Friday, July 31, 2009

> மொட்டை போட்ட நடிகைகள்!

''ஹீரோக்கள் மட்டும் படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டி நல்ல பெயர் வாங்கிகிட்டு போயிடுறாங்க. ஆனா... எங்களை மட்டும் குத்துப் பாட்டுக்கும், கூத்தடிக்கிறதுக்கும் மட்டும் பயன்படுத்திகிறாங்க. நாங்க என்ன செய்யுறது வித்தியாசமா நடிக்க யாரும் வாய்ப்பு கொடுக்கலயே...

என்னதான் ரஜினி, விஜய்க்கூட ஜோடி போட்டு நடித்தாலும் கொஞ்ச நாளைக்குப் பிறகு தாக்குப் பிடிக்க முடியலை'' பிரபலமான நடிகைகள் இப்படி பொலம்பிக்கிட்டு இருக்குறாங்கன்னு நமக்கு செய்தி வந்துச்சு.

உடனே அப்படி பொலம்பற நடிகைகளையெல்லாம் ஒண்ணு சேத்து ரூம் போட்டு யோசிக்க வைச்சோம். அவங்களோட நாமும் சேர்ந்து தலையை பிச்சுக்கிற நிலைமை வந்துச்சு.

அதான் மொட்டை அடிச்சுட்டோம்.






இந்த கெட்டப் எப்படி இருக்கு!!!

ஸாரி, இத யாரும் நம்ப வேண்டாம். ஹய்யோ.......... ஹய்யோ...........

பின் குறிப்பு: புது இயக்குனர்களுக்கு... இந்தப் படத்தை பார்த்து ஐடியா ஒர்க்கவுட் ஆச்சுன்னா எங்கள தனியா கவனிங்க...


நன்றி :: நக்கீரன்

> A.R ரஹ்மானுக்கு எதிராக கொதிக்கும் சங்கம்.புறக்கணிக்கலாமா?

ரஹ்மானுக்கு எதிராக முதல் கல் வீசப்பட்டிருக்கிறது. அதுவும் மிக முக்கியமான சங்கம் ஒன்றின் சார்பாக. இது காதில் விழுந்தாலும், விழாத மாதிரி அமைதி காக்கிறது ரஹ்மான் தரப்பு.

உலக அரங்கில் தமிழனின் பெயரை உரக்க ஒலித்தவர் ரஹ்மான். அவர் வாங்கிய ஆஸ்கர் விருதுக்காக சென்ற இடமெல்லாம் பாராட்டுகளை குவித்துக் கொண்டிருக்கும் அவர், “கொஞ்சம் வேலை செய்ய விடுங்கப்பா” என்று ஒதுங்கி ஓடினாலும், பிதுங்கி வழிகிறது அழைப்பாளர்களின் எண்ணிக்கை. எல்லாமே பாராட்டு விழாக்களுக்கான அழைப்புகள். முடிந்தளவு அந்த விழாக்களில் கலந்து கொள்கிறார் அவரும். இந்நிலையில் தமிழ் திரைப்பட அமைப்புகளின் சார்பாக அவருக்கு இன்னும் பாராட்டு விழா எதுவும் எடுக்கப்படவில்லை என்ற ஆதங்கம் ரஹ்மான் ரசிகர்களுக்கு இல்லாமல் இல்லை.

யாரும் பாராட்டு விழா நடத்த முன்வரவில்லையோ என்ற வெளித்தோற்றம் இருந்தாலும், “உண்மை அதுவல்ல” என்கிறார் நடிகர் சங்க செயலாளர் ராதாரவி. ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததும் நடிகர் சங்கம் சார்பாகவும், இன்னும் பிற சங்கங்களின் ஒத்துழைப்போடும் ஒரு பிராமாண்டமான விழாவை எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தாராம். முறைப்படி தேதி கேட்டும் ஒரு பதிலும் வரவில்லையாம் ரஹ்மானிடமிருந்து. ஆனால், “அண்டை மாநிலங்கள் அழைத்தால் முதலில் போய் அதில் கலந்து கொள்ளும் ரஹ்மான், நம்மை புறக்கணிக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறேன்” என்கிறார் ராதாரவி.

பதில் சொல்ல வேண்டிய ரஹ்மான் தரப்பு... கப்சிப்!

Wednesday, July 29, 2009

> மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த பெரிய சாதனையாக மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 வர இருக்கிறது. கம்ப்யூட்டர் உலகில் தன் தொடுவான எல்லைகளை விரித்து பல புதிய அம்சங்களுடன் இந்த தொகுப்பு வர இருக்கிறது. வழக்கமான பெர்சனல் கம்ப்யூட்டருக்கான ஆபீஸ் தொகுப்புடன் முதல் முறையாக இன்டர்நெட்டில் வைத்துப் பயன்படுத்தும் ஆபீஸ் தொகுப்பாகவும் இது வெளிவர இருக்கிறது. ஆபீஸ் 14 என்ற குறியீட்டுப் பெயருடன் 2006 ஆம் ஆண்டில் இதனைத் தயாரிப்பதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன. ஆபீஸ் 12 என்ற பெயருடன் தொடங்கப்பட்ட ஆபீஸ் தொகுப்பு வேலைகள் முடிக்கப்பட்டு ஆபீஸ் 2007 தொகுப்பாக வெளியிட்ட பின் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 14 என்று தன் அடுத்த தொகுப்பினைத் தொடங்கியது. (உலக மக்கள் 13 என்ற எண் மீது கொண்டிருக்கும் வெறுப்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தையும் பற்றிக் கொண்டிருக்கலாம்.)

சென்ற வாரம் அதிகாரபூர்வமாக ஆபீஸ் 2010 குறித்த அறிவிப்பு வெளியானது. முழுமையான தொகுப்பின் பயன்பாடு குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் அதன் தனித் தன்மைகள், மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பம் போன்றவை சற்று கசியத் தொடங்கின. இந்த ஆபீஸ் 2010 தொகுப்பு இது பயன்படுத்துவோருக்கான தன்மையினை அடிப்படையாகக் கொண்டிருக்கும். அதாவது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் ஈடுபடும் மேல் மட்ட ஆய்வாள்ர்கள் மற்றும் அறிஞர்கள், விற்பனைச் சந்தையில் ஈடுபடும் அலுவலர்கள், மனித வள மேம்பாட்டு பிரிவுகளில் ஈடுபடுவோர் என ஒருவரின் வேலைத் தன்மைக்கேற்ப இந்த ஆபீஸ் தொகுப்பினைச் செயல்படுத்த வழி தரப்பட்டிருக்கும்.


இந்த தொகுப்புடன் சேர்த்து மைக்ரோசாப்ட் இணைய அடிப்படையில் இயங்கும் ஆபீஸ் தொகுப்பினை வழங்க இருக்கிறது. வெப் பேஸ்டு அப்ளிகேஷன் என அழைக்கப்படும் இத்தொகுப்பில் எக்ஸெல், பவர்பாய்ண்ட், வேர்ட் மற்றும் ஒன் நோட் அப்ளிகேஷன்கள் கிடைக்கும். இவை இயக்கிக் காட்டப்பட்டன. பிரவுசரின் வழியாகச் சென்று இந்த அப்ளிகேஷன் தொகுப்புகளை இயக்கி பைல்களை நாம் தயாரிக்க முடியும். இந்த வெப் அப்ளிகேஷன்கள் சபாரி, பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வழியாக இயங்கும். இதன் மூலம் ஆபீஸ் தொகுப்பினைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமின்றி, இந்த மார்க்கட்டில் இது போன்ற அப்ளிகேஷன்களை மைக்ரோசாப்ட்டிற்கு எதிராகக் கொண்டு வரும் கூகுள் டாக்ஸ் போன்ற மற்ற வெப் அப்ளிகேஷன் புரோகிராம்களுக்குப் போட்டியாகவும் இது இருக்கும்.


ஆபீஸ் தொகுப்பு 2010 இரு வகைகளில் தரப்பட இருக்கிறது. 32 பிட் அமைப்பிலும் 64 பிட் அமைப்பிலும் இயங்கும் வகையில் இரண்டு வகை தரப்படும். ஆபீஸ் தொகுப்பு ஒன்று இவ்வாறு இரண்டு வகைகளுக்கும் தரப்படுவது இதுவே முதல் முறையாக இருக்கும். இதன் வேர்ட் தொகுப்பின் புதுமையாக இமேஜ் எபக்ட்ஸ் கூட்டாகத் தரப்படுகிறது. வேர்ட் மற்றும் பிற ஆபீஸ் புரோகிராம்களில் பேஸ்ட் பிரிவியூ என்ற ஒட்டுமுன் காட்சி தரப்படுகிறது. இதன் மூலம் பேஸ்ட் பயன்படுத்துபவர்கள் அது எப்படி தோற்றமளிக்கும் என்பதனை அறிந்து தங்கள் விருப்பத்திற்கேற்ப பல பேஸ்ட் முறைகளைச் சோதனை செய்து பார்த்து செயல்படலாம்.

எக்ஸெல் தொகுப்பில் ஸ்பார்க்லைன்ஸ் (Sparklines) என்றொரு வசதி தரப்படுகிறது. ஸ்ப்ரெட் ஷீட் ஒன்றில் காணப்படும் செல் ஒன்றில் அமையும் வகையில் உள்ள சிறிய கிராப் ஆக இது இருக்கும். பவர்பாய்ண்ட் தொகுப்பில் வீடியோ எடிட்டிங் வசதிகள் தரப்படுகின்றன. பிரசன்டேஷன் ஒன்றின் வீடியோ காட்சி எப்படி இருக்கும் என்பதனை இந்த தொகுப்பின் மூலமே அறிந்து கொள்ளலாம். இதில் வாய்ஸ் அனொடேஷன்ஸ் இணைந்து இருக்கும். அவுட்லுக் இமெயில் மற்றும் காலண்டர் வசதிகளில் ஜிமெயிலில் உள்ளது போல கான்வெர்சேஷன் வசதி கிடைக்கிறது. இதற்கும் மேலாக "Ignore thread" ஒன்று தரப்படுகிறது. இதன் மூலம் மெசேஜைப் பார்த்துவிட்டு அதனை அலட்சியப்படுத்தி வைக்கும் வசதி கிடைக்கிறது. இதில் “மெயில் டிப்ஸ்” வசதி உள்ளது. இது டாகுமெண்ட் ஒன்றை இமெயில் மூலம் அனுப்புகையிலும் பலருக்கு ஒரே மெசேஜை அனுப்புகையிலும் அது நாகரிகமாக இருக்க வேண்டியதற்கான டிப்ஸ்களை அளிக்கிறது.



ஆபீஸ் 2010 உடைய ஒவ்வொரு அப்ளிகேஷன் தொகுப்பிலும் பைல் கையாளும் விதங்களில் கூடுதல் வசதிகள் தரப்படுகின்றன. பைல் சேவிங், பைல் பிரிண்டிங் போன்ற பணிகளுக்கு ஒரு பேக் ஸ்டேஜ் வியூ அளிக்கப்படுகிறது. இதன் மூலம் மேற்கொள்ளப்படும் வேலை எப்படி அமையும் என முன் கூட்டியே கண்டு கொள்ளலாம். ஒரே டாகுமெண்ட்டை ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் எடிட் செய்திடலாம். இதனால் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஆசிரியர்களாக இருந்து தயாரிக்கப்படும் பல பகுதிகள் அடங்கிய ஒரு டாகுமெண்ட்டை ஒரே நேரத்தில் அதன் ஆசிரியர்கள் அனைவரும் கையாளக் கூடிய வசதி கிடைக்கிறது.

முன்பு போலின்றி இந்த ஆபீஸ் தொகுப்பு மூன்று வகைகளில் மட்டுமே கிடைக்கிறது. ஆபீஸ் ஹோம் மற்றும் மாணவர்க்கான பதிப்பு ஒன் நோட், வேர்ட், எக்ஸெல் மற்றும் பவர்பாய்ண்ட் தொகுப்புகளுடன் கிடைக்கும். ஆபீஸ் ஹோம் மற்றும் பிசினஸ் தொகுப்பில் மேலே குறிப்பிட்டவற்றுடன் அவுட்லுக் இணைந்திருக்கும். ஆபீஸ் புரபஷனல் தொகுப்பில் மேலே சொல்லப்பட்ட அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களுடன் அக்செஸ் டேட்டா பேஸ், மற்றும் பப்ளிஷர் பேஜ் லே அவுட் புரோகிராம்கள் கிடைக்கும்.

வர்த்தகர்களுக்கான தொகுப்பினைப் பார்க்கையில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் ஸ்டாண்டர்ட் தொகுப்பு பயனளிக்கும். அதிக எண்ணிக்கையில் விற்பனைக்குப் பெறும் வர்த்தக வாடிக்கையாளர்களுக்கான பதிப்பாக இது இருக்கும். இதில் எக்ஸெல், அவுட்லுக், பவர்பாய்ண்ட், வேர்ட், ஒன் நோட் மற்றும் பப்ளிஷர் கிடைக்கும். இறுதியாக உள்ள இரண்டு அப்ளிகேஷன்களும் இந்த வகை பதிப்பில் புதிதாக இப்போது சேர்க்கப்படுகின்றன. ஆபீஸ் ஸ்டாண்டர் பதிப்பிற்கான லைசன்ஸ் பெற்றவர்கள் பிரவுசர் அடிப்படையிலான பதிப்பினைக் கையாளும் உரிமையினைப் பெறுவார்கள்.



ஆபீஸ் 2007ல் இருக்கும் ஆபீஸ் பட்டனுக்குப் பதிலாக மெனு பட்டன் தரப்படும். இதன் மூலம் முழு விண்டோ பைல் மெனுவினைப் பெறலாம். இதனை பேக் ஸ்டேஜ் வியூ என மைக்ரோசாப்ட் அழைக்கிறது. இதன் மூலம் பிரிண்டிங் மற்றும் பைல் ஷேரிங் பணிகளை எளிதாகக் கையாள முடியும். ஆபீஸ் 2010 குறித்த விஷயங்கள் வெளியானவுடன் பலர் விதம் விதமான சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். அவற்றை மைக்ரோசாப்ட் தெளிவாகத் தீர்த்து வைத்துப் பல கூடுதல் தகவல்களைத் தந்துள்ளது. அவற்றை இங்கு காணலாம்.

