Saturday, October 31, 2009

> தமன்னாவின் பேராசை

முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கவும் வேண்டும், தேசிய விருதும் வாங்க வேண்டும் என்றால் அதை பேராசை என்றில்லாமல் வேறென்ன கூறுவது?

இப்போதைக்கு தமிழில் நெ.ஒன் என்றால் அது தமன்னா. சம்பளத்தில் நயன்தாரா, த்‌ரிஷாவுக்குப் பிறகு என்றாலும் சூர்யா, கார்த்தி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்துவரும் ஒரே நடிகை இவர் மட்டுமே. மாஸ் ஹீரோக்களின் படங்களில் ஹீரோயினுக்கு காதலிக்கவும், குளிர் பிரதேசத்தில் குறைந்த உடையில் நடனமாடவும் மட்டுமே வாய்ப்பளிக்கப்படும்.

தமன்னாவும் அந்த திருப்பணியை‌த்தான் மேற்கொண்டிருக்கிறார். நடிப்பு என்று பார்த்தால் கல்லூரி மட்டும் விதிவிலக்கு.

மாநில விருதே சந்தேகம் என்னும் நிலையில் தேசிய விருதுக்கு ஆசைப்படுகிறது பாப்பா. பொதுவாக இந்த மாதி‌ரி ஆசை ‌ரிட்டையர்ட் நேரத்தில் நடிகைகளுக்கு வருவது. தமன்னாவுக்கு அதுவே சீக்கிரம் ஏன் வந்திருக்கிறது என்பது பு‌ரியாத கேள்வி. ஒருவேளை தேசிய விருதை தன்னுடைய நடிப்பு மாதி‌ரி ரொம்ப ஈஸியாக நினைத்துவிட்டாரோ?

> ஸ்ருதி ஹாசனின் அடுத்த ஸ்டெப்

இசையா? நடிப்பா? ஒண்ணுமே பு‌ரியலை என்று சொல்லிக் கொண்டிருந்தவர் இரண்டாவதை தேர்ந்தெடுத்திருக்கிறார். சித்தார்த் ஹீரோவாக நடிக்கும் தெலுங்குப் படத்தில் ஸ்ருதி ஹாசன்தான் ஹீரோயின்.

சித்தார்த் ஜோடியாக ஸ்ருதி நடிக்கிறார் என்பதை சில வாரங்கள் முன்பே கூறியிருந்தோம். ஆனாலும், இப்போதுதான் இந்த செய்தி உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஹைதராபாத் ராமே‌ஜிராவ் பிலிம் சிட்டியில் இவர்கள் இணைந்து நடிக்கும் படத்தின் தொடக்க விழா பிரமாண்டமாக நடந்தது.

இன்னும் பெய‌ரிடப்படாத இந்தப் படத்தை ராகவேந்திர ராவ் தயா‌ரிக்கிறார். அவருடைய மகன் பிரகாஷ்ராவ் படத்தை இயக்குகிறார். லக்-கில் கோட்டை விட்ட ஸ்ருதி இதிலாவது கொடி நாட்டுவாரா?

> குருவுக்கு குரல் கொடுத்த கமல்

கமல்ஹாசன் ரெட்டைச்சுழி படத்துக்காக ஒரு பாடல் பாட இருக்கிறார். இதுதான் ஷங்கர் அலுவலகத்தை வலம் வரும் லேட்டஸ்ட் செய்தி.

தாமிரா இயக்கும் ரெட்டைச்சுழியில் பாலசந்தர், பாரதிராஜா இருவரும் இணைந்து நடிக்கின்றனர். படத்தில் இருவருக்கும் பாடல் காட்சிகளும் உண்டு. இதில் ஒன்று பாலசந்தர் பாடுவதாக வரும் பேத்தா ஸாங்.

இந்தப் பாடலை கமல் பாடினால் நன்றாக இருக்கும் என்பது இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, இயக்குனர் தாமிரா ஆகியோ‌ரின் விருப்பம். விஷயம் கமலின் காதுகளுக்குப் போய் அவரும் சம்மதம் தெ‌ரிவித்திருக்கிறார்.

தனது அடுத்தப் படத்தின் வேலைகளுக்காக ஹாலிவுட் சென்றிருக்கும் கமல், நவம்பர் முதல் வாரத்தில் சென்னை திரும்புகிறார். அவர் வந்தவுடன் பாடல் பதிவு இருக்குமாம்.

கார்த்திக் ராஜா இசையில் இதற்குமுன் அ‌ஜித்துக்கு குரல் கொடுத்திருக்கிறார் கமல் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.

Friday, October 30, 2009

> தனுஷின் புதிய மாமியார்

ர‌ஜினி, அமலா நடித்த மாப்பிள்ளை படத்தின் ‌‌ரீமேக்கில் தனுஷ் நடிப்பது தெ‌ரியும். பொதுவாக வ‌ரிவ‌ரியான பனியன் போட்ட வில்லன்களுடன் மோதும் ர‌ஜினி இந்தப் படத்தில் உடம்பு முழுக்க நகை போட்ட ஸ்ரீவித்யாவுடன் மோதுவார். படத்தில் அமலாவின் அம்மாவாக அதாவது ர‌ஜினியின் மாமியாராக வருவார் ஸ்ரீவித்யா.

‌ரீமேக்கில் ர‌ஜினி பாத்திரத்தை தனுஷும், அமலா கேரக்டரை ஹன்ஷிகாவும் பங்கு போட்டுள்ளனர். தேவை ஒரு பவர்ஃபுல் மாமியார். அனுஹாசன் தொடங்கி ஸ்ரீதேவி, தபு, ஜெய‌பிரதா என பலரை முயன்று இறுதியில் ஜெய‌பிரதாவை டிக் செய்துள்ளனர். இவர்தான் ஹன்ஷிகாவின் அம்மாவாக தனுஷை மிரட்டப் போகிறவர்.

தனுஷை வைத்து படிக்காதவன் படத்தை எடுத்த சுரா‌ஜ் இந்த ‌‌ரீமேக்கை இயக்குகிறார்.

> கமலை முந்திய ஷங்கர்

கமல் தயா‌ரித்து நடித்த உன்னைப்போல் ஒருவனை ஷங்க‌ரின் தயா‌ரிப்பில் வெளிவந்த ஈரம் முந்தியிருக்கிறது. சென்றவார சென்னை பாக்ஸ் ஆஃபிஸின் சுவாரஸியமான விஷயம் இது.

5. உன்னைப்போல் ஒருவன்
ஐந்து வாரங்கள் முடிவில் 4.34 கோடியை வசூலித்திருக்கும் இப்படம், வார இறுதியில் 27 காட்சிகளில் 2.35 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது.

4. ஈரம்
ஆறு வாரங்கள் முடிவில் ஈரத்தின் மொத்த வசூல் 1.9 கோடி. சென்ற வார இறுதி மூன்று நாள் வசூல், உன்னைப்போல் ஒருவனைவிட அதிகம், 4.34 லட்சங்கள்.

3. ஜகன் மோகினி
இந்த மாயாஜாலப் படத்துக்கு ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பில்லை. சென்ற வார இறுதியில் 9.9 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இதுவரை மொத்த வசூல் 36 லட்சங்கள்.

2. பேராண்மை
பேராண்மைக்கு இரண்டாவது இடம். ஒரு வார முடிவில் சென்னையில் மட்டும் 96 லட்சங்களை வசூலித்திருக்கிறது. வார இறுதி வசூல் 31.16 லட்சங்கள்.

1. ஆதவன்
முதலிடத்தில் ஆதவன். படம் நன்றாக இல்லை என்ற விமர்சனங்களைத் தாண்டி வசூலில் ஆதவன் கொடி கட்டுகிறது. வார இறுதி வசூல், 62.87 லட்சங்கள். இதுவரை மொத்த வசூல் 1.99 கோடி.

> குழந்தைகளுக்கு இசையமைக்கும் ரஹ்மான்

உலக ரசிகர்களுக்காக இசையமைக்கும் ரஹ்மான் உள்ளூர் குழந்தைகளுக்காவும் இசையமைக்க முன்வந்திருக்கிறார்.

