. நிறுவனம் ரூ. 15,000 முதல் ரூ.35,000 வரை விலை அறிவித்துள்ளது.நோட்புக் கம்ப்யூட்டர்கள் ரூ. 21,000 முதல் ரூ.71,000 விலையில் உள்ளன.

இனி தொழில் நுட்ப தகவல்கள் மற்றும் வசதிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

* இரண்டு வகை சிஸ்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவை 32 பிட் மற்றும் 64 பிட் ஆகும். இவற்றில் ஸ்டார்ட்டர் எடிஷன் 32 பிட் வகையில் மட்டுமே கிடைக்கிறது.

* 64 பிட் சிஸ்டம் வகையில் பிசிகல் மெமரி, ஹோம் பிரிமியம் சிஸ்டத்தில் 16 ஜிபி, புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் வகையில் 192 ஜிபி ஆக உள்ளன. ஸ்டார்ட்டர் எடிஷனில் இது இல்லை.

* ஸ்டார்ட்டர் மற்றும் ஹோம் பிரிமியம் வகை ஒரு சிபியு மட்டுமே சப்போர்ட் செய்கிறது. புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் வகை இரண்டு சிபியுக்களை சப்போர்ட் செய்கிறது.

* ஹோம் குரூப் உருவாக்கி இணைவது என்ற வசதியைப் பொறுத்தவரை, ஸ்டார்ட்டர் எடிஷனில் இணையும் வசதி மட்டுமே தரப்பட்டுள்ளது. மற்ற மூன்றிலும் உருவாக்கி இணையும் வசதி உள்ளது.

நெட்வொர்க்கில் பேக்கப் செய்து மீண்டும் பெறுவது புரபஷன்ல் மற்றும் அல்ட்டிமேட் வகைகளில் மட்டுமே தரப்பட்டுள்ளது.

* ஸ்டார்ட்டர் தவிர மற்றவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட பல மானிட்டர் களை இணைக்கலாம்.

* மாற்றக்கூடிய டெஸ்க்டாப் வால் பேப்பர், டெஸ்க்டாப் விண்டோ மேனேஜர், விண்டோஸ் மொபிலிட்டி சென்டர், விண்டோஸ் ஏரோ, மல்ட்டி டச், பிரிமியம் கேம்ஸ், விண்டோஸ் மீடியா சென்டர், விண்டோஸ் மீடியா பிளேயரை ரிமோட்டில் இயக்குவது ஆகியவை ஸ்டார்ட்டர் எடிஷன் தவிர மற்றவற்றில் தரப்பட்டுள்ளன.

விண்டோஸ் எக்ஸ்பி மோடில் இயக்கும் வசதி புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் ஆகியவற்றில் மட்டுமே தரப்பட்டுள்ளது.

* விர்ச்சுவல் ஹார்ட் டிஸ்க் மூலமாக பூட் செய்திடும் வசதி அல்ட்டிமேட் எடிஷனில் மட்டுமே தரப்பட்டுள்ளது.

விண்டோஸ் ஸ்டார்ட்டர் எடிஷன் என்பது, இத்தொகுப்பின் மிக எளிய வகை பதிப்பாக நெட்புக் கம்ப்யூட்டர்களுக்கு மட்டுமே கிடைக்கும். விண்டோஸ் எக்ஸ்பி அல்லது விஸ்டாவிலிருந்து இதற்கு அப்கிரேட் செய்திட முடியாது. விண்டோஸ் 7 தொகுப்பின் புதிய மற்றும் சிறப்பம்சங்களாக நாம் கருதும் பல விஷயங்கள் இதில் கிடைப்பதில்லை. 32 பிட் இயக்கம் மட்டுமே இதில் உள்ளது.