பெர்சனல் கம்ப்யூட்டர் அடிப்படையிலான ஆபீஸ் தொகுப்பும் இன்டர்நெட் அடிப்படையிலான ஆபீஸ் தொகுப்பும் ஒரே செயல்பாட்டுடையனவாக இருக்குமா? நிச்சயமாக இல்லை. இன்டர்நெட் வழி பயன்பாட்டிற்குத் தரப்படும் தொகுப்பில் வேர்ட், எக்ஸெல், பவர்பாய்ண்ட் மற்றும் ஒன் நோட் மட்டுமே இருக்கும். மேலும் இவற்றைப் பயன்படுத்தும் எல்லைகளும் சுருக்கமாகவே இருக்கும். வெப் அடிப்படையிலான ஆபீஸ் 2010 தொகுப்பினால் பின் என்ன பயன்? இது முற்றிலும் பிரவுசர் வழியாகச் சென்று இயக்கப்படும் தொகுப்பாகவும் குறைந்த அளவே வசதி கொண்டதாகவும் இருக்கும். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் ஒரு டாகுமெண்ட்டை பலர் எடிட் செய்திடலாம்.

வெப் அடிப்படை ஆபீஸ் தொகுப்பில் உருவாகும் பைல்களை ஆன்லைனிலேயே சேவ் செய்து வைக்க முடியுமா? முடியும். ஆனால் அதற்கு இலவசமாகக் கிடைக்கும் விண்டோஸ் லைவ் ஸ்கை டிரைவ் அக்கவுண்ட் ஒன்றினைப் பெற்றிருக்க வேண்டும். வெப் ஆபீஸ் தொகுப்பு முற்றிலும் இலவசமாகக் கிடைக்குமா? ஆம், முற்றிலும் இலவசமாகவே இது கிடைக்கும். இலவச விண்டோஸ் லைவ் ஐ.டி. மூலம் இதனைப் பெற முடியும். வெப் ஆபீஸ் தொகுப்பில் அனைத்தும் கிடைக்கிறது என்றால் நான் ஏன் என் பெர்சனல் கம்ப்யூட்டரில் ஆபீஸ் தொகுப்பு 2010 ஐ இன்ஸ்டால் செய்திட வேண்டும்?



வெப் ஆபீஸ் தொகுப்பு குறிப்பிட்ட ஒரு எல்லை வரையிலான வசதிகளையே தரும். நான்கு அடிப்படை புரோகிராம்களே இதில் கிடைக்கும். கூடுதல் வசதிகளையும் நவீன் தொழில் நுட்ப வசதிகளையும் பயன்படுத்த பெர்சனல் கம்ப்யூட்டர் அடிப்படையிலான ஆபீஸ் தொகுப்பினை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். இதிலும் ஆபீஸ் 2007ல் உள்ளது போன்ற ரிப்பன் மெனு இருக்குமா? ஆம். இதிலும் அதன் பயன்பாடு இருக்கும். ஆனால் இன்னும் கூடுதலாக நீட்டிக்கப்பட்டு இருக்கும். ஆபீஸ் தொகுப்பு அனைத்தையும் இதன் மூலம் பெற்றுக் கையாள முடியும். பொதுவான வேலைகளை இப்போது ரிப்பன் மெனுவில் இணைக்கவும், தேவையற்றவற்றை நீக்கவும் முடியும்.

வேர்டில் என்ன புதுமை? பேஸ்ட் பிரிவியூ ஆப்ஷன், டெக்ஸ்ட்டுக்கு ஸ்டைல் அமைப்பதில் கூடுதல் வசதி, வேர்ட் புரோகிராமினை விட்டு வெளியேறாமல் ஸ்கிரீன் ஷாட்களை இணைக்கும் வசதி, இமேஜ் எடிட் செய்வதற்கான புதிய டூல்ஸ் எனப் பல புதுமைகள் உள்ளன. அவுட்லுக்கில் என்ன புதுமை? ஜிமெயிலில் உள்ளது போல சார்ந்த தொடர்பான இமெயில்களை ஒரு குழு உரையாடல் போல வைத்துப் பார்க்கும் வசதி தரப்படுகிறது. பொதுவான வேலைகளை மேற்கொள்ள ஷார்ட் கட் வசதி, காண்டாக்ட் லிஸ்ட்டுக்கு இன்பாக்ஸிலிருந்தே செல்லும் வசதி, ஆன் டிமாண்ட் மொழி பெயர்ப்பு டூல்ஸ் ஆகியவை புதிய வசதிகளாகும். எக்ஸெல் என்ன தருகிறது? ஸ்பார்க்லைன் என்ற (மேலே விளக்கப்பட்டுள்ளது) சிறிய சார்ட் இணைக்கும் வசதி. டேபிள் அமைப்பு மற்றும் கையாள்வதில் கூடுதல் வசதி மற்றும் டேட்டாக்களைக் கையாள்வதில் கூடுதல் வசதிகள் ஆகியவை உள்ளன.



பவர் பாய்ண்ட்டில் என்ன புதுமை? ஆச்சரியப்படத்தக்க புதுமை இதில்தான் உள்ளது. பலவகையான பார்மட் வீடியோக்களை இதில் இணைக்கலாம்; இணைத்த பின் இத்தொகுப்பில் இருந்தே அவற்றை எடிட் செய்திடலாம். முதல் முறையாக உங்கள் ஸ்லைட்ஷாவினை ஒரு முழு விண்டோஸ் மீடியா பைலாக மாற்றிப் பெறலாம். உங்களுக்கு ஆபீஸ் 2010 தொகுப்பினை அது முழுமையாக வெளிவருவதற்கு முன் சோதனை செய்து பார்க்க ஆவலாக உள்ளதா? இதற்கென மைக்ரோசாப்ட் ஒரு தளத்தினை உருவாக்கியுள்ளது.சென்று உங்கள் இமெயில் முகவரியினைப் பதிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யங்கள்

எழுதியவர் : கார்த்திக்

Monday, July 27, 2009

> பிரபுதேவாவின் வாழ்விலிருது களவாடிய பொழுதுகள்

இன்ப நிலா! தங்கர்பச்சான் படத்தில் நடிப்பார் என்று தெரிந்தே இப்படி தமிழ் வழிகிற மாதிரி பெயர் வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. ஒன்பது ரூபாய் நோட்டு படத்தில் அறிமுகமான இவர், முதலில் நடிக்க வரவே மாட்டேன் என்று மறுத்துவிட்டாராம். தங்கர் பச்சானின் வற்புறுத்தலால் நடிக்க வந்தார். "நான் நடிக்க வருவதற்கு முன்னாடி சினிமாவை பற்றியும், அவங்க நடந்துக்கிற விதம் பற்றியும் தப்பு தப்பா கேள்விப் பட்டேன். இப்போ இந்த யூனிட்லே எனக்கு கொடுக்கிற மரியாதையும், பழகுற கண்ணியத்தையும் பார்த்தா தொடர்ந்து நடிக்கலாம் போலிருக்கே" என்றார் பின்பு.

ரூபாய் நோட்டுக்கு பிறகு, பூ படத்தில் பார்வதிக்கு தோழியாக நடித்தார். தங்கர் இப்போது எடுத்து வரும் 'களவாடிய பொழுதுகள்' படத்திலும் இன்ப நிலாவுக்கு முக்கிய கேரக்டர். அதுவும் சும்மா இல்லை. பிரபுதேவாவின் மனைவியாக நடிக்கிறார். பெரிய பெரிய ஸ்டார்களுடன் ஆட்டம் போட்ட பிரபுதேவா இன்ப நிலாவோடு ஜோடி போட எப்படி ஒப்புக் கொண்டார்? அதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. கதைதான்!

அந்தளவுக்கு கதையோடு ஒன்றிப் போயிருக்கிறாராம் பிரபுதேவா. காதலிக்கும் மனைவிக்கும் நடுவில் சிக்கிக் கொண்டு தவிக்கும் ஒருவனின் அன்பும், காதலும்தான் இந்த படத்தின் முக்கிய அம்சம். காதலியாக நடிப்பவர் பூமிகா.

கதையின் ஒன் லைனை பார்த்தா, பிரபுதேவாவின் வாழ்விலிருந்தே 'களவாடிய கதையாக' இருக்கும் போலிருக்கே

> த்ரிஷாவின் மிரட்டல் இனிமே எழுதினா வழக்குதான்!

செல்லுமிடமெல்லாம் வில்லங்கம்! இதுதான் த்ரிஷாவின் ஸ்டைல் போலிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் நட்சத்திர ஒட்டல் ஒன்றில் கிரிக்கெட் வீரர் பதானியுடன் மல்லு கட்டினார் த்ரிஷா என்ற செய்தி வெளியானது. இது திட்டமிட்டே கிளப்பிவிடப்பட்ட வதந்தி. இனிமேலும் நான் பொறுமையாக இருக்கப் போவதில்லை என்று ஆத்திரப்பட்டிருக்கிறார் த்ரிஷ்.

கடந்த சில மாதங்களாகதான் த்ரிஷாவை பற்றிய பெரிய வதந்திகள் எதுவும் இல்லாமல் இருந்தது. அதற்கு முன்பு வாரம் ஒரு வதந்தி, பத்து நாளுக்கொரு பஞ்சாயத்து என்ற ஸ்டைலில்தான் நடந்து வந்தார் த்ரிஷா. பலரும் அட்வைஸ் செய்ததால் சற்றே அதற்கெல்லாம் ஓய்வு கொடுத்திருந்தார். இப்போது பதானி விவகாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி, நான் இன்னும் சென்னையிலேதான் இருக்கேன் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

“நான் அவரை பார்த்தது கூட கிடையாது. உண்மை அப்படியிருக்க, இப்படி ஒரு வதந்தியை ஏன் கிளப்பிவிடுகிறார்கள் என்றே தெரியலே” என்று அப்பாவியாக மறுக்கம் த்ரிஷா, இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட போகிறாராம். சாயங்காலம் ஏழு மணிக்கு மேலே வீட்டை விட்டு வெளியே போவதில்லை என்ற முடிவுக்கு வந்திருப்பாரோ? அதெல்லாம் இல்லை. இப்படியெல்லாம் வதந்தியை பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போகிறாராம். தனது வழக்கறிஞருடன் இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறாராம்

Saturday, July 25, 2009

> ஐஸ்வர்யாராய் எச்சரிக்கை! மீடியா அதிர்ச்சி

ஐஸ் எப்போதுமே ஜில் என்றுதானே இருக்கும்? அந்த எண்ணத்தில் கொதிக்க கொதிக்க கோபத்தை ஊற்றியிருக்கிறார் ஐஸ்வர்யாராய். திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டார் என்றுதான் நினைத்திருந்தது உலகம். ஆனால், அதன்பிறகும் அவர் இந்தியிலும், தமிழிலும் நடித்துக் கொண்டிருப்பது ஆச்சர்யம். அதற்கு அவரது மாமனார் குடும்பத்தினர் சம்மதித்திருப்பது அதைவிட ஆச்சர்யம்.

இந்நிலையில், தனது அழகை பராமரிக்க வேண்டும் என்பதால் குழந்தை பெற்றுக்கொள்ள அவர் விரும்பவில்லை என்று மீடியாக்களில் செய்திகள் வர ஆரம்பித்தன. இதனால் கடும் கோபமுற்ற ஐஸ், தனது வழக்கறிஞர் மூலம் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில் வழக்கறிஞர் கூறியிருப்பது என்ன?

ஐஸ்வர்யாராய் பற்றியும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் ஊடகங்களில் வெளியான செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை. பொய்யானவை. இனியும் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் சம்பந்தப்பட்டவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். மாறாக அவரை பற்றி அவது£றாக செய்தி வெளியிட்டால் வெளியிடுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். தன் திருமணத்திற்கு பிறகும் அவர் நடித்து வருகிறார். அவர் ஒரு நாடறிந்த நட்சத்திரம் என்பதோடு மட்டுமின்றி நமது கலாசாரப்படி ஒரு மகளாகவும், மனைவியாகவும் மருமகளாகவும் இருந்து இந்திய சமூகத்தின் மதிப்புகளை பின்பற்றி வருகிறார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆஹா... பூவுக்குள் பூகம்பம்!

> கூகிள் குரோம் தெரியும் , அன்குரோம் (Unchrome) தெரியுமா?

அண்மையில் இணையத்தில் பிரவுஸ் செய்து கொண்டிருந்த போது வித்தியாசமான புரோகிராம் ஒன்றைச் சந்திக்க நேர்ந்தது. அதன் பெயர் Unchrome. கூகுளின் குரோம் பிரவுசர் தொகுப்பினைப் பிடிக்காத யாரோ இதனை வடிவமைத்து வழங்கியது போல் முதலில் தோன்றியது. ஆனால் இந்த தொகுப்பு செயல்படுவதற்கான காரணங்களைப் படித்த போது இதுவும் சரிதான் என்று எண்ணத் தோன்றியது.

கூகுள் தந்துள்ள குரோம் பிரவுசர் தற்போதைக்கு இயங்கும் பிரவுசர்களில் மிகவும் வேக மாக இயங்கும் பிரவுசர் தான். பல புதிய வசதிகளையும் இது தந்துள்ளது என்பதுவும் உண்மையே. ஆனால் இந்த பிரவுசர் நம்மைப் பற்றி பல பெர்சனல் தகவல்களைப் பெற்றுக் கொள்கிறது. இதனை கூகுள் பாதுகாப்பாக பயன்படுத்துமா என்று சந்தேகம் வந்ததாலேயே இந்த புரோ கிராம் எழுதப்பட்டிருக்கிறது என்று தெரிய வருகிறது. கூகுள் அதன் வாடிக்கையாளர்களை அது தந்துள்ள அடையாள எண் மூலம் தான் யார் எனத் தெரிந்து கொள்கிறது. இந்த புரோகிராமைப் பயன் படுத்துகையில் அந்த அடை யாள எண்ணை அழித்து விடு கிறது. இதனால் நம் பெர்சனல் தகவல்கள் கூகுள் நிறுவனத் திற்குக் கிடைக்காமல் போய் விடுகிறது என்று இதனை அமைத்தவர்கள் கூறுகின்றனர்.

