Wednesday, September 30, 2009

> சுனாமி, நிலநடுக்கங்கள் அதிகரிக்கும் - விஞ்ஞானிகள்

புவி வெப்பமடைதலால் பூமியின் மேற்பரப்பு மாற்றமடைகிறது. இதனால் நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள், பெரும் நிலச்சரிவுகள் அடிக்கடி நிகழும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக புவியியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தட்பவெப்ப மாற்றத்துடன் தொடர்புடைய புவியியல் மாற்றங்கள் மீத்தேன் வாயுவின் புகையனல் கக்குதலையும் உருவாக்கலாம். இந்த வெப்ப வாயு தற்போது உறைபனியில் திட வடிவத்தில் உள்ளது. மேலும் கடலடிப் படுகையிலும் மீத்தேன் திட வடிவில் உள்ளது. தற்போது காற்றில் இருக்கும் ஒட்டுமொத்த கரியமில வாயுவின் அளவைக்காட்டிலும் உறைபனியடியில் திட நிலையில் உள்ள இந்த மீத்தேன் அளவு பன்மடங்கு அதிகமாகும்.

"தட்பவெப்ப மாற்றங்கள் விண்வெளியையும், கடல்களையும் மட்டும் பாதிப்பதில்லை, பூமியின் மேல்பாறையையும் பாதிக்கிறது. ஒட்டுமொத்த பூமியும் ஒன்றையொன்று சார்ந்து இயங்குவது" என்று லண்டன் பல்கலைக் கழக கல்லூரி பேராசிரியர் பில் மெகுவைர் வானிலை மாற்ற விளைவுகள் குறித்த முக்கிய கருத்தரங்கில் விஞ்ஞானிகள் மத்தியில் கூறியுள்ளார்.

"அரசியல் வட்டாரத்தில் தட்பவெப்ப மாற்றத்தின் புவியியல் அம்சங்கள் குறித்து அறியாமல் உள்ளனர்." என்று அவர் மேலும் தெரிவித்தார்.

எரிமலை நிபுணர்கள், நிலநடுக்க ஆய்வாளர்கள், பனிப்பாறை விஞ்ஞானிகள், வானிலை மாற்றம் குறித்த ஆய்வு நிபுணர்கள், நிலச்சரிவு நிபுணர்கள் ஆகியோர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு கடந்த கால புவியியல், வானிலை மாற்றங்களின் அடிப்படையில் எதிர்காலத்தை கணிக்கும் ஆய்வுத் தரவுகளை பகிர்ந்து கொண்டனர்.

"பனி உருகிப்போனால், பூமியின் மேல்பரப்பு தட்பவெப்ப மாற்றங்களுக்கு இலக்காகி நிலநடுக்கங்களை உருவாக்கும். இதனால் கடலுக்கு அடியிலும் நிலச்சரிவுகள் ஏற்படும், இந்த கடலடி நிலச்சரிவினால் சுனாமி என்ற ஆழிப் பேரலைகள் ஏற்படும்" என்று மெகுவைர் தெரிவித்தார்.

ஆக்ஸ்போர்ட் பலகலைக் கழகத்தைச் சேர்ந்த டேவிட் பைலி பூமியின் மேற்பரப்பு நிறையில் (mass) ஏற்படும் சிறிய மாற்றங்களால் பொதுவாக எரிமலை நடவடிக்கைகள் தாக்கம் பெறும். பனி உருகிய பகுதிகளில் மட்டுமே இது நிகழாது, மாறாக மற்ற பகுதிகளிலும் எரிமலை நடவடிக்கைகள் துரிதமடையும். என்று அந்த கருத்தரங்கில் தெளிவு படுத்தினார்.

எரிமலைகள் வெடிக்கும் போது மிகப்பெரிய அளவில் சாம்பலையும், கந்தகத்தையும், கரியமில வாயுவையும் விண்வெளிக்கு செலுத்துகிறது. சூரிய ஒளி இதனை மீண்டும் பிரதிபலிக்கும் போது சில வேளைகளில் பூமி குளிரடையவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் இது இரண்டாண்டுகளுக்கே நீடிக்கும். ஆனால் அடிக்கடி எரிமலை வெடிப்பு ஏற்பட்டால் புவிவெப்பமடைதலை துரிதப்படுத்தும் அபாயமும் உள்ளது என்று அமெரிக்க எரிமலை ஆய்வு நிபுணர் பீட்டர் வார்ட் இந்தக் கருத்தரங்கில் பேசுகையில் தெரிவித்தார்.

"மனிதனுக்கு முன்னால் தட்பவெப்ப மாற்றங்களை உருவாக்கியது எரிமலைச் செயல்பாடுகள்தான். ஆனால் தற்போது தட்பவெப்ப மாற்றத்தை மனிதன் தன் கையில் எடுத்துக் கொண்டு விட்டான், எரிமலை ஏன் மாற்றங்களை தோற்றுவிக்கிறது என்பதை புரிந்து கொண்டால் என்ன செய்வது என்பதை நாம் நிர்ணயிக்க முடியும்" என்று அவர் மேலும் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

ஆனால் இந்த கருத்தரங்கில் பேசியவர்களெல்லாம், கண்டுபிடிப்புகள் அனைத்தும் கருதுகோள் அளவில் உள்ளது என்பதை குறிப்பிட்டாலும், உலகம் பெரிய அதிர்வுகளைச் சந்திக்க நேரிடும் என்பதற்கான ஆதாரங்கள் பெருகி வருகிறது என்றும் எச்சரித்தனர்.

நாசா விஞ்ஞானி டோனி சாங் உரையாற்றுகையில், சமீப காலங்களில் ஏற்பட்ட பனிப்பாறை நிலநடுக்கங்களால் பனிப்பாறைகள் மிகப்பெரிய நிலச்சரிவை சந்தித்து கடலுக்கு அடியில் சென்றுள்ளதாக தெரிவித்தார்.

"மேலும் பனிப்பாறை நிலநடுக்கங்கள், கடலுக்கு அடியில் ஏற்படும் மிகப்பெரிய நில நடுக்கங்கள் ஏற்படுத்தும் சுனாமியைக் காட்டிலும் சக்தி வாய்ந்த சுனாமியை ஏற்படுத்தும் என்று தங்கள் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது" என்றார்.

இதனால் சிலி, நியூஸீலாந்து, கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் ஆகியவற்றிற்கு அபாயம் ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த பலதரப்பட்ட சுற்றுச்சூழல் சீரழிவிற்கு கரியமில வாயு வெளியேற்றத்தை மட்டும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் போதாது என்பதை அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும் அறிய

> சிலையாகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்

கேரளாவைச் சேர்ந்த சுனில் என்ற மெழுகுச் சிலை கலைஞர் வரும் டிசம்ப‌ரில் மும்பையில் மெழுகுச் சிலை மியூசியம் ஒன்றை திறக்க இருக்கிறார். இந்தியர்களுக்கு இது ஆச்ச‌ரியமான விஷயம். மேலை நாடுகளில் இதுபோன்ற மெழுகுச் சிலை மியூசியங்கள் முன்பே பிரபலம்.

சுனில் இந்த மியூசியத்தை அமைக்க பே வாட்ச் என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டுள்ளார். இந்த மியூசியம் இந்தியாவின் முக்கிய பிரமுகர்கள் 35 பே‌ரின் மெழுகுச் சிலைகளுடன் தொடங்கப்பட உள்ளது.

இதில் முதல் சிலையாக ஆஸ்கர் விருது பெற்ற ரெசூல் பூக்குட்டியின் மெழுகுச் சிலையை வைக்க சுனில் திட்டமிட்டுள்ளார். இரண்டு ஆஸ்கர் விருதுக்கு சொந்தக்காரரான ஏ.ஆர்.ரஹ்மானின் மெழுகுச் சிலையும் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

உருவ வழிபாட்டை மறுக்கும் முஸ்லிம், ஏ.ஆர்.ரஹ்மான். குரானை கறாராக பின்பற்றும் அவர் இந்த மெழுகுச் சிலை கலாச்சாரத்தை வரவேற்பாரா?
மேலும் அறிய

மகேந்திரா Xylo – சொகுசு வாகனம்

ஓட்டுபவருக்கும், பயணிப்பவர்களுக்கும் உகந்த அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட மகேந்திரா க்சைலோ வாகன விரும்பிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட க்சைலோ மாடல்களான இ2, இ4, இ8 ஆகியன ரூ.6,24,000 முதல் ரூ.7,69,000 வரையிலான விலையில் அறிமுகப்படுத்தப்பட்டன. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 3,000 வாகனங்கள் விற்பனையானதிலிருந்தே க்சைலோ எந்த அளவிற்கு வாகன விரும்பிகளின் மனத்தை கவர்ந்துள்ளது என்பதற்கு அத்தாட்சியாகும்.

டயோட்டாவின் இன்னோவா, ஷெவர்லேயின் டவேரா ஆகியவற்றிற்குப் போட்டியாகவே மகேந்திராவில் தயாரிக்கப்பட்ட க்சைலோ, திட்டமிடுதலின்போது இன்ஜீனியோ என்றே பெயரிடப்பட்டது. 2008ஆம் ஆண்டு டிசம்பரில் மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள மகேந்திரா கார் தொழிற்சாலையில் க்சைலோ உற்பத்தித் துவங்கியது.

க்சைலோவின் சிறப்பான வடிவமைப்பிற்கு அடிப்படையே வாகன ஓட்டுநரின், பயணிகளின் வசதியை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டதுதான். இவ்வாறு உள்வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு வாகனத்தின் புற அமைப்பு வடிவமைக்கப்பட்டதே க்சைலோ பெற்றுவரும் வரவேற்பிற்குக் காரணமாகும்.

இன்னோவாவை விட வசதியாகவும், அதனைவிட குறைந்த விலையிலும் ஒரு நீண்ட தூர பயண வாகனத்தை அளிக்க வேண்டும் என்ற இலக்குடனேயே க்சைலோ தயாரிக்கப்பட்டுள்ளது.

112 போர் ஹார்ஸ் பவர் திறன் கொண்ட இயந்திரத்துடன் கூடிய க்சைலோவின் முன் இருக்கைகளை முழுமையாக சாய்த்து மிக வசதியான படுக்கையாக்கிக் கொள்ளலாம்.

கார் பயணிகளின் ஒவ்வொரு அணுகுமுறையையும் நுணுக்கமாக கவனித்து, அவர்கள் எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளையும் முழுமையாக அளித்து வடிவமைக்கப்பட்டதன் விளைவே உலகத் தரத்திற்கு இணையான மிகச் சிறப்பான வடிவமைப்புடன் கூடிய நீண்ட தூர பயண வாகனமாக க்சைலோ திகழ்கிறது என்று மகேந்திரா நிறுவனம் கருதுகிறது.

மேலும் அறிய

> கமல் 50-சில பிளாஷ்பேக்குகள்

ஆக்டோபஸ் அறிவோடும், அமீபாவின் பணிவோடும் இருப்பவர்தான் கமல். ஐம்பதாண்டு கால திரையுலக பயணம் சிலருக்கு மட்டுமே வாய்த்த சிறப்பு. இன்றைய தேதியில் இவருக்காக சிம்சானங்கள் காத்திருந்தாலும், ஒரு காலத்தில் நடைவண்டி கூட இல்லாமல் சிரமப்பட்டவர்தான் கமல்.

சிறுவனுக்கும் வாலிபனுக்கும் இடைபட்ட அந்திப்பொழுது ஏராளமான குழப்பங்கள் நிறைந்தது. சிறுவனாக இருக்கிற வரை கிடைத்த சினிமா வாய்ப்பு வாலிபன் ஆனபின் கிடைக்காமல் போக இன்னும் குழப்பம் அவருக்கு. அந்த நேரத்தில்தான் தியாகராய நகரில் இருக்கும் திரைப்பட தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் வீட்டுக்கு போவாராம். வேறொன்றுமில்லை. வாய்ப்பு தேடிதான் இந்த விசிட்.

மிகவும் ஒல்லியாக இருக்கும் கமலை பார்த்து இப்படி ஒல்லியா இருக்கியேப்பா? ஒரு கல்யாணத்தை பண்ணிக்கோ, உடம்புல சதை போடும்னு சொல்வார் சின்னப்பா தேவர். ஆனாலும், "தம்பி உன்னை வச்சு நான் படம் எடுக்கிறேன். ஆனால் இப்போ இல்லை. அதுவரைக்கும் என்னோட அட்வான்சா இந்த செக்கை வச்சுக்கோ. எவ்வளவு வேணுமோ பில்லப் பண்ணி எடுத்துக்கோ" என்று ஒரு பிளாங்க் செக்கை கொடுத்தாராம்.

ஆனால் கமல் முதல் ஹீரோவாக நடித்தது தேவருக்காக அல்ல. பாலசந்தருக்காக. அரங்கேற்றம்தான் கமலை முதன்முதலாக ஹீரோவாக்கிய படம். ஆனால் பிளாங்க் செக்கை மறக்காத கமல், அதன்பின் தேவர் தயாரித்த பல படங்களில் நடித்தார்.

பட வாய்ப்பு இல்லாத காலங்களில் கமலுக்கும் அவரது நண்பர் எஸ்.வி.சேகருக்கும் இருந்த ஒரே பொழுது போக்கே திரைப்படங்கள் பார்ப்பதுதான். பஸ்சுக்காக வைத்திருக்கும் பணத்தில் படம் பார்த்துவிட்டு நடந்தே வீடு திரும்புவது இருவருக்கும் பிடித்த விஷயம். மவுண்ட் ரோடில் சினிமா பார்த்துவிட்டு சினிமாவை பற்றி அக்குவேறு ஆணி வேறாக அலசியபடியே வீடு திரும்புவார்களாம் இருவரும். ஓரிடத்தில் வந்து பிரிந்து அவரவர் வீட்டுக்கு போவதுதானே நடைமுறை. ஆனால் எஸ்.வி.சேகரின் வீடு வரைக்கும் பேசிக்கொண்டே வரும் கமல், அங்கிருந்து கிளம்பி போவாராம் தனது ஆழ்வார்பேட்டை வீட்டுக்கு.

கமலின் அறையில் இருக்கிற ஒரே படம் பெரியாருடையதுதான். இவருக்கும் சென்னைக்குமான உறவில் மிக முக்கியமான இடம் பெரியார் திடல். கருப்பு சட்டையணிந்து இங்கே அவர் பேசியதுடன் ஒரு நாத்திகராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். எப்போதிலிருந்து நாத்திகம்? என்றால், "எப்போதிலிருந்து தமிழ் பேச ஆரம்பித்தீர்கள் என்றால் என்ன பதிலோ, அதுதான் இதற்கும்" என்கிறார் கமல்.

கமல் விரும்பி சாப்பிடுகிற இடங்களில் ஒன்று அவரது வீட்டருகே அமைந்திருக்கும் சாம்கோ ஹோட்டல். சில நேரங்களில் அங்கு சாப்பிட வருபவர்கள் கமலின் அலுவலக வாசலில் வண்டியை நிறுத்தினால் செக்யூரிடிகள் கோபப்படுவதில்லை. ஏனென்றால் கமலின் வாழ்வில் ஒரு அங்கமாகவே இருக்கிறது இந்த ஹோட்டலும். ஒரு பிராமணர் உணவுப்பழக்கத்தை அசைவமாக்கிய பெருமை இந்த ஹோட்டலுக்கு உண்டு.

சாந்தோம் பள்ளியில் எட்டாவது வரைதான் படித்திருக்கிறார் கமல். ஆனால் உலக மொழிகளில் பல அவருக்கு அத்துப்படி. லாங்குவேஜ் வேறு, நாலெட்ஜ் வேறு என்று அடிக்கடி சொல்வது கமலின் வழக்கம்.

கமலின் ஆழ்வார்பேட்டை வீட்டுக்கே வந்து அரட்டையடிக்கிற நண்பர்களில் சுப்பிரமணியும் ஒருவர். இவரது கதை திறமையை கண்டு வியந்து பாரதிராஜாவிடம் கதை சொல்ல அழைத்துப் போனாராம் கமல். இந்த சுப்புரமணிதான் இன்றைய மணிரத்னம்!

கமல் சென்னைக்கு வந்து பிரபல நடிகர் ஆகிவிட்டாலும், அப்பா பரமக்குடியிலேயே இருக்கிறாரே என்ற வருத்தம் இருந்தது. பலமுறை அவரை சென்னைக்கு அழைத்தும் நான் வரலைப்பா என்று கூறிவிடுவாராம் அவர். ஆனால் மகனுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்றால் கூட முடியாமல் அவஸ்தைப்பட்டார் அந்த அப்பா.

அவர் அனுப்புகிற கடிதங்களை வாசகர் கடிதம் என்று நினைத்து கவனிக்காமல் விட்டு விடுவார்களாம். ஒரு முறை கமலின் கையெழுத்திட்ட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்றையும் வைத்து அவரது அப்பாவுக்கு அனுப்பி விட்டார்களாம். இதில் மிகவும் அப்செட் ஆன கமலின் அப்பா, தனது இன்னொரு மகனான சந்திரஹாசனுக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல, அதிர்ந்து போனார் கமல். உடனடியாக ஊருக்கு போய் நடந்த விஷயத்தை சொல்லி மன்னிப்பும் கேட்டாராம்.
மேலும் அறிய

Tuesday, September 29, 2009

> சன் பிக்சர்ஸில் குட்டி

தனுஷின் அடுத்த படைப்பு, குட்டி. யாரடி நீ மோகினி மாதி‌ரி இதுவும் தெலுங்கு ‌‌ரீமேக். மித்ரன் ஏ.ஜவஹர் இயக்கியிருக்கிறார்.

ஐந்து வருடங்களுக்கு முன் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ஆ‌ரியா படத்தையே, குட்டி என்ற பெய‌ரில் ‌‌ரீமேக் செய்துள்ளனர். கல்லூரி காதல்தான் படத்தின் கதை. ஹீரோயின் ஸ்ரேயா. அடக்கமான கல்லூரி மாணவியாக அவரை படத்தில் சித்த‌ரித்திருக்கிறார்கள்.

படத்தில் இரண்டாவது ஹீரோவாக இந்தி நடிகர் சமீர் தத்தானி அறிமுகம் ஆகிறார். தனுஷ், சமீர் தத்தானி, ஸ்ரேயா இந்த மூவருக்குள் நடக்கும் கதைதான் படம்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க, பாலசுப்பிரமணியம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபாவளிக்கு படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேம்பஸ் கதையான நினைத்தாலே இனிக்கும் வெற்றி பெற்றதால் குட்டி படத்தின் மீதும் ஆர்வமாக இருக்கிறது சன் பிக்சர்ஸ். வேட்டைக்காரன், கண்டேன் காதலை படங்களுடன் குட்டி படத்தையும் சன் பிக்சர்ஸ் வாங்கயிருக்கிறது என்பது நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவல்.
மேலும் அறிய

> விஜய்,தமன்னா அலுக்காத ரீடேக்!