நர்ச‌ரி ரைம்ஸ் இருக்கிறதல்லவா? அவற்றில் சிறந்தவைகளை மட்டும் தேர்ந்தெடுத்து இசையமைக்க இருக்கிறாராம் ரஹ்மான். குழந்தைகளுக்காகதான் இந்த வேலையை அவர் செய்ய இருக்கிறார். இந்தப் பணியில் அவரது மியூசிக் ஸ்கூல் ஸ்டூடண்ட்களின் பங்களிப்பும் இருக்குமாம்.

நர்ச‌ரி ரைம்ஸ் என்றாலும் அதற்கும் வீடியோ ஆல்பம் போட இருக்கிறார்கள். பாடலுக்கு உதடசைத்து குழந்தைகளுடன் நடனமாட இருப்பவர், கத்‌ரினா கைஃப்.

இனி ரைம்ஸ் தெ‌ரியாது என்று எந்த குழந்தையும் சொல்லாது. இசையமைக்கயிருப்பது ரஹ்மானாயிற்றே.

Thursday, October 29, 2009

> கண்டேன் காதலை-மு‌ன்னோ‌ட்ட‌ம்

மோசர் பேர், ப்ளூ ஓசனுடன் இணைந்து தயா‌ரித்திருக்கும் படம், கண்டேன் காதலை. பரத், தமன்னா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

ஆர்.கண்ணன் படத்தை இயக்கியிருக்கிறார். இவர் ஜெயம் கொண்டான் படத்தை இயக்கியவர். கண்டேன் காதலை இரண்டாவது படம். இந்தியில் இம்தியாஸ் அலி இயக்கிய ஜப் வி மெட் படமே கண்டேன் காதலை என்ற பெய‌ரில் தமிழில் ‌ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது.

பழனி, சேவல், ஆறுமுகம் என தொடர்ந்து ஆ‌க்சன் படங்களில் நடித்த பரத், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் காதல் படம் இது. அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். வித்யாசாகர் இசையமைத்துள்ளார். பாடல்கள் நா.முத்துக்குமார், யுகபாரதி, கார்க்கி.

இந்தப் படத்துக்காக மர வீடு ஒன்றை உருவாக்கியுள்ளனர். பாடல் காட்சியொன்றை புத்தர் கோயிலில் எடுத்துள்ளனர். இது நிஜ புத்த கோவிலல்ல. படத்துக்காக கலை இயக்குனர் உருவாக்கியது. படத்தின் பெரும் பகுதியை மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கியுள்ளனர்.

‌ரீமேக் என்றாலும், தமிழுக்கு ஏற்றபடி காட்சிகளை மாற்றியிருப்பதாக‌க் கூறுகிறார் படத்தின் இயக்குனர் ஆர்.கண்ணன். பரத் சக்தி என்ற கேரக்ட‌ரிலும், தமன்னா அஞ்சலி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். தாய்மாமனாக சந்தானம் நடித்துள்ளார். இவர்களுடன் சபான் கான், மனோபாலா, தெலுங்கு நடிகர் முன்னா ஆகியோரும் நடித்துள்ளனர்.

சந்தானத்தின் கதாபாத்திரம் இந்தியில் ஒரு காட்சியில் மட்டுமே இடம்பெறும். அதனை படம் முழுக்க வருவதுபோல் மாற்றி அமைத்திருக்கிறார்கள். வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் இந்தப் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

> சன் T.V யில் புதிய கேம் ஷோ

தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமாகத் திகழ்ந்து வரும் சன் தொலைக்காட்சி, வரும் (அக்டோபர்) 31ஆம் தேதி முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் `டீலா நோ டீலா' என்ற பெயரில் புதிய கேம் ஷோ நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது.

இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ள இந்நிகழ்ச்சியை சன் நெட்வொர்க் நிறுவனத்துடன் இணைந்து சர்ஃப் எக்ஸல் மற்றும் என்டிமோல் நிறுவனங்கள் வழங்குகின்றன.

`ஆனந்த தாண்டவம்', `பிரிவோம் சந்திப்போம்' படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ரிஷி இந்த கேம் ஷோவை தொகுத்து வழங்கவுள்ளார்.

சென்னையில் `டீலா நோ டீலா' அறிமுக விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய சன் டி.வி. நெட்வொர்க் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அஜய் வித்யாசாகர், சன் டி.வி தொடங்கப்பட்ட காலம் முதல் அனைத்து அறிமுகப்படுத்திய அனைத்து நிகழ்ச்சிகளுமே வெற்றிகரமாக அமைந்ததைச் சுட்டிக்காட்டினார்.

அதேபோல் இப்போது புதிதாக ஒளிபரப்பாகவிருக்கும் இந்த கேம் ஷோவும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றார்.

தொலைக்காட்சி வரலாற்றில் தென்னிந்தியாவில் இருந்து, அதுவும் சன் குழுமத்தில் இருந்து தமிழ் மொழியில் இந்நிகழ்ச்சி உருவாக்கப்பட்டிருப்பது நல்ல தொடக்கம். எதிர்காலத்தில் இதேபோன்ற பல கேம் ஷோக்கள் வெளிவருவதற்கு இது வழிவகுக்கும் என்றும் அஜய் குறிப்பிட்டார்.

மேலும் இந்த கேம் ஷோ பற்றிய அறிவிப்பை சன் டி.வியில் அறிவிப்பு செய்து, பங்கேற்க விரும்புவோர் பற்றி தெரிவிக்கக் கேட்ட முதல் நாளிலேயே சுமார் 11 லட்சம் பேர் தமிழகம் முழுவதும் இருந்து தொலைபேசியிலும், குறுந்தகவல் சேவை மூலமாகவும் பங்கேற்கும் விருப்பத்தைத் தெரிவித்ததே அந்த ஷோவின் வெற்றியை முன்கூட்டியே உணர்த்தியுள்ளதாகவும் அஜய் கூறினார்.

தமிழ் மொழிக்கேற்ப இந்த நிகழ்ச்சியை சற்றே வித்தியாசப்படுத்தி, உலகத் தரம் மாறாமல் தயாரித்து வழங்கப்படவிருப்பதாகவும் அவர் சொன்னார்.

இந்த போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரை பரிசுத்தொகை கிடைக்க வாய்ப்புள்ளதாக தலைமை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ரவி மேனன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கேம் ஷோ குறித்த விவரத்தையும் அவர் எடுத்துக் கூறினார்.

என்டிமோல் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தீபக் தார் கூறுகையில், தென்னிந்தியாவில் பிரபல நிறுவனமாக விளங்கும் சன் குழுமத்துடன் இணைந்து கேம் ஷோ ஒளிபரப்பில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்க பாக்கியமாகக் கருதுவதாகத் தெரிவித்தார்.

பொழுதுபோக்குடன் கூடிய மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளை சன் டிவியுடன் இணைந்து தொடர்ந்து என்டிமோல் வழங்கும் என்றார்.

73 நாடுகளில் ஒளிபரப்பாக உள்ள இந்நிகழ்ச்சிக்கான மொத்த பரிசுத்தொகை 500 கோடி ரூபாயாகும்.

இந்த விளையாட்டில் 26 பெட்டிகள் (சூட்கேஸ்கள்) இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் 1 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை வைக்கப்பட்டிருக்கும். போட்டியாளர்கள் ஏதாவது ஒரு சூட்கேஸை எடுத்து அதில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை அறியாமலேயே மற்ற 25 பெட்டிகளிலும் உள்ள அதிகபட்ச பணத்தை அவர் தேர்வு செய்ய வேண்டும்.

போட்டிக்கு இடையே வங்கியாளர் ஒருவர், போட்டியாளரின் சூட்கேஸை பணம் கொடுத்து வாங்கிக் கொள்ள விருப்பம் தெரிவிப்பார். இதுவே டீலா நோ டீலா போட்டி.

இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் என்ன `ரேட்டிங் டீல்' கொடுக்கப் போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Wednesday, October 28, 2009

> விஜயலட்சுமியின் முத்தம்

அதே நேரம் அதே இடம் நவம்பர் 6ஆம் தேதி வெளியாகிறது. ஜெய், விஜயலட்சுமி நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

அடிதடி, ஆபாசம் இல்லாத இந்தப் படத்துக்கு ஏன் சென்சார் யு சான்றிதழ் வழங்கவில்லை என்பது அனைவ‌ரின் ஆச்ச‌ரியமான கேள்வி. இதற்கு காரணம் படத்தின் நாயகி விஜயலட்சுமியின் முத்தக் காட்சி என்றால் நம்ப முடிகிறதா? முடியாவிட்டாலும் அதுதான் உண்மை.