உங்களுக்கும் இதே போன்று சந்தேகம் வந்து கூகுளில் உள்ள உங்கள் அடையாள எண்ணை நீக்க வேண்டும் என்றால் கீழ்க் காணும் முறையில் செயல்படவும்.

1. முதலில் குரோம் பிரவுசர் இயங்கிக் கொண்டிருந்தால் அதனை நிறுத்தவும். பின் வேறு ஒரு பிரவுசர் மூலம் http://www.abelssoft.net/unchrome.exe என்ற முகவரிக் குச் செல்லவும்.

2. இங்கு கிடைக்கும் UnChrome சாப்ட்வேர் தொகுப்பினை டவுண்லோட் செய்திடவும். இதனை அப்படியே இயக் கலாம். அல்லது சேவ் செய்து வைக்கலாம்.

3. இயக்கத் தொடங்கினால் ஒரு ஸ்கிரீன் கிடைக்கும்.


4. பின் Remove Unique ID Nowஎன்ற இடத்தில் கிளிக் செய்திடவும். பின் ஓகே அழுத்தி வெளியேறவும். இதற்கு முன் குரோம் பிரவுசர் மூடப் பட்டிருக்க வேண்டும் என் பதனை நினைவில் கொள்க.

5. அடுத்து உங்கள் கம்ப்யூட்டர் திரையில் கீழ்க்காணும் காட்சி கிடைக்கும்.


6. இனி என்ன? குரோம் பிரவுசரை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம். ஆனால் அந்த பிரவுசரால் உங்களை அடையாளம் காண முடியாது. ( அதாவது அனானியாக பயன்படுத்தலாம்) அவ்வளவே என்று இந்த அன்குரோம் தளத் தில் கூறப்பட்டுள்ளது.



எழுதியவர் : கார்த்திக்

Thursday, July 23, 2009

> பெர்சனல் கம்ப்யூட்டிங்கில் மாற்றத்தினை ஏற்படுத்துமா கூகிள்?

சென்ற ஜூலை 7ல் தன் வலைமனையில் பெர்சனல் கம்ப்யூட்டருக்கான குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தர இருப்பதாக கூகுள் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. கூகுள் பிரவுசர் போல இது வேகமாகவும் எளிமையாகவும் இயங்கும் என்றும்,இந்த ஓ.எஸ். பைல் அளவில் சிறியதாக இருக்கும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. குரோம் என்ற பெயரில் இது வரலாம். இணைய தளப் பயன்பாட்டை மையப்படுத்தி இது வடிவமைக்கப்படுகிறது. விண்டோஸ், மேக் ஓ.எஸ்., பலவகையான லினக்ஸ் ஓ.எஸ், ஏன் தன் ஆண்ட்ராய்ட் ஓ.எஸ். ஆகிய அனைத்தைக் காட்டிலும் சிறப்பான ஆப்பரேட்டிங் சிஸ்டமாகத் தன் குரோம் ஓ.எஸ். இருக்கும் என கூகுள் அறிவித்துள்ளது. குரோம் பிரவுசர் அறிமுகப்படுத்தப்பட்டு ஒன்பது மாதங்கள் கழித்து இந்த அறிவிப்பை கூகுள் வெளியிட்டுள்ளது. குரோம் பிரவுசரை 3 கோடிப் பேர் தொடர்ந்து பயன்படுத்தி வருவது கூகுள் நிறுவனத்தின் பொறியாளர்களுக்கு நம்பிக்கையைத் தந்துள்ளது.

முதலில் தற்போது பெருகிவரும் நெட்புக் கம்ப்யூட்டர்களுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வெளியிட கூகுள் திட்டமிடுகிறது. 2010 ஆம் ஆண்டின் இரண்டாவது பகுதியில் இது வெளியிடப்படலாம். நெட்புக் கம்ப்யூட்டர்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுடன் இதற்கான ஒப்பந்தத்தினை மேற்கொள்ளும் முயற்சியில் கூகுள் ஈடுபட்டுள்ளது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் முழுவதும் ஓப்பன் சோர்ஸ் முறையில் அமையும். இதற்கான கோடிங் குறியீடுகளை கூகுள் விரைவில் வெளியிடும். குரோம் ஓ.எஸ். எக்ஸ் 86 மற்றும் ஏ.ஆர்.எம். (x86 & ARM) சிப்களில் இயங்கும்.

இந்த முயற்சி மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குச் சரியான போட்டியாக அமையும். ஏற்கனவே கம்ப்யூட்டரில் தகவல் தேடுவதற்கான சர்ச் இஞ்சின் புரோகிராம்கள், வெப் மெயில், பிரவுசர், மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனப் பல துறைகளில் இரண்டு நிறுவனங்களுக்கிடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. இதனால் தான் மைக்ரோசாப்ட் தன் விண் டோஸ் 7 ஆப்பரேட் டிங் சிஸ்டத்தினை நெட்புக் கம்ப்யூட்டருக்காகவும் உருவாக்கி வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை சவாலுக்கு இழுப்பதில் கூகுளின் வர இருக்கும் குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான் முதல் முதலில் வந்தது என்று சொல்வதற்கில்லை. ஏற்கனவே லினக்ஸ் வந்தது. ஆனால் லினக்ஸில் இல்லாதது குரோம் பிரவுசரில் இருக்கும். அதுதான் இணைய தளப் பயன்பாட்டினை ஒட்டிய செயல்பாடு. அந்த வழியில் குரோம் மைக்ரோசாப்ட் சிஸ்டத்தை மிஞ்சலாம்.


ஆனால் மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடிப்படையில் பல பயனுள்ள அப்ளிகேஷன் புரோகிராம்கள் இயங்கி வருகின்றன. எடுத்துக் காட்டாக எம்.எஸ். ஆபீஸ் மற்றும் அடோப் புரோகிராம்களைக் கூறலாம் இந்த அப்ளிகேஷன் புரோகிராம்கள் தரும் பயன்பாட்டினை புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் அளிக்குமா? அதனை ஒட்டி புதிய புரோகிராம் தொகுப்புகள் எழுதப்படுமா? என்பது கேள்விக் குறியே. இது குறித்து கூகுள் நிறுவனத்தில் துணைத் தலைவராகப் பணியாற்றும் சுந்தர் பிச்சை குறிப்பிடுகையில் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் இன்டர்நெட் வழிதான் தங்கள் செயல்பாட்டினை மேற்கொள்கிறார்கள். எனவே அதன் அடிப்படையில் குரோம் ஓ.எஸ். ஒரு வெப் அடிப்படையிலான ஓ.எஸ். ஆக இருக்கும் என்றார்.

இணைய இணைப்பிலேயே அனைத்து அப்ளிகேஷன்களும் கிடைக்கும். அதாவது எம்.எஸ். ஆபீஸ் மற்றும் அடோப் போன்ற புரோகிராம் பயன்பாடுகளை இணைய தளம் சென்று அங்குள்ள இது போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தி நம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். இதற்கெனத் தனியே அப்ளிகேஷன் புரோகிராம்களை காசு கொடுத்து வாங்கிப் பதிய வேண்டியதில்லை. மக்கள் உடனே இந்த நிலைக்கு மாற மாட்டார்கள். ஆனால் படிப்படியாய் மாறுவார்கள் என்று கூகுள் எதிர்பார்க்கிறது. அண்மைக் காலத்தில் இன்டர்நெட் என்பது அப்ளிகேஷன் புரோகிராம்களுக்கான ஒரு தளமாக மாறி வருகிறது. யாஹூ, கூகுள், பேஸ்புக், மை ஸ்பேஸ் ஆகியவற்றை மக்கள் அதிகமாகப் பயன்படுத்துவது இதனை உறுதி செய்கிறது. எனவே தான் கூகுள் வெப் அடிப்படையிலான ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்கித் தர இருக்கிறது. ஆனால் இதிலும் பல பிரச்சினைகள் உள்ளன. நம் கம்ப்யூட்டரில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதில் உள்ள ஹார்ட்வேர் சாதனங்களைக் (வெப் கேமரா, டிவிடி ரைட்டர் போல) கையாள்வது போல வெப் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினால் கையாள முடியாது.

அடுத்து செயல்திறன். வெப் அடிப்படையிலான புரோகிராம்கள் எச்.டி.எம்.எல். மற்றும் சி.எஸ்.எஸ். (Cascading Style Sheets) ஜாவா ஸ்கிரிப்ட் போன்றவற்றின் அடிப்படையில் செயல்படுகின்றன. இதனால் தற்போது பெர்சனல் கம்ப்யூட்டரில் வைத்து செயல்படும் புரோகிராம்கள் போல இவை செயல்திறன் கொண்டிருக்காது. அடுத்த பிரச்சினை இன்டர்நெட் கனெக்ஷன். இன்டர்நெட் இல்லாத வெப் அப்ளிகேஷன்கள் நூல் இல்லாத தையல் மெஷின் மாதிரி. இன்றைக்கும், நவீன தகவல் தொலை தொடர்பு தொழில் நுட்பங்கள் வந்துவிட்ட போதிலும் இன்டர் நெட் தொடர்பினை நாம் உறுதியாக நம்பமுடியவில்லை.

ஓப்பன் சோர்ஸ் அடிப்படையில் செயல்பட பல்லாயிரக்கணக்கில் டெவலப்பர்கள் இருந்தாலும் இவர்களால் இப்போது நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் தரும் எளிமையையும் திறனையும் கொண்ட அனைத்து புரோகிராம்களையும் தர முடியுமா என்பது சந்தேகமே. ஆனால் கூகுள் அனைத்தையும் தன்னால் சமாளிக்க முடியும் என்றே எண்ணுகிறது. அதற்கான முயற்சிகளையும் வேகமாக எடுத்து வருகிறது. ஓ.எஸ். விவகாரத்தில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பெரிய போட்டியாளராக அதனைக் கருத முடியாது. ஆனால் எதிர்காலத்தில் இதனைச் சமாளிப்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குப் பெரிய தலைவலியாகத்தான் இருக்கும். கூகுள் இந்த முயற்சியில் சில தெளிவான இலக்குகளை வைத்துள்ளது. முதலாவதாக ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் சாதாரண மக்கள், கம்ப்யூட்டரைப் பயன்படுத்த எளிதானதாகவும் பாதுகாப்பு கொண்டதாகவும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் அந்த சிஸ்டம் பைல் சிறிய அளவிலும் இருக்க வேண்டும்.

ஒரே நேரத்தில் பல அப்ளிகேஷன்களைத் திறந்து இயக்கும் திறனை மையமாகக் கொண்டு விண்டோஸ் வந்தது. கூகுள் இந்த விண்டோஸ் செயல்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு புதிய விண்டோஸ் முறையைக் கொண்டு வர முயற்சிக்கிறது. வெப்– 2 சகாப்தம் என புதிய எழுச்சியில் எச்.டி.எம்.எல். 5 அடிப்படையில் அனைத்தும் இருக்க முடியும் என கூகுள் நம்புகிறது. இது ஒன்றும் முடியாதது அல்ல. ஏற்கனவே பாம் (Palm) இதனை முயற்சித்துப் பார்த்து வருகிறது. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. கூகுளின் இலக்குகள் எல்லையற்றவை. பெர்சனல் கம்ப்யூட்டிங் செயல்பாட்டில் பெரிய மாற்றத்தினைக் கொண்டுவர அது முயற்சிக்கிறது.

கூகுள் எதனையும் செய்திட முடியும் என்ற இலட்சியத்தைக் கொண்டது. எனவே இதன் இலக்குகளை நிச்சயம் கூகுள் எட்டும் என எதிர்பார்ப்போம்.

மேலும் தகவல்களுக்கு : இங்கே கிளிக் செய்யவும்

எழுதியவர் : கார்த்திக்

> சபாஷ் என பாராட்டிய ரஜினி ரஜினியின் குறும்படம்!

சூப்பர்ஸ்டார் ரஜினியைப் பற்றிய ஒரு குறும்படத்தை "தலைவர்" என்ற பெயரிலேயே தயாரித்துள்ளார் சென்னை முகப்பேரைச் சேர்ந்த கார்த்திக் என்னும் பொறியியல் பட்டதாரி.

சிறு வயதில் இருந்தே ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக், ரஜினியின் நற்பணிகள், மேடைப்பேச்சுகள், திரைப்படக் காட்சிகள், அரசியல் குறித்த எதிர்பார்ப்புக்கள் போன்ற அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு குறும்படத்தை தயாரிக்க வேண்டும் என்ற தணியாத ஆசையுடன் இம்முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

ரஜினியின் ஒப்புதலைப் பெற்று தயாரிக்கப்பட்ட இக்குறும்படம், அவராலேயே சில திருத்தங்களும் செய்யப்பட்டு தற்போது முழுவடிவம் பெற்றுள்ளது. சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடும் இக்குறும்படத்தில் சாதாரணமாகத் தொடங்கிய ரஜினியின் இளமைக்காலம் முதல் அவர் சினிமாவில் நுழைந்து சூப்பர்ஸ்டார் ஆனது வரையிலான வாழ்க்கை சம்பவங்கள், ரஜினி அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்பது போன்ற விவாதங்கள், சோ போன்றோரின் பேட்டிகள் இடம் பெற்றுள்ளன.