கொச்சினில் நடந்து வருகிறது சுறா படப்பிடிப்பு. ஆனாலும் கமல்ஹாசனுக்கு விஜய் டிவி நடத்துகிற பாராட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அங்கிருந்து பறந்து வந்தார் விஜய். நடிப்பில் ரஜினி வழியை பின்பற்றும் விஜய், அடிப்படையில் கமல் மேல் மிகவும் பற்று கொண்டவர். அதனால்தான் இவ்வளவு கடுமையான வேலைகளுக்கு இடையேயும் கொச்சினிலிருந்து சென்னைக்கு பறந்து வந்துவிட்டார்.

சரி, கொச்சின் எபிசோட் சொல்லும் குளுகுளு மேட்டர் என்ன?

இந்த படத்தை துவங்கும் முன்பாகவே தமன்னாவை தங்க பஸ்பம் போல காட்ட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார்களாம். அதற்கு பொறுத்தமாகதான் காஸ்ட்யூம்களும் தயாரிக்கப் பட்டிருக்கின்றன. அடிக்கிற மழையிலே ஐஸ்கிரீமை விழுங்கிய மாதிரி, தமன்னாவை தண்ணியிலே போட்டு முங்கவும் முடிவெடுத்திருந்தாங்களாம். எல்லாவற்றுக்கும் சம்மதித்த தமன்னா, நாள் முழுவதும் கொச்சின் கடலில் குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

ஒரு காட்சியில் விஜய் தோளில் பாய்ந்து ஏறிக் கொள்வது போல நடிக்க வேண்டும். சுமார் பத்து முறையாவது அவர் விஜய் மீது பாய்ந்ததாக குறிப்பிடுகிறார்கள் யூனிட்டில். பெரிய ஹீரோக்களை பொறுத்தவரை ரீடேக் என்றால் லேசாக எரிச்சல் படவும் செய்வார்கள். ஆனால், இந்த முறை விஜயும் பொறுமையாக இருந்தாராம்.

பஞ்ச் டயலாக்கை ரசிக்கிற மனுஷருக்கு, பஞ்சு மூட்டைய சுமக்கறதுக்கு கசக்குமா என்ன?
மேலும் அறிய

> ரஜினி-கமலுக்கு தமிழக அரசு விருது...

தமிழக அரசின் சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2007ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது ரஜினிகாந்த்துக்கும், 2008ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது கமல்ஹாசனுக்கும் கிடைத்துள்ளது.

உளியின் ஓசை படத்தில் வசனம் எழுதிய முதல்வர் கருணாநிதிக்கு சிறந்த வசனகர்த்தாவுக்கான விருது கிடைத்துள்ளது.

2007, 2008ம் ஆண்டுக்கான விருதுகள் குறித்து முறைப்படி அரசு செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

2007 மற்றும் 2008-ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு, திரைப்பட விருதுகளுக்கான பரிந்துரைகளை வழங்கிட நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு விருதுகளுக்கான விவரங்களை தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது. விருதுகளுக்கான விவரம் வருமாறு:
விருதுகள் - 2007

சிறந்த படம்: முதல் பரிசு- (சிவாஜி), சிறந்த நடிகை- ஜோதிகா (மொழி), சிறந்த நடிகர்- சிறப்பு பரிசு- சத்யராஜ் (பெரியார்), சிறந்த நடிகை சிறப்பு பரிசு- பத்மப்பிரியா (மிருகம்), சிறந்த வில்லன் நடிகர்- சுமன் (சிவாஜி),

சிறந்த நகைச்சுவை நடிகர்- விவேக் (சிவாஜி), சிறந்த குணசித்திர நடிகர்- எம்.எஸ்.பாஸ்கர் (மொழி), சிறந்த குணசித்திர நடிகை- அர்ச்சனா (ஒன்பது ரூபாய் நோட்டு),

சிறந்த இயக்குநர்- தங்கர் பச்சான் (பள்ளிக்கூடம்), சிறந்த கதையாசிரியர்- எஸ்.எம்.வசந்த் (சத்தம் போடாதே), சிறந்த உரையாடல் ஆசிரியர்- பாலாஜி சக்திவேலு (கல்லூரி), சிறந்த இசையமைப்பாளர்- வித்யாசாகர் (மொழி), சிறந்த பாடலாசிரியர்- வைரமுத்து (பெரியார் மற்றும் பல படங்கள்),

சிறந்த பின்னணி பாடகர்- ஸ்ரீநிவாஸ் (ஒன்பது ரூபாய் நோட்டு), சிறந்த பின்னணி பாடகி- சின்மயி (சிவாஜி), சிறந்த ஒளிப்பதிவாளர்- நீரவ்ஷா (பில்லா), சிறந்த ஒலிப்பதிவாளர்- யு.கே.அய்யப்பன் (பில்லா), சிறந்த எடிட்டர்- சதீஷ் குரோசோவா (சத்தம் போடாதே).

சிறந்த கலை இயக்குநர்- தோட்டா தரணி (சிவாஜி), சிறந்த சண்டை பயிற்சியாளர்- அனல் அரசு (கருப்பசாமி குத்தகைதாரர்), சிறந்த நடன ஆசிரியர்- பிருந்தா (தீபாவளி), சிறந்த ஒப்பனைக் கலைஞர்- ராஜேந்திரன் (பெரியார்), சிறந்த தையல் கலைஞர்- அனுவர்தன் (பில்லா), சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர்- (ஆண்) கே.பி.சேகர் (மலரினும் மெல்லிய), சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர்- (பெண்) மகாலட்சுமி (மிருகம்)

விருதுகள் - 2008

சிறந்த படம்: முதல் பரிசு- தசாவதாரம், இரண்டாம் பரிசு- அபியும் நானும், மூன்றாம் பரிசு- சந்தோஷ் சுப்பிரமணியம், சிறப்பு பரிசு- மெய்ப்பொருள், பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம்: சிறப்பு பரிசு- பூ.

அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதிபலிக்கின்ற படம்- முதல் பரிசு- வல்லமை தாராயோ, அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதிபலிக்கின்ற படம்:- இரண்டாம் பரிசு- வண்ணத்துப் பூச்சி.

சிறந்த நடிகர்- கமல்ஹாசன் (தசாவதாரம்), சிறந்த நடிகை- சிநேகா (பிரிவோம் சந்திப்போம்), சிறந்த நடிகர்- சிறப்பு பரிசு- சூர்யா (வாரணம் ஆயிரம்), சிறந்த நடிகை சிறப்பு பரிசு- திரிஷா (அபியும் நானும்), சிறந்த வில்லன் நடிகர்- ராஜேந்திரன் (நான் கடவுள்).

சிறந்த நகைச்சுவை நடிகர்- வடிவேலு (காத்தவராயன்), சிறந்த நகைச்சுவை நடிகை- கோவை சரளா (உளியின் ஓசை), சிறந்த குணசித்திர நடிகர்- பிரகாஷ்ராஜ் (பல படங்கள்), சிறந்த குணசித்திர நடிகை- பூஜா (நான் கடவுள்), சிறந்த இயக்குநர்- ராதா மோகன் (அபியும் நானும்), சிறந்த கதையாசிரியர்- தமிழ்ச்செல்வன் (பூ).

சிறந்த உரையாடல் ஆசிரியர்- கலைஞர் மு.கருணாநிதி (உளியின் ஓசை), சிறந்த இசையமைப்பாளர்- இளையராஜா (அஜந்தா), சிறந்த பாடலாசிரியர்- வாலி (தசாவதாரம்), சிறந்த பின்னணி பாடகர்- பெள்ளிராஜ் (சுப்பிரமணியபுரம்), சிறந்த பின்னணி பாடகி- மஹதி (நெஞ்சத்தைக் கிள்ளாதே).

சிறந்த ஒளிப்பதிவாளர்- ஆர்தர் ஏ.வில்சன் (நான் கடவுள்), சிறந்த ஒலிப்பதிவாளர்- ரவி (வாரணம் ஆயிரம்), சிறந்த எடிட்டர்-பிரவீன்- ஸ்ரீகாந்த் (சரோஜா), சிறந்த கலை இயக்குநர்- ராஜீவன் (வாரணம் ஆயிரம்), சிறந்த சண்டை பயிற்சியாளர்- கனல் கண்ணன் (சிலம்பாட்டம்).

சிறந்த நடன ஆசிரியர்- சிவசங்கர் (உளியின் ஓசை), சிறந்த ஒப்பனைக் கலைஞர்- மைக்கேல் வெஸ்ட்மோர்- கோதண்டபாணி (தசாவதாரம்) சிறந்த தையல் கலைஞர்- ரவீந்திரன் (பிரிவோம் சந்திப்போம்). சிறந்த குழந்தை நட்சத்திரம்- ஸ்ரீலட்சுமி (வண்ணத்துப்பூச்சி), சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்)- எம்.ஏ.பிரகாஷ் (கி.மு.), சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்)- சவீதா (பல படங்கள்)

2006-2007-ம் ஆண்டுக்கான திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள்:

சிறந்த இயக்குநர்- ச.அன்பு (அரிதாரம்), சிறந்த ஒளிப்பதிவாளர்- பா.தினேஷ் கிருஷ்ணன் (திற), சிறந்த ஒலிப்பதிவாளர்- எம்.ராம்குமார் (தாய்), சிறந்த எடிட்டர்- பி.சசிகுமார் (தாய்), சிறந்த படம் பதனிடுபவர்- ரா.முருகன் (அகத்திணை)

2007-2008-ம் ஆண்டுக்கான திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள்:

சிறந்த இயக்குநர்- மு.கண்ணன் (அச்சுப்பிழை), சிறந்த ஒளிப்பதிவாளர்- ஆனந்தகுமார் (பழைய படம், சிறந்த ஒலிப்பதிவாளர்- லட்சுமி நாராயணன் (கனா), சிறந்த எடிட்டர்- பி.மர்பி (கனவு மெய்ப்பட), சிறந்த படம் பதனிடுபவர்- வெங்கடேஷ் பிரசாத் (கனா).
மேலும் அறிய

> ரஜினியின் வெடிச்சிரிப்பு

ஹாட்ரிக் அடிக்கப் போகிற சந்தோஷத்தில் இருக்கிறார் வெங்கட்பிரபு. சென்னை -28, சரோஜா, தொடர்ந்து கோவாவுக்காக காத்திருக்கிறது ரசிகர்கள் வட்டாரம். சுற்றி வளைத்து பார்த்தாலும் சரி, நேரடியாக முறைத்தாலும் சரி, வெங்கட்டின் ஒரே தந்திரம் சிரிப்பு. இதை வைத்துக் கொண்டுதான் பெரிய ஜனக்கடலை உள்ளங்கைக்குள் வைத்திருக்கிறார் அவர். கோவா எப்படி? அதையேன் கேட்கிறீங்க... இந்த படத்திலே பிரேம்ஜிக்கு பஞ்ச் டயலாக்கெல்லாம் இருக்கு தெரியுமா என்று வெடிக்கு திரி கொளுத்துகிறார் வெங்கட்.

தேனியிலிருந்து கோவாவுக்கு ஜாலி ட்ரிப் அடிக்கும் நண்பர்களுக்குள் நடக்கும் அடிதடி காதல் மோதல் நட்பு எல்லாவற்றையும் போட்டு குலுக்கி எடுக்கும் கதையாம் இது. சவுந்தர்யா ரஜினியிடம் கதை சொல்ல போயிருந்தாராம். அங்கே ஆரம்பித்து வைத்த சிரிப்பு, அப்படியே ரஜினி வரைக்கும் போயிருக்கிறது. அவரோ கதையை கேட்டுவிட்டு விழுந்து விழுந்து சிரிக்க, அந்த மூடிலேயே கோவாவுக்கு கிளம்பியது டீம். இவர்கள் போன சீசனில் மழை.

அப்பறம் என்ன? இதே போல லொக்கேஷன் உள்ள லங்காவி தீவுக்கு போய்விட்டார்கள். மலேசியாவுக்கு பக்கத்தில் இருக்கிறது இந்த இடம். சுமார் 40 நாட்கள் பிழிய பிழிய ஷ§ட்டிங்கை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பி சில நாட்கள் மட்டுமே ரெஸ்ட் எடுத்துக் கொண்டு மீண்டும் கோவாவுக்கு கிளம்பிவிட்டார்கள். (மழை விட்ருச்சு போல...)

ஒரேயடியா சிரிச்சிட்டு இருந்தா எப்படி? கொஞ்சம் சீரியஸ் ஆவுங்கப்பான்னு நினைச்ச மீடியா, இந்த படத்திலே நடிக்கும் சினேகா டூ பீஸ் டிரஸ்சில் நடிக்கிறாங்கன்னு கொளுத்திப் போட, மொத்த யூனிட்டும் மூட் அவுட். அதுக்குள்ளே இப்படி கொளுத்தி போட்டா எப்பிடி? படம் வந்தால் தெரியும், இது அவங்களுக்கே ஒரு புதிய கேரக்டர் என்று! அழுத்தமாக சொல்கிறார் வெங்கட்பிரபு.
மேலும் அறிய

> யுவன் பண்றது சரியா? சொல்லத்துடிக்கும் சோனியா

மனசாட்சி வேணாமாய்யா மனுஷனுக்கு? இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்ச அந்த பொண்ணு, இப்போ தனியா இருக்கு. சண்டை போட்டு பிரிஞ்சிருந்த ஆளுங்க ரெண்டு பேரும் ஒண்ணா சுத்த ஆரம்பிச்சிட்டாங்க. சேர்த்து வச்சாரே, அவருக்காக ஒரு வார்த்தை நாம பேசலாமேன்னு நினைச்சாரா அந்தாளு? இப்படி கூடி கூடி குமைகிறார்கள் யுவன் சங்கர் ஏரியாவில்!

என்னவாம்? யுவனுக்கும் செல்வராகவனுக்கும் பண விவகாரத்தில் முட்டிக் கொள்ள, போதும் இந்த பிரண்ட்ஷிப் என்று ஒதுங்கிக் கொண்டார் யுவன். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை என்று செல்வா சொன்னாலும், நாங்கள் பிரிந்தது நிஜம்தான் என்று போட்டு உடைத்தார் யுவன். மீண்டும் இணைவீர்களா என்ற கேள்விக்கு கூட, இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றுதான் கூறி வந்தார். இப்படிப்பட்ட உடைசலை ஒரே போனில் சரி பண்ணியவர் செல்வராகவனின் முன்னாள் மனைவி சோனியா அகவர்வால்தான்.

பேசாமலே இருந்த இருவரையும் பேச வைத்ததுடன், ஆயிரத்தில் ஒருவன் பட விழாவுக்கு கட்டாயமாக யுவனை வரவழைத்தார். அன்று இரவு நடந்த நட்சத்திர விடுதி பார்ட்டியில் இருவரையும் மனம் விட்டு பேச வைத்ததும் சோனியாதானாம். இப்போதெல்லாம் செல்வாவை தேடி தினமும் சென்று விடுகிறாராம் யுவன். மீண்டும் இருவரது காம்பினேஷனில் படங்கள் வெளிவரப் போவதாகவும் கிசுகிசுப்புகள். இந்த நேரத்தில்தான் சோனியாவுக்காக ஒரு வார்த்தை கூட செல்வாவிடம் பேசவில்லையே என்று யுவன் மீது வருத்தம் காட்டுகிறார்கள் கோடம்பாக்கத்தில்.

காதிலே விழுதா யுவன்?
மேலும் அறிய

Monday, September 28, 2009

> பன்றிக் காய்ச்சல்? பதற்றம் வேண்டாம்

ஐந்து மாதங்களுக்கு முன்பு, மெக்சிகோவில் பன்றிக்காய்ச்சல் என்ற பெயருடன் கண்டறியப்பட்ட அந்நோய் தற்போது உலகம் முழுவதையும் பதற வைத்துக்கொண்டிருக்கிறது.

இப்போது இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் தனது பயணத்தைத் தொடங்கிய பன்றிக்காய்ச்சல், நாடு முழுவதையும் நடுநடுங்க வைத்துக்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் இது ஒரு உயிர்க்கொல்லி நோயாக அறியப்படுவதுதான்.

ஏ1N1 என்று சொல்லப்படும் இந்த பன்றிக்காய்ச்சல் கிருமிக்கு இதுவரை நேரடியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என சர்வதேச சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

ஆனால் இந்திய மருத்துவத்தில் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே நமது சித்தர்கள் பட்சி தோஷம், பறவை தோஷம் என்று சொல்லி வைத்திருக்கின்றனர்.

மனிதர்களுக்கு, பிற உயிரினங்களிடத்தில் இருந்து பரவும் ஆபத்தான நோய்களை அவர்கள் அப்போதே கண்டு வைத்துள்னர்.

சில இடங்களில் அதிகப்படியான வெயிலும், அரைகுறையான மழையும், மாறுபட்ட சீதோஷ்ண நிலையும் நிலவும் காலங்களில் காய்ச்சல் அதிகம் வருவதை நாம் பார்த்திருக்கிறோம். பிற உயிரினங்களின் கிருமிகள், மனித உடலில் தொற்றுவதற்கு இந்தப் பருவம் ஏதுவாக இருக்கிறது.

சளி, இருமல், மூச்சிரைப்பு, தொண்டை கரகரப்பு, வாந்தி, தலைவலி, உடல்வலி, குறைந்த இரத்த அழுத்தம், பேதி இவைகளையே பன்றிக் காய்ச்சலுக்கு அறிகுறிகளாகக் கூறுகின்றனர்.

இந்த நோய் தொற்றினாலே உயிருக்கு ஆபத்து என்ற தற்போதைய அச்சம் சரியானதுதானா...?

நிச்சயமாக இல்லை... ஏற்கனவே வேறு எதாவது ஒரு நோயினால் பாதிக்கப்பட்டு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குன்றியிருக்கும்போது, இந்த நோய் எளிதாக தொற்றுகிறது.

காய்ச்சல் அறிகுறி உள்ள அனைவரும், பன்றிக்காய்ச்சலுக்கான சிறப்புப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என்று மத்தி யஅரசே அறிவித்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து இந்த நோயுடன் வந்தவர்கள் அருகில் இருந்தாலோ, இரண்டு நாட்களுக்கு மேலும் தொடர்ந்து காய்ச்சல் நீடித்தாலோ சிறப்புப் பரிசோதனையை மேற்கொள்ளலாம்.

மற்றவர்கள் சாதாரண காய்ச்சலுக்கான சிகிச்சையை எடுத்துக்கொண்டு காய்ச்சல் நிற்கும் வரை வீட்டில் ஓய்வெடுத்தாலே போதுமானது.