படத்தில் ஒரு காட்சியில் விஜயலட்சுமிக்கு விக்கல் வருகிறது. என்ன செய்தும் விக்கல் நிற்கவில்லை. இதைப் பார்க்கும் ஹீரோ ஜெய், விஜயலட்சுமி எதிர்பார்க்காத நேரம் அவருக்கு உதட்டோடு உதடு பதித்து முத்தம் கொடுக்கிறார். உடனே விக்கல் நின்று விடுகிறது.

அத்துடன் இருவரும் சுவிட்சர்லாந்தில் டூயட் பாட கிளம்பியிருந்தால் அது சாதாரணமான விஷயம். ஆனால், படத்தை இயக்கியிருக்கும் பிரபு எஸ்.ஜே.சூர்யாவின் அசிஸ்டெண்டாயிற்றே. முக்கியமான கட்டம் இனிதான் வருகிறது.

ஜெய் விஜயலட்சுமியின் உதட்டிலிருந்து தனது உதட்டை எடுத்ததும் மீண்டும் விக்கல் வருகிறது. என்ன செய்வது? மீண்டும் தொடர்கிறது முத்தம்.

இந்த தொடர் முத்தம் காரணமாக‌த்தான் சென்சார் யு சான்றிதழ் கொடுக்கவில்லையாம். எப்படி இந்த முத்த ராமாயணம்?

> தனுஷின் தனி வழி

ஒரே இயக்குன‌ரின் படத்தில் எந்த ஹீரோவும் தொடர்ந்து நடிப்பதில்லை. இரண்டு பட இடைவெளியாவது இருக்கும். விஜய், அ‌ஜித் மட்டுமல்ல கமல், ர‌ஜினியின் பழக்கமும் அதுதான்.

இந்த விதிமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறார் தனுஷ். செல்வராகவனின் இயக்கத்தில் அவர் நடித்து வரும் இது மாலை நேரத்து மயக்கம், செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடிக்கும் நான்காவது படம்.

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் ஆடுகளம் அவருடனான இரண்டாவது படம். குட்டி படம் ஜவஹர் இயக்கத்தில் இரண்டாவது. இவையெல்லாம் மிகக் குறுகிய காலகட்டத்தில் எடுக்கப்படும் படங்கள் என்பதும், வெற்றிமாறனின் முதலிரண்டு படங்களிலும் தனுஷே நடித்திருக்கிறார் என்பதும் ஆச்ச‌ரியமான விஷயம்.

மித்ரன் ஜவஹ‌ரின் முதல் படம் யாரடி நீ மோகினியில் தனுஷ் ஹீரோ. இரண்டாவது படம் குட்டியிலும் அவரே ஹீரோ. அத்துடன் முடியவில்லை. ஜவஹ‌ரின் இயக்கத்தில் மேலுமொரு படத்தில் நடிக்கிறார் தனுஷ். குட்டி படப்பிடிப்பு முடியும் முன்பே அடுத்தப் படம் தீர்மானமாகிவிட்டது. பாலா‌ஜி ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயா‌ரிக்கிறது.

தெலுங்கில் வெளியான ரெடி படத்தின் ‌‌ரீமேக் இது என்கிறார்கள். என்றாலும் இந்த‌த் தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

> நிலா புது முடிவு

ஜகன் மோகினியில் நான்தான் ஹீரோயின், நமிதா ஆ‌ண்‌ட்டி ஹீரோயின் என பார்க்கிறவர்களிடமெல்லாம் சொல்லி வந்தார் நிலா. படத்தின் தயா‌ரிப்பாளரும், இயக்குனரும் இதற்கு ஆமாம் சாமி போட்டு வந்தார்கள். ஆனால் நடந்தது வேறு.

நமிதாவை நம்பிதான் ஜகன் மோகினியே எடுக்கப்பட்டது. நிலாவை டம்மி பீஸாக்குவது என்பது படம் தொடங்கும் முன்பே முடிவு செய்யப்பட்ட விஷயம்.

சமீபத்தில் படத்தைப் பார்த்த நிலாவுக்கு கரண்‌ட்டை கையில் பிடித்ததுபோல் படுபயங்கர ஷாக். படத்தில் அவரது போர்ஷனில் கணிசமான பகுதிகளை எடிட் செய்திருக்கிறார்கள்.

நம்பி நடிச்சேன், இப்பிடி நலுங்கு வச்சிட்டாங்களே என்று புலம்புகிறவர், இனி இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட், புது இயக்குனர், ‌‌ரீமேக் படங்கள் ஆகியவற்றை தவிர்க்கப் போவதாக கூறியிருக்கிறார்.

பிடி சோற்றுக்கு வழியில்லை, இதில் பி‌ரியாணி வேண்டாம்னு ஸ்டேட்மெண்டா? கெக்கே பிக்கே என்று சி‌ரிக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

Tuesday, October 27, 2009

> அடுத்த அயன் மேன்-கார்த்தி

கே.விஆனந்தின் அடுத்த அயன் மேன் யார் என்பதற்கு விடை கிடைத்திருக்கிறது. அவர் வேறு யாருமில்லை, சூர்யாவின் தம்பி கார்த்தி.

அயன் வெற்றிக்குப் பிறகு கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் அனைவரும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனந்தும் அவர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக அயன் மாதி‌ரியே ஒரு கமர்ஷியல் கதையை எழுத்தாளர்கள் சுபாவுடன் இணைந்து உருவாக்கியிருக்கிறார். கல்பாத்தி எஸ் அகோரம் இந்தப் படத்தை தயா‌ரிக்கிறார்.

ஆனால், ஹீரோ?

சூர்யா சிங்கம், ரக்த ச‌ரி‌த்ரா, முருகதாஸின் மூன்று மொழி படம் என பிஸியாக இருக்கிறார். விக்ரம் செல்வராகவன் படம், விக்ரம் கே.குமார் இயக்கும் படம் என ஏற்கனவே கால்ஷீட்களை பி‌ரித்து தந்து விட்டார்.

இவர்களுக்காக காத்திருக்க முடியாது என்பதால் கார்த்தியை டிக் செய்திருக்கிறார் ஆனந்த். பையா படத்தை முடித்துவிட்ட கார்த்தி, சுசீந்திரனின் நான் மகான் அல்ல படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் முடிந்ததும் கே.வி.ஆனந்த் இயக்கும் படம் தொடங்குகிறது. அண்ணனைப் போல சிக்ஸ்பேக்கிற்கு தயாராகிட்டீங்களா கார்த்தி?

> நடிகையின் மிளகாய் குளியல்

இயக்குனர்களின் கற்பனையை கேட்டால் நமக்கே கிலி பிடிக்கிறது. சமீபத்தில் அறிமுக இயக்குனர் திரு செய்த வேலையால் நாள் முழுக்க ஷவருக்கடியில் நனைந்து கொண்டிருந்தார் நீது சந்திரா.

தீராத விளையாட்டு பிள்ளையில் விஷாலுடன் மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். அவர்களில் ஒருவர் நீது சந்திரா. கிளாமராக நடிக்க வேண்டும் என்று முதலிலேயே அக்‌ரிமெண்ட் போட்டுதான் மூவரையும் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

சமீபத்தில் நீது சந்திரா நடித்த பாடல் காட்சியை எடுத்தார்கள். பாத் டப்பில் நீது நீந்துவதுபோல் காட்சி. ஏற்கனவே ரேஷனில்தான் காஸ்ட்யூம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இயக்குனர் திருவுக்கு ‘ஹாட்’ போதவில்லை. குளியல் தொட்டியில் தண்ணீருக்கு பதில் சிவப்பு மிளகாயை மிதக்கவிட்டால் என்ன என்று விப‌ரீதமாக ஒரு ஐடியா தோன்றியிருக்கிறது.

மறு நிமிடம் அதனை செயல்படுத்தியிருக்கிறார்கள். காட்சி முடிந்த பிறகு நீதுவின் உடம்பெல்லாம் எ‌ரிச்சல். ஓடிப் போய் ஷவருக்கடியில் நின்றவர்தானாம். பேக்கப் சொன்ன பிறகுதான் வெளியே வந்திருக்கிறார்.

திரு இயக்கும் படம் என்றால் இப்போதே தெறித்து ஓட தயாராகி வருகிறார்கள் நடிகைகள்.