விண்டோஸ் மீடியா சென்டர் மற்றும் விண்டோஸ் மீடியா பிளேயர் இதில் சேர்க்கப்படவில்லை. எக்ஸ்பியில் மட்டுமே இயங்கும் புரோகிராம்களுக்காக, விண்டோஸ் 7 பதிப்பில் எக்ஸ்பி மோட் என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது. அந்த வசதி ஸ்டார்ட்டர் எடிஷனில் இல்லை. ரிமோட் டெஸ்க்டாப் ஹோஸ்ட், பிட் லாக்கர் டிரைவ் என்கிரிப்ஷன் மற்றும் மல்ட்டி டச் சப்போர்ட் ஆகிய வையும் இதில் தரப்பட வில்லை. அப்புறம் என்ன தான் ஸ்டார்ட்டர் எடிஷனில் உள்ளது என்று கேட்கிறீர் களா? டாஸ்க்பாரில் புரோகிராம்களை பின் செய்து கொள்ளலாம். புரோகிராம் விண்டோக்களை மிக வேகமாக ரீசைஸ் செய்து கொள்ளலாம். வேகமாக்கப்பட்ட விண்டோஸ் சர்ச் வசதி உள்ளது.

இதனை அடுத்துள்ள ஹோம் பிரிமியம், கம்ப்யூட்டர்களைப் பரவலாகப் பயன் படுத்துவோருக்கேற்ற ஒன்றாக உள்ளது. மைக்ரோசாப்ட், தன் வாடிக்கையாளர்கள் என்ன என்ன வசதிகள் புதியதாக இணைக்கப் பட்டிருப்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறதோ, அவை அனைத்தும் இதில் உள்ளன. புரோகிராம்களின் செயல்பாட்டினை முன்கூட்டியே அறிதல், டெஸ்க்டாப் பிலிருந்து தேவையற்ற ஐகான்களை நீக்குதல், புரோகிராம் விண்டோக்களை ரீசைஸ் செய்திடும் ஏரோ ஸ்நாப், ஊடுறுவிப்பார்க்கும் வகையில் டாஸ்க்பாரின் தோற்றம் காட்டும் ஏரோ ஸ்கின் மற்றும் விண்டோ பார்டர்ஸ் ஆகிய அனைத்தும் இதில் தரப்பட்டுள்ளன. விண்டோஸ் மீடியா பிளேயர் மற்றும் விண்டோஸ் மீடியா சென்டர் ஆகிய வசதிகள் சிறப்பாக இயக்கும் முறையில் தரப்பட்டுள்ளன. ஹோம் குருப் உருவாக்கி ஒரு சிலருக்குள் மியூசிக் சார்ந்த பொழுது போக்கு பைல்களையும் மற்ற பைல்களையும் பகிர்ந்து கொள்ளலாம். இதில் 64 பிட் பதிப்பு இருந்தாலும், ராம் பிசிகல் மெமரி 16 ஜிபி வரை மட்டுமே கிடைக்கிறது. ஹோம் பிரிமியம் எடிஷனை எந்த நேரத்திலும் புரபஷனல் அல்லது அல்ட்டிமேட் எடிஷனுக்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம்.


முழுமையான வசதிகள் பல இருந்தாலும், விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் பதிப்புகளில் உள்ள பல வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. நெட்வொர்க் டிரைவில் இணைக்கப் பட்டிருக்கையில் பேக் அப் வசதியை இயக்க முடியாது. பிட் லாக்கர், ஆப் லாக்கர் வசதிகள் இல்லை. எக்ஸ்பி மோட் இல்லை.

மற்ற இரண்டும், புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட், அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளன. எந்த பிரச்னையும் தடையும் இன்றி பயன்படுத்தலாம்.

விஸ்டாவின் இயக்கத்தினால் ஏமாந்திருந்த விண்டோஸ் வாடிக்கையாளர்கள், நிச்சயம் விண்டோஸ் 7 பதிப்பை மனதார வரவேற்பார்கள் என்றே எதிர்பார்க்கலாம். இந்த புதிய பதிப்பிற்கு மாறும் முன் உங்கள் சிஸ்டம் இதனைத் தாங்கிக் கொண்டு சிறப்பாக இயங்குமா என்பதை உறுதி செய்து கொள்ளவும். இதனைத் தெரிந்து கொள்வதற்கான புரோகிராம்களையும், வழிமுறைகளையும், மைக்ரோசாப்ட் தன் இணையதளத்தில் கொண்டுள்ளது.


எழுதியவர் : கார்த்திக்
மேலும் அறிய

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.