லேசான தலைவலி, சளி, இருமல், தொண்டை வறட்சி இவற்றால் தொண்டைப் பகுதியிலுள்ள நீர் குடலில் சிறிது சிறிதாக இறங்கி அஜீரணக் கோளாறை ஏற்படுத்தி காய்ச்சலை உண்டுபண்ணுகிறது. மேலும் சளியோடு கூடிய காய்ச்சல் இருப்பவர்கள் நீண்டதூரம் பயணம் மேற்கொள்ளும் போது அருகில் இருப்பவர்களுக்கு தொற்றிக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. இவர்களுக்கு சளிக்காய்ச்சலுக்கும், இருமலுக்கும் மருந்து கொடுத்தால் காய்ச்சல் குணமாகும்.

இந்த பன்றிக் காய்ச்சலுக்கு ஆயுர்வேத சித்த மருத்துவத்தில் மருந்துகள் உள்ளன. மருந்துகள் இல்லை என்று கூறும் வீண் விவாதங்களை நம்பவேண்டாம்.

சித்தர்கள் மனித உடலில் தோன்றும் அனைத்து நோய்களுக்கும் மருந்து கூறியுள்ளனர். போலியாக பகட்டு விளம்பரம் செய்யும் மருத்துவர்களை நம்பி ஏமாறாமல் நல்ல படித்துப் பட்டம் பெற்ற அல்லது பாரம்பரிய மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுங்கள். காய்ச்சலுக்கு மருந்தில்லை என்ற பீதியை புறம் தள்ளுங்கள்.

காய்ச்சல் அறிகுறி தென்பட்டதும், உடனடி சிகிச்சையாக கீழே குறிப்பிட்ட மருந்தைத் தயாரித்து உட்கொள்ள வேண்டும்.

வெற்றிலை - 2
கற்பூரவல்லி - 2
துளசி இலை -2
நல்ல மிளகு - 5
இவற்றை இடித்து நீரில் கொதிக்கவைத்து, சிறிது தேன் கலந்து சாப்பிட வேண்டும்.

பின்னர் காய்ச்சல் குணமாகும் வரை

சுக்கு - 3 கிராம்
மிளகு - 3 கிராம்
திப்பிலி - 3 கிராம்
சித்தரத்தை - 3 கிராம்
குறுந்தட்டி - 3 கிராம்
நறுக்குமூலம் - 3 கிராம்
அதிமதுரம் - 3 கிராம்
சடமாஞ்சி - 3கிராம்

இவை ஒரு வேளைக்கான அளவு

இவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து பொடியாக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்துவர, காய்ச்சல் முழுமையாக குணமடையும். அல்லது

சுக்கு - 1 துண்டு
மல்லி விதை - 10 கிராம்
சீரகம் - 5 கிராம்
சோம்பு - 5 கிராம்

இவைகளை நன்றாக இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து குடித்து வந்தால் காய்ச்சல் காணாமல் போய்விடும்.

குடிநீரில் சீரகம், ராமிச்சம் வேர் (வெட்டிவேரில் ஒரு வகை) துளசி, மிளகு (லிட்டருக்கு 2 அல்லது 3 மட்டும்) போட்டு கொதிக்க வைத்து ஆறியபின் வடிகட்டி பயன்படுத்தி வந்தால் இந்த நோய் எளிதில் தொற்றாது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க முடியும்.

பூமி குளிர மழை பெய்து, வளி மண்டலத்தில் பரவி இருக்கும் கிருமிகள் மண்ணில் ஒடுங்கும்போது, இதுபோன்ற காய்ச்சல் நோய்கள் தாமாக மறைந்துவிடும். எனவே மக்கள் இது குறித்து மரண பயம் கொள்ளத் தேவையில்லை.

சீதளத்தைக் குறைத்து சளியைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சளியைக் கட்டுப்படுத்தாமல் இதுபோன்ற நோய்களின் தாக்கத்தைக் குறைக்க முடியாது.

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி போன்ற மருத்துவத்தில் சளியைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் ஏராளம் உள்ளன என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதுபோல் நோய் வருவதற்கு முன்பு ( prevention) மருந்து எடுத்துக் கொள்வது நல்லது.

· உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை உட்கொள்ளுதல்,

· தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்து சாப்பிடும் பழக்கத்தை அறவே விட்டொழிக்க வேண்டும்.

· அவ்வப்போது சமைத்த சூடான உணவை மட்டுமே உட்கொள்ளுதல்.

· கைகளை அவ்வப்போது சோப்பு நீரால் கழுவுதல்.

· உள் மற்றும் வெளி ஆடைகளை சுத்தமாகப் பேணுதல்.

· கை குலுக்குவது, கட்டிப்பிடிப்பது போன்ற செயல்களைத் தவிர்த்தல்.

· பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களிடமிருந்து 1 மீட்டர் தூரம் விலகியே இருக்கவேண்டும். இந்த விதமான நோய்கள் பரவும் காலங்களில் அதிக மக்கள் கூடும் இடங்களுக்கும் நெரிசல் மிகுந்த பகுதிகளுக்கும் செல்வதை தவிர்ப்பது நல்லது.

· சுத்தமான, கொதிக்க வைக்கப்பட்ட குடிநீரை அதிகமாக குடித்தல்.

· பழங்கள், காய்கறிகள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுதல்.

ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாது கடைப்பிடித்து வந்தால் பன்றிக் காய்ச்சல் உங்கள் பக்கத்தில் கூட வராது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்போம் என்பதே சுகாதாரத்திற்கான தாரக மந்திரம்.
மேலும் அறிய

> நக‌ங்க‌ள் சொ‌ல்வது எ‌ன்ன

அக‌த்‌தி‌ன் அழகு முக‌த்‌தி‌ல் தெ‌ரியு‌‌ம் எ‌ன்பது போ‌ல் உட‌லி‌‌ன் ந‌ல‌ம் நக‌த்‌தி‌ல் தெ‌ரியு‌ம் எ‌ன்று கூறலா‌ம்.

பொதுவாக ஒருவரது நக‌த்தை வை‌த்தே அவரது ஆரோ‌க்‌கிய‌த்தை‌க் கூ‌றி‌விடலா‌ம்.

சிலரு‌க்கு நக‌ங்க‌ள் வெ‌ள்ளை வெளேரெ‌ன்று இரு‌க்கு‌ம். அவ‌ர்‌க‌ள் உடனடியாக கா‌ல்‌சிய‌ம் ச‌த்து‌ள்ள உணவுகளை உ‌ட்கொ‌ள்ள வே‌ண்டு‌ம். மு‌ட்டை, பா‌ல் போ‌ன்றவ‌ற்றை அ‌திக‌ம் எடு‌த்து‌க் கொ‌ள்வது‌ம் ந‌ல்லது.

இள‌ஞ்‌சிவ‌ப்பு ‌நிற‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் ந‌க‌ங்க‌ள்தா‌ன் உட‌‌ல் பூரண நல‌த்துட‌ன் இரு‌ப்பதை அ‌றி‌வி‌க்கு‌ம் ‌நிறுமாகு‌ம்.

வெளு‌த்த நக‌ங்க‌ள் ர‌த்த சோகையையு‌ம், ம‌ஞ்ச‌ள் ‌நிற நக‌ங்க‌ள் ம‌ஞ்ச‌ள் காமாலையையு‌ம் வெ‌ளி‌ப்படு‌த்து‌கி‌ன்றன.
மேலும் அறிய

Sunday, September 27, 2009

> ர‌ஜினியை முந்தும் எம்.ஜி.ஆர்.

இன்றும் எவர்கி‌‌ரீன் ஹீரோ என்றால் அது, எம்.ஜி.ஆர். தான். தமிழகத்தின் பத்து இடங்களிலாவது இவரது படங்கள் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும். நல்ல கலெ‌க்சனுடன் என்பது முக்கியமான விஷயம்.

ஒரு நடிகரை மாடலாக வைத்து உருவாகும் முதல் அனிமேஷன் படம் சுல்தான் தி வா‌ரியர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது தவறு. முதலில் தொடங்கப்பட்டது ர‌ஜினியின் சுல்தான் தி வா‌ரியர் என்றாலும், வெளிவரப் போவது, எம்.‌ஜி.ஆரை மாடலாக வைத்து உருவாகியிருக்கும் புரட்சி‌த் தலைவர். ஆச்ச‌ரியமாக இருக்கிறதா? ஆனால், உண்மை அதுதான்.

2007 ஆம் ஆண்டு சிறந்த அனிமேஷன் படத்துக்கான தேசிய விருதை வென்ற படம், எல்லாமே நாங்கதான். இந்த அனிமேஷன் படத்தை உருவாக்கிய டீம், புரட்சி‌த் தலைவர் என்ற பெய‌ரில் எம்.‌ஜி.ஆரை மாடலாக்கி ஒரு படத்தை உருவாக்கி வருகிறது. இதில் வரும் எம்.‌ஜி.ஆர். நிஜ எம்.‌ஜி.ஆரைப் போல பாட்டு பாடுகிறார், சண்டை போடுகிறார். படத்தில் இவருக்கு ஜோடியும் உண்டு, சரோஜாதேவி.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்.‌ஜி.ஆர். பயன்படுத்தியது போன்ற காஸ்ட்யூம்தான் இந்த அனிமேஷன் எம்.‌ஜி.ஆருக்கும். அசப்பில் சுல்தான் தி வா‌ரியர் ர‌ஜினி போலவே இருக்கிறார். சுல்தான் தி வா‌ரியர் திரைக்கு வருமுன் எம்.‌ஜி.ஆ‌ரின் புரட்சி‌த் தலைவரை வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
மேலும் அறிய

> ஸ்ருதியை பாராட்டிய ஜெயலலிதா!

நாலாபுறத்திலிருந்து பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கிறது ஸ்ருதிக்கு. இவருக்கு அமைந்த முதல் படமான உன்னைப்போல் ஒருவன் பாடல்கள் மூலம் தன்னை புலிக்கு பிறந்த புலி என்று நிரூபித்திருக்கிறார் ஸ்ருதி. இசைஞானி இளையராஜாவும், மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதனும் இவரை ஆசிர்வதித்தார்களாம். அந்த சந்தோஷத்தில் இருந்து மீளும் முன்பாகவே இன்னொரு சந்தோஷம் ஸ்ருதிக்கு. அது?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து வந்த தொலைபேசி. இந்த படத்தை பார்த்து பின்னணி இசைக்காக பாராட்டினாரா, அல்லது பாடல்களை கேட்டு அசந்து போய் அழைத்தாரா, தெரியவில்லை. ஆனால், தொலைபேசியில் தனது மனப்பூர்வமான பாராட்டுகளை ஸ்ருதிக்கு தெரிவித்தாராம்.

இசை துறையில் மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று அவர் மனப்பூர்வமாக பாராட்டியதாக குறிப்பிடுகிறார் ஸ்ருதி. அவருக்கு தொடர்ந்து கிடைத்து வரும் இந்த பாராட்டுகள் ஸ்ருதியின் நடிப்பாசைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் வைக்கக் கூடும் என்ற எண்ணத்தை தோற்றுவித்திருக்கிறது. ஆனாலும், பாலிவுட்டிலிருந்து வருகிற அழைப்புகளையும் அக்கறையாக பரிசீலித்து வருகிறாராம் ஸ்ருதி.
மேலும் அறிய

> பிரபு-நயனுக்கு சேனல் போட்ட திடீர் கண்டிஷன்!

விதி வழியோட போனாலும் வில்லங்கம் விருந்து வச்சு அழைக்குமாம். அப்படி ஆகியிருக்கு நயன்தாரா நிலைமை. பிரபுதேவாவுடனான கள்ள காதலை முறித்துக் கொண்டு அவரிடமிருந்து விலகிக் கொண்டதாக அறிவிக்கணும். அப்படி இல்லேன்னா நயன்தாரா படங்கள் ஓடும் தியேட்டர்கள் முன்பாக போராட்டம் பண்ணுவோம் என்று அறிவித்திருக்கிறது மாதர் சங்கங்கள்.

ஏதோ நாலு பேரு ஒண்ணா சேர்ந்து கத்துறாங்க. நம்மை என்ன செய்ய முடியும்? என்று அலட்சியமாக போய்விட முடியாது நயன்தாரா. ஏனென்றால் மாதர் சங்கங்களின் மகிமை என்ன என்பதை கடந்த காலங்களில் உணர்த்தியிருக்கிறார்கள் பல விஷயங்களில். எனவே நயன்தாரா பிரபுதேவா விவகாரத்தில் அது சீரியஸ் ஆகாமல் பார்த்துக் கொள்வது இரு தரப்புக்குமே நல்லது.

இதற்கிடையில் பெங்களூர் மற்றும், மும்பையிலேயே தங்கியிருக்கும் பிரபுதேவா, சென்னைக்கு வருவதையே தவிர்த்து வருகிறாராம். வந்தால் மனைவிக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற அச்சம்தான் காரணம். ஆனால் போனிலேயே தனது அதிருப்தியை வெளியிட்டதோடு இப்படி மீடியாவிடம் பேசி மானத்தை வாங்குறியே என்றும் கடிந்து கொண்டாராம்.

தலைக்கு மேலே போய்விட்டது. இனிமேலும் அமைதியாக இருந்தால் குல்லாதான் மிஞ்சும். எனவே போராட்டத்தை வலுவாக்குவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் ரமலத். இதற்கிடையில் சென்னையில் 28 ந் தேதி நடைபெறும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவெடுத்திருந்த கள்ளக்காதல் தம்பதி அந்த திட்டத்தையே கைவிட்டு விட்டார்களாம்.

கமல்ஹாசனுக்கு எடுக்கப்படும் இந்த விழாவில் இந்த தம்பதிகள் கலந்து கொண்டால் நிகழ்ச்சியின் நோக்கம் திசை மாறக் கூடும். அது கமலுக்கு பெருமை சேர்ப்பதாக அமையாது என்பது தொலைக்காட்சி நிர்வாகத்தின் கணிப்பு. எனவே அவர்கள் தரப்பிலிருந்தே இந்த கள்ளக்காதல் தம்பதிகளுக்கு "வராதீர்கள்" என்று செய்தி போயிருக்கிறதாம்.

(கள்ள)காதல் கொடுத்த பரிசை பார்த்தீங்களா?
மேலும் அறிய

Saturday, September 26, 2009

> வளரும் நடிகை... விரட்டும் வதந்தி!

கந்தா வரட்டும். கல்லா நிரம்பும் என்று காத்துக் கொண்டிருக்கிறார் மித்ரா. பாபு கே விஸ்வநாத் இயக்கும் இந்த படத்தில் கரணுக்கு ஜோடியாக நடிக்கிறார் இந்த இளம் தென்றல். அசின், நயன்தாரா, மீராஜாஸ்மின், த்ரிஷா என்று சேச்சிகளின் ஆட்சியில் திக்குமுக்காடும் தமிழ்சினிமா மித்ராவுக்கும் ஒரு மிலிட்டரி சல்யூட் அடிக்க தயாராகி வருகிறது. ஆனால்...?

என்ன ஆனால்? சிங்கத்துக்கே முக்காடு போடுற ஆளுங்க, சில் வண்டு மித்ராவை சும்மா விடுவாங்களா? பொண்ணுக்கு நடிப்பே வரலே தெரியுமா? படாத பாடு படுறாரு டைரக்டர் என்றும், அந்த பொண்ணுக்கு எல்லாம் நல்லாயிருக்கு. டான்ஸ் மட்டும்தான் சுட்டு போட்டாலும் வரலே என்றும் அவர் காதுபடவே கிசுகிசுக்கிறார்களாம். அதனால் வர்ற வாய்ப்புகள் எல்லாம் அணைகட்டி அப்படியே நிக்குது. கந்தா வரட்டும். கால்ஷீட் கேட்டுக்கலாம் என்று கவனமாக ரிவர்ஸ் அடிக்கும் இவர்களை நினைத்து கண்ணீர் நனைகிறாராம் மித்ரா.

இப்படிதான் கண்ணு சரியில்லே, மூக்கு சரியில்லே என்று வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சுனைனா இன்றைய தேதியில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். பெரிசுங்க கூடவே நடிக்கிறாரே, நமக்கு சரிபட்டு வருமா என்று இளம் ஹீரோக்களால் ஒதுக்கப்பட்ட நயன்தாரா, இன்றைய தேதியில் ஒரு கோடி சம்பளத்தை நெருங்கிவிட்டார். அதனால....?

என்ன அதனால? மித்ராவை இப்பவே புக் பண்ணினா அது எதிர்கால இன்வெஸ்மென்ட்டா கூட இருக்கலாம்!
மேலும் அறிய

Friday, September 25, 2009

> விஜய், விக்ரம், சூர்யா, விஷால் -ஒண்ணு சேருறாங்க

விஜய், விக்ரம், சூர்யா, விஷால் நாலு பேரும் ஓரிடத்தில் கூடினால் நவகிரகத்தை பார்த்த ஃபீலிங் இருக்கும். அந்தளவுக்கு உள்ளுக்குள் கர்...புர்... ஆகிற கோஷ்டி இது. ஆனால் இந்த பகையை மறந்து பரவச நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள் ஒரு விஷயத்தில்!

லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து பாடும் ஒரு இசை ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் விஜய் ஆன்ட்டனி. அதில்தான் இந்த சூப்பர் ஹீரோக்கள் கலந்து கொண்டு பாடி நடிக்கப் போகிறார்களாம். ஆஹா... ஒன்ணு கூடிட்டாங்களே என்று ரசிகர்கள் சந்தோஷப்பட வேண்டாம். இவர்களை அணுகும் போதே “எல்லாரும் ஒரே பிரேமில் வர்றது கஷ்டம்” என்று கூறிவிட்டார்களாம் தெளிவாக.

“அவரு வராத நாளா சொல்லுங்க. நான் வந்து நடிச்சு கொடுத்திட்டு போயிடுறேன்” என்று கிளிப்பிள்ளை மாதிரி ஒரே வார்த்தையை ஒப்பித்தார்களாம் நால்வரும். “பிஸியாக இருப்பதால் நாங்கள் சொல்லுகிற தேதியில் படப்பிடிப்பை வைத்தால் சவுரியமாக இருக்கும்” என்று அடிஷனல் வேண்டுகோளும் வைத்தார்களாம்.