நேற்று இந்த குறும்படத்தை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டப அலுவலகத்தில் நடிகர் ரஜினியே தன் கரங்களால் வெளியிட்டார். எளிமையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குறும்பட தயாரிப்பாளர் கவின் கார்த்திக், ரஜினி ரசிகர் தலைமை மன்ற நிர்வாகி ராமதாஸ், நிர்வாகிகள் அண்ணாநகர் மு. ரஜினிடில்லி, ஷெனாய் நகர் ஸ்ரீகாந்த், டி. தாமஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது குறும்படம் தயாரித்த ரசிகர்களின் முயற்சியை ரஜினி மனம்விட்டுப் பாராட்டினார். மேலும் இதற்காக மேற்கொள்ளப்பட்ட வழி முறைகள், சந்தித்த சிரமங்களைப் பற்றி கேட்டறிந்த ரஜினி, இந்த முயற்சி நிச்சயம் வெற்றி அடைவதற்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைக் கூறினார்.

இதைப்பற்றி தயாரிப்பாளர் கார்த்திக் கூறும்போது, " இந்தக் குறும்படத்தை தயாரிக்க ஐந்து மாதங்கள் ஆனது. ரஜினி சார் இதைப் பார்த்து விட்டு “ரொம்ப நல்லா பண்ணியிருக்கீங்க, நான் நடிச்சசீனை எனக்கே போட்டு காட்டுறீங்க சபாஷ்” என்று சிரித்துக்கொண்டே கூறினார். அந்த பாராட்டு எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியையும் நிறைவையும் தந்தது" என்று குறிப்பிட்டார்.

ரஜினி படங்களில் இடம் பெற்ற பின்னணி இசையை பயன்படுத்தியுள்ள இக்குறும்படத்திற்கு அரவிந்த் எடிட்டிங் செய்துள்ளார். அடுத்த மாதம் இந்த குறும்பட டி.வி.டி.க்கள் சந்தைக்கு வரும்.

Wednesday, July 22, 2009

> கேரளத்து பைங்கிளி

நடிகர் முத்துராமன் மகன் கார்த்திக்-நடிகை அம்பிகா தங்கை ராதா என்ற அடையாளங்களோடு பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படம் வந்தது.

எண்பதுகளில் தமிழ் சினிமாவில்நம்பர்-1 கதாநாயகியாக இருந்தார் ராதா. கார்த்திக்கும் முன்னணி நடிகராக இருந்தார்.

மும்பையில் ஓட்டல் நடத்தி வரும் ராஜசேகரன் நாயர் என்ற மணியை திருமணம் செய்துகொண்ட ராதாவுக்கு மூன்று மகள்கள். மூத்த மகள் கார்த்திகா.

கார்த்திகாவையும்-கார்த்திக் மகனையும் வைத்து படம் எடுத்துவிட வேண்டும் தமிழ்சினிமாவில் நிறைய பேர் முயற்சித்தனர்.

இவ்விருவரையும் வைத்து மணிரத்னம் இயக்கப்போவதாகவும் செய்திகள் வந்தன.

ஆனால், ராதா மகள் `ஜோஷ்' என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகியிருக்கிறார். இவருக்கு ஜோடியாக, நாக சைதன்யா அறிமுகம் ஆகிறார். இவர், பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன்.

நாகர்ஜூனுடன் ராதா ஜோடியாக நடித்திருக்கிறார். அவர் மகனுடன் இப்போ ராதா மகள் ஜோடி சேர்ந்திருக்கிறார்.

அடுத்து தமிழ் சினிமாவிற்கு வரவிருக்கிறார் கார்த்திகா. கேரளத்து பைங்கிளி என்று தமிழ்சினிமா ரசிகர்கள் ராதாவை அழைத்து வந்தார்கள்.

வரப்போகிறார் ஜூனியர் கேரளத்து பைங்கிளி!

Tuesday, July 21, 2009

> தேவயானி மீது சுந்தர்.சி. தாக்கு

தேவயானி, குஷ்பு தயாரிப்பில் அர்ஜூன் நடித்த கிரி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இப்போது மீண்டும் குஷ்பு தயாரிப்பில் சுந்தர்.சி. நடித்திருக்கும் படம் ஐந்தாம் படை படத்தில் தேவயானி முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இது பற்றி சுந்தர்.சி, ‘’கிரி படத்தில் நடிப்பதற்காக தேவயானியிடம் என் மேனேஜர் கேட்டபோது அவர் சம்பளம் வேண்டாம்..சும்மா நடித்து தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

தான் எடுத்த காதலுடன் படம் படு தோல்வியடைந்தவிட்டது. மிகுந்த பண/மன நெருக்கடியில் இருக்கிறேன். குஷ்புவுக்கும் இப்படித்தான் ஆகும். அதனால் அவர் சுமையை கொஞ்சம் குறைக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால் அவர் எதிர்பார்க்காதபடி படம் ஹீட்.

இப்போ இந்த படத்துக்காக அவரை புக் பண்ணும் போது, ’’நீங்க படம் எடுத்து நஷ்டப்பட்டா அதுக்காக எல்லாரும் நஷ்டப்படுவாங்கன்னு அர்த்தமாகுமா என்று கேட்டேன். அவரால் எதுவும் சொல்லமுடியவில்லை’’என்றார்.

> கமல் பொண்ணோட வருத்தம்

லக் இந்தி சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகும் கமல் பொண்ணு ஸ்ருதிஹாசன் ரொம்ப சந்தோசத்தில் இருக்கிறார்.

’’இம்ரான்கானுக்கு ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தில் மிதுன்சக்ரவர்த்தியும், சஞ்யத்தத்தும் நடித்திருக்கிறார்கள்.

இவங்கூட நான் நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கல. சந்தோசம்னா சந்தோசம் அப்டி ஒரு சந்தோசம்’’என்கிறார்.

அதே நேரத்துல, ‘’எனக்கு இப்போ பெரிய வருத்தம் ஒன்னும் இருக்கு’’என்கிறார்.

’’வர்ற 29ம் தேதி சென்னை நேரு அரங்கத்துல மைக்கேல் ஜாக்சன் நினைவு நிகழ்ச்சி நடக்குது. அப்பா, ஏ.ஆர்.ரகுமான் சார் எல்லோரும் கலந்துக்கறாங்க. நானும் இந்த நிகழ்ச்சியுல் கலந்துக்கறதா இருந்துச்சு.

இப்போ அந்த நிகழ்ச்சியில கலந்துக்க முடியல. ரொம்ப வருத்தாம இருக்கு’’என்கிறார்.

சந்தோசம்...வருத்தம்....எல்லாம் சொன்னீங்க. ஜாக்சன் பங்சனில் ஏன் கலந்துகொள்ள முடியவில்லைன்னு சொல்லலையே அம்மணி.

> புடிக்கல-சிம்பு:புடிச்சிருக்கு-கமல் பொண்ணு: புரியல-விவேக்,பார்த்திபன்

உலகப் புகழ் பெற்ற கதாபாத்திரமான ஹாரி பாட்டர், ஹாரி பாட்டர் அன்ட் தி ஹாப்-பிளாட் பிரின்ஸ் என்ற பெயரில் திரைப்படமாக அண்மையில் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது.

இந்தியாவில் மட்டும் ஆங்கிலத்தில் 75, ஹிந்தியில் 180, தெலுங்கில் 40, தமிழில் 50 பிரிண்ட்கள் போடப்பட்டுள்ளன.

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ், தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம், திரையிடப்பட்ட முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 520 கோடியை அள்ளி இருக்கிறது. இந்தியாவிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

சென்னை சத்யம் திரையரங்கத்தில் இப்படத்தின் பிரத்யேக காட்சியிக்கு தமிழ் திரை நட்சத்திர கூட்டம் வந்திருந்தனர்.
இப்படம் முடிந்து வெளியே வந்ததும் கவுதமியுடன் வந்திருந்த கமல் இளையமகள், படம் ரொம்ப புடிச்சிருக்கு. எண்டர்டெய்ன்மெண்ட்டா இருக்கு என்றார்.

ஆனால் சிம்புவோ, படம் எனக்கு புடிக்கல. எபெக்ட்ஸ் நல்லாயிருக்கு. மற்றபடி படத்துல ஒரு எண்டர்யென்மெண்ட்டே இல்ல என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

இதில் ஆர்.பார்த்திபனும், விவேக்கும் சொன்ன கருத்துதான் செம காமெடியாக இருந்துச்சு.

அப்படி அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா.

‘புரியல...படம் சுத்தமா புரியல....அதனால அதப்பத்தி என்ன சொல்றதுன்னு தெரியல’.

> யு.எஸ்.பி.சேப்லி ரிமூவ் ( USB Safely Remove )

விண்டோஸ் சிஸ்டத்திலேயே யு.எஸ்.பி. போர்ட்களில் இணைக்கப்படும் சாதனங்களை எடுத்திட சேப்லி ரிமூவ் வசதி தரப்பட்டுள்ளது. இருப்பினும் பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் இதற்கென வடிவமைக்கப்பட்டு நமக்கு இணையத்தில் கிடைக்கின்றன.USB Safely Remove என்ற அந்த புரோகிராமின் புதிய பதிப்பு 4.1 தற்போது வெளியாகியுள்ளது.

இதில் என்ன புதிதாய் இருக்கிறது என்று பார்க்கலாமா!

1. இந்த புரோகிராமில் இருந்த ஆட்டோ ரன் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. எந்த சாதனத்தை யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்தாலும் அதில் உள்ள தேர்ட் பார்ட்டி புரோகிராம் ஒன்றினை இயக்கும் வகையில் செட் செய்திடலாம். இதனைப் பயன்படுத்தி எக்ஸ்புளோரர் புரோகிராமினை இயக்கலாம். அல்லது பைல் மேனேஜரை இயக்கி என்ன என்ன பைல்கள் இருக்கின்றன எனப்பார்க்கலாம்.

2. யு.எஸ்.பி.யில் இணைக்கப்பட்டுள்ள சாதனத்தை நீக்கும் முன் அதில் உள்ள பைல்களை ஆட்டோ பேக் அப் எடுக்கும் வகையில் செட் செய்திடலாம்.

3. எக்ஸ்டெர்னல் டிரைவ் என்றால் அதனை இணைக்கும்போதே ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சோதனை செய்திடும் படி அமைக்கலாம். இதே போல பல செயல்பாடுகளை செட் செய்திடலாம்.


யு.எஸ்.பி.யில் இணைத்த சாதனம் எந்நிலையில் உள்ளது என்று அறிய பல்வேறு ஐகான்கள் காட்டப்படுகின்றன. இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் அனைத்தும் இயக்கத்தில் உள்ளனவா என்று காட்டப்படும். போர்ட்டில் சாதனங்களே இல்லை என்றாலும் ஐகான் மூலம் தெரிந்து கொள்ளலாம். இணைக்கப்பட்ட ஒரு சாதனத்தின் இயக்கம் நிறுத்தப்பட்ட பின்னர் அது நீக்கப்படவில்லை என்றால் காட்டப்படும். இதன் பயன்பாடுகள் குறித்து மேலும் அறிய மேலே தரப்பட்டுள்ள இணைய தளத்தினையே காணவும்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

பிரதான தளம் : இங்கே கிளிக் செய்யவும்

எழுதியவர் : கார்த்திக்

Monday, July 20, 2009

> இந்திக்கு போகும் நயன்? சூடுபிடிக்குது போட்டி!

வெறிச்சுன்னு கிடக்குது வேடந்தாங்கல். அசின், த்ரிஷா, ரெண்டு பேரும் இந்திக்கு போயிட்டாங்க. ஸ்ரேயா, ரீமாசென் என்ற அடுத்த லெவல் அழகிகள், கிட்டதட்ட அலுத்துப் போய்விட்டார்கள். இந்த நிலையில் ஒண்ணே ஒன்ணு, கண்ணே கண்ணு என்றிருந்த நயன்தாராவையும் இந்திக்கு கொண்டு போக போகிறாராம் பிரபுதேவா.

வெறும் நடிகரா தமிழ் நாட்டில் மட்டும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த பிரபுதேவா, இயக்குனர் ஆனதும் "தென்னாடுடைய தலைவா போற்றி"ன்னு அவரது புகழ்பாட ஆரம்பிச்சிட்டாங்க ரசிகர்கள். அப்படியே வடநாட்டையும் வளைத்து போட்டு தமிழ், தெலுங்கு, இந்தி என்று மும்மொழி வேந்தன் ஆகிவிட்டார் பிரபுதேவா. தற்போது இவர் நடித்து வரும் 'களவாடிய பொழுதுகள்' படத்தை முடித்துவிட்டு சல்மான்கான் நடிக்கும் இந்திபடம் ஒன்றை இயக்கப்போகிறாராம்.

இவர் இந்திக்கு போவது தெரிந்தேதான் பிரபுதேவாவை தன் வலையில் வீழ்த்தினார் நயன்தாரா என்றும் கிசுகிசுக்கிறார்கள். அசின், த்ரிஷா என்று தனது போட்டியாளர்கள் அங்கே போய்விட்டதால் சற்று போரடித்துப் போயிருந்தார் நயன். மார்க்கெட்டில் முன்னணியில் இருந்தாலும் தமன்னாவெல்லாம் தனக்கொரு போட்டியா என்று யோசித்திருப்பார் போலும். அசின், த்ரிஷாவை தேடிப் போய் 'தில்' காட்ட முயற்சி செய்திருக்கிறார்.

இப்படி எல்லா 'பபுள்கம்'களையும் ஏற்றுமதி செய்துவிட்டு வெறும் வாயை மெல்லப் போகிறான் தமிழன்!

> ஸ்ரேயா செய்த பரவச கலகல...

ஸ்ரேயாவை பார்க்கும் போதெல்லாம் ஒருவித பரவச நிலைக்கு செல்கிறார்கள் ரசிகர்கள். ஆனால், ஸ்ரேயாவோ எல்லாம் வல்ல இறைவனை தேடிப்போய் பரவசத்தை பெறுவதில் தீவிரமாக இருக்கிறார். வெள்ளியங்கிரி மலைக்கு போய் தியான லிங்கத்தை தரிசித்து வந்தவர், கடந்த சில தினங்களுக்கு முன் திருப்பதி சென்றிருந்தார். அதிகாலையில் சுப்ரபாத தரிசனத்தை முடித்துவிட்டு கிளம்பியவர், அப்படியே காளஹஸ்திக்கு சென்று மனமுருக வேண்டினார்.