> அனுராக் - யு டிவி ஒப்பந்தம்

பிளாக் பிரைடே, தேவ் டி படங்களின் மூலம் பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் அனுராக் காஷியப். இவருடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை போட்டிருக்கிறது யு டிவி தயா‌‌ரிப்பு நிறுவனம்.

இந்த ஒப்பந்தத்தின்படி யு டிவி, அனுராக் இணைந்து ஒன்பது படங்களை உருவாக்கயிருக்கிறார்கள். இதில் நான்கு முதல் ஐந்து படங்கள் யு டிவி தயா‌ரிப்பில் அனுராக் இயக்குவதாக இருக்கும். மற்றவை கூட்டுத் தயா‌ரிப்பு.

தேவ் டி படத்தின் வியாபாரத்தில் யு டிவி தனக்கு உதவி பு‌ரிந்ததாகவும், அதனாலேயே அவர்களுடன் இந்த ஒப்பந்தத்தை செய்து கொண்டதாகவும் அனுராக் தெ‌ரிவித்தார்.

Monday, October 26, 2009

> ர‌ஜினி, கமல் படங்கள் ரஷ்யாவில்

ர‌ஜினி, கமல் படங்களை ரஷ்ய சப் டைட்டிலுடன் ரஷ்யாவில் வெளியிட‌ப் போகிறார்கள் என்று பல மாதங்கள் முன்பு சேதி சொல்லியிருந்தோம். அதற்கான வேலைகள் தற்போது ஜரூராக நடந்து வருகின்றன.

வருகிற டிசம்பர் மாதம் சென்னையில் ரஷ்ய திரைப்பட விழா நடக்கிறது. பதில் விருந்து மாதி‌ரி அடுத்த ஜனவ‌ரியில் மாஸ்கோவில் தமிழ்‌த் திரைப்பட விழாவை நடத்துகிறார்கள்.

இதில் சரஸ்வதி சபதம், வசந்த மாளிகை, புதிய பறவை, முத்து, புன்னகை மன்னன் உள்ளிட்ட திரைப்படங்களை திரையிட முடிவு செய்துள்ளதாக‌த் தெ‌ரிகிறது. இந்த‌ப் படங்கள் சம்பந்தப்பட்ட தயா‌ரிப்பாளர்களிடம் அனுமதி வாங்கும் பணி இப்போது நடந்து வருகிடிறது.

வேட்டையாடு விளையாடு படத்தை தி ஸ்மார்ட் ஹண்ட் என்ற பெய‌ரில் இந்தியில் டப் செய்து, ரஷ்ய சப் டைட்டிலுடன் திரைப்பட விழாவில் திரையிட திட்டமிட்டுள்ளனர். அப்படியே படத்தை பாலிவுட்டில் வெளியிடவும் முடிவு செய்துள்ளனர்.

சில மாதங்கள் கழித்து மாஸ்கோ சென்றால் ரஷ்யர்கள் தில்லானா தில்லானா என்று பாடிக் கொண்டிருப்பதை கேட்கலாம்.

> சிம்புவின் S.M.S அனுஷ்காவின் கி‌‌ரீன் சிக்னல்

விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு வாலிபன் படத்தை இயக்கி நடிக்க முடிவு செய்திருக்கிறார் சிம்பு. நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி வாலிபனை தயா‌ரிக்கிறார்.

படத்தில் சிம்புவுக்கு ஜோடி யார்? ஸ்ருதிஹாசன், வரலட்சுமி, தீபிகா படுகோன், பி‌ரியங்கா சோப்ரா, இலியானா என அரை டஜன் பெயர்களை அரைத்துக் கொண்டிருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். ஆனால், சிம்புவின் சாய்ஸ் அருந்ததி அனுஷ்கா என்கின்றன நம்பத்தகுந்த வட்டாரங்கள்.

சமீபத்தில் அனுஷ்காவுக்கு, உங்களுடன் பேச வேண்டுமே என்று எஸ்எம்எஸ் அனுப்பியிருக்கிறார் சிம்பு. இதற்கு உடனடியாக அனுஷ்காவிடமிருந்து கி‌‌ரீன் சிக்னல் கிடைத்திருக்கிறது. பிறகு போனிலேயே வாலிபன் படத்தின் கதையை அனுஷ்காவிடம் கூறியிருக்கிறார் சிம்பு.

நமக்கு கிடைத்த தகவல்படி, படத்தில் நடிக்க சம்மதம் தெ‌ரிவித்திருக்கிறாராம் அனுஷ்கா. அதிகார‌ப்பூர்வ தகவலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

> பாலா கேட்டார் சூர்யா மறுத்தார்

பாலாவின் புதிய படம் குறித்த சில சுவாரஸிய தகவல்கள் வெளியே கசிந்திருக்கிறது. நான் கடவுள் படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகாததால் அடுத்து பாலா என்ன மாதி‌ரி படம் செய்வார் என்பது குறித்து திரையுலகிலும், திரையுலகுக்கு வெளியிலும் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

புதிய படத்தில் விஷால், ஆர்யா இருவரும் நடிக்கிறார்கள். இவர்களுக்குப் பதில் பாலா முதலில் தனது சாய்ஸாக வைத்திருந்தது அண்ணன் தம்பிகளான ரமேஷையும், ‌‌ஜீவாவையும். சில காரணங்களால் அவர்களை தவிர்த்துவிட்டு விஷால், ஆர்யாவை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

உண்மையில் இவர்களுக்கெல்லாம் முன்பு பாலா கால்ஷீட் கேட்டது சூர்யாவிடமும், கார்த்தியிடமும். ஆதவன், சிங்கம், ராம்கோபால் வர்மாவின் ரக்த ச‌ரித்ரா என பிஸியாக இருந்ததால் சூர்யாவால் கால்ஷீட் கொடுக்க முடியாத நிலை. அதேபோல் பையா, நான் மகான் அல்ல, ஆயிரத்தில் ஒருவன் என டைட் ஷெட்யூ‌லில் சிக்கிக் கொண்டதால் கார்த்தியாலும் பாலாவுக்கு பாஸிடிவ் பதில் தர முடியவில்லையாம்.

இந்தமுறை காமெடி சப்ஜெக்டை பாலா கையிலெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. வசனம் எழுத பல எழுத்தாளர்களை முயன்று பார்த்து யாரும் ச‌ரி‌ப்படாமல் இறுதியில் இயக்குனர் வி‌ஜியிடம் பேசியிருப்பதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. மொழி படத்தில் வி‌ஜி எழுதிய வசனங்கள் பெ‌ரிய அளவில் பேசப்பட்டதே இதற்கு காரணம்.

பொதுவாக தனது படத்தின் கதையை ஹீரோவிடமும் சொல்லும் பழக்கம் பாலாவுக்கு கிடையாது. ஆனால் இந்த முறை தனது கதையை விஷால், ஆர்யாவிடம் மட்டுமின்றி படத்தை தயா‌ரிக்கும் விக்ரம் கிருஷ்ணாவிடமும் கூறியிருக்கிறார். அப்புறம், படத்தின் ஹீரோயின்... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க கேட்டு சொல்லிடறோம்.

Sunday, October 25, 2009

> நயன்தாராவின் ரொமாண்டிக் காமெடி

நயன்தாரா நடித்துக் கொண்டிருந்த ஒரே தமிழ்ப் படம், ஆதவன். அதுவும் தீபாவளிக்கு வெளியாகிவிட்டது. அடுத்து என்ன? தவித்துப் போன நயன்தாரா ரசிகர்களுக்கு தண்ணீர் லா‌ரியாக வந்திருக்கிறது ஒரு செய்தி. புதிய தமிழ்ப் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம் நயன்தாரா.

சிவா மனசுல சக்தி படத்தை இயக்கிய ராஜேஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். நயன்தாராவுடன் ஜோடி போடப் போகிறவர் ஆர்யா. இவர்கள் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை.

வாசன் விஷுவல் வெஞ்சர் தயா‌ரிக்கும் இந்தப் பெய‌ரிடப்படாத படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு சக்தி சரவணன். படத்தைப் பற்றி கேட்டபோது இயக்குனர் அளித்த கூடுதல் தகவல், இதுவொரு ரொமாண்டிக் காமெடியாம்.