எல்லாவற்றும் தலையசைத்து சம்மதித்திருக்கிறது இந்த ஆல்பத்தை எடுக்க முடிவு செய்த டீம். இதே கல்லூரியில் படித்த இயக்குனர்களும் இதில் நடிப்பார்கள் என்பது கூடுதல் பீட்ஸா!
மேலும் அறிய

> மீண்டும் சினேகாவுக்கு சிக்கல்

எந்த நேரத்தில் ஆக்ஷன் படத்தில் நடிக்க ஆரம்பித்தாரோ, போகிற இடங்களில் கூட பவானி ஐபிஎஸ் ஆகிவிடுகிறார் சினேகா. அதாவது வம்புக்கு ‘வெல்கம்’ போடுகிற மாதிரி சச்சரவுகளில் சிக்கி, சந்தோஷத்தை போக்கிக் கொள்வது! சில தினங்களுக்கு முன் கடை திறப்பு விழா ஒன்றுக்காக திருச்சிக்கு போயிருந்தார். போன இடத்தில் இவரை நெருக்கி தள்ளிய கூட்டத்திலிருந்து ஒரு கை இவரது இடுப்பை கிள்ள, அதிர்ந்தே போனார் சினேகா. நடிகைகள் வாழ்வில் இதெல்லாம் சகஜம் என்றாலும், சினேகாவுக்கு கோபம் மூக்கு மேல் வந்துவிட்டது.

தன்னை கிள்ளிய ஆளை செக்யூரிடிகளுக்கு அடையாளம் காட்டிவிட்டார். “அதோ, அந்த நீல சட்டைதான்...” ஆபத்துக்கு உசிரையே கொடுக்கிற ஆளுங்களாச்சே? அடிச்சு துவைச்சுட்டாங்க அந்த நீல சட்டைக்காரரை. நல்லவேளையாக செய்தியை கேள்விப்பட்ட போலீஸ் ஓடிவந்து மீட்டது நீல ஆசாமியை. ஆனால் அவரோ, “கூட்டத்திலே கை பட்டுடுச்சு. அவ்வளவுதான். நான் தவறாக நடந்து கொள்ளவில்லை. இந்த கடைக்கு பர்சேஸ் பண்றதுக்காக என் மனைவியோடு வந்தவன் நான். இந்த நேரத்திலே இப்படி யாராவது நடந்து கொள்வாங்களா?” என்கிறார்.

விவகாரம் இதோடு முடிந்தால் பரவாயில்லை. “என் கணவர் எங்கள் ஊர் பகுதியில் நல்ல ஸ்டேட்டசில் இருப்பவர். அவருக்கு இப்படி ஒரு அவமானம் இழைக்கப்பட்டிருக்கிறது. இந்த கொடுமையை நான் சும்மாவிட மாட்டேன். சினேகா மீதும், சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் மீதும் மான நஷ்ட வழக்கு தொடருவேன்” என்று கூறியிருக்கிறார் அவரது மனைவி.

சப்போர்ட்டுக்கு எஸ்எம்எஸ் புகழ் ராகவேந்திராவை வேணும்னா கூப்பிட்டுக்கோங்க மக்கா!
மேலும் அறிய

Thursday, September 24, 2009

> த‌மி‌ழ் வருட‌ங்க‌‌ளி‌ன் பெய‌ர்க‌ள்

த‌மி‌ழ் ஆ‌ண்டுக‌ள் ஒ‌வ்வொ‌ன்‌றி‌ற்கு‌ம் ஒரு பெய‌ர் உ‌ண்டு. இது மொ‌த்த‌ம் 60 ஆகு‌ம். த‌ற்போது நட‌ப்பது ச‌ர்வதா‌ரி. வரு‌ம் ஏ‌ப்ர‌லி‌ல் துவ‌ங்க இரு‌ப்பது ‌விரோ‌தி ஆ‌ண்டு.

வ‌ரிசையாக 60 ஆ‌ண்டுக‌ளி‌ன் பெய‌ர்களை‌ப் பா‌ர்‌ப்போ‌ம்.

1. பிரபவ
2. விபவ
3. சுக்ல
4. பிரமோதூத
5. பிரசோற்பத்தி
6. ஆங்கீரச
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதானிய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷூ
16. சித்திரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வசித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. ஜய
29. மன்மத
30. துன்முகி
31. ஹேவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36. சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாசுவ
40. பரபாவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌமிய
44. சாதாரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராட்சச
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரௌத்திரி
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோத்காரி
58. ரக்தாட்சி
59. குரோதன
60. அட்சய
மேலும் அறிய

> உலக சமா‌ச்சார‌ங்கள்

ஊ‌ர் கதை, உறவு‌க் கதை எ‌ல்லா‌ம் பேசுவதை ‌விட, உலக‌க் கதை பேசலா‌ம் அ‌ல்லது உலக ‌விஷய‌ங்களை‌ப் ப‌ற்‌றி அ‌றி‌ந்து கொ‌ள்ளலா‌ம். அதுதா‌ன் இ‌ந்த கால‌க் குழ‌ந்தைகளு‌க்கு ‌மிகவு‌ம் ந‌ல்லது.

இந்தியாவின் மிக உயரமான ரெயில் நிலையம் குங் ரெயில் நிலையம்.

பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபலமான ஈபில் டவரை வடிவமைத்தவர் கஸ்டவ் ஈபில். அவர்தான் அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையையும் வடிவமைத்தவர்.

உலகில் மிக அதிக மக்களால் பேசப்படும் மொழி ‌சீன மொ‌ழியான மண்டாரின். (ம‌க்க‌ள் தொகை‌யி‌ல் முத‌லிட‌த்‌தி‌ல் இரு‌க்‌கிறத‌ல்லவா)

உலகிலேயே மிக வேகமாக ஓடும் பூச்சி இனம் கரப்பான் பூச்சி. ஒரு கர‌ப்பா‌ன் பூ‌ச்‌சி மணிக்கு 4.28 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்.

உலகிலேயே முதன் முதலில் இங்கிலாந்தில்தான் எட்வேர்- பாரீஸ்டன் தெருக்களிடையே 1863-ல் பாதாள ரயில் விடப்பட்டது.

உலகில் அதிக வேகமாக காற்று வீசக்கூடிய பகுதி அண்டார்டிகாவின் காமன்வெல்த் பே.

பிலிப்பைன்ஸ் நாட்டுக் கடலில் 1934-ம் ஆண்டு உலகிலேயே மிகப்பெரிய முத்து கிடைத்தது. அதன் நீளம் 24 சென்டிமீட்டர், விட்டம் 14 செ.மீ.

வெள்ளை மாளிகையில் வசிக்காத ஒரே அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன்.

ஷேக்ஸ்பியர் எழுதிய கடைசி நாடகம் "தி டெம்ப்ஸ்ட்''.

76 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் வால் நட்சத்திரம் ஹாலி.

உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரி‌ந்த ‌விஷய‌ங்களை எ‌ங்களுட‌ன் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ளலா‌ம். உ‌ங்க‌ள் பெயருட‌ன் வெ‌ளி‌யிட‌ப்படு‌ம்.
மேலும் அறிய

> நட்சத்திரங்களால் களைகட்ட போகும் சென்னை

அடுத்த மாதம் ஃபெப்சி தொழிலாளர்களின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடைபெற இருக்கிறது. இதில்தான் முதல்வர் கலைஞருக்கு விருதளிக்க போகிறது ஃபெப்சி. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கிற இந்த மாநாடு ஃபெப்சி தொழிலாளர்கள் மத்தியில் பிரபலம். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாநிலத்தில் நடத்துவார்களாம். இந்த முறை சென்னையில்!

பாலிவுட்டிலிருந்து ஹிருத்திக் ரோஷன், தெலுங்கிலிருந்து பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி, நாகார்ஜுனா, கன்னடத்திலிருந்து விஷ்ணுவர்த்தன், சிவராஜ்குமார் ஆகியோர் நிகழ்ச்சி நடைபெறும் நாளில் சென்னைக்கு வரவிருக்கிறார்களாம். நான்கு நாட்கள் நடைபெறப் போகும் இந்த மாநாட்டிற்காக அகில இந்தியாவிலும் படப்பிடிப்புக்கு விடுமுறை விட முடிவெடுத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட நாட்களில் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடந்தால் கூட நிறுத்திவிட்டு சென்னைக்கு வர வேண்டும் என்று உத்தரவாம்.

தமிழகத்திலிருந்து எல்லா நடிகர் நடிகைகளும் கலந்து கொள்வார்கள் என்பது உத்தரவாதம். அதே நேரத்தில் ரஜினியும் கமலும் கலந்து கொள்ள சம்மதித்திருக்கிறார்களாம். இந்தியா முழுவதுமிலிருந்து சூப்பர் ஆக்டர்களும், ஸ்டார்களும் சென்னையை குறி வைத்திருப்பதால், இப்பவே நட்சத்திர விடுதிகள் ஃபுல். ஆச்சர்யம் என்னவென்றால், ஃபெப்சி நிர்வாகிகள் மேற்படி நடிகர்களுக்கு ஃபிளைட் டிக்கெட் எடுத்துக் கொடுக்க முன்வந்த போதும் கூட, “எங்கள் செலவில் நாங்களே வருகிறோம். நீங்கள் சிரமப்பட வேண்டாம்” என்று கூறிவிட்டார்களாம் அந்த ஹீரோக்கள்.
மேலும் அறிய

> அடிக்கட்டும் பார்க்கலாம் -நயன் சவால்!

பிரபுதேவா-நயன்தாரா காதல் விவகாரத்தில் வாயையே திறக்காமல் இருந்த பிரபுதேவாவின் மனைவி ரமலத் இப்போது பத்திரிகைகளிடம் தனது குமுறலை வெளிப்படுத்த தொடங்கியிருக்கிறார். இது தொடர்பாக கண்ணீரும் கவலையுமாக முன்னணி நாளிதழ் ஒன்றில் கருத்து தெரிவித்திருக்கும் அவர், இனிமேலும் என் கணவருடன் நயன்தாராவை பார்த்தால் அந்த இடத்திலேயே அடிப்பேன் என்று கூறியிருப்பதுதான் அதிர்ச்சி.

அந்த பேட்டியில் அப்படி என்னதான் கூறியிருக்கிறார் ரமலத்?

ஒரு மகனை பறிகொடுத்துவிட்டு துக்கத்தில் இருக்கும்போது, அந்த துக்கத்தை கூட என் கணவருடன் பங்குபோட்டுக்கொள்ள விடாமல் நயன்தாரா இப்படிச் செய்வது நியாயமல்ல. நாளைக்கு நயன்தாராவுக்கும் இந்த நிலை வராது என்பது என்ன நிச்சயம்?

நயன்தாரா கேரளாவில் இருந்து என்ன 'நோக்கத்துக்காக' இங்கே வந்தாரோ, அதை மட்டும் செய்யட்டும். அதைவிட்டுவிட்டு, அடுத்தவர் குடும்பத்தை கெடுக்கக் கூடாது. இந்த பிரச்சனையில், ஒரு நடிகரின் தலையீடு இருந்து வருவதாக கேள்விப்படுகிறேன். அவர், புரோக்கர் மாதிரி இருந்துகொண்டு, என் கணவருக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் தூது போவதாக சொல்கிறார்கள். முதலில் அவர் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்த்துவிட்டு, மற்றவர்கள் பிரச்சனைக்கு வரட்டும்.

நான் இருக்கும்போது, வேறு எந்த பெண்ணையும் என் கணவர் திருமணம் செய்ய முடியாது. யாராக இருந்தாலும் விட மாட்டேன். என் கணவர் எனக்கும், என் குழந்தைகளுக்கும் மட்டும்தான் சொந்தம். யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.

இதுதொடர்பாக ஒருமுறை நயன்தாராவுடன் நான் போனில் பேசி, சண்டை போட்டேன். அதன்பிறகும் அவர் என் கணவருடன் சுற்றுவதை நிறுத்தவில்லை. இனிமேல் அவரை நேரில் எங்காவது என் கணவருடனோ அல்லது தனியாகவோ பார்த்தால், அடிப்பேன்.

மனைவி இருக்கும்போது கணவர் இன்னொரு திருமணம் செய்தால், அவரை கைது செய்கிறார்கள். அதேபோல் இன்னொருத்தியின் கணவரை அபகரிக்க முயற்சிக்கும் பெண்களையும் கைது செய்ய வேண்டும். நடிகர் சிலம்பரசனைக் காதலித்து, திருமணம் செய்துகொள்கிற அளவுக்கு நெருங்கிய நிலையில், அவரை தூக்கி வீசியவர்தான் இந்த நயன்தாரா. இதே மாதிரி என் கணவரையும் நாளைக்கு நயன்தாரா தூக்கி வீசமாட்டார் என்று என்ன நிச்சயம்? இதை உணர்ந்து என் கணவர், நயன்தாராவின் மாயவலையில் இருந்து விடுபட வேண்டும்.

இவ்வாறு அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் ரமலத்.

உடனடியாக இந்த பேட்டி குறித்த தகவல் சென்னையில் இருந்து நயன்தாராவுக்கு நெருக்கமானவர்கள் மூலம் போனது. பேட்டியை போனிலேயே படித்து காண்பித்தார்களாம். முழுவதையும் கேட்ட நயன் சொன்ன பதில்தான் டெரர். என்னை அடிப்பேன் என்று அந்த பேட்டியில் சொல்லியிருக்கிறார் ரமலத். இதை வைத்தே நான் அவர் மீது போலீசில் புகார் கொடுக்க முடியும். வருகிற 28 ந் தேதி விஜய் டி.வி நடத்தவிருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் நானும் பிரபுதேவாவும் சேர்ந்து கலந்து கொள்ளப் போகிறோம். முடிந்தால் அங்கு வந்து அடிக்கட்டும் பார்க்கலாம் என்று சவால் விட்டாராம். ஆக, 28 ந் தேதி இருக்கு பஞ்சாயத்து!
மேலும் அறிய

Wednesday, September 23, 2009

> அசினுக்கு ஆபரேஷன்!

இருங்க... இருங்க... பதறாதீங்க. நடிகைகளுக்கு ஒண்ணுன்னா நம்ம மனசுதான் தாங்காதே... மேட்டர் அவ்வளவு சீரியஸில்லை... நடிகை அசினுக்கு சைனஸ் தொல்லை இருப்பதால் இன்று மும்பையில் அவருக்கு ஆபரேஷன் நடக்கிறது.

இந்த ஆபரேஷனில் அவரது மூக்குப் பகுதியில் உள்ள சதை சீரமைக்கப்பட உள்ளதாம்.

அசினுக்கு நீண்ட நாட்களாகவே சளித் தொல்லை இருந்து வருகிறதாம். இதைச் சரிசெய்ய எண்டோஸ்கோபிக் சைனஸ் சர்ஜரி செய்கிறார்களாம்.

மும்பையில் உள்ள கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில் இன்று இந்த அறுவைச் சிகிச்சை நடக்கிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அசின், "இது சின்ன சர்ஜரிதான். இரண்டு மூன்று நாட்களில் குணமாகி வந்துவிடுவேன்.

இப்போதைக்கு கைவசமிருந்த விளம்பரப் படங்களையெல்லாம் முடித்துவிட்டேன். ஆபரேஷன் முடிந்து வந்ததும் பழையபடி லண்டன் ட்ரீம்ஸ் படத்துக்காக சல்மான் கானுடன் படம் தொடர்பான விளம்பர வேலைகளில் பிஸியாகி விடுவேன்," என்றார்.
மேலும் அறிய

> மீடியாவிடம் கைய்யும் மெய்யும்மாய் சிக்கிய நயன் ,பிரபுதேவா ?

வர்ற தீபாவளி இவங்களுக்கு தலை தீபாவளியா இருக்குமோ? இருக்கிற பொழப்பையெல்லாம் விட்டுட்டு இந்த மேட்டர்லேயே பழியா கிடக்கிற தமிழ்சினிமா ரசிக பெருமக்களுக்கு.... நீங்க நினைக்கிற மாதிரி அது ஒன்ணும் அவ்வளவு சாதாரணமான விஷயமா தெரியலே மக்களா... நயன்தாராவும், பிரபுதேவாவும் நெருக்கமாக இருந்தாலும் எந்த விழாவுக்கும் ஒன்றாக வந்ததில்லை. ஆனால் கடந்த வாரம் மும்பையில் ஒரு தியேட்டரில் இருவரையும் ஒன்றாக பார்த்த மீடியா வூடு கட்டி அடித்துவிட்டது.

தான் இயக்கிய வான்ட்டட் படத்தின் முதல் காட்சியை பார்க்க மும்பைக்கு போயிருந்தார் பிரபுதேவா. கூடவே நயன்தாராவும். பிரிமியர் ஷோவில் எல்லாரும் வந்திருக்கும் போது நயன்தாராவும் இருந்திருந்தால் சிக்கல் இல்லை. ஆனால் இது பிரிமியர் இல்லை. தியேட்டர் ஷோ. அங்குதான் ஜோடியாக போனார்கள் இருவரும். இருவரையும் வழி மறித்துக் கொண்ட மீடியா, உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சா? என்று கேள்வி எழுப்ப, நோ கமெண்ட்ஸ் என்று பதிலளித்தார் நயன்தாரா.

ஆனால் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாக தெலுங்கு, மற்றும் இந்தி படவுலகத்தில் கிசுகிசுக்கிறார்கள். இப்போதிருக்கும் சூழலில் அது சாத்தியமா? பிரபுதேவா முறைப்படி விவாகரத்து வாங்கிய பிறகுதானே திருமணம் செய்து கொள்ள முடியும்? இப்படி ஏராளமான கேள்விகள். இந்த விவகாரத்தில் பிரபுதேவாவுக்கு ஆதரவாக பலரும், அவரது மனைவி ரமலத் என்கிற லதாவுக்கு ஆதரவாக சிலரும் இருக்கிறார்கள். இவர்களுக்குள் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதெல்லாம் ஒரு முடிவுக்கு வந்த பிறகுதான் இந்த காதல் கல்யாணத்தில் முடியுமா? அல்லது பாதியிலேயே புட்டுக் கொள்ளுமா என்று தெரியும்.

பார்க்கலாம்...
மேலும் அறிய

Tuesday, September 22, 2009

> மொபைல் தொழிநுட்பத்தின் வளர்ச்சி

மொபைல் போனின் பரிமாணங்கள் இன்று அனைத்து வகைகளிலும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. ஒருவருக்கொருவர் வயர்லெஸ் இணைப்பில் பேசுவதற்கு மட்டும் எனத் தொடங்கிய இந்த சாதனம் இன்று கையடக்கக் கம்ப்யூட்டராக மாறி, நம்முடைய அன்றாட பல வேலைகளை மேற்கொள்ள உதவியாய் உள்ளது. இது தொடங்கிய நாள் தொட்டு, வளர்ந்த நிலைகளை இங்கு காணலாம்.

1920

இரு வழி ரேடியோ தொடர்பினை அமெரிக்க போலீஸ் தொடங்கி மொபைல் போனுக்கான விதையை ஊன்றியது.

1947

ஏ.டி. அண்ட் டி பெல் லேப்ஸ் சிறிய செல்களுடனான நெட்வொர்க்கினை குறைந்த தூரத்தில் இயங்கும் ட்ரான்ஸ்மீட்டர்களுடன் இணைக்கையில் அதிக தூரத்தில் அதனை இயக்க முடியும் என கண்டறிந்தது.