கோவிலுக்கு போவதும், கும்பிட்டு தொழுவதும் கூட இயற்கைதான். ஸ்ரேயா செய்த இன்னொரு பூஜைதான் என்னவோ, ஏதோ என்று புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது. காளஹஸ்தி கோவில் நாக சர்ப தோஷம் உள்ளவர்களுக்கு விசேஷமானது. திருமணம் தள்ளி போகிறதே என்று கவலைப்படுகிறவர்களை இங்கே அனுப்பி சர்பதோஷ பரிகாரம் செய்ய சொல்வது பண்டிதர்களின் வழக்கம்.

இங்கு வந்த ஸ்ரேயா, இந்த நாக சர்ப தோஷ பிரார்த்தனையும், அதற்கான நிவாரண பூஜையும் செய்தாராம். ஒருவேளை ஸ்ரேயாவுக்கு கல்யாண ஆசை வந்திருச்சோ என்னவோ? அது போகட்டும்... இவர் வந்திருப்பதை அறிந்த திருவாளர் பொதுஜனம், விழுந்தடித்துக் கொண்டு கோவிலுக்குள் நுழைய முயல, போலீஸ் வந்து காப்பாற்றியதாம் ஸ்ரேயாவை.

Saturday, July 18, 2009

> ஸ்ருதி கமல் கோடம்பாக்கத்தினருக்கு காட்டிய ஷோ !

ஸ்ருதி கமல் நடித்திருக்கும் லக் படத்திற்காக வட இந்தியாவும், தென் இந்தியாவும் வெயிட்டிங். உலக நாயகன் பொண்ணு நடிச்ச படமாச்சே, எப்படி வந்திருக்கு? என்று பார்க்கிற ஆசைதான் தென்னாட்டிற்கு. இவங்களை அதிகம் காக்க வைக்க விரும்பாத ஸ்ருதி, தனது செலவிலேயே படத்தை திரையிட்டார். இது நம்ம மாதிரி பொது சனங்களுக்கான ஷோ இல்லே. கோடம்பாக்கத்தின் விவிஐபிகளுக்கான ஷோ!

ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கத்திற்கு தனது தோழிகள் சகிதம் மாலை ஏழு மணிக்கெல்லாம் வந்துவிட்ட ஸ்ருதி, யார் யாருக்கோ போன் போட்டு கிளம்பியாச்சா என்று விசாரித்துக் கொண்டிருந்தார். கவுதம் மேனன், பிரியதர்ஷன் போன்ற இயக்குனர்கள் உள்ளிட்ட பலரும் வந்துவிட்ட நிலையிலும், யாரையோ எதிர்பார்த்து அடிக்கடி வாட்சை பார்த்துக் கொண்டேயிருந்தார் ஸ்ருதி.

சில நிமிடங்கள் கழித்து ஆறாம் நம்பர் கருப்பு காரில் ஜோராக வந்திறங்கினார் சிம்பு. வந்தாச்சு வந்தாச்சு என்ற பரபரப்புக்கு நடுவில் தியேட்டருக்குள் போனார் சிம்பு. அடுத்த இரண்டாவது செகண்ட்டில் படம் ஆரம்பம். வெளியே வந்தவர்களிடம் விசாரித்தோம். படம் எப்படி?

சூப்பர்! அப்பாவால் அடைய முடியாத இந்தி பட சாம்ராஜ்யத்தை அவரோட பொண்ணு ஒரே படத்தில் பிடிச்சிரும் போலிருக்கு! என்றார்கள். நமக்குன்னே எழுதி வச்ச பழைய மொழிய தூசு தட்டி சொல்லிர வேண்டியதுதான். குட்டி பதினாறு அடி!

> இளமை தரும் ஆரஞ்சு பழச்சாறு

என்றும் இளமையுடன் வாழ எவருக்குத்தான் ஆசை இருக்காது. தற்போது 20 வயது இளைஞன் கூட நாற்பது வயது அடைந்தவன் போல் காட்சி அளிக்கிறார்கள். தலைமுடி நரைக்கிறது. தோலில் சுருக்கம் ஏற்படுகிறது. கண்கள் குழிவிழுந்து காணப்படுகின்றன. நல்ல திடகாத்திரமான இளைஞர்களை இன்று காணமுடியவில்லை. இதற்குக் காரணம் இராசயனம் கலந்த உணவுகள், அரைவேக்காட்டு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள், சத்தற்ற உணவுகள், உடலுக்குத்தேவையான உடற்பயிற்சி இல்லாமை போன்றவையே.

இன்றைய மாணவ சமுதாயத்திற்கு கல்விச் சாலைகள் சிறைச்சாலைகளாக உள்ளன. பாடத்திட்டம் அனைத்தும் மூளை சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி, விளையாட்டு என்பதே இல்லை. மேலும் வீட்டிற்கு வரும் குழந்தைகளை கட்டாயப்படுத்தி சிறப்பு வகுப்புக்கு அனுப்புகிறார்கள். இதுபோல் விடுமுறை நாட்கள் பெரும்பாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே கழிந்துவிடுகின்றன. அடுத்த தெருவிற்கு செல்லவேண்டும் என்றாலும் வாகனத்தில்தான் செல்கிறோம். நடை என்பது பலருக்கு நோயின் தாக்கத்திற்குப் பிறகுதான் தெரியவரும்.

இப்படி சத்தற்ற உணவும், உடற்பயிற்சி யின்மையும் ஒரு மனிதனை முதுமையின் வாசலுக்கு எளிதில் அழைத்துச் செல்லும்.

உடற்பயிற்சி செய்வதுடன் உடலுக்குத் தேவையான சத்துக்களை நேரடியாகக் கொடுக்கும் பழங்களையும், பழச்சாறுகளையும் சாப்பிட்டு வந்தால் உடலை என்றும் இளமையாக வைத்திருக்கலாம்.

எங்கும் எப்போதும் கிடைக்கும் ஆரஞ்சு பழச் சாறின் மருத்துவக் குணங்களையும், அதன் சத்துக்களையும் அறிந்துகொள்வோம்.

சில உணவுகள் சாப்பிட்டதும் அவை உடலில் சில மாற்றங்களை உண்டுபண்ணி பித்த நீரை அதிகம் சுரக்கச் செய்கின்றன. இதனால் உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன.

இந்த பித்த நீர் இரத்தத்தில் கலந்து இரத்தத்தில் உள்ள இரும்புச் சத்துக்களை அழித்துவிடுகிறது. இதனால் இரத்தம் அசுத்தமடைகிறது. பித்த நீர் தலைக்கேறி கண் பார்வை நரம்புகளை பாதிப்படையச் செய்கிறது. மேலும் ஞாபக மறதி ஏற்படுகிறது. சருமம் பாதித்து சுருங்கச் செய்கிறது. தலைமுடி நரைக்கச் செய்கிறது. இதுபோல் இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகளை 300 கலோரி அளவு சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து இரத்தத்தை பரிசோதித்துப் பார்த்தால் பித்த நீர் அதிகம் சுரந்து இரத்தத்தில் கலந்திருப்பதை அண்மையில் கண்டறிந்துள்ளனர்.

இந்த பித்த நீர் அதிகம் சுரப்பதைத் தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று.

ஆரஞ்சு பழச்சாறு சாப்பிட்டவர்களின் இரத்தத்தில் பித்த நீரில் அளவு குறைவாக இருக்கிறது.

ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும்.

ஒரு சிலருக்கு திடீரென்று குடல் புண் தொண்டைப் புண் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் பிராய்லர் கோழி வறுவல், ஐஸ்கிரீம் மற்றும் கேக் வகைகளை அதிகமாக சாப்பிடுவதே. இதனால் உடல் சூடாகி வாயுக்கள் சீற்றமாகி புண்களை ஏற்படுத்துகிறது. சில சமயங்களில் இது புற்றுநோயாகக் கூட மாறலாம். இருதய நோய்களுக்கும் இந்த உணவு வகைகளே காரணமாகின்றன. இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடபட இந்த உணவுகளை தவிர்த்து தினமும் 150 மி.லி ஆரஞ்சு சாறை அருந்தி வரவேண்டும். இருமுறை கூட அருந்தலாம். ஆரஞ்சு பழத்தை தினமும் உண-வில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சியும் உடல் திசுக்களை புதுப்பிக்கின்றன.

ஆரஞ்சு பழச்சாறு நன்கு பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமானமாகாத உணவுகளை ஜீரணமாக்கும். கழிவுகள் உடனே வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். ஆரஞ்சுப் பழச்சாறை இரத்தம் உறிஞ்சிக் கொள்வதால் உடனடியாக உடலுக்கு வெப்பமும் சக்தியும் கிடைத்துவிடுகிறது.

நோயாளிகளுக்கும், தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கும் ஆரஞ்சுப் பழச்சாறை கொடுக்கலாம். கைக்குழந்தைகளுக்கு 50 முதல் 125 மிலி வரை கொடுக்கலாம்.

ஆரஞ்சு பழம் பல்சொத்தையை தடுக்கும். பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்துபோல் ஆரஞ்சிலும் கிடைக்கும்.

ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. ஜலதோஷம் உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்.

மேலும் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண் முதலியவை குணமாக 125 மிலி ஆரஞ்சு சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தி வந்தால் நுரையீரலில் உள்ள கோளாறுகள் நீங்கும்

நெஞ்சுவலி, இருதய நோய்கள், எலும்பு மெலிவு நோய்களையும் இதிலுள்ள சுண்ணாம்புச் சத்து குணப்படுத்தும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரஞ்சுப்பழம் கொடுத்து வந்தால் வாந்தி குணமாகும்.

ஆரஞ்சு பழச்சாறை இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

ஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக்களும் உள்ளடங்கியுள்ளது.

என்றும் இளமையுடன் வாழ ஆரஞ்சுப் பழச்சாறு மிகவும் அவசியம்.

Friday, July 17, 2009

> உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ரோபட்டுகள்

ரோபட்டுகள் எனப்படும் மனித எந்திரங் கள் தயாரிப்பில் விஞ்ஞானிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடினமான மற்றும் ஆபத்து நிறைந்த பணிகளில் மனிதர்களுக்கு பதிலாக ரோபட்டுகள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் ஜப்பானில் உள்ள வாசிடா பல்கலைக்கழகமும் கியூ சூ ரோபோ தயாரிப்பு நிறுவனமும் இணைந்து கோபியான் என்ற பெயரில் புதிய ரோபோக்களை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த ரக ரோபோக்கள் மனிதர்களைப்போல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை.

Thursday, July 16, 2009

> ஈ ஓட்டிய மீனா

எஜமான் படம் ரிலீசான நேரத்தில் காலேஜ், ஸ்கூல் கட் அடிக்கும் கூட்டம் அதிகமா இருந்துச்சு. அப்படத்தில் மீனா சாகும் வரை மட்டுமே இந்த கட் அடிக்குற கூட்டம் தியேட்டருக்குள் இருக்கும். மீனா இறந்து ஐஸ்வர்யா வந்து ஆஜராகுற நேரத்துல இந்த கூட்டம் காலேஜூக்குள் ஆஜராகிடும்.

எஜமான் படத்திற்கு முன்பு என் ராசாவின் மனசிலே படம் ஹிட் என்றாலும் இளசு கூட்டம் கட் அடிச்சுட்டு தியேட்டருக்கு போகுற அளவுக்கு இந்த எஜமான் படத்தில்தான் மீனாவின் அழகில் மெருகு கூடியிருந்தது .

10 வருடங்களுக்கு மேல் கோலோச்சிய இவர் தமிழ், தெலுங்கில் ஜோடி சேராத நடிகர்களே இல்லை. நடிகர்கள், இயக்குநர்கள்,அரசியல்வாதிகள் என்று இவரோடு முடிச்சிட்டு கிசுகிசுக்கப்பட்டவர்கள் ஏராளம்.

இப்படியெல்லாம் ஜொலித்த இந்த நட்சத்திரத்தின் திருமண வரவேற்பா என்று ஆச்சர்யப்பட்டுத்தான் போகவேண்டும். நட்சத்திரக்கூட்டங்கள் மொய்த்ததால் அல்ல. எங்கே நட்சத்திரங்கள் என்று தேடிக்கண்டுப்பிடிக்க வேண்டியதாயிருந்தது.

கலைஞரின் சார்பில் ராஜாத்தி அம்மாள், ரஜினியின் சார்பில் லதாரஜினி, விஜயாகாந்த்தின் சார்பில் எல்.கே.சுதீஷ், விஜய்யின் சார்பில் ஷோபாசந்திரசேகர் என்று சார்பில்....சார்பில்...கொஞ்சம் பேர் தலைகாட்டினார்கள்.

கமல்,சத்யராஜ், பிரபு, ஜெயம்ரவி, கார்த்தி,ஜீவா,குஷ்பு,பானுப்பிரியா, என்று கொஞ்சம் பேர் வந்திருந்தனர்.

ஆளே இல்லாத கடையில அப்படி யாருக்குடா டீ ஆத்துற.. உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையான்னு கேட்குற அளவுக்கு பாடகி மஹதி கர்நாடக சங்கீத கச்சேரி நடத்திக்கொண்டிருந்தாரார். காது கொடுத்து கேட்பார் யாருமில்லை என்பதை பற்றியெல்லாம் அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லை. பாடிக்கொண்டேயிருந்தார்.

அவர் பாடிய கர்நாடிக் சங்கீதத்தை .காட்டுக்கத்தலா இருக்குப்பா...என்று கமெண்ட் அடித்துக்கொண்டிருந்தார்கள்.

வந்தவர்களும் வாழ்த்திவிட்டு போய்விட்டதால் சாப்பாட்டுக்கு கூப்பாடு போட்டு அரங்கத்தில் இருந்தவர்கள் வந்து சாப்பிட்டார்கள். மீனாவும், கணவர் வித்யாசாகரும் மட்டும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள் நெடுநேரம்.