நயன்தாராவுக்கு பொருத்தமான சப்ஜெக்ட்.

> நமிதா பிரஸ்மீட்

ஜகன்மோகினி படத்தின் ‌ரிலீஸையொட்டி பத்தி‌ரிகையாளர்களை சந்தித்தார் நமிதா. கா‌ரில் வந்திறங்கிய அவ‌ரின் டாப்ஸை பார்த்தே டர்ராகிப் போனார்கள் நிருபர்கள். முதல் கேள்வியே ஜொள்ளாறு. ட்ரஸ் பிரமாதம், டிஸைனர் யாரு?

என்னோட காஸ்ட்யூமை நானே டிஸைன் செய்துக்குவேன் என்ற அ‌ரிய தகவலை வெளியட்டார் நமிதா. புடவை அணிய நமிதாவுக்கு பிடிக்காதாம். ரொம்ப கிளாமராக தெ‌ரியுமாம்.

வஞ்சனை இல்லாமல் அவர் எல்லோரையும் மச்சான் என்று அழைக்க, உங்க ஒ‌ரி‌ஜினல் மச்சான் யார் என்ற கேள்வி எழுந்தது. இதுவரைக்கும் யாருமில்லை என்றவர், இப்போதைக்கு எனக்கு புடிச்ச மச்சான் என்று கை காட்டியது அருகிலிருந்த அவரது மேனேஜரை.

சமீபத்தில் வந்த பரபர பத்தி‌ரிகை செய்தியில் நமிதாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. "ஆறு வருஷமா நடிக்கிறேன், என்னைப் பற்றி தமிழ் மக்களுக்கும் தெ‌ரியும், உங்களுக்கும் தெ‌ரியும், அதனால் கவலையில்லை" என்றார் தனது கொச்சை தமிழில்.

நமிதாவிடம் மற்றவர்கள் கத்துக்க வேண்டியது கிளாமரல்ல, எதற்கும் கலங்காத இந்த Cool.

Saturday, October 24, 2009

> ஆதவனை ரசித்த ர‌ஜினி

ஆதவன் படம் ர‌ஜினி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஸ்பெஷலாக திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த ர‌ஜினி படத்தின் தயா‌ரிப்பாளர் உதயநிதிக்கும், சூர்யாவுக்கும் வாழ்த்துகளை தெ‌ரிவித்தார்.

தீபாவளிக்கு வெளியான படங்களில் ஆதவனே அதிக வசூலை பெற்று முன்னிலையில் உள்ளது. சென்னையில் மட்டும் மூன்று தினங்களில் ஐம்பது லட்சத்துக்கும் மேல் வசூலித்துள்ளது.

இந்தப் படத்தை குடும்பத்துடன் பார்த்த ர‌ஜினி, வடிவேலின் காமெடியை வெகுவாக ரசித்தார். படத்தில் மற்ற எல்லாவற்றையும் விட விடிவேலுவின் காமெடி பகுதிகளையே அவர் அதிகம் ரசித்ததாக உதயநிதி தெ‌ரிவித்துள்ளார்.

முக்கியமாக சரோஜா தேவியின் மேக்கப்பை அவர் கலாய்க்கும் இடங்களை சூப்பர் ஸ்டார் மிகவும் ரசித்து சி‌ரித்திருக்கிறார்.

கடைசியில் ஆதவனையும் காமெடிதான் காப்பாற்றியிருக்கிறது.

> தமிழில் பஹ்ரைன் அழகி

மும்பை அழகிகள் சலித்து விட்டார்கள் போலிருக்கிறது. இரண்டு நாள் முன்பு பூஜை போட்ட மாந்தன் படத்தில் ஹீரோயினாக நடிக்க பஹ்ரைன் நாட்டிலிருந்து அழைத்து வந்திருக்கிறார்கள் ஒரு பேரழகியை. பார்த்தால் மின்னல் போலிருக்கும் இவரது பெயர் கன்னல்.

தாய் காப்பியம் சார்பில் தமிழரசன் மாந்தனை தயா‌ரித்து, இயக்குகிறார். வள்ளுவன் வாசுகி சத்யா மாந்தனின் ஹீரோ. காதல்தான் படத்தின் மையம். காதலுக்காக அனைத்தையும் இழக்கும் ஒரு இளைஞனின் போராட்டம்தான் கதை.

காதலுக்காக ஒருவன் அனைத்தையும் இழக்கிறான் என்றால் காதலி அந்தளவுக்கு மயக்குகிறவளாக இருக்க வேண்டும் அல்லவா? அதற்காகதான் பஹ்ரைனிலிருந்து கன்னலை கொண்டு வந்திருக்கிறார்கள்.

பூஜை போட்ட அன்றே சுறுசுறுப்பாக படப்பிடிப்பையும் தொடங்கிவிட்டார்கள். சீக்கிரமா படத்தை முடிச்சு கன்னலை கண்ணுல காட்டுங்கப்பா

> ஷில்பா ஷெட்டிக்கு நிச்சயதார்த்தம்

நீண்டகாலமாக தனது திருமணத்தை தள்ளிப்போட்டு வந்த பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கும், அவரது காதலர் ராஜ் குன்ட்ராவிற்கும் நாளை நிச்சயதார்த்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் வரும் டிசம்பரில் நடைபெறும்.

இதனை ஷில்பா ஷெட்டியின் உதவியாளர் உறுதிப்படுத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நிச்சயதார்த்தத்தின் போது, ஷில்பாவும், ராஜூம் மோதிரம் மாற்றிக் கொள்வார்கள் என்றும், குடும்பத்தினர் மட்டுமே நிச்சயதார்த்தத்தில் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் வரவேற்புடன், திருமணம் வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது.

Friday, October 23, 2009

> பிதாமகனாகும் சஞ்சய் தத்

தென்னிந்திய படங்களின் மீது பாலிவுட் நட்சத்திரங்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள். சமீபத்தில் இந்தியில் சூப்பர் ஹிட்டான க‌ஜினி, வான்டட் இரண்டும் தென்னிந்தியாவிலிருந்து சென்றவை. இரு படங்களையும் இயக்கியவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இந்த திடீர் கவனிப்புக்கு நெடுநாட்களுக்கு முன்பே இயக்குனர் பாலாவின் சேது படம் இந்தியில் ‌‌ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் படத்தின் பெயர் தேரேநாம். விக்ரம் நடித்திருந்த வேடத்தில் சல்மான் கான் நடித்திருந்தார். படம் அங்கு சூப்பர்ஹிட். டல்லடித்திருந்த சல்மானின் மார்‌க்கெட்டை இந்தப் படம் தூக்கிவிட்டது.

பாலாவின் பிதாமகன் படமும் விரைவில் இந்தியில் ‌‌ரீமேக்காகிறது. சதீஷ் கௌசிக் ‌ரீமேக்கை இயக்குகிறார். பிதாமகன் வெளிவந்த போதே அதைப் பார்த்து மனதை பறிகொடுத்துவிட்டாராம் கௌசிக். இந்தியில் விக்ரம் நடித்த வேடத்தில் சஞ்சய் தத் நடிக்கிறார். மற்ற வேடங்களில் நடிப்பவர்கள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

விக்ரம், பாலா என்ற கூட்டணி சாதித்ததை கௌசிக், சஞ்சய் தத் கூட்டணி எட்டிப் பிடிக்குமா? சந்தேகம்தான்.

> நடப்பதற்கு பயந்த அமீர்

நடப்பதற்கு யாராவது பயப்படுவார்களா? அதுவும் பல வருடங்களாக கேமரா முன் நடித்துவரும் அமீர்கான் போன்ற ஒரு நடிகர்?

சே... இதென்ன கேள்வி என்றுதானே தோன்றுகிறது. ஆனால், உண்மையிலேயே நடப்பதற்கு பயந்திருக்கிறார் அமீர்கான்.

சல்மான் கானின் பீயிங் ஹியூமன் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் ராம்ப் வாக் வந்தனர். விஐபி-கள் கூடியிருக்கும் சபையில் ராம்ப் வாக் செய்வதற்குதான் பயந்திருக்கிறார் அமீர்கான்.

எப்படி பேஷன் ஷோக்களில் நடப்பது என்று எனக்கு தெ‌ரியாது. நிகழ்ச்சி ஆரம்பித்த உடனேயே எனக்கு பயமாகிவிட்டது என தனது ராம்ப் வாக் அனுபவத்தை ஓபனாக வெளியிட்டிருக்கிறார் அமீர்.