1954

காரிலிருந்து முதல் முதலாக வெளியே உள்ள போனை வயர்லெஸ் முறையில் தொடர்பு கொள்ள முடிந்தது.

1970

பெரும் செல்வந்தர்களும் பெரிய மனிதர்களும் காரிலிருந்து போன் செய்திட முடிந்தது.

1973

மோட்டாரோலா நிறுவனத்தின் டாக்டர் மார்டின் கூப்பர் தெருவில் நடந்து செல்கையிலும் வயர்லெஸ் இணைப்பு இன்றி தொலைபேசியுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதனை நிரூபித்தார். அவர் பயன்படுத்தியது மோட்டாரோலா டைனா ஏ.டி.சி.

1979

ஜப்பான் டோக்கியோவில் முதல் வர்த்தக ரீதியான செல் போன் பயன்பாடு தொடங்கியது.

1983

டாக்டர் மார்டின் கூப்பர் 2,500 பவுண்ட் விலையில் முதல் மோட்டாராலோ டைனா ஏ.டி.சி. 8000 எக்ஸ் என்னும் மொபைல் போனை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்தார்.

1984

விலை அதிகம் இருந்த போதிலும் ஏறத்தாழ 3 லட்சம் பேர் உலகம் முழுவதும் மொபைல் போனைப் பயன்படுத்தினார்கள்.

1989

மோட்டாரோலா மைக்ரோ டாக் போன் என்னும் முழுமையான மொபைல் போனை அறிமுகப்படுத்தியது.

1990

2ஜி தொழில் நுட்பமும் அதில் இயங்கும் ஜி.எஸ்.எம். டிஜிட்டல் மொபைல் போனும் புழக்கத்திற்கு வந்தது. அமெரிக்காவில் ட்ரெயினில் ஏறிய ஒருவர் வெகு தொலைவில் இருந்த இன்னொருவருக்கு தான் ட்ரெயினில் ஏறி பிரயாணம் தொடங்கியதைக் கூறியதுதான் முதல் டிஜிட்டல் மொபைல் செய்தி என அறிவிக்கப்பட்டது.

1991

அமெரிக்க சகோதரர்களைப் பின்பற்றி ஐரோப்பிய மக்களும் தங்களுடைய ஜி.எஸ்.எம். நெட்வொர்க்கைத் தொடங்கினர். தட்டையான, எடை குறைந்த சிறிய பேட்டரிகளில் இயங்கும் மொபைல் போன்கள் வரத் தொடங்கின.

1992

மிகப் பிரபலமான கேண்டி பார் அமைப்பிலான நோக்கியா போன் அறிமுகம். இதனை கைகளில் எடுத்துச் செல்வது பேஷனாகியது.

1996

மோட்டாரோலா ஸ்டார் டேக் என்னும் முதல் சிறிய கிளாம் ஷெல் மொபைல் அறிமுகம். பின்னால் இந்த போன் 20 ஆம் நூற்றாண்டின் 50 சிறந்த பயனுள்ள சாதனங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.

1997

எரிக்சன் ஆர்380 அறிமுகமானது.

2000

இந்தியாவில் இன்னும் இழுபறியில் இருக்கும் 3ஜி தொழில் நுட்பம் மற்றும் சார்ந்த நெட்வொர்க் மேல் நாடுகளில் அறிமுகமானது. இதனால் பெரிய அளவில் டேட்டா, மொபைல் போன் மூலம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. ஒருவருக்கொருவர் ஸ்கிரீனில் பார்த்துக் கொண்டே பேசும் முறை தொடங்கியது.

2001

வண்ணத் திரை கொண்ட முதல் மொபைல் போன் சோனி எரிக்சன் டி 68 அறிமுகமானது. 256 வண்ணங்களில் அசத்தியது. ஆனால் விரைவில் டி.சி.சி. க்யூ 285 ட்ரைபேண்ட் போன் 4,096 வண்ணங்களுடன் அதனைத் தூக்கி அடித்தது.

2002

டை அனதர் டே என்னும் திரைப்படத்தில் பாண்ட் என்னும் கதாபாத்திரம் சோனி எரிக்சன் பி 800 என்னும் மொபைல் போனைப் பயன்படுத்தி போட்டோ எடுத்தது.

2004

மொபைல் போனில் பயன்படுத்தும் ரிங் டோன் விற்பனை 250 கோடி டாலரை எட்டி இப்படியும் ஒரு வியாபாரமா என வியக்க வைத்தது.

2006

மீண்டும் பாண்ட் படத்தில் சோனி எரிக்சன் கே 800ஐ அறிமுகமாகி மக்களைக் கவர்ந்தது.

2007

ஏறத்தாழ 130 கோடி பேர் உலகெங்கும் மொபைல் போனைப் பயன்படுத்துகின்றனர். இது உலக ஜனத்தொகையில் ஐந்தின் ஒரு பங்கு.

2010

எப்படி இருக்கும் மொபைல் போன் வளர்ச்சி? சிம் கார்டுகளை உடலில் பொருத்தி எண்ணங்களை அப்படியே இன்னொரு போனுக்கு அனுப்பும் தொழில் நுட்பம் வந்தாலும் வரலாம்.
மேலும் அறிய

> WINDOWS 7 :வேர் இஸ் த பார்ட்டி

வரும் அக்டோபர் 22ல் வெளியாக இருக்கும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த கண்காட்சியினை நீங்கள் உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ, அரங்கிலோ நடத்தலாம். இதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் அனைத்து உதவிகளையும் தருகிறது. கண்காட்சிக்கு நீங்கள் அழைக்கும் நபர்களுக்கு சிறிய பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். உங்களுக்கு விண்டோஸ் 7 தொகுப்பு பரிசாகத் தரப்படும். என்ன ஆச்சரியாமாக இருக்கிறதா! மேலே படியுங்கள்.

தன்னுடைய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை அறிமுகப்படுத்துகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம், சில வேளைகளில் புதிய வகையில் முயற்சிகளை மேற்கொள்ளும். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அறிமுக சரித்திரத்தைப் பொறுத்தவரை, விண்டோஸ் 95 வெளியான வகைதான் இன்றும் சிறப்பாகப் பேசப்படுகிறது.

1995 ஆம் ஆண்டு இது வெளியானபோது அனைத்து நாடுகளிலும் தொடர்ந்து விளம்பரங்கள் மேற்கொள்ளப் பட்டன. விண்டோஸ் 95 தொகுப்பினை வாங்காதவர்கள் ஏதோ பாவம் செய்தவர்கள் என்ற எண்ணத்தை உருவாக்கும் வகையில் அதற்கான விளம்பரங்கள் இருந்தன.வர இருக்கும் விண்டோஸ் 7 தொகுப்பினை அறிமுகப்படுத்த மைக்ரோசாப்ட் முற்றிலும் புதிய திட்டம் ஒன்றினை மேற்கொள்ள இருக்கிறது. ஆம்வே மற்றும் டப்பர்வேர் சாதனங்களை அறிமுகப்படுத்தி விற்பனை செய்திட அந்நிறுவனங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளைப் போல மைக்ரோசாப்ட் நிறுவனமும் திட்டமிடுகிறது.



இந்த கண்காட்சியை நீங்கள் நடத்த விரும்பினால் www.houseparty.com என்ற இணைய தள முகவரி சென்று பதிந்து கொள்ளுங்கள். அவ்வாறு பதிகையில் மைக்ரோசாப்ட் உங்களிடமிருந்து பல கேள்விகளுக்குச் சரியான விடைகளை எதிர்பார்க்கிறது. உங்கள் கம்ப்யூட்டர் சிஸ்டம் விண்டோஸ் 7 தொகுப்பை எதிர்கொள்ளும் அளவிற்கு வடிவமைக்கப்பட்ட ஒன்றா என்றெல்லாம் கணிக்கிறது. பின் உங்களைப் பற்றிய குறிப்புகளை, முகவரியை வாங்கிக் கொண்டு, விரைவில் நீங்கள் கண்காட்சி நடத்த தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறீர்களா என்று அறிவிப்போம் எனச் செய்தி தருகிறது.தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்களுக்குத் தேவையான ஆப்பரேட்டிங் சிஸ்டம் சாப்ட்வேர், அதற்கான குறிப்புகள் எல்லாம் தரப்படும். நீங்கள் இதனை உங்கள் நண்பர்களுக்குப் போட்டுக் காட்டி விளக்க வேண்டும். இது போன்ற சிறிய அளவிலான காட்சி விளக்கக் கூட்டங்களுக்கு வருபவர்களில் ஒரு சிலர் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வாங்குவார்கள் என்று மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது.



இது போல ஹவுஸ் பார்ட்டி நடத்தி விண்டோஸ் 7 காட்டுவதற்கு இந்தியா உட்பட 12 நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 22 முதல் 29 தேதி வரை, ஆங்காங்கே சிறு திருவிழாக்கள் போல் நடத்தி புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து ஓர் எதிர்பார்ப்பினை மைக்ரோசாப்ட் உருவாக்கத் திட்டமிடுகிறது.

இந்த ஐடியாவினை மைக்ரோசாப்ட், மொஸில்லா பயர்பாக்ஸிடமிருந்து பெற்றிருக்கலாம். ஏனென்றால் கடந்த ஜுன் மாதம் தன் பயர்பாக்ஸ் பதிப்பு 3 னை வெளியிட்ட போது, இது போன்ற பார்ட்டிகளை மொஸில்லா நடத்தியது. இந்த பதிப்பினை குறிப்பிட்ட நாளில் டவுண்லோட் செய்திடுமாறு கேட்டுக் கொண்டு அதில் கின்னஸ் சாதனை மேற்கொண்டது. ஜூன் 17 ஆம் நாள், 24 மணி நேரத்தில் 80,02,530 பேர் பயர்பாக்ஸ் தொகுப்பினை டவுண்லோட் செய்து இந்த சாதனை மேற்கொண்டனர்.

விஸ்டா தொகுப்பிற்கு அவ்வளவாக வரவேற்பில்லை. மக்கள் எக்ஸ்பி தொகுப்பிலேயே நின்று விட்டனர். எனவே விண்டோஸ் 7 தொகுப்பிற்கு நல்ல வரவேற்பினைக் காட்ட வேண்டும் என மைக்ரோசாப்ட் திட்டமிடுகிறது. ஏற்கனவே விண்டோஸ் 7 சோதனைத் தொகுப்பினை இயக்கிப் பார்த்த சோதனையாளர்கள் மிகவும் நல்ல முறையில், நவீன வசதிகளை இது கொண்டுள்ளதாக எழுதி உள்ளனர். இந்த சூழ்நிலையில் மக்களிடம் இதனை சரியான முறையில் கொண்டு சேர்க்க மைக்ரோசாப்ட் முயற்சிக்கிறது.
நீங்களும் இந்த திருவிழாவினை நடத்துவதில் பங்கு கொள்ள விரும்பினால் கீழே உள்ள தளம் சென்று பதிந்து கொள்ளுங்கள்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்


எழுதியவர் : கார்த்திக்

மேலும் அறிய

> ஈரமில்லாத ‘ஈரம்’ ஆதி!

“ஆதியோட பாதி முகத்தை முன்னாடி பார்த்தேன். மீதி முகத்தை இப்போதான் பார்க்கிறேன். ரொம்ப டேஞ்சர்பா...” இப்படி அதிர்ச்சியோடு புலம்பிக் கொண்டிருப்பது யாரோ அல்ல. ஆதியை தமிழில் அறிமுகப்படுத்திய டைரக்டர் சாமி. ஒண்ணு மண்ணுமா இருந்தாங்களே, இப்போ என்னாச்சு இவங்களுக்குள்ளே?

திடீர்னு கொம்பு முளைச்சிருச்சு ஆதிக்கு. அதுதான் பிரச்சனை! தெலுங்கில் 200 படங்களுக்கு மேல் இயக்கியிருக்கிறார் ஆதியின் அப்பா. ஆனால், தனது விருப்பம் தமிழில் அறிமுகம் ஆவதுதான் என்று காத்திருந்தார் ஆதி. அந்த நேரத்தில்தான் மிருகம் கதையை சொல்லி ஆதியை தமிழுக்கு கொண்டு வந்தார் சாமி. அந்த படம் ரிலீஸ் ஆன பிறகு முன்னணி நடிகர்கள் கூட சாமியின் படத்தில் நடிக்க விரும்பினார்கள். ஆனால், எனது அடுத்த படத்திலும் ஆதிதான் ஹீரோ என்று சொல்லி தனது சரித்திரம் படத்தில் அவரை நடிக்க வைத்தார் சாமி. அந்த படம் முடிவதற்குள் ஷங்கரின் ஈரம் படத்தில் நடிக்க அழைப்பு வந்தது ஆதிக்கு. சரித்திரம் படப்பிடிப்பு நேரத்தில், தனது அடுத்த படத்திலும் நீயே நடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த சாமி, அதற்கு அட்வான்சாக இரண்டு லட்சத்தை கொடுத்தாராம்.

சரித்திரம் முடியாமல் இழுத்துக் கொண்டே போவதால் இடையில் தனது சொந்தப்படத்தை துவங்கலாம் என்று எண்ணிய சாமி, ஆதியிடம் கால்ஷீட் கேட்டால் “இப்போது தர முடியாது” என்று கூறிவிட்டாராம். “சரி போகட்டும். கொடுத்த அட்வான்சை திருப்பிக் கொடுங்கள்” என்று கேட்டதற்கு, ஒருமையில் பேசிய ஆதி, “தர முடியாது. உன்னால என்ன செய்ய முடியுமோ, செஞ்சுக்க...” என்கிறாராம்.

மீண்டும் முதல் பாராவை படிக்கவும்.
மேலும் அறிய

Monday, September 21, 2009

> எந்திரன் கதையை எங்கிருந்து சுட்டார்கள்

காதலன் படம் முடிந்ததுமே இயக்குநர் ஷங்கர் இயக்க நினைத்த படம் ரோபோ. ஷங்கரின் கனவுப்படமான இந்த ரோபோவில் கமல் நடிப்பதாக இருந்தது.

கதையில் நிறைய டெவலப் செய்ய வேண்டியிருந்ததால் இந்தியனி’ல் இறங்கினார்கள். அடுத்து பாய்ஸ், முதல்வன் என்று முடித்துவிட்டு கமல்கிட்ட போனால் கதையில் இருவரும் சமாதானம் அடையவில்லை.


இந்த நிலையில் ஷாருக்கான் கூப்பிட்டு தனக்காக இந்தியில் ஒரு படம் பண்ணச்சொல்ல ரோபோவை சொன்னார் ஷங்கர்.

தானே தயாரிக்கிறேன் என்று முன்வந்த ஷாருக், கதையை முழுமை படுத்திட்டு வாங்க என்று சொன்னார். கதை முழுமை படுத்த டயம் பிடித்ததால் ரஜியை வைத்து சிவாஜியை முடிடுத்திட்டார்.

பின்பு, முழுமை படுத்துறேன் என்று பட்ஜெட்டை ஏகத்துக்கும் ஏத்திவிட்டு கதையை முழுமைபடுத்தியிருந்தார் ஷங்கர்.

அதிர்ச்சியடைந்த ஷாருக், பட்ஜெட் குறைவாக இருக்கும்படி கதையை மாற்றி அமையுங்க என்று சொன்னதும் இது சரிப்பட்டு வராது என்று வந்துவிட்டார் ஷங்கர்.

தமிழில் யாரை வைத்து பண்ணலாம் என்று யோசித்தார். அஜீத்துடனும் பேச்சுவார்த்தை நடந்தது.

இதற்குள் ரஜினியே முன்வந்து ரோபோ கதையின் மூலம் நாம் மீண்டும் இணையலாமே என்று சொல்ல, ஷாருக் கடுப்பாகி மவனே நீ ரோபோ டைட்டிலேயே நினைச்சுப்பார்க்கக்கூடாது என்பது மாதிரி ரோபோ ரோபோன்னு ஆயிரத்தெட்டு ரோபோ டைட்டிலை பதிவு செய்துவிட்டார்.
யாருக்கிட்ட...அதுக்கு வேற எவனாச்சும் பாரு என்பது மாதிரி எந்திரன்’கிளம்பியாச்சு.

120 கோடி பட்ஜெட்டில் ரஜினியின் கனவு நாயகி ஐஸ்வர்யாராய்,ஏ.ஆர்.ரகுமான் என்று ராக்கெட் வேகத்தில் கிளம்பியாச்சு.

பெரு நாடு உட்பட பல வெளிநாடுகளில் படமாக்கப்பட்டாலும் படத்தின் 60சதவிகித படப்பிடிப்பை தமிழ்நாட்டிலேயே படம் பிடித்திருக்கிறார்கள்.

சென்னை மற்றும் சென்னை புறநகர் பழைய மகாபலிபுரம், மாதவரம், மணலி,சிறுசேரி,மயிலாப்பூர் சிட்டிசெண்டர், கானாத்தூர் மாயாஜால், வேலுர் என்று படப்புடிப்பு 90 சதவிகிதம் முடிந்துவிட்டது.

2010ல் ஜனவரி-1 அல்லது பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கிறது எந்திரன்.

எழுத்தாளர் சுஜாதா எழுதிய இரண்டு நாவல்களை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டது என்று எந்திரன் தரப்பினர் சொல்லிவருவது தெரிந்த விசயம்.

மூன்றாவதாகவும் ஒரு நாவலை தழுவி எடுக்கப்பட்டு வருவதுதான் எந்திரன் என்கிறார்கள்.

அந்த நாவல்தான் கதைக்கு எனர்ஜியாம். அதனால்தான் படம் முழுக்கவே க்ளைமாக்கிஸின் பரபரப்பு இருக்குமாம்.

எந்திரனுக்காக தழுவப்பட்ட அந்த மூன்றாவது முக்கியமான நாவல் பிரபல கவிஞர் ஷெல்லியின் மனைவி மேரி ஷெல்லி எழுதிய ஒரு நாவல் என்கிறார்கள்

மேலும் அறிய

Sunday, September 20, 2009

> இணையத்தின்( Internet ) நாற்பது ஆண்டுகள் !!!

இன்றைய மனித இனத்தின் சிந்தனைப் போக்கை மாற்றியதில் இன்டர்நெட்டுக்கு முக்கிய பங்கு உண்டு என்றால் அது மிகையாகாது. தகவல் பரிமாற்றம், உருவாக்கி சேமித்தல் என்ற இரு பரிமாணங்களில் தினந்தோறும் புதிய மாற்றங்களைத் தந்து வரும் இந்த இன்றியமையாத சாதனம் உலகிற்கு வந்து 40 ஆண்டுகள் ஆகின்றன.