திரையுலகமே திரண்டு வந்திருக்க வேண்டிய ஒரு நிகழ்வு. ஆனா இப்படி ஓ’ன்னு கிடக்குன்னா இதுக்கெல்லாம் மீனா அம்மாதான் காரணம். யாருக்கும் சரியா பத்திரிக்கை கொடுக்காம விட்டுட்டாங்க. மீனா வற்புறுத்தலின் பேரில் சில பேருக்கும் மட்டும் கொடுத்திருக்காங்க.

சோர்ந்து போக வேண்டிய அளவுக்கு கிப்ட் வாங்க வேண்டிய மீனா கை, ஈ ஓட்டுற அளவுக்கு ஆனதுக்கு அவுங்க அம்மாதான் காரணம் என்று மீனாவின் நெருங்கிய வட்டாரம் முணுமுணுத்துக்கொண்டிருந்தது.

Tuesday, July 14, 2009

> பிரபுதேவா நிறைய சாதிக்கணும்! -கமல்ஹாசன் பேச்சு

நர்த்தனஷாலா! பிரபல நடன இயக்குனர் ரகுராம் புதிதாக துவங்கப் போகும் நாட்டியப்பள்ளி இது. இப்படி ஒரு பள்ளியை துவங்க வேண்டும் என்று முடிவெடுத்தவுடன் இந்த நல்ல காரியத்தை குத்துவிளக்கேற்றி துவங்கி வைக்க வருமாறு அழைத்திருந்தாராம் கமல்ஹாசன், பிரபுதேவா இருவரிடமும். நாங்கள் துள்ளி ஆடிய இடம் இது. எப்போ வேணுமோ சொல்லுங்க, வர்றோம் என்று இருவருமே ஆர்வம் காட்ட, 13ந் தேதி 12 மணிக்கு குது£கலத்துடன் குத்துவிளக்கேற்றினார்கள் இருவரும்.

நானும் ரகுராம் மாஸ்டரும் ஒன்றாகவே சுற்றுவோம். படிச்ச குடும்பத்திலிருந்து நாங்கள் வந்திருந்தாலும் எங்களுக்கு படிப்பு ஏறவே இல்லை. பள்ளிக்கூடத்துக்கு போறேன் என்று பனகல் பார்க்கிலே படுத்து கிடந்து விட்டு வீட்டுக்கு வருவார் ரகுராம். அப்படி ஒரு சிறந்த கல்வியாளர் அவர் என்று கமல் சொல்ல, அடக்க முடியாமல் சிரித்தார் ரகுராம். நானும் அவரும் டான்ஸ் மாஸ்டர்களாக சில படங்களில் வொர்க் பண்ணியிருக்கிறோம் என்ற கமல், பழைய நினைவுகளில் மூழ்கினார். பிரபுதேவாவின் அப்பா தன்ராஜ் மாஸ்டரிடமிருந்து நின்றதால்தான் நான் அந்த இடத்தில் வேலைக்கு சேர முடிந்தது.

பிரபுதேவாவிடம் ஏராளமான திறமைகள் இருக்கு. அவரை வீணடிச்சிட வேண்டாம். லண்டனுக்கு அனுப்பி படிக்க வைங்கள் என்றேன் அவரது அப்பாவிடம். ஆனால், இங்கிருந்தபடியே அங்குள்ள கலைகளை ஏகலைவன் மாதிரி கற்றுக் கொண்டிருக்கிறார் அவர். பிரபுதேவா சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு என்றார் கமல்.

என் பொண்ணு காயத்ரி ரகுராம், இந்த நாட்டியப்பள்ளியை அமெரிக்காவில் நடத்திட்டு இருக்காங்க. 150 மாணவர்கள் படிக்கிறாங்க. அதில் வெள்ளைக்காரர்களும் அடக்கம். அதே மாதிரி ஸ்கூல் இன்னும் நிறைய இடங்களில் திறக்கணும்னு ஆசை இருக்கு. அதையும் கமல்தான் வந்து திறந்து வைக்கணும் என்ற ரகுராம் மாஸ்டரின் ஆசைக்கு மேடையிலேயே ஒப்புதல் அளித்தார் கமல்.

> தலைமை ஏற்கிறாராம் ரஜினி ? சரத் பதில்!

ஒவ்வொரு முறை நடிகர் சங்கம் தொடர்பான எந்த விழா அறிவிப்பாக இருந்தாலும், ரஜினி கலந்து கொள்வாரா என்று கேள்வி கேட்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள் பத்திரிகையாளர்கள். இந்த முறையும் அது நடந்தது. ஆனால் முன்பு போல் மழுப்பல் பதிலாக இல்லாமல், வருவார் என்று அழுத்தமாக சொல்லி ஆர்வத்தை கிளப்பினார் நடிகர் சங்க தலைவர் சரத்குமார். நடிகர் சங்கம் சார்பாக நடக்கும் நாடகவிழாவில் ரஜினி கலந்து கொள்வாரா என்ற கேள்விக்குதான் சரத்குமாரின் இந்த “வருவார்” பதில்.

நடிகர் சங்க வரலாற்றிலேயே முதன்முறையாக போட்டியின்றி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல்முறை. இந்த தகவலை நிருபர்களிடம் பகிர்ந்து கொண்டார் சரத். நீண்டகாலமாக இழுபறியாக இருந்த பல விஷயங்கள் குறித்து ஆணித்தரமாக பதில் அளித்தார் அவர். நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி இம்முறை முழுமையாக நிறைவேற்றப்படும். சினிமாவுக்கு நாடகம்தான் அடிப்படை. தெருக்கூத்திலிருந்து நாடகம், நாடகத்திலிருந்து சினிமா. சினிமாவிலிருந்து டி.வி. இப்போது மீண்டும் நாடகம் என்று சுழற்சி நடைபெறுகிறது. அதை வலியுறுத்தும் வகையில் ஆகஸ்ட் 15 ந் தேதி முதல், 23 ந் தேதி வரை நாடக விழா நடைபெற உள்ளது என்றார் நடிகர் சங்க தலைவர்.

இந்த நாடகத்திற்கு தலைமை ஏற்கிறாராம் ரஜினி.

Monday, July 13, 2009

> ஷாம்லிக்கு அழைப்பு விடும் சிம்பு

போனால் போகட்டும் போடிங்கிற முடிவுக்கு வந்திருக்கிறார் சிம்பு. இது போடா போடி பற்றிய முடிவுதான். இதில் முதலில் நடிக்க ஒப்புக் கொண்ட வரலட்சுமி, இப்போது வராத லட்சுமியாகி விட்டார். ஆமாம், இந்த படத்திலிருந்து அவர் விலகிக் கொண்டாராம். மம்மா மியா ஷோவுக்கு கிடைத்த வரவேற்பு, அவரை முற்றிலும் அந்த திசைக்கு திருப்பிவிட்டது. அதுமட்டுமல்ல, போடா போடி பற்றிய ஒரு தெளிவான முடிவு சிம்புவுக்கே இல்லாதபோது எதை நம்பி, எப்போது கால்ஷீட் கொடுப்பது என்ற குழப்பமும்தான் வரலட்சுமியின் இந்த அதிரடிக்கு காரணம்.

இதற்கிடையில் அப்பா சரத்குமாரும், வரலட்சுமியின் சுதந்திரத்தில் குறுக்கே நிற்க விரும்பாததால், தைரியமாகவும், வெளிப்படையாகவும் சிம்புவிடம் சொல்லிவிட்டாராம் வரலட்சுமி. இதற்கிடையில், சிம்புவின் பார்வை ஷாம்லி மீது விழுந்திருக்கிறது. போடா போடியில் வரலட்சுமிக்கு பதிலாக ஷாம்லியை நடிக்க வைக்கலாமே என்று நினைக்கிறாராம்.

ஆனால் எதிர்முனையில் ஒரு ஆர்வமும் இல்லை என்கிறார்கள். சிம்பு படத்தை பற்றி மட்டுமல்ல, எந்த படத்தை பற்றியுமே. தெலுங்கில் இவர் நடித்த ஓய் ரிலீஸ் ஆகிவிட்டது. அங்கிருந்தே ஏராளமான அழைப்புகள் வருகிறதாம் ஷாம்லிக்கு. ஆனால், தெலுங்கு பட இயக்குனர்களுக்கும் உடனே ஓ.கே சொல்லாமல், தமிழ் பட இயக்குனர்களுக்கும் ஒரு முடிவை சொல்லாமல் காலம் கடத்துகிறார் ஷாம்லி. அவருக்கு நடிப்பின் மீதே ஆசை இல்லை என்றும் சொல்கிறார்கள்.

விரும்பி கேட்பவர்களுக்கு ஷாம்லி தரப்போவது வரமா? துறவரமா?

> காலநிலை மாற்றங்களுக்கேற்ப செல்போன்கள்

காலநிலை மாற்றங்களை உணர்த்தக் கூடிய வகையிலான விசேட செல்போன்களை சுவிட்சர்லாந்து அறிமுகம் செய்துள்ளது. குறித்த வகை செல்போன்களில் உள்ள ஜீ.பி.எஸ் முறையின் மூலம் காலநிலை மாற்றங்களை அறிந்துகொள்ள முடியும். பனிக்கட்டி உருகுதல், வெள்ள அபாயம் உள்ளிட்ட ஏழு வகையான காலநிலை மாற்றங்கள் குறித்து இந்த கையடக் கத் தொலைபேசிகளின் ஊடாக அறிந்து கொள்ள முடியும். குறிப்பாக வருடந்தோறும் சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்யும் ஆறு மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் நன்மை கருதி இந்த கருவி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பேர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் இந்த புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது

> சூரிய ஒளியில் புல்லட் ரயில்

சூரிய ஒளியை பயன்படுத்தி கிடைக்கும் சக்தியைக் கொண்டு ரயில்களை இயக்கும் ஆய்வு அமெரிக்காவில் உள்ள அரிசோனாவில் இருக்கும் சோலார் புல்லட் எல்.எல்.சி என்ற நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் சூரிய ஒளியில் இயங்கும் புல்லட் ரயில்களை தயாரிக்கும் ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக சிறப்பு தகடுகள் (சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் தகடுகள்) பொருத்தப்பட்ட கூரை அமைக்கப் படுகிறது. அதாவது ரயில் செல்லும் பாதை முழுவதும் இந்த சூரிய ஒளி தகடுகள் பொருத்தப் பட்டிருக்கும். இதில் இருந்து கிடைக்கும் மின் சாரத்தைக் கொண்டு ரயில்கள் இயக்கப்படும். மணிக்கு 220 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் இந்த புல்லட் ரயில் இருக்கும்.

Sunday, July 12, 2009

> பிரபுதேவா-சிம்பு: யாருடன் காதல்? நயன்தாரா

தமிழ் திரையுலகின் தற்போதைய சூடான விவாதம் நயன்தாரா-பிரபுதேவா காதல்தான். திருப்பதி கோவிலில் ரகசிய திருமணம், துபாயில் ஜோடியாக ஷாப்பிங், நயன்தாரா கையில் பிரபு என்ற பெயரில் பச்சை குத்தப்பட்டிருப்பது என தொடர்ந்து காதல் கிசுகிசுக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இருவருமே காதல் பற்றி பதில் சொல்லாமல் மவுனம் காத்தனர்

இப்போது முதல் தடவையாக நயன்தாரா இதுபற்றி கருத்து சொல்லி உள்ளார். ஐதராபாத்தில் அவர் அளித்த பரபரப்பான பேட்டி வருமாறு: யாரையும் காதலிக்கவில்லை, நான் நடித்துக் கொண்டிருக்கும் படங்களைத்தான் காதலிக்கிறேன். அவர் எனக்க நண்பர்தான்

நான் யாருக்கும் எதற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என்னைப் பற்றி வெளியாகும் வதந்திகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அதற்கான நேரமும் எனக்கு இல்லை. நான் பதில் சொல்ல வேண்டியது எனது பெற்றோருக்குத்தான். அவர்கள் என்மேல் நம்பிக்கை வைத்துள்ளனர். முழு சுதந்திரமும் கொடுத்து இருக்கிறார்கள். அதை வீணடிக்கமாட்டேன்ஒரு கதை பற்றி இருவரும் சந்தித்து விவாதித்தோம். வேறு எந்த காரணமும் இல்லை. சினிமாவுக்காக மட்டுமே நடந்த சந்திப்பு அது. நான் யாரையும் காதலிக்கவில்லை

ஆண்கள் நான் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்காகத்தான் அப்படி நடிக்கிறேன்

அந்த படத்தில் நடிக்க என்னை ஒப்பந்தம் செய்தனர். பிறகு நான் நடித்த சில படங்கள் வெற்றி பெறாததால் சம்பளத்தை குறைக்க சொன்னார்கள். மறுத்து விட்டேன். இதனால் என்னை விட குறைவான சம்பளம் வாங்கும் ஒரு நடிகையை தேர்வு செய்து நடிக்க வைத்தனர், இதில் தவறு ஏதும் இல்லை

Saturday, July 11, 2009

> பாதுகாப்பான இணைய பயன்பாட்டிற்கு 30 ஆலோசனைகள்

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் அன்றாடம் நாம் பயந்து கொண்டு தான் இருக்கிறோம். இன்டர்நெட் இணைப்பில் இருந்தால் நம்மை அறியாமலேயே ஏதாவது கெடுதல் விளைவிக்கும் புரோகிராம் வந்துவிடுமோ என்ற அச்சம். ஏதாவது புதிய சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்தால் அதனுடன் சேர்ந்து வரும் புரோகிராம் கம்ப்யூட்டரைக் கெடுத்துவிடுமோ என்ற பயம். இதற்காக இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் புதிய அப்ளிகேஷன் தொகுப்பு இல்லாமல் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த முடியுமா? முடியாது.

இருந்தாலும் இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாட்டில் எந்தவித அச்சமும் இன்றி செயல்படவும் வாய்ப்பு உள்ளது. இதற்கு சில டூல்ஸ் புரோகிராம்களை கம்ப்யூட்டரில் பதிந்து தொடர்ந்து சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட படி இருக்க வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்.