இந்த நிகழ்ச்சியில் ராம்ப் வாக் வந்த மற்ற பிரபலங்கள் சன்னி தியோல், அஜய் தேவ்கான், அமிஷா படேல், அ‌க்சய் குமார், சஞ்சய் தத், கோவிந்தா, கத்‌ரினா கைஃப், அர்பாஸ் கான் மற்றும் சோனா அலிகான்.

நடப்பதற்கு பயந்தாலும் அமீர்கான் கூடியிருந்த அனைவ‌ரின் மனசையும் தனது சி‌ரிப்பால் கொள்ளையடித்துவிட்டார். இதுதான் முகராசியோ?

> சிந்து துலானி காதல் திருமணம்

சுள்ளான் படத்தில் அறிமுகமான சிந்து துலானி விரைவில் தனது காதலரை கை பிடிக்கிறார். இவர்களது காதல் கதைதான் இப்போது ஹைதராபாத்தின் ஹாட் டாபிக்.

சுள்ளான் படத்தில் அறிமுகமான துலானி, பிறகு சிம்புவின் மன்மதன் படத்தில் நடித்தார். அவர் நடித்த ஹீரோயின் ஓ‌ரியண்ட் படம் அலையடிக்குது. துரதிர்ஷ்டவசமாக துலானியின் நடிப்பு கடலில் எந்த அலையும் எழவில்லை. இறுதியில் மஜா படத்தில் விக்ரமுடன் ஒரு பாடலுக்கு ஆடினார். அப்படியும் வாய்ப்புகள் வரவில்லை.

தமிழைவிட தெலுங்கில் சிந்து துலானிக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தன. இந்நிலையில் கிக் உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய சுரேந்தர் ரெட்டிக்கும் துலானிக்கும் காதல் ஏற்பட்டதாக தெ‌ரிகிறது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

காதல் ஜோடிக்கு நமது அட்வான்ஸ் வாழ்த்துகள்.

Thursday, October 22, 2009

> சிம்பு, த்‌ரிஷா நியூயார்க்கில்

நியூயார்க்கில் இந்த தீபாவளியை சிம்பு, த்‌ரிஷா ஒன்றாக கொண்டாடியிருக்கிறார்கள். உடனே கற்பனையை எக்குதப்பாக எகிற விடாதீர்கள். அவர்கள் நியூயார்க் சென்றது படப்பிடிப்புக்காக.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் உதவி இயக்குனராக நடிக்கிறார் சிம்பு. அவரது காதலியாக த்‌ரிஷா. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை நியூயார்க்கில் எடுப்பதற்காக தற்போது விண்ணைத்தாண்டி வருவாயா டீம் அமெ‌ரிக்காவில் முகாமிட்டுள்ளது.

தனது கே‌ரிய‌ரில் முக்கியமான படமாக இதனை சிம்பு கருதுகிறார். கவுதம் இயக்கம், ஏ.ஆர்.ரஹ்மான் இசை என 25 வருட திரை வாழ்க்கையில் இது சிம்புவுக்கு முற்றிலும் புதிய அனுபவம். ரஹ்மான் ரசிகையான த்‌ரிஷா அவரது இசையில் நடிப்பது இதுவே முதல் முறை.

முற்றிலும் வித்தியாசமான காதல் கதையாக உருவாகிவரும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை தெலுங்கில் நாக சைதன்யாவை வைத்து இயக்கயிருக்கிறார் கவுதம்.

> வெற்றிமாறன் இயக்கத்தில் கார்த்தி

முதல் படம் பருத்திவீரனுக்கு இரண்டு வருடங்கள். இரண்டாவது படம் ஆயிரத்தில் ஒருவன் இரண்டு வருடங்களைத் தாண்டியும் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இந்த ஜவ்வு மிட்டாய் பிசினஸ் இனி கூடாது என்பதில் தெ‌ளிவாக இருக்கிறார் கார்த்தி.

லிங்குசாமியின் பையா படத்தில் நடித்து வருகிறவர், அடுத்து சுசீந்திரன் இயக்கும் நான் மகான் அல்ல படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்தப் படங்களுக்குப் பிறகு அவர் நடிக்கயிருப்பது வெற்றிமாறன் இயக்கத்தில்.

ஆடுகளம் படத்தை தனுஷை வைத்து இயக்கி வரும் வெற்றிமாறன் அடுத்து வடசென்னை என்ற படத்தை இயக்குகிறார். இதில் ஹீரோவாக நடிப்பவர் கார்த்தி. ஆடுகளம் முடிந்த பிறகு வடசென்னை தொடங்கயிருக்கிறது.

Monday, October 19, 2009

> ஹ‌ரி இயக்கத்தில் தனுஷ்

சிங்கம் இறுதிகட்டத்தை நெருங்கியிருக்கிறது. ஒரு படம் முடிவதற்குள் அடுத்தப் படத்தை அறிவிப்பதுதான் ஹ‌ரியின் ஸ்டையில். இதோ தனது வழக்கப்படி அடுத்தப் படத்தை அறிவித்துவிட்டார். சிங்கத்துக்கு அடுத்து ஹ‌ரி இயக்கும் படத்தில் தனுஷ்தான் ஹீரோவாம்.

ஹ‌ரி, தனுஷ் இணையும் படத்தை விஜயா புரொடக்ஷன் தயா‌ரிக்கிறது. தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தையும் இவர்கள்தான் தயா‌ரித்திருந்தனர். ஹ‌ரி இயக்கிய தாமிரபரணி படமும் இவர்கள் தயா‌ரிப்புதான் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.

நீண்ட நாள் தயா‌ரிப்பிலிருந்து விலகி இருந்தவர்கள் தாமிரபரணி மூலம்தான் மீண்டும் படத் தயா‌ரிப்பை தொடங்கினர். அந்தப் படம் மிகப் பெ‌ரிய வெற்றியை பெற்றதால்தான் இன்றுவரை படத் தயா‌ரிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த வருட தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

> ரஹ்மானுக்கு மேலுமொரு விருது

ஸ்லம்டாக் மில்லியனர் உருவாக்கிய அலை இன்னும் ஓயவில்லை. விருதுகளாக குவிந்து கொண்டிருக்கிறது படத்தின் இசையமைப்பாளர் ரஹ்மானுக்கு.

பெல்‌ஜியத்தில் சர்வதேச திரைப்பட இசையமைப்பாளர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு ஆஸ்கர் விருது பெற்றுத் தந்த ஜெய் ஹோ பாடலுக்கு இசையமைத்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

விருது பெற்ற ரஹ்மான், ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் வாய்ப்பு தந்ததற்காக படத்தின் இயக்குனர் டேனி பாயலுக்கு நன்றி தெ‌ரிவித்துக் கொண்டார்.

Sunday, October 18, 2009

> முதலிடத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் படம்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஹாலிவுட் படம், கப்பிள்ஸ் ‌ரீட்‌ரீட் (couples Retreat) யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை பிடித்துள்ளது.

சென்றவார யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் ஐந்தாவது இடத்தில் டாய் ஸ்டோ‌‌ரி உள்ளது. 7.77 மில்லியன் டாலர்கள் வசூலித்திருக்கும் இப்படம் இதுவரை 22.8 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இந்த டாய் ஸ்டோ‌‌‌ரி 1995 ல் வெளியான படம் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவது இடத்தில் இருக்கும் பாராநோ‌ர்ம‌ல் ஆ‌க்டி‌விடி 2007 ல் வெளியான படம். சென்ற வார இறுதியில் 7.9 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்துள்ளது.

மூன்றாவது இடத்தில் கிளவுடி வித் ஏ சான்ஸ் ஆஃப் மீட்பால்ஸ். 11.5 மில்லியன் டாலர்களை வசூலித்திருக்கும் இப்படம் இதுவரை வசூலித்த மொத்த தொகை, 95.8 மில்லியன் டாலர்கள்.

இரண்டாவது இடத்தில் இருக்கும் சோம்பி லேண்ட் 14.8 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இதன் மொத்த வசூல் 47.6 மில்லியன் டாலர்கள்.

முதலிடத்தில் கப்பிள்ஸ் ‌ரீ ட்‌ரீட. இந்தப் படம் வெளியான முதல் மூன்று தினங்களில் 34.3 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.