இது உருவாகிக் கடந்து வந்த பாதையில் முக்கிய மாற்றங்கள் தந்த சில திருப்பங்களை இங்கு காணலாம்.
1969

ஆர்பாநெட் என்ற இராணுவப் பணிகளுக்கான நெட் இணைப்பில், இரு கம்ப்யூட்டர்கள் (கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் இரு மையங்களில் இயங்கியவை) அர்த்தமில்லாத டேட்டாவினைத் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டு, பிற்காலத்தில் உலகின் வளர்ச்சிக்கான விதையை ஊன்றின. இது செப்டம்பர் 2 அன்று நடந்தது. 15 அடி நீளமுள்ள கேபிள் வழியாக இது சாத்தியமானது.

1972

ரா டாம்லின்சன் (Ray Tomlinson) என்பவர் நெட்வொர்க்கில் இமெயில் பயன்பாட்டினைக் கொண்டு வந்தார். இவர் தான் @ என்ற அடையாளத்தினை இமெயில் சிஸ்டத்தில் கொண்டு வந்தார்.

1973

ஆர்பாநெட் நெட்வொர்க்கிற்கு பிறநாடுகளில், இங்கிலாந்து மற்றும் நார்வே, நோட் என்னும் இணைந்த சிஸ்டங்கள் ஏற்படுத்தப்பட்டு இயங்கின.

1974

டி.சி.பி. (TCP) என அழைக்கப்படும் இன்டர்நெட் புரோடோகால் வகையை Vint Cerf மற்றும் Bob Kahn என்ற இருவர் உருவாக்கிப் பயன்படுத்தினார்கள். இதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட நெட்வொர்க்குகள், ஒன்றை யொன்று இனம் கண்டு இயங்க முடிந்தது. இதுதான் முழுமையான இன்டர்நெட்டின் முதல் இயக்கமாகும். இதுவே பின்னர் கூஇகஐக என்ற இன்னொரு வகை இன்டர்நெட் வழிமுறைக்கு வழி தந்தது.

1983

டொமைன் நேம் எனப்படும் இணைய தள முகவரிகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஓராண்டு கழித்து ".com, .edu .gov" என்ற பெயர்கள் வரையறை செய்யப்பட்டன.

1988

Morris என்ற வோர்ம் (வைரஸ்) முதன்முதலில் பரவி பல கம்ப்யூட்டர்களை முடக்கியது.

1989

இப்போது AOL என அழைக்கப்படும் (அமெரிக்கன் ஆன்லைன் சர்வீசஸ்) குவாண்டம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனம் அமெரிக்காவில் மேக் இன்டோஷ் மற்றும் ஆப்பிள் கம்ப்யூட்டர்களுக்கென ஆன்லைன் சர்விஸைத் தொடங்கியது. இதுவே 2002ல் ஏறத்தாழ 3 கோடி அமெரிக்கர்களை இணைக்கும் நெட்வொர்க்காக மாறியது.
1990

நியூக்ளியர் ஆய்வுக்கென இயங்கிய CERN ஐரோப்பிய அமைப்பிலிருந்தவாறே, தொலைதூரக் கட்டுப்பாட்டினை அமல்படுத்த டிம் பெர்னர்ஸ் லீ (Tim BernersLee) என்பவர் வேர்ல்ட் வைட் வெப் (World Wide Web) என்னும் அமைப்பின உருவாக்கினார்.

1993

இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் மார்க் ஆண்ட்ரீசன் (Marc Andreessen) தன் சகாக்களுடன் இணைந்து மொசைக் (Mosai) என்னும் முதல் இன்டர்நெட் பிரவுசரை உருவாக்கினார். இதன் மூலம் டெக்ஸ்ட் மற்றும் கிராபிக்ஸை ஒரு பக்கத்தில் இணைத்து பார்க்க முடிந்தது. இதனால் இணையப் பக்கத்தினைத் திறந்து உலகிற்குக் காட்ட முடிந்தது.
1994

ஆண்ட்ரீசன் மற்றும் அவரின் சகாக்கள், வர்த்தக ரீதியாக ஒரு பிரவுசரை உருவாக்க முடிவெடுத்து, நிறுவனம் ஒன்றை அமைத்து நெட்ஸ்கேப் என்னும் முதல் பிரவுசரைக் கொண்டு வந்தனர்.

1995

அமேசான் டாட் காம் (Amazon.com) என்னும் இணைய தளம் தன் கதவுகளை உலக மக்களுக்கு இணைய தளம் வழியே திறந்தது.

1996

ஆன்லைனில் பாலியியல் செய்திகள் அறவே இருக்கக் கூடாது என சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் பின் நாளில் இது நீக்கப்பட்டது.

1998

ஸ்டான்போர்டு பல்கலையின் ஒட்டு மொத்த அறைகளில் கூகுள் நிறுவனத்திற்கான முயற்சி எடுக்கப்பட்டது. இணைய தளப் பெயர்கள் மற்றும் சார்ந்தவற்றை முடிவு செய்திட அமெரிக்க அரசு Internet Corporation for Assigned Names and Numbers அல்லது ICANN என்னும் அமைப்பிற்கு உரிமை வழங்கியது. மைக்ரோசாப்ட், தன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் அளவற்ற சக்தியினால், நெட்ஸ்கேப் மற்றும் பிற நிறுவனங்களின் வர்த்தக உரிமையினைப் பறிக்கிறது என்று வழக்கு தொடரப்பட்டது.

1999

இசை பைல்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் வசதியை நாப்ஸ்டர் அளித்தது. இசை என்பது ரெகார்டுகள் மற்றும் டேப்கள் வழி மட்டுமே என்பது மாறத் தொடங்கியது. உலக அளவில் இன்டர்நெட் மக்கள் தொகை 25 கோடியைத் தாண்டியது.

2000

1990 ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட இணைய நிறுவனங்களின் உயர்நிலை சரிந்தது. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் மவுசு குறையத் தொடங்கியது.

2002

உலக இணைய மக்கள் தொகை 50 கோடியைத் தாண்டியது.

2004

ஹார்ட்வேர்ட் பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த Mark Zuckerberg என்பவர் பேஸ்புக் (Facebook) தளத்தை உருவாக்கித் தந்தார்.
2005

வீடியோ பைல்களைப் பகிர்ந்து கொள்ள யு–ட்யூப் தளம் உருவானது.

2006

இன்டர்நெட் மக்கள் தொகை நூறு கோடியைத் தாண்டியது.

2007

ஆப்பிள் நிறுவனம் வயர்லெஸ் இன்டர்நெட் இணைப்பு வழங்கக் கூடிய ஐ–போனைத் தந்தது.

2008

இன்டர்நெட் மக்கள் தொகை 150 கோடியை எட்டியது. சீனாவின் இன்டர்நெட் பயன்படுத்துபவர் எண்ணிக்கை 25 கோடியாக உயர்ந்தது. இதன் மூலம் உலகில் அதிக இன்டர்நெட் பயன்படுத்துபவர்களைக் கொண்ட நாடாக, சீனா, அமெரிக்காவின் முதல் இடத்தைப் பிடித்தது. பிரவுசர்களில் பயர்பாக்ஸ் தன் இடத்தைத் தொடர்ந்து உறுதிப்படுத்தியது. பெரும்பாலான பயணிகள் விமான சேவை நிறுவனங்கள், தங்கள் விமானங்களில் இன்டர்நெட் சேவையினை வழங்கத் தொடங்கினர்.

2009

முழுவதும் இன்டர்நெட்டிலேயே வெளியிடப்படும் தினசரி செய்தித் தாள் Seattle PostIntelligencer வெளியானது.
மேலும் அறிய

> நடிகை பார்ட்டி! த்ரிஷா ஆட்டம்!

மியூசிக்கல் சேர் ஆட்டத்தில் ஓடி ஓடி உட்கார்ந்து கொள்கிறார் தமன்னா. அசின், த்ரிஷா, நயன்தாரா, நடிக்க வேண்டிய படத்திலெல்லாம் தமன்னாவின் ஆதிக்கம். இதனால் அரண்டு போயிருக்கிறார்கள் மேற்படி நடிகைகள். அதிலும் இந்திக்கு போவதாக கொஞ்சமே கொஞ்சம் இடத்தை காலி பண்ணிய த்ரிஷா, அந்த வாய்ப்பும் சரவர அமையாமல் திரும்பி வந்தால், இவரது பழைய ஏரியா ஹவுஸ்ஃபுல்! எல்லா வாய்ப்பும் தமன்னாவுக்கே...

பிரியதர்ஷனின் இந்திப்படம் துவங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதால், தோழிகளுடன் கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டாராம். எப்பவுமே ஈசிஆர் சாலையில் ஆட்டம் போடும் த்ரிஷ் இந்த முறை, கேரள எல்லைப்புறம் ஒதுங்கியிருக்கிறார். (மேட்டர் சீக்ரெட்டாக இருக்கட்டும் என்றுதான்...) இடையில் ரம்யாகிருஷ்ணனின் பிறந்த நாள் பார்ட்டியையும் கோலகலமாக கொண்டாடினாராம்.

அந்த இடத்தில்தான் அடித்தது யோகம். இத்தனை நாட்களாக மலையாள படங்களில் நடிக்காமல் ஒதுங்கியே இருந்த த்ரிஷாவை அந்த பார்ட்டியில் பார்த்து அழைப்பு விடுத்தார்களாம் சில மலையாள ஹீரோக்கள். சம்பள விஷயத்தில் தாராளம் காட்டினால், மலையாளம் என்ன? போஜ்பூரின்னா கூட ரெடி என்றாராம் த்ரிஷ். பேச்சு வார்த்தை பிரைட்டாக முடிய, இன்னும் சில தினங்களில் த்ரிஷாவின் மலையாள பட அறிவிப்பு முறைப்படி வரலாம் என்கிறார்கள்.

கழுகுக்கு கண்ணு உஷாரு... கொக்குக்கு மூக்கே உஷாரு...!
மேலும் அறிய

> பாக்யராஜ் பதற்றம்... கண்டேன் காதலை?

கண்டேன் காதலை எப்போ ரிலீஸ்? பரத் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்களோ, இல்லையோ? பாக்யராஜ் எதிர்பார்கிறார். இவர் இயக்கி வரும் சித்து ப்ளஸ் 2 படமும், கண்டேன் காதலை படமும் ஒரே கதையாம். திரைக்கதை மன்னரான பாக்யராஜ் தனக்கேயுரிய இஞ்சி, பூண்டு, சோம்பு சமாச்சாரங்களை கலந்து எக்கச்சக்க டேஸ்ட்டில் தருவார் என்பது இருக்கட்டும்... இவரை போலவே க.கா டைரக்டர் கண்ணனும் சிந்தித்திருந்தால்? அந்த பயம்தான் பாக்யராஜுக்கு.

கண்டேன் காதலை படமே ஜப் வீ மெட் என்ற இந்தி படத்தின் ரீமேக்தான். இதற்காக படத்தை போட்டு போட்டு பார்த்து உருவாக்கியிருக்கிறார்கள். படத்தை முடித்து தயாரிப்பாளர் வசம் ஒப்படைத்த கண்ணன், இரண்டு படத்தையும் பக்கத்து பக்கத்திலே போட்டு பாருங்க. ஏதாவது வித்தியாசம் இருந்தா சொல்லுங்க என்று கூறிவிட்டு கடமையை முடித்துக் கொண்டாராம். அப்படியிருக்க, சித்துவும், கண்டேன் காதலையும் ஒன்றாக இருக்க வாய்ப்பே இல்லை.

போகட்டும்... இரு படங்களின் கதை என்ன? அப்பா-அம்மா பிரிவு, கம்பெனி நஷ்டம், திரும்பிய இடத்திலெல்லாம் கெட்ட பெயர், இப்படி விரக்தியின் எல்லைக்கே போகும் ஹீரோ, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு எங்கெங்கோ சுற்ற, ஒரு ரயில் பயணத்தில் சந்திக்கிறான் துறுதுறுப்பான ஒருத்தியை. அவளது புத்துணர்ச்சி இவனுக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. மறுபடியும் சொந்த ஊருக்கு வந்து கம்பெனியை முன்னேற்றி வாழ்வில் வெற்றி பெறுகிறான்.

இந்த சில வரி கதையை எப்படி பரிமாறியிருக்கிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது இந்த விஷயத்தை முன்கூட்டியே அறிந்தவர்களுக்கு!
மேலும் அறிய

Wednesday, September 16, 2009




மேலும் அறிய

> அதிவேக ஆப்பரா பிரவுசர் (Opera 10) வெளியானது

பிரவுசர் போட்டியில் பல்வேறு புதிய வசதிகளுடன் எப்போதும் ஆப்பரா அறிமுகமாகும். இருந்தாலும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம் பிரவுசர்களுக்குக் கிடைக்கும் விளம்பரம் மற்றும் பரபரப்பு இதற்குக் கிடைப்பதில்ல. ஆனால், இன்று பிரவுசர்களில் அதிகம் பேசப்படும் பல புதிய வசதிகளை ஆப்பரா தான் முதலில் வடிவமைத்தது என்பது அதன் சிறப்பு. டேப் பயன்பாடு, பக்கங்களுக்கான தம்ப்நெயில் உருவாக்கம், இணைய பக்கங்களில் எச்.டி.எம்.எல்.5 தொழில் நுட்பம் போன்ற புதிய வரைமுறைகள் ஆகியவற்றை ஆப்பரா தான் முதலில் கொண்டு வந்தது. இதே போல் இப்போது வெளியிடப்பட்ட பிரவுசரிலும் பல புதிய வசதிகளைக் கொண்டுள்ளது.

ஆப்பரா தனக்கென பல வாடிக்கை யாளர்களைக் கொண்டுள்ளது. தொடர்ந்து இவர்கள் ஆப்பராவினையே பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில் வெளியாகியுள்ள ஆப்பரா 10 நிச்சயம் இதன் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியை அளிப்பதாகவே இருக்கும். இதன் சிறப்புகளை இங்கு பட்டியலிடலாம். முதலில் இதன் வேகத்தைக் கூற வேண்டும். இது செயல்படும் தன்மை முதன் முதலில் கூகுள் குரோம் பிரவுசரை இயக்கிய போது ஏற்பட்ட உணர்வைத் தருகிறது. மிக வேகமாக இது இயங்குகிறது. சூப்பர் பாஸ்ட் என்று கூடச் சொல்லலாம். இதற்கு முன்னால் வந்த பதிப்பு 9.6 பதிப்பைக் காட்டிலும் 40% வேகம் அதிகம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

மற்றபடி இன்றைக்கு வருகின்ற பிரவுசர்களில் இருக்கும் புதிய வசதிகள் பல இதிலும் உள்ளன. பாப் அப் பிளாக்கர், ப்ளக் இன் வசதிகள், ஆர்.எஸ்.எஸ். ரீடர், பிஷ்ஷிங் தடுக்கும் வசதி எனப் பல வசதிகள் இதில் கிடைக்கின்றன. மற்ற சில பிரவுசர்களில் இல்லாத இமெயில் கிளையண்ட் புரோகிராம் தரப்பட்டுள்ளது. இதில் பி.ஓ.பி.3 மற்றும் ஐமேப் மெயில் வசதி உள்ளது. இதனால் நீங்கள் உங்கள் பி.ஓ.பி. 3 மெயில்களை இந்த பிரவுசர் மூலமாகவே கம்ப்யூட்டருக்கு இறக்கிக் கொள்ளலாம்.அனைத்து வசதிகளையும் பயன்படுத்த எளிதான யூசர் இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது இதன் இன்னொரு சிறப்பு.

இதன் டேப்களை அமைக்கும் வசதி சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு டேப்பின் மேலாக அதன் தளக் காட்சியினை ஒரு தம்ப்நெயில் படமாக அமைத்துக் கொள்ளலாம். இது ஒரு புதிய உத்தி ஆகும். இதற்கு முன் கர்சரை அந்த டேப்பின் மேலாகக் கொண்டு செல்கையில் மட்டும் இந்த படம் தெரியும். மேலும் இவை அமைந்துள்ள டேப் பாரின வலது இடதாக இழுத்து அமைத்துக் கொள்ளலாம். இப்போது கிடைக்கும் மிக அகல மானிட்டர் வைத்திருப்பவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.

அடுத்த சிறப்பு இதன் ஸ்பீட் டயல் வசதியாகும். நீங்கள் அடிக்கடி திறந்து பார்க்க விரும்பும் டேப்பிற்கான தளத்தினை அடுத்துப் பார்க்கும் 4 முதல் 24 தளங்களின் மேலாக, ஒரு தம்ப் நெயில் படமாக வைத்துக் கொள்ளலாம். எப்போதெல்லாம் அத்தளத்தைப் பார்க்க விரும்புகிறீர்களோ, அப்போது அதனைக் கிளிக் செய்து, தளத்திற்குச் செல்லலாம். இந்த வசதி டிபால்ட்டாகக் கிடைக்கிறது.


இதன் இன்னொரு குறிப்பிடத்தக்க வசதி இதிலுள்ள இன் – லைன் ஸ்பெல் செக்கர் வசதி. இது பிளாக்குகளை அமைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். இதில் புதுமையாக ஆப்பரா டர்போ என்ற பேஜ் கம்ப்ரஸ்ஸன் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் டயல் அப் வகை இன்டர்நெட் இணைப்பில் கூட, வேகமாக பிரவுசிங் செய்திட முடியும். இணைய இணைப்பின் வேகம் குறையும்போது, இந்த தொழில் நுட்பம் அதனைக் கண்டறிந்து, இணைய தளங்களை ஆப்பராவின் சர்வர்களில் கம்ப்ரைஸ் செய்து பின் தருகிறது. இதனால் டேட்டா குறைவாக இறக்கம் செய்யப்பட்டாலும் நமக்குப் பின்னணியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பக்கங்கள் கிடைக்கும். இவை தவிர இணையப் பக்கங்களை வடிவமைப்பவர்களுக்குத் தொழில் ரீதியான ஆலோசனைகளையும் உதவிகளையும் ஆப்பரா தந்துள்ளது. ஆனால் ஒரே ஒரு முக்கியமான வசதி இல்லை என்பதை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இப்போதைய பிரவுசர்கள் தரும் பிரைவேட் பிரவுசிங் வசதி இதில் இல்லை. இந்த வசதி இருந்தால் நாம் பிரவுசிங் செய்த தளங்கள் குறித்த குறிப்புகள் பிரவுசரில் தங்காது. பிரவுசரை மூடியவுடன் நீக்கப்படும். இந்த வசதியை ஆப்பரா பிரவுசர் தரவில்லை. எனவே இந்த வசதி கட்டாயம் வேண்டும் என்பவர்கள் இதன் பக்கம் போக வேண்டாம். வேண்டாதவர்கள் தாராளமாக ஒரு முறை பயன்படுத்திப் பார்த்து, பிடித்திருந்தால் இதனையே வைத்துக் கொள்ளலாம்.