1. ஆன்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்கவும். அந்த புரோகிராமினை அவ்வப்போது அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

2. ஆன்டி ஸ்பைவேர்: ஒன்று அல்லது இரண்டு ஆன்டி ஸ்பைவேர் புரோகிராம்களைப் பதிந்து வைத்து இயக்க வேண்டும். பொதுவாக ஆன்டி வைரஸ் புரோகிராம்களுடன் இணைந்து இவை கிடைக்கும். மைக்ரோசாப்ட் விஸ்டாவுடன் விண்டோஸ் டிபன்டர் மற்றும் ஸ்பை ஸ்வீப்பர் புரோகிராம்களைத் தருகிறது.

3. இருவழி பயர்வால் தொகுப்பு ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். விஸ்டாவுடன் இது தரப்படுகிறது. மற்றவர்கள் ஸோன் அலார்ம் போன்ற பயர்வால்களைப் பயன்படுத்துவது நல்லது.

4. பயர்வால் ஒன்று போதும். இரண்டு இன்ஸ்டால் செய்தால் தலைவலிதான். அதே போல்தான் ஆன்டி வைரஸ் புரோகிராமும்.


5. ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான அப்டேட் பைல்கள் கம்ப்யூட்டரில் அமைந்திட அனுமதிக்க வேண்டும். பாதுகாப்பில் ஏற்படும் ஓட்டைகளை அவ்வப்போது கண்டறிந்து மைக்ரோசாப்ட் இவற்றின் மூலம் அடைத்து வருகிறது.

6. ரௌட்டர் இல்லாமல் பிராட்பேண்ட் கனெக்ஷன் வைத்துக் கொள்ளக் கூடாது. அது வயர்டு அல்லது வயர்லெஸ் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

7. ஒரு பைல் உங்களுக்கு வந்துள்ளதா? அல்லது நீங்களே கொண்டு வந்திருக்கிறீர்களா? அதில் வைரஸ் எதுவும் உள்ளதா என்று சந்தேகம் வருகிறதா? உங்கள் ஆன்டி வைரஸ் கொண்டு சோதிக்க பயமா? உடனே அதனை Virustotal.com என்ற தளத்திற்கு அனுப்பவும். அல்லது அட்டாச்மென்ட் scan@virustotal.com என்ற இமெயில் முகவரிக்கு ஸ்கேன் என்ற ஒரு வரிச் சொல்லை சப்ஜெக்டில் அமைத்து அனுப்பவும். உடனே 32 வகையான வைரஸ் சோதனை செய்து உங்களுக்கு ரிபோர்ட் கிடைக்கும்.

8. சிடியைப் போட்டால் ஆட்டோ ரன் மற்றும் ஆட்டோ பிளே செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறதா? அவற்றை நிரந்தரமாக நிறுத்தும் வழிகளை மேற்கொள்ளவும். ஆட்டோ ரன் நிறுத்த எக்ஸ்பி சிஸ்டத்தில் கை வைக்க வேண்டும். ஆட்டோ பிளே நிறுத்த ட்வீக் யு.ஐ. (Tweak UI) பயன்படுத்தலாம்.

9. விண்டோஸ் இயக்கத்தின் போது பல புரோகிராம்களை பின்புலத்தில் இயக்கிக் கொண்டு இருக்கும். விண்டோஸ் டாஸ்க் மேனேஜரைப் பயன்படுத்தி என்ன என்ன புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதன் மேல் ஒரு கண் இருக்க வேண்டும்.

10. வைரஸ் குறித்த எந்த கேள்விக்கும் சந்தேகத்திற்கும் மைக்ரோசாப்ட் பதில் அளிக்கத் தயாராய் இருக்கிறது. எனவே வைரஸ் பிரச்னை இருந்தால் உடனே தொடர்பு கொள்ளவும்

11. எண்களும் எழுத்துக்களும் கலந்த பாஸ்வேர்ட்களை உருவாக்கிப் பயன்படுத்தவும். நீளமாக இருந்தால் நல்லதுதான். உங்களால் அத்தகைய பாஸ்வேர்ட்களை உருவாக்க இயலவில்லை என்றால் http://www.passpub.com/ என்ற தளத்தை அணுகவும்.

12. பாஸ்வேர்ட்களை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

13. ஒரே பாஸ்வேர்டினையே அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்த வேண்டாம். ஒவ்வொன்றுக்கும் மாறான பாஸ்வேர்ட் பயன்படுத்தவும்.

14. சிக்கலான மாஸ்டர் பாஸ்வேர்ட் வைத்துக் கொண்டு ஒவ்வொரு தளத்திற்கும் அதனை சிறிய அளவில் மாற்றிக் கொள்ளலாம்.


15. 200 சதவிகிதம் சரியென்று பட்டால் மட்டுமே இமெயில் உடன் வரும் லிங்க்குகளை கிளிக் செய்திடவும். இல்லை என்றால் வேண்டவே வேண்டாம்.

16.பொதுவான வாழ்த்துக்கள் குவியும் நாட்களில் கவனமாக இருங்கள். உங்கள் நண்பர்களின் பெயரிலேயே வைரஸ் இணைந்த வாழ்த்துகள் வரும் வாய்ப்பு அதிகம்.

17. பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகிய இரண்டுமே பிஷ்ஷிங் பில்டர்களைப் பயன்படுத்துகின்றன. இவற்றை இயக்க நிலையில் வைக்கவும்.

18. உங்கள் கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் உள்ளது. இலவசமாக இங்கு கிளிக் செய்தால் அதனைக் கண்டுபிடித்து வெளியேற்றலாம் என்ற செய்தியுடன் ஏதாவது லிங்க் வருகிறதா? உடனே அதனை நீக்கி விடுங்கள். கிளிக் செய்தால் நிரந்தரத் தொல்லை தான்.

19. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மிகவும் பிரபலமான பிரவுசர் தான். அதனால்தான் ஹேக்கர்களும் அந்த வழியிலேயே உள்ளே புக எண்ணுகின்றனர். எனவே மாறுதலுக்காக ஆப்பரா அல்லது பயர்பாக்ஸ் பயன்படுத்துங்கள்.

20. ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல்களை நிரந்தரமாக அணைத்து விடுங்கள். பிரவுசர்கள் உங்களைக் கேட்காமல் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இயக்க இது உதவுகிறது. எனவே இது இயங்கக் கூடாது.

21. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களை வெப்சைட்டில் தரப்போகிறீர்களா? அந்த தளம் பாதுகாப்பானது தானா என்று பார்க்கவும். அதன் முகவரியில் ‘https’ என எஸ் சேர்த்து இருக்க வேண்டும். அல்லது அட்ரஸ் பாரில் அல்லது வேறு இடங்களில் பூட்டு அடையாளம் இருக்க வேண்டும்.

22. செக் பாயிண்ட்டின் புதிய ஸோன் அலார்ம் போர்ஸ் பீல்ட் முற்றிலும் பாதுகாப்பான இன்டர்நெட் பிரவுசிங்கை அளிக்கிறது. பிரவுசருக்கும் உங்கள் கம்ப்யூட்டரில் அது ஏற்படுத்தும் மாற்றங்களுக்கும் இடையே ஒரு படிமத்தை உருவாக்குகிறது.

23. முன்பெல்லாம் குக்கிகள் வழியாகத்தான் வைரஸ்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் இப்போது குக்கிகள் நம் வேலையைஇன்டர்நெட் பிரவுசிங்கில் எளிதாக்குகின்றன. இல்லை என்றால் நம் பெயரையும் தகவல்களையும் ஒவ்வொரு முறையும் ஒரு தளத்திற்கு நினைவு படுத்த வேண்டும். இருப்பினும் ஆன்டி ஸ்பைவேர் தொகுப்பு மோசமான குக்கிகளை எடுத்துவிடுவதால் அத்தொகுப்புகளை அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும்.

24. உருவாக்கும் ஒவ்வொரு பைலுக்கும் பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கவும். இதற்கான வழிகள் இப்போது ஆபீஸ்தொகுப்பில் தரப்பட்டுள்ளன.
25. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களையோ போட்டோக்களையோ இணையத்தில் இட வேண்டாம். அவை நிரந்தரமாக அங்கு தங்கி யாரும் எடுத்துக் கையாளும் நிலைக்கு தள்ளப்படும்.

26. பொதுவான கம்ப்யூட்டர்கள் மூலம் நீங்கள் பிரவுசிங் செய்திடும் நிலை ஏற்பட்டால் உங்கள் பிரவுசிங் பற்றிய தகவல்களை அழித்து விட்டு வெளியேறுங்கள். அதே போல அத்தகைய கம்ப்யூட்டர்களில் பாஸ்வேர்டுகளை சேவ் செய்து வைக்காதீர்கள்.

27. உங்களுக்கு ஒரு சேவையை வழங்குகையில் இணைய தளங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உறுதி செய்திட உங்கள் இமெயில் முகவரிகளைக் கேட்கும். 10 நிமிடத்திற்குள் செய்தி அனுப்பப்படும் என்று செய்தி வரும். அப்போது தற்காலிக இமெயில் முகவரி தரும் 10minutemail.com போன்ற தளங்களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தளம் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் ஈ-மெயில் முகவரிகளை உங்களுக்கு வழங்கும்.

28. உங்களுடைய வழக்கமான இமெயில் முகவரியை உங்கள் உற்றவர்களுக் கும் நண்பர்களுக்கு மட்டுமே தரவும். இலவச இமெயில் முகவரிகளைத் தருவதற்கு கூகுள், மைக்ரோசாப்ட் லைவ் மெயில், யாஹூ இருக்கும்போது ஸ்டெப்னி இமெயில் முகவரிகளை நிறைய வைத்துக் கொள்ளலாம்.

29. மொத்தமாக வரும் ஸ்பேம் மெயில்கள் உங்களுக்குத் தேவையான செய்தியைக் கொண்டு வந்திருந்ததாக அறிந்தாலும் அவற்றைப் படிக்க வேண்டாம். ஏனென்றால் திறந்து படித்தால் உங்களுடைய முகவரி அவர்களிடம் சிக்கி விடும்.

30. இமெயில்களை ஸ்பேம் பில்டர் கொண்டு பயன்படுத்தவும். தண்டர்பேர்ட் தன்னிடத்தே ஒரு நல்ல ஸ்பேம் பில்டரைக் கொண்டுள்ளது. அவுட்லுக் 2003 மற்றும் அவுட்லுக் 2007 மைக்ரோசாப்டின் ஸ்மார்ட் ஸ்கிரீன் என்னும் பில்டரைப் பயன்படுத்துகின்றன. இது உங்கள் மெயிலைப் படித்து அதன் தகவல்களிலிருந்து அது ஸ்பேம் மெயிலா என அறிந்து அழிக்கிறது. இவ்வகையில் ஜிமெயில் கிட்டத்தட்ட எந்த குறைபாடும் இன்றி உள்ளது.

Friday, July 10, 2009

> வயர்லெஸ் தொழில் நுட்பம் : அன்றிலிருந்து இன்று வரை

இன்று மனித வாழ்க்கையில் வயர்லெஸ் தொழில் நுட்பம் இல்லாத இடமே இல்லை எனலாம். நாம் அனைவரும் பயன்படுத்தும் மொபைல் போன், ரேடியோ, ரிமோட் என எத்தனையோ சாதனங்களைப் பட்டியலிடலாம்.

முதலில் வயர்லெஸ் தொழில் நுட்பம் என்றால் அது எதனைக் குறிக்கிறது? சாதாரண மனிதனின் நோக்கில் இதனைக் கூற வேண்டும் என்றால் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட தொலைவின் இடையே தகவல்களை எந்தவித வயர் இணைப்பு மின்றி கடத்துவதே ஆகும்.

வயர்லெஸ் தொழில் நுட்பத்தின் இன்றைய நிலை அதன் 125 ஆண்டுகால வளர்ச்சியின் முதிர்ச்சி ஆகும். இன்னும் தொடர்ந்து பல முனைகளில் வளர்ந்து கொண்டிருக்கும் இதன் வளர்ச்சியை அதன் தொடக்கம் முதல் காணலாம்.


1887: முதன் முதலில் வயர்லெஸ் தொழில் நுட்பம் என்றால் என்ன என்பது குறித்து ஜெர்மானிய நாட்டு விஞ்ஞானி ஹெர்ஸ் என்பவர் எடுத்துரைத்தார். அவர் எவ்வாறு மின் காந்த அலைகளை வயர் எதுவுமின்றி ஒரு வெளியில் அனுப்பலாம் என்று காட்டினார். இது மைக்கேல் பாரடே அறிவித்த ஒளி குறித்த கோட்பாட்டின் விரிவாக்கம் ஆக இருந்தது. ஆனால் ஹெர்ட்ஸ் அதற்கு மேல் எதுவும் செய்திடவில்லை.

1893: நிக்கோலா டெல்ஸா என்பவர் ரேடியோ அலைகளை அனுப்பிக் காட்டினார்.

1897: மார்கோனி ரேடியோ அலைகளை அனுப்ப முடியும் என்று வரையறை செய்து அதற்கான கண்டுபிடிப்பு உரிமையினைப் பெற்றார்.

1898: டெல்ஸா ஒரு ரிமோட் கண்ட்ரோல் மூலம் படகு ஒன்றை இயக்க முடியும் என்பதைக் காட்டினார். இந்த சோதனை ஓட்டத்தைப் பார்த்தவர்கள் டெல்ஸா தன் மனதின் சக்தியால் தான் படகை இயக்குவதாக எண்ணினார்கள்.

1906: இன்று ஏ.எம். ரேடியோ என்று (Amplitude Modulation) அழைக்கப்படும் அலைவரிசை ஒலி பரப்பினை ரெஜினால்ட் என்பவர் காட்டினார்.

1915: வெர்ஜினியாவிலிருந்து பாரிஸ் நகரத்திற்கு ஏ.டி. அண்ட் டி நிறுவனம் ரேடியோ அலைகளை அனுப்பிக் காட்டியது.

1919: ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் ரேடியோ கார்ப்பரேஷன் ஆப் அமெரிக்காவினை நிறுவியது.

1921: Shortwave (SW) radio இயக்கிக் காட்டப்பட்டது.