> சித்தார்த் ‌ஜோடியாகிறார் ஸ்ருதி

லக் ஸ்ருதிஹாசனுக்கு அத்தனை அதிர்ஷ்டமாக அமையவில்லை. இந்திப் படமான இது படுதோல்வியடைந்தது. ஆனாலும், இசையமைப்பாளராக அவர் அறிமுகமான உன்னைப்போல் ஒருவன் அவரே எதிர்பார்க்காத அளவுக்கு பராட்டுகளை குவித்து வருகிறது.

இனி இசையில் மட்டுமே அவர் கவனம் செலுத்துவார் என பலரும் சொல்லிக் கொண்டிருக்க ஆந்திரா பக்கத்திலிருந்து வரும் செய்திகள் வேறு மாதி‌ரி இருக்கிறது.

சித்தார்த் தெலுங்கில் நடிக்கும் புதிய படத்தை ராகவேந்திரா ராவின் மகன் பிரகாஷ் ராவ் இயக்குகிறார். இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பே எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. சித்தார்த் ‌ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் கேட்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ருதியும் இந்த வாய்ப்பை ஒத்துக் கொள்வார் என்பதே ஆந்திரவாலாக்களின் நம்பிக்கை.

விரைவில் மிக விரைவில் ஸ்ருதியின் அடுத்த மூவ் தெரிந்துவிடும்

Friday, October 16, 2009

> இணைய‌‌ம் எ‌ன்று‌ம் ந‌ம்முட‌ன் வராது

இணைய‌த்‌தி‌ல் சா‌ட்டி‌ங் மூல‌ம் அ‌றிமுகமா‌கி, ந‌ண்ப‌ர்களா‌கி, காதல‌ர்களானவ‌ர்களும‌், த‌ம்ப‌திகளானவ‌ர்களு‌ம் ‌நிறைய‌ப் பே‌ர் உ‌ண்டு. ஆனா‌ல், இ‌ந்த இணைய‌த்‌தி‌ற்கு அடிமையா‌கி வா‌ழ்‌க்கையையே இழ‌ந்தவ‌ர்களு‌ம் ஏராளமானவ‌ர்க‌ள் உ‌ண்டு.

சா‌ட்டி‌ங் மூல‌ம் காத‌லி‌த்து, ‌திருமண‌ம் முடி‌ந்த த‌ம்ப‌திக‌‌ளி‌ல் கூட, ஒரு ‌சில‌ர், த‌ங்களது துணை, எ‌ப்போது‌ம் க‌ம்‌ப்யூ‌ட்டரை‌க் க‌ட்டி‌க் கொ‌ண்டு அழுவதாக புல‌ம்புவா‌ர்க‌ள்.

இ‌ப்படி இரு‌க்க, பெ‌ற்றோ‌ர் பா‌ர்‌‌த்து மண‌ம் முடி‌த்த த‌ம்ப‌தி‌யான ஒரு இள‌ம் ஜோடிக‌ளி‌ன் வா‌ழ்‌க்கை‌யி‌ல் ‌பிளவு ஏ‌ற்பட‌க் காரணமானதே, பெ‌ண்‌ணி‌ன் இணைய‌த்‌தி‌ன் ‌மீதான பை‌த்‌திய‌ம்தா‌ன்.

மும்பை மீரா ரோட்டைச் சேர்ந்த ஸ்ரீதரு‌க்கு‌ம் (பெய‌ர்மா‌ற்ற‌ம்), கம‌லி‌க்கு‌ம் (பெய‌ர் மா‌ற்ற‌ம்) கடந்த பிப்ரவரி மாதம்தான் திருமணம் நடைபெற்றது. ‌திருமணமா‌கி ஏழே மாதங்களில் தனது மனைவியிடமிருந்து விவாகரத்துப் பெறுவத‌ற்காக குடும்ப நீதிமன்றப் படியேறி இருக்கிறார் கமல் மிஷ்ரா.

ஓர் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் பணிபுரியும் ஸ்ரீத‌ர், தனது மனைவியிடமிருந்து ‌விவாகர‌த்து கே‌ட்பத‌ற்கு மு‌க்‌கிய‌க் காரணமாக‌க் கூறியிருப்பது, அவள் இணையத்தில் சாட்டிங் செய்வதில் அடிமையாக இருக்கிறாள் என்பதுதா‌ன்.

சா‌ட்டி‌ங் செ‌ய்வத‌‌ற்காகவா ஒரு பெ‌ண்ணை, அவளது கண‌வ‌ன் ‌விவாகர‌த்து செ‌ய்‌கிறா‌ன் எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் கே‌ட்கலா‌ம்.. ஆ‌ம். அவ‌ர் ‌கூறு‌வதை‌க் கேளு‌ங்க‌ள்.

அதிகாலை 5.30 மணிக்கே அருகில் உள்ள பிரவுசிங் சென்டருக்கு சென்றுவிடும் கம‌லி, மூன்று மணி நேரம் கழித்துத்தான் வீட்டுக்குத் திரும்பி வருவா‌ள். நான் அவளுக்குப் பொறுமையாக எடுத்துக் கூற முயன்றேன். ஆனால் அவள் தனது பழக்கத்தை மாற்றிக்கொள்ளத் தயாராயில்லை. தான் யாருடன் சாட்டிங் செய்கிறேன் என்பது பற்றி நான் கவலைப்படத் தேவையில்லை என்று அடித்துப் பேசிவிடுவாள். அவள் பிரவுசிங் சென்டரில் இருக்கும்போது செல்போனை எடுத்துக் கூட பேசுவதில்லை என்று புலம்பித் தீர்க்கிறார் ஸ்ரீத‌‌ர்.

இது ப‌ற்‌றி மனைவியிடம் பேசியபோது, தனது தந்தையின் தொல்லையால் தான் அவரைத் திருமணம் செய்துகொண்டதாகப் போட்டு உடைத்தார். தனக்கு திருமணத்தில் ஆர்வமில்லாததால், நண்பர்களுடனும், புதியவர்களுடனும் மும்முரமாக சாட்டிங் செய்து வருகிறேன் என்கிறாளா‌ம் அவள்.

ச‌ரி சா‌‌ட்டி‌ங் செ‌ய்வது மட‌்டு‌ம்தானே. அதை கொ‌ஞ்ச‌ம் அனுச‌ரி‌த்து‌க் கொ‌ண்டா‌ல் போதுமே எ‌ன்று அ‌றிவுரை கூறுவத‌ற்கு‌ம் வா‌ய்‌ப்‌‌பி‌ல்லை. புகுந்த வீட்டினருடன் கம‌லி சகஜமாக பழகுவ‌தி‌ல்லை. அவ‌ர்க‌ளிட‌ம் ‌‌மிகவு‌ம் மோசமாக நடந்துகொண்டது தா‌ன் இ‌ந்த ‌முடிவெடு‌க்கு‌ம் ‌நிலை‌க்கு எ‌ன்னை‌த் த‌ள்‌ளியு‌ள்ளது எ‌ன்‌கிறா‌ர் ஸ்ரீத‌ர்.

எங்கள் வீட்டுக்கு வந்த முதல் நாளிலிருந்தே அவள் மோசமாகத்தான் நடந்துகொண்டாள். புதிய சூழ்நிலையால்தான் அவள் அப்படி நடந்து கொள்கிறாள், பழ‌கினா‌ல் எ‌ல்லா‌ம் ச‌ரியா‌கி‌விடு‌ம் எ‌ன்று ‌நினை‌த்தே‌ன். ஆனா‌ல் நா‌ன்‌ ‌நினை‌த்தது தவறு எ‌ன்று என‌க்கு ‌சில நா‌ட்க‌ளிலேயே ‌பு‌ரி‌ந்து ‌வி‌ட்டது. ‌வீ‌‌ட்டி‌ன் மருமகளாக அ‌ல்லாம‌ல், ‌வீ‌ட்டி‌ல் ஒரு‌த்‌தியாக‌க் கூட அவ‌‌ள் இரு‌க்க‌வி‌ல்லை. எ‌ங்க‌ள் குடு‌ம்ப‌த்‌‌தினரையு‌ம் ம‌ட்டமாக‌ப் பே‌சினா‌ள்.