உங்களுக்கு ஆப்பரா பிரவுசர் தேவை என்றால் கீழ்க்காணும் முகவரிக்குச் சென்று டவுண்லோட் செய்து கொள்ளலாம். அனைத்து வகையான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்குமான பைல் இங்கு இலவசமாகக் கிடைக்கிறது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
மேலும் அறிய

> பதினாறு லட்சத்தில் பாட்டு

கண்டேன் காதலை படத்தின் பாடல் காட்சி ஒன்றை பதினாறு லட்சம் செலவில் எடுத்திருக்கிறார்கள். அதுவும் கடைசியாக படத்தில் சேர்த்த பாடலாம் இது. ஏற்கனவே எந்த இடத்திலும் காம்ப்ரமைஸ் ஆகாத படத்தின் இயக்குனர் கண்ணன், எதிர்பார்த்ததை விட செலவை கொஞ்சம் ஏற்றி விட்டதாக கேள்வி. இதில் இன்னும் 16 லட்சம் என்றால்?

வேறொன்றுமில்லை. படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியிருப்பதுதான் இந்த அடிஷனல் பாட்டுக்கான காரணம். படத்தை பார்த்தவர்கள், இந்தி படத்தில் வருகிற ஒரு பாடல் இதில் மிஸ்ஸாகிவிட்டதே, என்ன காரணம் என்றார்களாம். வேறு வழியில்லாமல் அதையும் எடுத்துக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார் மோசர்பேர் தனஞ்செயன். பாரத்தை ஒருத்தர் தலையிலேயே ஏற்றினால் எப்படி என்ற பெரிய மனசோடு செலவான பதினாறு லட்சத்தில் பாதியை ஏற்றுக் கொண்டாராம் பரத்.

நெசமாவா? பரத் தரப்பில் விசாரித்தால், "தப்பு தப்பு என்கிறார்கள். அப்படியெல்லாம் பரத் எதுவும் கையிலிருந்து கொடுக்கவில்லை" என்றார்கள். ஷ§ட்டிங் முடிஞ்சு போச்சுன்னு நினைச்சிகிட்டு இருந்தவரிடம் போய் "அடிஷனலா ஒரு பாடல் எடுக்கப் போறோம். டேட்ஸ் வேணும்னு கேட்டதும் கொடுத்தார். தமன்னாவும் தன்னோட டைட் ஷெட்யூலில் டேட்ஸ் அட்ஜஸ்ட் பண்ணி கொடுத்தாங்க. இதிலே பணம் எங்கே வந்திச்சு?" என்கிறார்கள் மோசர்பேர் தரப்பில்.

பணத்தை யாரு கொடுத்தா என்ன? பாட்டு து£க்கலா வந்தா சரி...
மேலும் அறிய

> ரஜினி சொன்ன சூப்பர் ஐடியா...

http://www.blogger.com/img/blank.gifசந்திரமுகி இரண்டாம் பாகத்தில் எப்படியாவது ரஜினியை நடிக்க வைத்துவிடுவது என்பதில் உறுதியாக இருக்கிறார் பி.வாசு. அடிக்கடி ரஜினியை சந்திப்பதும், இது பற்றி விவாதிப்பதுமாக இருந்தாராம். இதற்கெல்லாம் இரண்டு நாட்களுக்கு முன்போடு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் சூப்பர் ஸ்டார். எப்படி?

ஒருநாள் திடீரென்று பி.வாசுவுக்கே போன் அடித்த ரஜினி, சந்திரமுகி இரண்டாம் பாகத்திலே நடிப்பதில் எனக்கு சம்மதமில்லை என்று கூறிவிட்டாராம். எனக்காக காத்திருக்காமல் வேறு கதையை எடுக்கலாமே என்றும் ஐடியா கொடுத்திருப்பதாக தகவல். கூடவே இன்னும் ஒரு யோசனையும் கூறினாராம் சூப்பர் ஸ்டார்.

வளர்ந்து வருகிற ஒரு இளம் ஹீரோவையும், மம்முட்டி மாதிரி ஒரு பெரிய ஹீரோவையும் வைத்து படம் எடுக்கலாமே? என்பதுதான் அந்த யோசனை. எந்திரனுக்கு பிறகு தலைவர் வேறு ரூட்டில் பயணிப்பார் என்று கிசுகிசுக்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம். அதனால்தான் தனக்காக காத்திருக்கும் பி.வாசுவுக்கு ஒரு புது பாதையை காட்டியிருக்கிறார் அவர் என்றும் கிசுகிசுக்கிறார்கள்.

புத்துல கைய விட்டு புரளிய கிளப்புறதே பொழப்பா போச்சு சிலருக்கு...
மேலும் அறிய

Tuesday, September 15, 2009

> நான் அவ்வளவு பெரிய சீன் இல்லே! -விஜய்

கடந்த ஒரு மாதமாகவே காங்கிரசில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜய், திடீரென்று அரசியல் குறித்த தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டார். செய்தியாளர்களை சந்தித்த அவர், கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு விலாங்கு மீனாக நழுவியதே சுவாரஸ்யமான காட்சியாக இருந்தது. ஞாயிற்று கிழமை 1.30 வரை எமகண்டம் என்பதால் அதற்கு பிறகுதான் மண்டபத்திற்கே வருவார் என்ற நிருபர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கிவிட்டு சரியாக 1.15க்கு மண்டபத்திற்குள் நுழைந்தார் விஜய்.

நான் ராகுல்ஜியை சந்தித்துவிட்டு வந்த பின்பு எல்லா பத்திரிகைகளிலும் ஏராளமான செய்திகள். அதையெல்லாம் படித்துவிட்டு “அட இப்படி நடந்தால் நல்லாயிருக்குமே” என்று நினைத்தேன். அந்தளவுக்கு நிறைய எழுதியிருந்தீங்க. உண்மையில் இப்போது எந்த அரசியல் கட்சியிலும் சேருவதாக ஐடியா இல்லை என்று முதலில் விளக்கிய விஜய், “நான் அவ்வளவு பெரிய சீன் இல்லைங்க” என்றார் கேஷ§வலாக.

பின்பு நிருபர்களின் கேள்விகளுக்கு நிறைய யோசித்து கவனமாக பதில் சொல்ல ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் விஜய் பதில் சொல்ல முடியாதபடி கேள்விகள் வந்து விழ, சரக்கென்று எழுந்து மைக்கை வாங்கிய விஜயின் அப்பா எஸ்.ஏ.சி “பேட்டி முடிந்தது. வந்திருந்தவங்களுக்கு நன்றி” என்று கூட்டத்தை முடித்தார்.

செய்தியார்களின் கேள்விகளுக்கு விஜய் கூறிய பதில்கள் வருமாறு-

ராகுல் காந்தி உங்களை அழைத்தாரா? அல்லது நீங்கள் ராகுலை சந்தித்தீர்களா?

என் நலம்விரும்பி ஒருவர் மூலம் ராகுல்ஜியிடம் இருந்து அழைப்பு வந்தது.

இந்த சந்திப்பையும் என்ன பேசினோம் என்பதையும் ஏன் ரகசியமாக வைத்திருந்தீர்கள்?

எந்த ரகசியமும் இல்லை. மறைப்பதற்கு எதுவும் இல்லை. எங்கள் சந்திப்பின் போது அதிகம் சினிமாவை பற்றிதான் பேசினோம்.

காங்கிரஸ் தரப்பில் ராஜ்ஜிய சபா எம்.பி.பதவி தருவதாக கூறப்பட்டதாமே?

எங்கள் சந்திப்பு மரியாதை நிமித்தமானமானது. பதவி குறித்து எதுவும் பேசவில்லை. இந்த தகவல் எனக்கு புதுசாக இருக்கிறது.

இலங்கை தமிழர்கள் பிரச்சனை பற்றி பேசினீர்களா?

அதுபற்றி எதுவும் விவாதிக்கவில்லை.

நதிகளை இணைப்பது குறித்து ராகுல்காந்தியின் கருத்து பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நோ கமெண்ட்ஸ்.

எதிர்காலத்தில் உறுதியாக அரசியலுக்கு வருவீர்களா?

வாய்ப்பு இருக்கலாம்

உங்கள் மக்கள் இயக்கம் தன் கட்சியாக மாறுமா?

மாறலாம்

உங்களுக்கு 36 வயது ஆகிவிட்டதால் இளைஞர் காங்கிரசில் சேர இயலாது என்று ராகுல் காந்தி கூறிவிட்டாரே? உங்கள் சந்திப்பின் போது இளைஞர் காங்கிரசில் பதவி கேட்டீர்களா?

இளைஞர் காங்கிரஸ் பதவி பற்றி பேசவே இல்லை.

நீங்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தால் அது ரசிகர்களுக்கு செய்யும் துரோகம் என்று நிறைய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததே?

தமிழ் மக்களுக்கு ஒன்று என்றால் நான் களத்தில் இறங்கி போராடுவேன். இலங்கை தமிழர்களுக்காக நானும் என் ரசிகர்களும் உண்ணாவிரதம் இருந்தோம். உலக தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன்.
மேலும் அறிய

> மிக குறைந்த செலவில் விளம்பரங்கள் பிரசுரிக்க


மிக குறைந்த செலவில் விளம்பரங்கள் பிரசுரிக்க
விளம்பர கட்டணம்

வர்த்தக விளம்பரம் = 10 $/month
பிறந்தநாள் வாழ்த்து = Free
திரைப்பட விளம்பரம் = 5 $/month



தொடர்புகளுக்கு

மின்னஞ்சல்கள் : dshan2009@in.com
dshan2009@hotmail.com
Skype : dshan2009
Mobile : +18018395075


பிறந்தநாள் வாழ்த்துக்கள் பற்றிய தகவல்கள்

4 புகைப்படம் அனுப்பி வைக்கலாம். குறைந்தது ஒன்றேனும் அனுப்பவும். (Digital Camera மூலம் எடுத்த புகைப்படம் வரவேற்கத்தக்கது)

வாழ்த்தை மின்னஞ்சல் வழியாக அனுப்பலாம்.
மின்னஞ்சல் அனுப்பும் போது உங்களுடைய பெயர், கையடக்கத்தொலைபேசி இலக்கம்
எல்லா தகவல்களையும் dshan2009@in.com என்ற மின்னஞ்சல் வழியாகவே அனுப்ப வேண்டும்.

3 நாட்கள் முன்னரே அனுப்பினால் சிரமம் இன்றி பிரசுரிக்க முடியும்.
Online Credit Payment Center
வங்கியில் பணம் அனுப்ப


மேலும் அறிய

Sunday, September 13, 2009

> சித்தர் குறித்த தேதியும் விஜயின் அரசியல் பிரவேசம்மும்

திருவண்ணாமலை சித்தர் சொல்லிதான் அரசியலில் குதிக்க போகிறாராம் விஜய். அடிப்படையில் கிறிஸ்துவராக இருந்தாலும், திருவண்ணாமலை, திருக்கடையூர் என்று இந்து கடவுள்கள் மீதும் அலாதி பக்தி வைத்திருக்கிறார் விஜயின் அம்மா ஷோபா. அதனால் மேற்படி திருத்தலங்களுக்கு அவ்வப்போது விசிட் அடிக்கும் அவர் போகிற இடத்திலெல்லாம் பிள்ளையின் அரசியல் பிரவேசத்திற்காகவும் வேண்டிக் கொள்வாராம். அப்படி திருவண்ணாமலைக்கு போகிற போதுதான் எப்போது அரசியலுக்குள் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்ற உத்தரவும் வந்ததாம் சித்தரிடமிருந்து. சித்தன் போக்கு, சிவன் போக்கு என்றிருக்கும் சித்தர்கள் கூட, இப்போதெல்லாம் அரசியல் ஆருடம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்களே என்ற சந்தேகம் இருக்கட்டும். திருமதி ஷோபா சந்திரசேகர் சமீபத்தில் ஒரு அற்புதமான காரியம் செய்திருக்கிறார்.

அபிராமி பட்டர் பாடிய பாடல்களை தனது குரலில் பாடி ஆடியோ தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார். கடந்த வாரம் இதற்காக திருக்கடையூர் அபிராமி சன்னதிக்கு சென்றிருந்தாராம். அந்த சன்னதியில் வைத்தே இந்த ஆடியோ வெளியீட்டு விழாவை சிம்ப்பிளாக நடத்தியிருக்கிறது கோவில் நிர்வாகம்.

விஜயின் அம்மா கோவிலுக்கு வருகிற தகவலை ரகசியமாகவே வைத்திருக்க நினைத்தாலும், நடக்கிற காரியமா அது? விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் கோவில் வாசலில் முற்றுகையிட்டார்களாம். ரசிகர்களின் அன்புக்கு நின்று நிதானமாக நன்றி சொல்ல கூட முடியாதளவுக்கு தள்ளுமுள்ளு.

கோவிலில் என்ன வேண்டிக் கொண்டிருப்பார்? சித்தர் குறித்த தேதி சீக்கிரம் வரட்டும் என்றா?
மேலும் அறிய

Saturday, September 12, 2009

> ஹார்ட் டிஸ்க் : அன்றிலிருந்து இன்று வரை.

நம் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் தான் அனைத்து டேட்டாக்களும் பதிவு செய்யப்படுகின்றன. இங்குதான் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமர்ந்து கொண்டு கம்ப்யூட்டரை இயக்குகிறது. ஏறத்தாழ 50 ஆண்டுகளா கத்தான் ஹார்ட் டிஸ்க் கம்ப்யூட்டரின் ஓர் இன்றியமையாத உறுப்பாக இயங்கி வருகிறது. கம்ப்யூட்டர் பயன்பாடு வந்த தொடக்கத்தில் ஹார்ட் டிஸ்க் என்பதே இல்லை. இப்போது 2 டெராபைட் கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க்குகள் வந்துள்ளன. ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை 1 ஜிபிக்கும் குறைவான அளவுள்ள ஹார்ட் டிஸ்க்குகளே புழக்கத்தில் இருந்தன.

ஹார்ட் டிஸ்க்கின் விலை வேகமாகச் சரிந்து, தற்போது யாவரும் வாங்கும் வகையில் மலிவாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஒரு ஹார்ட் டிஸ்க் பதிந்து கொள்ளும் டேட்டா அளவு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த ஹார்ட் டிஸ்க் வந்த பாதையினை தொடக்கம் முதல் இங்கு காணலாம்.

1956

ஐ.பி.எம். நிறுவனம் தன்னுடைய RAMAC 305 என்ற சிஸ்டத்தில் மிகப் பெரிய அளவிலான கொள்ளளவுடன் கூடிய ஹார்ட் டிஸ்க்கினை இணைத்து அறிமுகப்படுத்தியது. இந்த மிகப் பெரிய கொள்ளளவு எவ்வளவு தெரியுமா? 5 எம்.பி. அப்போது அது உண்மையிலேயே மிகப் பெரிய அளவிலான திறன் தான். ஒரு எம்பி டேட்டா கொள்ளளவிற்கு 10 ஆயிரம் டாலர் விலை எனக் குறிக்கப்பட்டது. இதன் திட அளவு இரண்டு ரெப்ரிஜிரேட்டர் அளவிற்கு இருந்தது. இதில் 24 அங்குல அளவுள்ள 50 பிளாட்டர்கள் இருந்தன.

1961

ஐ.பி.எம். ஹார்ட் டிஸ்க்கிற்கான டிரைவ் ஹெட் காற்றில் இருக்கும் வகையில் அமைத்தது.

1961

பைரண்ட் கம்ப்யூட்டர் 90 எம்பி திறனுடன் ஹார்ட் டிஸ்க்கைக் கொண்டு வந்தது. 39 அங்குல அகலத்தில் 24 டிஸ்க்குகள் கொண்டதாக இது அமைந்திருந்தது.

1963
முதல் முதலாக கம்ப்யூட்டர் சிஸ்டத்திலிருந்து வெளியே எடுக்கக் கூடிய ரிமூவபிள் ஹார்ட் டிஸ்க்கினை ஐ.பி.எம். உருவாக்கியது. இதன் திறன் 2.69 எம்.பி.; 14 அங்குல அளவில் 6 பிளாட்டர்கள் இருந்தன.

1966

புதுவிதமான ரெகார்டிங் ஹெட் கொண்ட ஹார்ட் டிஸ்க்க்னை ஐ.பி.எம். உருவாக்கியது. திறன் 29.17 எம்.பி.

1971

ட்ரேக் சர்வோ சிஸ்டம் கொண்ட முதல் ஹார்ட் டிஸ்க்கினை ஐ.பி.எம். கொண்டு வந்தது. இது 100 எம்பி திறன் கொண்டிருந்தது.

1973

நவீன வின்ச்செஸ்டர் ஹார்ட் டிரைவினை ஐ.பி.எம். கொண்டு வந்தது. 14 அங்குல பிளாட்டர்கள் 11 இருந்தன. திறன் 100 எம்பி.

1975

ஐ.பி.எம். 62 – ரோட்டரி ஆக்சுவேட்டருடன் வந்த முதல் ஹார்ட் டிஸ்க். 5 அல்லது 9 எம்பி திறனுடன் அமைந்தது.

1976

43 எப்.டி. கிறிஸ்டல் என்னும், முதல் வளைந்து கொடுக்கக் கூடிய டிஸ்க் டிரைவ்; இரு பக்கமும் எழுதக் கூடியது. 8 அங்குல அகலத்துடன் 0.568 எம்பி கொள்ளளவு கொண்டது.

ஷுகார்ட் அசோசியேட்ஸ் என்னும் நிறுவனம் முதல் 5.25 அங்குல அகலத்தில் ப்ளெக்ஸிபிள் டிஸ்க்கினைக் கொண்டு வந்தது. இதில் 0.2188 எம்பி டேட்டா பதியலாம்.

1979

பியுஜிட்ஸு நிறுவனம் 10.5 அங்குல அகலத்தில் ஹார்ட் டிஸ்க் டிரைவினைத் தந்தது. ஆறு பிளாட்டர்கள் உள்ளன.

ஸீகேட் டெக்னாலஜிஸ் நிறுவனம் எஸ்.டி. 506 என்ற 5.25 அங்குல ஹார்ட் டிஸ்க்கினை 5 எம்.பி திறனுடன் கொண்டு வந்தது. இதில் 4 பிளாட்டர்கள் இருந்தன.

1980
முதல் கிகாபைட் அளவிலான ஹார்ட் டிஸ்க். ஐ.பி.எம். கொண்டு வந்த இந்த ஹார்ட் டிஸ்க் ஒரு ரெப்ரிஜிரேட்டர் அளவு இருந்தது. 250 கிலோ எடையுடன் 40 ஆயிரம் டாலர் மதிப்பு கொண்டிருந்தது.

1981

சோனி நிறுவனமும் டிஸ்க் தயாரிப்பு பணியில் இறங்கியது. 3.5 அங்குல ப்ளெக்ஸிபில் டிஸ்க்கினைக் கொண்டு வந்தது.கொள்ளளவு திறன் 0.4375 எம்பி.