1931: மிகத் தெளிவாக ரேடியோ அலைகளை அனுப்ப எப்.எம். (Frequency Modulation)தொழில் நுட்பம் உருவாக்கப்பட்டது.

1982: செல்லுலார் சிஸ்டத்திற்கான டிஜிட்டல் சிஸ்டத்தை அமைக்க GSM (Groupe Special Mobile) உருவாக்கப்பட்டது.

1987: ஜி.எஸ்.எம். தொழில் நுட்ப விபரங்கள் வரையறை செய்யப்பட்டன.

1990: டிஜிட்டல் ரேடியோ (எல் பேண்ட் ரேடியோ) முதன் முதலாக இயக்கிக் காட்டப்பட்டது.

1991: பின்லாந்தில் முதன் முதலாக ஜி.எஸ்.எம். வகை தொழில் நுட்பத்தில் முதல் போன் அழைப்பு ஏற்படுத்தப்பட்டது.

1992: ஐரோப்பாவிற்கு வெளியே முதல் முதலாக ஆஸ்திரேலியாவில் ஜி.எஸ்.எம். நெட்வொர்க் அமைக்கப்பட்டது. தொடர்ந்து 53% ஆஸ்திரேலியர்கள் ஜி.எஸ்.எம். தொலை தொடர்பு சேவையினைப் பெற்றார்கள்.

1997: வை–பி (WiFi) தொலை நுட்பம் உருவாக்கப்பட்டது.

1998: புளுடூத் தொழில் நுட்ப குழு உருவாக்கப்பட்டது.

1999: புளுடூத் 1.0 தொழில் நுட்பம் வெளியிடப்பட்டது.

2000: வர்த்தக ரீதியாக முதல் புளுடூத் சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டது.

2002: யு.எம்.டி.எஸ். (UMTS) அமைக்கப்பட்டு மொபைல் டிவி மற்றும் வீடியோ காலிங் போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

2003: EDGE தொழில் நுட்பம் உருவாக்கப்பட்டது.

2004: வைமாக்ஸ் தரம் உயர்த்தப்பட்டது. புளுடூத் பதிப்பு 2.0 வெளியிடப்பட்டது.

2009: வை–பி தொழில் நுட்பத்தில் புதிய தரக்கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டன. இவை வரும் நவம்பரில் உரிமம் பெற்று அனுமதிக்கப்படும்.

> ஸ்ரேயா மனசுல யாரு? குழப்பியடிக்கும் நடிகர்!

பிரபுதேவா மாதிரியே பிட்டை போட்டு, நயன்தாரா மாதிரியே நட்டை கழட்டிடுவாரு போலிருக்கு நிதின் சத்யாவும். ஏணி வச்சாலும் யோசிக்க முடியாத ஒரு செய்தி கடந்த ஒரு வருஷத்துக்கும் மேலாகவே ஓடிட்டு இருக்கு கோடம்பாக்கத்தில். நடிகை ஸ்ரேயாவுக்கும் நிதின் சத்யாவுக்கும் ஒரு இதுவாம். சிவாஜி படப்பிடிப்பு நேரத்திலேயே மவுண்ட் ரோடுக்கு பக்கத்திலே இருக்கும் ஹோட்டல் ஒன்றில் ரூம் போட்டு ரெண்டு பேரும் டிஸ்கஷனில் இருந்ததாக செய்தி. கண்ணும் காதும் வச்சா மாதிரி நடந்து முடிஞ்ச ஒரு விஷயம் எப்படி வெளியே போச்சுன்னு ஒரே வருத்தம் ஸ்ரேயாவுக்கு. நீதான் சொல்லிட்டே என்று நிதினை கடிந்து கொண்டதாகவும் செய்தி. இதுக்கெல்லாம் தனது முட்டைக்கண்ணை விரித்து முடியலேன்னு அலுத்துக் கொண்ட நிதின், முதன் முதலா பதில் சொல்லியிருக்காரு.

எப்படி? அந்த விஷயத்தை பற்றி கேட்காதீங்க. அது எங்களுக்குள்ளே நடந்த பர்சனல் விஷயம். படத்தை பற்றி கேட்டா பதில் சொல்ல முடியும். இப்படி பர்சனலை கேட்டா என்னன்னு சொல்றது?

இல்லேங்கிற விஷயத்தை இருக்குங்கிற மாதிரியே சொல்றாங்களேப்பா! இத விடுங்க. மயிலுன்னு நினைச்சா அது மட்டன் கறிக்கு ஆசைப்படுதே, என்னத்தை சொல்ல?

> ரஜினி டைட்டிலை விடாமல் பற்றிக் கொண்டார்

ரஜினி டைட்டிலை விடாமல் பற்றிக் கொண்டார் போலிருக்கிறது ஷக்தி சிதம்பரம். ராஜாதி ராஜா வந்த கையோடு சுட சுட ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது குரு சிஷ்யன். டைட்டிலுக்கு ஏற்ற மாதிரியே பூஜையை போட்டு பிரமாதப்படுத்திவிட்டார் ஷக்தி.

தமிழ்சினிமாவால் கொண்டாடப்பட்ட குரு சிஷ்யர்கள்தான் இப்பட துவக்க விழாவின் சிறப்பு விருந்தினர்கள். பாக்யராஜ்-பார்த்திபன், ராமநாராயணன்-பேரரசு,
மணி வண்ணன்-சீமான், கே.எஸ்.ரவிக்குமார்-சேரன் என்று பட்டையை கிளப்பிய குரு சிஷ்யர்கள் ஷக்தி சிதம்பரத்திற்கு தங்கள் வாழ்த்துக்களை சொல்லி உற்சாகப்படுத்தினார்கள்.

சத்யராஜின் பேச்சில் இன உணர்வும், எதார்த்தமும் நீர்த்துப் போகாமல் இருந்தது. எனக்கு குரு தந்தை பெரியார்தான். நடிப்பில் கமல்ஹாசனை பார்த்து பிரமித்து இருக்கிறேன். அது போல வாழ்க்கையில் என்னை பிரமிக்க வைத்தவர் சீமான்தான். என் போன்றவர்கள் தமிழ் உணர்வோடு குரல் கொடுக்கதான் முடிந்தது. ஆனால் சீமான் களத்தில் இறங்கி போராடியவர். அவர் தனது அடுத்த படத்திற்கு வணங்காமண் என்று பெயர் வைக் வேண்டும். குரு சிஷ்யன் படத்தில் கதாநாயகன் சுந்தர் சி கதாபாத்திரத்திற்கு இலங்கை தமிழர்களுக்காக உயிர் தியாகம் செய்த முத்துக்குமார் பெயரை வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு சத்யராஜ் பேசினார். இதற்கு முன்பாகவே திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த வருடத்தில் துவங்கப்படும் படங்களில் வரும் ஹீரோ கேரக்டர்களுக்கெல்லாம் முத்துக்குமார் என்றே பெயர் வைக்க வேண்டும் என்று. ஆனால் அது, அன்றோடு முடிந்து போன தீர்மானம் ஆகிவிட்ட சூழலில் சத்யராஜின் நினைவூட்டல், இந்த படத்திலாவது சாத்தியமாகும் என்பது மட்டும் நிச்சயம். ஏனென்றால் சுந்தர் சி யோடு இணைந்து இந்த படத்தில் மிக முக்கியமான கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார் புரட்சி தமிழன்!

> நாடோடிகள் - ஆள் ரெடி ஸக்ஸஸ்!

சிக்குமாருக்கு கிடைத்திருக்கும் மூன்றாவது வெற்றி. இயக்குநர் தயாரிப்பாளர் என தொடர்த்து இப்போது கதாநாயகனாகவும் வெற்றி பெற்றிருக்கிறார்.

தனக்கு கிடைத்த தோல்விகளை விதையாக்கி வெற்றியின் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் சமுத்திரக்கனி. வித்தியாசமான கதை, தேவையற்ற திணிப்புகள் இல்லாத திரைக்கதை, கச்சிதமாக உருவாக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரங்கள், அளவான வசனங்கள் என எல்லா வகையிலும் 'நாடோடிகள்' நச்சுனு இருக்கு! ராஜபாளையத்தில் துவங்கும் கதை, நாமக்கல், ஈரோடு, சிவன்மலை, கன்னியாகுமரி என பல இடங்களுக்கு பயணிக்கிறது.


கருணா (சசிக்குமார்) , சந்திரன் (வசந்த் விஜய்) , பாண்டி (கல்லூரி பரணி) இவர்கள் மூவரும் நண்பர்கள். இவர்கள் மூவருக்குமே வாழ்க்கையில் ஒவ்வொரு லட்சியம் இருக்கு. கருணா பி. ஏ. வரலாறு தங்கப்பதக்கம் வென்றவர்.

எப்படியாவது அரசு உத்தியோகத்தில் சேர்ந்துவிட முயன்று கொண்டிருப்பவர். அப்போதான் இவரின் அத்தை மகள் நல்லம்மா (அபினயா) இவருக்கு கிடைக்கும். சந்திரன், எப்படியாவது கம்ப்யூட்டர் சென்டர் வைத்து செட்டிலாவதே இவர் கனவு. கருணாவின் தங்கைக்கும் (அநநியா) இவருக்கும் லவ்ஸ்! இது கருணாவுக்கும் தெரியும். அடுத்தது பாண்டி, பெண்கள் விஷயத்தில் இவருக்கு "லூசு" பட்டம் தான் மிச்சம். வெளிநாடு செல்வதே இவர் கனவு, பாஸ்போர்டுக்காக வெயிட்டிங்.

இப்படி எல்லோரும் ஏதோ ஒன்றைத் தேடி பயணித்துக் கொண்டிருக்க, கையில பையோட வந்து இறங்குது ஒரு பிரச்சனை. கருணாவின் நண்பன் சரவணன் அறிமுகமாகிறார்.

கருணா வைத்தேடி வந்த சரவணன், வந்த இடத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்ய, அவரை காப்பாற்றிய பின் தெரிகிறது அது காதல் பிரச்சனை என்று. தன் நண்பனின் நண்பனுக்காக கருணாவின் நண்பர்கள் களமிறங்குகிறார்கள். நாமக்கல் பகுதியின் பெரிய கையாக இருக்கும் பழனிவேல் ராஜனின் மகள் பிரபா ஷாந்தினி. இவரைத் தான் சரவணன் காதலிக்கிறார்.

மிகவும் கொடுமையான இழப்புகளுக்கு மத்தியில் சரவணன் பிரபாவை சேர்த்து வைக்கிறார்கள் நண்பர்கள்.

சந்திரன் ஒரு காலை இழந்து, பாண்டி காதில் அடிபட்டு செவிடாகி, கருணாவின் நெற்றியில் அடிபட்டு ஒரு கண் வீங்கிய நிலையில்... கேள்விக்குரியாய் நிற்கிறது சூழ்நிலை. இனி... போலீஸின் பிடியில் கருணாவின் நண்பர்கள். கருணாவின் அரசு உத்தியோகத்தோடு காதலும் கனவாய் மறைந்துவிடுகிறது.

சந்திரனுக்கு செயற்கை கால், பாண்டிக்கு காது கேட்கிற மிஷின் என எல்லாம் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்ப, திரைக்கதையில் நெத்தியடி மாதிரி ஒரு திருப்பம். யாரின் காதலுக்காக எல்லாவற்றையும் இழந்தார்களோ, அவர்கள் பிரிந்து விடுகிறார்கள். ஏன் என்று விசாரித்தால், கட்டில் சமாசாரங்களை மட்டுமே அவர்கள் காதல் என்று நினைத்தது தெரியவருகிறது. ஒன்றும் புரியாத அதிர்ச்சியில் கருணாவும் அவன் நண்பர்களும். கோபத்தில் இருவரையும் கொன்றுவிட திட்டம் போடுகிறார்கள். கடைசியில் சசிக்குமாரின் அட்வைஸ் வசனங்களோடு க்ளைமாக்ஸ்!

இதற்கு இடையில் சிரிக்க வைக்க கஞ்சா கருப்பு வந்து போகிறார். கதையில் வந்துபோகிற அத்தனை கதாபாத்திரங்களும் மறக்க முடியாத அளவிற்கு படைக்கப்பட்டிருக்கிறது. இடைவேளைக்கு முன்பு 'சேசிங் சீன்' பட்டையை கிளப்புகிறது!

அதுவும் காதலர்களை பஸ்ஸில் ஏற்றிவிட்டு, கழுத்தில் இருக்கும் செயினை அறுத்து கொடுக்கும் காட்சியில் சசிக்குமாருக்கு நூறுக்கு நூறு மார்க் போடலாம். செக்சுக்காகவா ஒருவன் தற்கொலை செய்து கொள்வான்?

உயிருக்கு உயிராய் காதலித்தவர்கள் எப்படி திடீரென பிரிவார்கள். இப்படிப்பட்ட நண்பனுக்கு இன்னொரு நண்பன் எப்படி உதவி செய்ய முடியும்? இப்படி பல கேள்விகள் எழுந்தாலும், இந்தக் கேள்விகளுக்கான நியாயமான விடைகள் படம் பார்க்கும் போது தெளிவாக புரியும்.

படத்தின் முதல் பலம் ஒளிப்பதிவாளர் கதிர். கதிரின் வேலை படத்தில் அபாரம். சசிக்குமார் ஓட்டி செல்லும் டாட்டா சுமோவோடு சேர்ந்து கதிரின் கேமராவும் தர தர தரவென பயணித்திருக்கிறது. அடுத்தவர், இசையமைப்பாளர் சுந்தர் சி பாபு. பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.

கதிரின் கேமரா வேகத்திற்கு இவரின் வயலின் இசையும் ஈடு கொடுத்திருக்கிறது. பாடல்களும் படத்திற்கு பொருத்தம். காட்சிக்கு காட்சி கைதட்டல் வாங்குகிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. கமர்ஷியல் கலாட்டாக்களுக்கு சவுக்கடி கொடுக்க மீண்டும் ஒரு வெற்றிப்படம்.

நாடோடிகள் - ஆள் ரெடி ஸக்ஸஸ்!
உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.