இரண்டு வாரங்கள் முன்பு பிரபல வார இதழில் விமர்சகர் ஞாநி எழுதிய வாசகங்கள் இவை. நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் சென்னை ஐஐடி-யுடன் இணைந்து ஆறு நாள் திரைக்கதை பயிற்சி வகுப்பை நடத்தியது. இந்தியா முழுவதிலிருந்தும் மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். தமிழ் திரைப்பட இயக்குனர்கள் மட்டுமல்லாது, இந்திப்படவுலகைச் சேர்ந்த இயக்குனர்களும், திரைக்கதை ஆசிரியர்களும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தினர். முக்கியமாக பிரெஞ்சு திரைக்கதையாசிரியர் ழான் க்ளாட் கேரியர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுடன் திரைக்கதை குறித்து பேசினார்.
இந்த திரைக்கதை பயிற்சி வகுப்பை நடத்தியதற்காக கமல்ஹாசனுக்கு ஞாநி வழங்கிய நாலுவரி விமர்சன குட்டுதான் நீங்கள் மேலே படித்தது. ஞாநியின் இந்த விமர்சனம் சரியா?
இந்தக் கேள்வியை காலம் கடந்து கேட்பதற்கு காரணம் இருக்கிறது. சில தினங்கள் முன்பு இந்த திரைக்கதை பயிற்சி வகுப்பின் தொடர்ச்சியாக நிரூபர்கள் சந்திப்பு ஒன்றை கமல்ஹாசன் நடத்தினார். இந்த சந்திப்பின்போது ழான் க்ளாட் கேரியரும் உடனிருந்தார்.
சென்னை பற்றி 30 குறும் படங்கள் தயாரிக்கயிருப்பதாகவும், பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களிடமிருந்து ஸ்கிரிப்படுகள் பெறப்பட்டு இந்த குறும் படங்கள் எடுக்கப்படும் என்றும் அப்போது கமல்ஹாசன் தெரிவித்தார். பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பெரிய இயக்குனர்களும், மாணவர்களும் இந்த குறும் படங்களை இயக்குவார்கள்.
இந்த நிருபர்கள் சந்திப்பு நமக்கு உணர்த்துவது என்னவென்றால், கமல்ஹாசன் நடத்திய திரைக்கதை பயிற்சி வகுப்பு ஆறு நாட்களுடன் முடிந்துவிடவில்லை. அதனை தொடக்கமாக வைத்து மேலும் பல ஆக்கப்பூர்வமான வேலைகள் தொடர்ந்து நடக்கயிருக்கின்றன.
இந்த புரிதலின் அடிப்படையில் ஞாநியின் விமர்சனம் எத்தனை மேலோட்டமானது என்பதையும், அவசரத்தில் அள்ளித் தெளித்த விமர்சனம் அது என்பதையும் ஒருவர் எளிதாக புரிந்து கொள்ளலாம்.
ஞாநி தனது நாலுவரி விமர்சனத்தில் குறையாக சுட்டிக் காட்டியிருப்பது கமல்ஹாசன் திரைக்கதை பயிற்சி வகுப்பை ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே நடத்தினார் என்பது. திரைக்கதை பயற்சி வகுப்பில் என்ன நடந்தது என்பதை அறியாமல் ஞாநி இதனை எழுதியிருக்கிறார் என்பதே உண்மை.
ஐஐடி-யில் நடந்த திரைக்கதை பயிற்சி வகுப்பில் பாடம் நடத்தியவர்கள் சேகர் கபூர், அஞ்சும் ராஜ்பாலி, அதுல் திவாரி போன்றவர்கள். இவர்கள் அனைவருக்கும் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெரியும். தமிழ் தெரியாது. ஆறு நாள் பயிற்சி வகுப்பில் வகுப்பு நடத்திய தமிழ் தெரிந்த இயக்குனாகள்; பாலுமகேந்திரா மற்றும் ஹரிஹரன் மட்டுமே. வீடியோ கான்பரன்ஸில் கலந்துரையாடல் நடத்திய ழான் க்ளாட் கேரியரும் ஆங்கிலத்திலேயே தனது கலந்துரையாடலை நடத்தினார். ஆங்கிலம் தெரியாத ஒருவர் இந்த வகுப்பில் கலந்து கொண்டிருந்தால் அவரால் எதையும் புரிந்து கொண்டிருக்க முடியாது என்பதே உண்மை.

இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து தளங்களுக்குச் சென்று அரிய தகவல்களைப் பெறுவது என்பது அனைவரும் விரும்பும் குஷியான சமாச்சாரமாக மாறிவிட்டது. யாராவது இந்த இன்டர்நெட் இணைப்பு எப்படி எந்த கம்ப்யூட்டர் வழியாகப் போகிறது என்று ஒரு நிமிடம் எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? பரந்து விரிந்த உலக இன்டர்நெட் கட்டமைப்பில் எந்த எந்த கம்ப்யூட்டர் வழியே ஓர் இணைப்பு கிடைக்கிறது என்று அறிய எல்லாருக்கும் ஆவலாகத்தான் இருக்கிறது. ஆனால் அதனை எளிமையான முறையில் எப்படி அறிவது? அதற்கான தொழில் நுட்பத்தை எல்லாம் கற்றுக் கொள்ளாமல் எப்படி தெரிந்து கொள்வது?



மனநோய் ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்கள், எந்தெந்த மாதிரியான தருணங்களில் மனநோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய தகவல்களை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
உயிர்க் கொல்லி நோயான எய்ட்ஸ் நோயை குணப்படுத்துவது தொடர்பான மருத்துவ ஆராய்ச்சியில் முக்கிய திருப்பமாக, மனித உடலில் எய்ட்ஸ் கிருமி எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறது என்பதை கனடா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ரீமேக் படங்களில் நடிக்க தனுஷ் ஆர்வம் காட்டுகிறார். ரீமேக் படமான பரட்டை என்கிற அழகு சுந்தரம்



நாம் வசிக்கும் பூமிக்கு சந்திரன் துணைக் கோளாக இருப்பதுபோல சனி கிரகத்துக்கும் சில துணைக் கோள்கள் உள்ளன. அந்த துணைக்கோள்களில் ஒன்று "டைட்டன்' இந்த துணை கிரகமானது பூமியிலிருந்து 100 கோடியே 30 லட்சம் கிலோமீட்டர் தொலை வில் உள்ளது. இதன் வெப்பநிலை மைனஸ் 179 டிகிரி செல்சியஸ் ஆகும். சனி கிரகத்தையும் அதன் துணைக் கோள்கள் பற்றியும் ஆய்வு செய்ய காசினி என்ற விண்கலத்தை விஞ்ஞானி கள் அனுப்பியுள்ளனர். அதிலுள்ள ரேடார் டைட்டன் துணைக்கோளின் 20 சதவீத மேற் பரப்பை ஆய்வு செய்து படம் பிடித்துள்ளது. அதன் மூலம் டைட்டன் துணைக்கோளின் மேற்பரப்பில் நூற்றுக்கணக்கான ஏரிகள், கடல்கள் இருப்பதும் அவற்றில் எண்ணெய் வளங்கள் நிறைந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த எண்ணெய் வளம் பூமியில் உள்ள எண்ணெய் வளத்தைப் போல் பல நூறு மடங்குகள் அதிகம் என்றும் விஞ்ஞானி கள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத் தின் துணை நிறுவனமான இன்ஸ்டிடியூட் டி அஸ்ட்ரோ பி சிக்யூ டி பாரீஸ் என்ற அமைப்பின் விஞ்ஞானிகள் விண்வெளியில் உள்ள ஒரு கிரகத்தில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். பூமியில் இருந்து 60 ஒளி ஆண்டு தொலைவில் ஒரு கிரகம் உள்ளது. எச்.டி.18733 பி என்ற பெயர் கொண்ட இந்த கிரகத்தில் இருந்து கிளம்பும் ஒளி அளவை யில் இருந்து அங்கு தண்ணீர் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் எச்.டி.189733 பி கிரகம் சூடான வியாழன் கிரகம் என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு முன்பு இந்த கிரகம் குறித்த ஆராய்ச்சியில் அங்கு தண்ணீர் இல்லை என்று கூறப்பட்டது. ஆனால் தற்போதைய நவீன ஆராய்ச்சியில் அது தவறு என்று நிரூபிக்கபட்டுள்ளது. 



'சார்...உங்களுக்கு கல்யாணமாகி நாலு வயசுல ஒரு பையன் இருக்கான்....' நாற்பது வயசு ஹீரோக்கள்கூட இந்த மாதிரி ஒன்லைன் கேட்டா






நடிகர் விஜய் கட்சி ஆரம்பிக்கும் முடிவில் இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.


