1983

ரோடிம் முதல் 3.5 அங்குல ஹார்ட் டிஸ்க்கினைத் தயாரித்து வழங்கியது.இதில் இரண்டு பிளாட்டர்கள் இருந்தன. அளவு 10 எம்பி.

1986

அதிக திறனுடன் இயங்கும் ஸ்கஸ்ஸி ஹார்ட் டிஸ்க் டிரைவுடன் ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கம்ப்யூட்டர் வெளியானது.

1988

கானர் நிறுவனம் ஒரு அங்குல உயரத்திலான 3.5 அங்குல ஹார்ட் டிரைவினைத் தயாரித்து வழங்கியது. இன்று வரை இதுதான் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படுகிறது. முதலில் இது 31 எம்பி திறன் கொண்டதாக அமைந்தது.

1992

ஸீ கேட் நிறுவனம் அதிர்வுகளைத் தாங்கக் கூடிய முதல் 2.5 அங்குல டிஸ்க் டிரைவினைத் தயாரித்து வழங்கியது.

1993

முதல் 7200 ஆர்.பி.எம். வேக ஹார்ட் டிஸ்க் டிரைவினை (Barracuda ST12550) ஸீ கேட் தயாரித்து வழங்கியது. இதில் 3.5 அங்குல அளவிலான பிளாட்டர்கள் பத்து அமைந்திருந்தன.

1996

மிக அதிக அளவிலான ஸ்டோரேஜ் டென்சிட்டி கொண்ட மீடியத்தினை ஐ.பி.எம். தந்தது. ஒரு சதுர அங்குல இடத்தில் நூறு கோடி பிட் டேட்டாவினை இதில் அமைக்க முடியும்.

1997

ஸீகேட் முதல் 10,000 ஆர்.பி.எம். வேக ஹார்ட் டிஸ்க் டிரைவினை வழங்கியது. முதலில் 3.5 அங்குல பிளாட்டர்களுடனும் பின் 3 அங்குல பிளாட்டர்களுடனும் அமைந் திருந்தது.

1999
மைக்ரோ டிரைவ் என அழைக்கப்படும் மிகச் சிறிய ஹார்ட் டிஸ்க்கினை ஐ.பி.எம். வழங்கியது. இதில் ஒரு அங்குல பிளாட்டர்கள் இருந்தன. ஒரு பிளாட்டரில் 340 எம்.பி. டேட்டா பதிய முடிந்தது.

2000
அதிவேக இயக்கத்துடன், 15000 ஆர்.பி.எம்., ஹார்ட் டிஸ்க் டிரைவினை ஸீ கேட் தயாரித்து வழங்கியது.

2002

பெர்பென்டிகுலர் மேக்னடிக் ரெகார்டிங் டெக்னாலஜி அடிப்படையில் ஹார்ட் டிஸ்க் இயங்க முடியும் என ஸீ கேட் காட்டியது. இதன் மூலம் ஒரு சதுர அங்குல சிப்பில் 100 கிகா பிட்ஸ் தகவல்களைப் பதிய முடியும்.

2005

ஹிடாச்சி முதல் 500 ஜிபி ஹார்ட் டிஸ்க்கினை வெளியிட்டது.

2006

நோட்புக் கம்ப்யூட்டர்களில் பயன்படக் கூடிய Momentus 5400.3 என்னும் 2.5 அங்குல முதல் ஹார்ட் டிரைவினை ஸீ கேட் தந்தது. இதன் கொள்ளளவு திறன் 160 ஜிபி.

Barracuda 7200.10 7200.10 என்ற பெயரில் 750 ஜிபி திறன் கொண்ட ஹார்ட் டிரைவினை ஸீ கேட் வெளியிட்டது.

2007

முதல் 1 டெரா பைட் ஹார்ட் டிஸ்க்கினை ஹிடாச்சி நிறுவனம் டெஸ்க் ஸ்டார் 7கே 1000 என்ற பெயரில் வெளியிட்டது. இதில் 3.5 அங்குல அளவிலான பிளாட்டர்கள் ஐந்து இருந்தன. ஒவ்வொரு பிளாட்டரும் பி.எம்.ஆர். தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி 200 ஜிபி டேட்டாவினைப் பதிந்தன.

2008

லேப் டாப் கம்ப்யூட்டரில் பயன்படுத்த ஹிடாச்சி, 2. 5 அங்குல அளவிலான ஹார்ட் டிரைவினைத் தந்தது. இதில் இரண்டு பிளாட்டர்கள் 5,400 ஆர்.பி.எம்.வேகத்தில் சுழன்றன.

2009

வெஸ்டர்ன் டிஜிட்டல் முதல் 2 டெரா பைட் ஹார்ட் டிஸ்க்கினைக் கொண்டு வந்தது. நான்கு 3.5 அங்குல பிளாட்டர்கள் இதில் உள்ளன. ஒரு பிளாட்டரில் 500 ஜிபி டேட்டா பதியமுடியும்.

வெஸ்டர்ன் டிஜிட்டல் மேலும் ஒரு சாதனையை மேற்கொண்டது. முதல் 1 டெரா பைட் ஹார்ட் டிஸ்க்கினை 2.5 அங்குல அகலத்தில் தயாரித்தது. லேப்டாப்பில் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தக்கூடிய இதன் பெயர் ஸ்கார்ப்பியோ புளு.

எழுதியவர் : கார்த்திக்
மேலும் அறிய

> S.M.S அனுப்பியதும் ஸ்ரேயாதான்.

நாம செத்துட்டா நாலு பேராவது உச் கொட்டணும்னு நினைக்கிறது தப்பேயில்லை. ஆனால் அப்படி உச் கொட்டுவதை நாமளும் பார்க்கணும்னு நினைக்கறதுதான் தப்பு. இப்படி ஜென் சன்னியாசி மாதிரி சித்தாந்தம் பேச வச்சவர் நம்ம ஸ்ரேயாவேதான். மொட்ட தலைக்கும் முழங்காலுக்கும் கூட முடிச்சு போடுங்கப்பா. அதுக்காக ஸ்ரேயாவுக்கும் சாவு செய்திக்கும் முடிச்சு போடுறீங்களே, நல்லாவா இருக்கு?

அட, விஷயத்தை கேட்டுட்டு வியாக்கியானம் பேசுங்க சாருன்னு சொல்லிட்டு அந்த செய்தியை எடுத்துவிட்டார் கோடம்பாக்கத்து முக்கிய ஆசாமி ஒருவர். கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் துவங்கிய எஸ்எம்எஸ் வதந்தி ஒன்று உலகம் முழுக்க ஒரு சில மணி நேரத்தில் பரவியது. எல்லா எஸ்எம்எஸ்சிலும் ஸ்ரேயா தற்கொலை முயற்சி என்று வெளியான தகவல்களால் திக்குமுக்காடி போனது சினிமா ஏரியா.

அந்த நேரம் பார்த்துதான் செல் போனை ஆஃப் செய்துவிட்டு ஜம்மென்று ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தார் அந்த திம்சுகட்ட மீனு. இப்படி ஒரு செய்தி வந்ததை பின்னாடி அறிஞ்சதும் ஷாக் ஆயிருப்பாரே? அட, போங்க சாரு. செய்தியை பரப்பி விட்டதே அவருதானே என்றார் அந்த சினிமா புள்ளி. எதுக்காகவாம்? நம்ம மேல மற்றவங்க எவ்வளவு அஃபெக்ஷன் வச்சிருக்காங்கன்னு பார்க்க நினைச்சுதாம் பொண்ணு. அதான், வேற ஒன்ணுமில்லேங்கிறாங்க.

அழகை காட்டி கிறுக்கனுங்களாக்கியது போதாதுன்னு இது வேறயா?
மேலும் அறிய

> ரஜினியுடன் புகைப்படம் நடிகைகள் தள்ளுமுள்ளு

நிஜமானாலும் நிழலானாலும் ‘ஆட்டோகிராப்’ சமாச்சாரத்திற்கு தனி கிக் தான்! 80 களில் நடித்த ஹீரோ ஹீரோயின்கள் ஒன்று சேர்ந்து ஒரு விருந்தில் கலந்து கொண்டால் எப்படியிருக்கும்? தென்னக திரைவானில் மட்டுமல்ல, வடக்கிலேயும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஸ்ரீதேவி போன்றோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாம். ஆனால் வந்தவர்கள் அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்களும், தமிழகத்தை சேர்ந்தவர்களும்தான்.

நதியா, ராதிகா, ஷோபனா, பூர்ணிமா பாக்யராஜ், லிசி, அம்பிகா, ராதா தெலுங்கு கன்னடத்திலிருந்து பார்வதி உள்ளிட்ட முக்கிய முன்னாள் ஹீரோயின்களும், பிரபு, கார்த்திக், மோகன், பிரதாப்போத்தன், சுமன், சுரேஷ், பானுசந்தர், உள்ளிட்ட ஹீரோக்களும் கலந்து கொண்டார்கள். இதில் கன்னட சூப்பர் ஸ்டார் விஷ்ணுவர்த்தன் மனைவியுடன் வந்திருந்தார். ஆச்சர்யம் என்னவென்றால் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள இங்கேயும் ஒரே தள்ளுமுள்ளு.

சற்று தாமதமாக வந்த ரஜினியை அரங்கமே அதிரும்படி உற்சாக கைதட்டி வரவேற்றார்கள் அனைவரும். எல்லாருடனும் சகஜமாக பேசிக் கொண்டிருந்தார் ரஜினி. தன்னுடன் நடித்த ஒவ்வொரு ஹீரோயின்களையும் அழைத்து அவர்களிடம் குடும்பம் குழந்தைகள் குறித்து பேசிக் கொண்டிருந்தவர், எல்லாருடனும் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்பு பெரிய கேக் வரவழைக்கப்பட்டது. அதை வெட்டியது நம்ம சூப்பர் ஸ்டார்தான். தனது கையாலேயே எல்லாருக்கும் கேக் ஊட்டிவிட்டார் ரஜினி.

இத்தனை பெரிய கோலாகல விழா ‘கொண்டாட்டம்’ இல்லாமலா முடியும்? பிரதாப்போத்தனின் ஃபேஸ்புக்குடன் தொடர்புள்ளவர்கள் அங்கே போய் பார்த்தால் தெரியும், அத்தனை கொண்டாட்டமும் எத்தனை நிதானத்தோடு நடந்தது என்று!

MORE PHOTOS
மேலும் அறிய

Monday, September 7, 2009

> Googleற்கு வயது பதினொன்று...!!!

செப்டம்பர் 7ல் கூகுள் தன் பதினோராவது ஆண்டை முடித்து 12 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. 1998ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ம் திகதி கூகுல் தனது முதலாவது பிறந்த நாளை கொண்டாடியது.

கூகுள் எர்த் மற்றும் மேப்ஸ் மூலம் ஆகாயத்தில் அடி எடுத்து வைத்து தகவல் தொழில் நுட்ப உலகில் இன்று இன்னும் உயர உயரச் செல்லும் இந்நிறுவனத்தின் வளர்ச்சி இளைய தலைமுறை எப்படி உழைக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாய் விளங்குகிறது. இதனுடைய வளர்ச்சியைக் காணலாம்.

1995

லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் (Larry Page and Sergey Brin) ஸ்டான் போர்டு பல்கலைக் கழகத்தில் சந்தித்து கலந்தாய்வு செய்கின்றனர்.

1996

பேஜ் மற்றும் பெரின் பேக்ரப் என்னும் சர்ச் இஞ்சினை வடிவமைக்கின் றனர். இணைய தள லிங்க்குகளை இது ஆய்வு செய்து தகவல்களைத் தெரிவிக் கிறது. இதன் பின் கூகுள் முதல் பதிப்பு ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தின் வெப்சைட்டில் வெளியிடப்படுகிறது.

1997

கூகுள். காம் பதிவு செய்யப்படுகிறது. சன் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஆண்டி (Andy Bechtolsheim ) கூகுள் நிறுவனத்தில் ஒரு லட்சம் டாலர் முதலீடு செய்கிறார். கூகுள் கார் ஷெட் ஒன்றில் தன் முதல் பணி மையத்தை அமைக்கிறது. அடுத்த செப்டம்பர் 7ல், அதன் முதல் பிறந்த நாளில், கூகுள் அறிந்தேற்பு பெறுகிறது.

1999

கூகுள் நிறுவனம் தொழிலில் வர்த்தக ரீதியாக புது முயற்சி செய்பவர்களுக்கான முதலீடு 2 கோடியே 50 லட்சம் டாலர் பெறுகிறது. 8 ஊழியர்களுடன் முழுமையான ஓர் அலுவலகத்தினை மவுண்ட்டன் வியூ என்ற இடத்தில் அமைக்கிறது.

2000

குகூள் முதன் முதலாக அட் வேர்ட்ஸ் என்னும் விளம்பரப் பிரிவினை அமைக்கிறது. யாஹூ கூகுள் சர்ச் இஞ்சினைத் தன் தேடல் சாதனமாக அமைத்துக் கொள்கிறது. பத்து மொழிகளில் கூகுள் வெளிவருகிறது. உலகின் மிகப் பெரிய வேகமான தேடல் சாதனமாக கூகுள் இடம் பிடிக்கிறது.

2001

கூகுள் நிறுவனத்தின் தலைவராக எரிக் ஸ்மித் ஆகிறார். பேஜ் மற்றும் பிரின் தயாரிப்பு மற்றும் தொழில் நுட்பம் ஆகிய இருபிரிவுகளுக்கு ஒவ்வொருவரும் தலைவராகின்றனர். கூகுள் தேஜா. காம் நிறுவனத்திலிருந்து 1995 ஆண்டிலிருந்து வெளியான 50 கோடி தகவல்களைப் பெறுகிறது.

2002

கூகுள் லேப்ஸ், கூகுள் நியூஸ் (4000 செய்தி தொடர்பு களுடன்) மற்றும் ப்ரூகுள் (Froogle) தொடங்கப்பட்டன. அமெரிக்க இணைய தள நிறுவனமான ஏ.ஓ.எல். (AOL) குகூள் தேடு தளத்தைப் பயன் படுத்த ஒப்புக் கொள்கிறது.

2003

அமெரிக்காவில் இயங்கும் டயலக்ட் சொசைட்டி (வட்டார மொழி குறித்து ஆய்வு மேற்கொள்ளும் நிறுவனம்) 2002 ஆன் ஆண்டில் அதிகம் பயன் படுத்தப்பட்ட சொல் “கூகுள்” எனக் கண்டு அறிவிக்கிறது. பிளாக்குகளின் காரணகர்த்தாவான பைரா லேப்ஸ் (Blogger) நிறுவனத்தை கூகுள் பெறுகிறது.

2004

மூலதன நிதி திரட்ட பங்கு ஒன்று 85 டாலர் என்ற விலையில் பங்குகளை கூகுள் வெளியிட்டது. இமெயில் சேவை ஜிமெயில் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இத்துடன் டெஸ்க் டாப் சர்ச் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது. பைகாஸா நிறுவனம் வாங்கப்பட்டது. அதன் தேடல் தொகுப்பு அட்டவணையில் உள்ள 600 கோடி ஐட்டங்கள் கூகுள் சர்ச் இஞ்சினுக்கு இணைந்தன.

2005

கூகுள் எர்த், கூகுள் டாக், கூகுள் பேஸ் மற்றும் கூகுள் பிளாக் சர்ச் ஆகியவை தொடங்கப்பட்டன. கூகுள் ரீடர் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். ஃபீட் ரீடர் அறிமுகமானது. கூகுள் அனலிட்டிக்ஸ் என்ற இணைய தள ஆய்வு சாதனமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

2006

யு–ட்யூப் நிறுவனம் கையகப்படுத்தப் பட்டது. காலண்டர், ஜிமெயில் மொபைல் மற்றும் கூகுள் பைனான்ஸ் ஆகியவை உருவாகி வெளியாயின. கூகுள் செக்அவுட் வர்த்தக நோக்கில் தரப்பட்டது. ஒரு சில பயனாளி களுக்கென கூகுள் பேஜ் கிரியேட்டர் வடிவமைக் கப்பட்டு தரப்பட்டது. ஒரு சில பிரச்சினை களுக்குப் பின் சீனாவில் கூகுள் நுழைந்தது.

2007

டபுள் கிளிக் என்னும் விளம்பர நிறுவனத்தை கூகுள் வாங்கியது. ஜைக்கு என்னும் சோசியல் மொபைல் நிறுவனத்தினயும் பெற்றது.

2008

கூகுள் பிரவுசர் குரோம் வெளியானது. வெளியான ஒரே நாளில் உலகின் மொத்த பிரவுசர் பயன்பாட்டில் 1 % மக்களிடம் சென்றது. தொடர்ந்து இந்த எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. விக்கிபீடியாவிற்கு இணையாக கூகுள் நால் (Google Knol) வெளியானது.

2009

கூகிள் தனது ஆப்பரேட்டிங் சிஸ்டத்துக்கான ( Google Chrome OS ) அறிவிப்பை வெளியிட்டது. மைக்கரோ சாப்டின் பிங்க் தேடுபொறிக்கு போட்டியாக கூகிள் Google squared எனும் தேடுபொறியை அறிமுகப்படுத்தியது.

மைக்ரோசாப்ட் / கூகுள் யார் பெரியவர்?




தகவல் தொழில் நுட்ப உலகில் எதாவது நடந்தால் உடனே அது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான மோதலாகத்தான் இருக்கிறது. கூகுள் நிறுவனம் தொடங்கி 11 ஆண்டுகள் தான் முடிந்துள்ளது. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த 31 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. மனிதனின் சிந்தனைப் போக்கையே மாற்றி அமைத்த நிறுவனம் மைக்ரோசாப்ட். எம்.எஸ்.டாஸ், எம்.எஸ். ஆபீஸ், விண்டோஸ், ஹாட்மெயில், விசுவல் ஸ்டுடியோ, மைக்ரோ சாப்ட் டெவலப்பர் நெட்வொர்க், டாட் நெட் பிரேம் ஒர்க், விண்டோஸ் மொபைல், பலராலும் இன்று விளையாடப்படும் கேம்ஸ், (Age of Empires, Halo, Microsoft Flight Simulator) எம்.எஸ்.என். லைவ் மெசஞ்சர், விஸ்டா தொழில் நுட்பம் என கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் உலகை மனித வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்த நிலைக்குக் கொண்டு வந்தது மைக்ரோசாப்ட் தான்.

இருப்பினும் சர்ச் இஞ்சின் என்பதனைத் தன் கையில் எடுத்து அதில் எவரெஸ்ட்டைத் தொட் டது குகூள்தான். அதனையே கம்ப்யூட்டரின் அடிப்படையாக அமைக்கத் தொடர்ந்து பாடு படும் குகூளின் திட்டம் ஒரு நாள் வெல்லலாம். அன்று மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டரின் நிலையையே மாற்றலாம். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் அறிய

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.