பணி விஷயமாக தென் ஆப்பிரிக்காவுக்கு ஒரு மாத காலப் பயணம் சென்ற போதாவது, அவ‌ள் எ‌‌ன் குடு‌ம்ப‌த்தாருட‌ன் அனுசரணையாக இரு‌ப்பா‌ள் எ‌ன்று நா‌ன் ‌நினை‌த்தே‌ன். ஆனா‌ல் அ‌ப்போது‌ம் ‌நிலைமை மாற‌வி‌ல்லை. சொ‌ல்ல‌ப் போனா‌ல் ‌நிலைமை இ‌ன்னு‌ம் மோசமானது. அத‌‌ற்கு‌ப் ‌பிறகுதா‌ன் நான் விவாகரத்து முடிவுக்கு வந்தேன் என்று முடிக்கிறார் ஸ்ரீத‌ர்.

ஸ்ரீத‌ரி‌ன் வழக்கறிஞர் கூறுகை‌யி‌ல், விவாகரத்துக் கோருவதற்கான காரணத்தை கூறியபோது நான் வியப்படைந்தேன். ஆனால் அ‌ந்த பெ‌ண்‌ணி‌ன் நடவடி‌க்கை ஒட்டுமொத்தக் குடும்பத்தையே எரிச்சலுக்கு உள்ளாக்கியிருப்பது தெ‌ரி‌ந்த ‌பிறகுதா‌ன் விவாகரத்து மனுவை குடும்ப நீதிமன்றத்தில் கடந்த வாரம் நாங்கள் தாக்கல் செய்தோ‌ம் என்றார்.

தனது ‌பிற‌ந்த ‌வீ‌ட்டி‌ல் இரு‌‌க்கு‌ம் கம‌லி, இத‌ற்கெ‌ல்லா‌ம் ‌விவாகர‌த்து கே‌ட்பா‌ர் எ‌ன்று நா‌ன் ‌நினை‌க்க‌வே‌யி‌ல்லை எ‌‌ன்று ப‌தில‌ளி‌க்‌கிறா‌ர் ‌மிக எ‌‌ளிமையாக.

இ‌ந்த பெ‌ண், இணை‌ய‌த்‌தி‌ற்கு அடிமையா‌கி, ந‌ல்ல வா‌ழ்‌க்கையை இழ‌க்க‌ப் போ‌கிறா‌ர் எ‌ன்று நம‌க்கெ‌ல்லா‌ம் பு‌‌ரி‌கிறது. ஆனா‌ல், அ‌ந்த பெ‌ண்ணோ இணைய‌ம்தா‌ன் தன‌க்கு எ‌ல்லா‌ம் எ‌ன்று ‌நினை‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ள். அவளுட‌ன் சா‌ட்டி‌ங் செ‌ய்யு‌ம் யாராவது ஒருவராவது அவளு‌க்கு இதனை பு‌ரிய வை‌த்தா‌ல் ந‌ல்லது.

> காதலிக்க மிரட்டுவது தவறு

ஒருவரை காதலிக்கிறோம் என்று அவரிடம் கூற மட்டுமே ஒருவருக்கு உரிமை உள்ளது. ஆனால், அவரையும் காதலிக்க வலியுறுத்த யாருக்கும் உரிமை இல்லை.

சிலர், தான் விரும்பும் காதலரோ, காதலியோ தங்களது காதலை மறுக்கும் போது அவர்களை உணர்ச்சிப் பூர்வமாக மிரட்டத் துவங்கிவிடுவார்கள்.

அதாவது, நீ என்னைக் காதலிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன், சாப்பிட மாட்டேன், கைகளைக் கீறிக் கொள்வேன் என்றெல்லாம் சொல்லி மிரட்டுவார்கள்.

இப்படிப்பட்டவர்களை வேண்டாம், அப்படி எல்லாம் செய்யாதீர்கள் என்று கெஞ்சுவதை விட, தற்கொலை என்பது முட்டாள்களின் முடிவு. அதை நீங்கள் தேர்வு செய்தால் ஒரு முட்டாளை நாம் காதலிக்காமல் போனதே நல்லது என்றுதான் நான் நினைப்பேன்.

நீங்கள் சொன்ன எதைச் செய்தாலும் உங்களை அறுவருப்புடன்தான் நான் பார்ப்பேனேத் தவிர கொஞ்சம் கூட பரிதாபப்பட மாட்டேன் என்று தெளிவாக உறுதியாகச் சொல்லுங்கள்.

இதுபோல் மிரட்டல் விடுபவர்கள் நிச்சயமாக எதையும் செய்ய மாட்டார்கள். இவர்கள் ஒரு கோழைகள் இவர்களிடம் இருந்து எச்சரிக்கையுடன் தள்ளி இருங்கள்.

மேலும் சிலர், உன்னைக் கொன்று விடுவேன், ஆசிட் வீசி விடுவேன் என்று கூட மிரட்டுவார்கள். அவர்களிடம் சிறிது எச்சரிக்கைத் தேவை.

ஆனால் பயத்தை அவர்களிடம் காட்டக் கூடாது. நீ இப்படி எல்லாம் பேசுவாய் என்று தெரிந்து தான் உன்னைப் பற்றி காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளேன். எனக்கு என்னப் பிரச்சினை என்றாலும் உன் நிலைமை அதோ கதிதான். என் நெருங்கிய உறவினர்களுக்கும் உன் முழு விவரத்தை அளித்துள்ளேன். இனி அவர்கள் உன்னைப் பார்த்துக் கொள்வார்கள் என்று பதில் மிரட்டலை விடுத்துவிட்டு அவரிடம் இருந்து கழன்று கொள்ளுங்கள்.

பெரும்பாலான பிரச்சினைகள் இதைத் தாண்டி வராது. பொதுவாக எல்லாக் காதலர்களும் இது போன்று இருப்பதில்லை. உங்கள் முகம் சுழித்தாலே அவர்களே விலகி விடுவதுதான் இயற்கை. ஒரு சிலர்தான கடைசி வரை சுற்றி உயிரை எடுப்பார்கள்.

> ஆதி நீக்கம்-ராம் கோபால் வர்மா படத்திலிருந்து

ராம் கோபால் வர்மா படத்திலிருந்து நடிகர் ஆதி நீக்கப்பட்டிருக்கிறார் இந்த தகவலை வர்மாவே வெளியிட்டிருக்கிறார்.

மிருகம் படத்தில் அறிமுகமான ஆதி சமீபத்தில் வெளியான ஈரம் படத்தில் நடித்திருந்தார். இவை தவிர ச‌ரித்திரம், அய்யனார் படங்களில் நடித்து வருகிறார்.

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் ரக்த ச‌ரித்ரா படத்தில் ஆதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். படத்தின் பிரதான கதாபாத்திரமான ப‌ரித்தலா ரவி கேரக்ட‌ரில் தமிழ், தெலுங்குப் பதிப்பில் அவர் நடிப்பதாக கூறப்பட்டது. இந்தியில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பவர் விவேக் ஓபராய்.

தற்போது அந்த வேடத்தை மூன்று மொழிகளிலும் விவேக் ஓபராயே நடிக்கிறார். இந்த தகவலை வர்மாவே வெளியிட்டிருக்கிறார்.

Wednesday, October 14, 2009

> ஈரம் - விஜய் தொலைக்காட்சியில்

ஈரம் விமர்சகர்களின் பாராட்டுடன் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உ‌ரிமையை வாங்க பலரும் போட்டி போட்டனர்.

ஈரம் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவின் போது, சன் பிக்சர்ஸ் ஈரத்தை வாங்க ஆவலாக உள்ளது என கோ‌ரிக்கை வைத்தார் அதன் தலைமை செயல் அதிகா‌ரி. பொதுவாக இப்படி ஒரு ஆஃபர் வைக்கப்பட்டால் அந்தப் படம் சன் பிக்சர்ஸ் பேன‌ரில்தான் வெளியாகும்.

மாறாக, ஈரத்தை சன்னுக்கு தராமல் சொந்தமாக வெளியிட்டார் ஷங்கர். மேலும், படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உ‌ரிமையையும் அவர் விஜய் தொலைக்காட்சிக்கே தந்திருக்கிறார். இதற்காக விஜய் தொலைக்காட்சி ஷங்க‌ரின் எஸ் பிக்சர்ஸுக்கு அளித்த தொகை, ஒன்றரை கோடி.

விரைவில் உலக தொலைக்காட்சியில் முதல் முறையாக கோஷத்தை விஜய்யில் எதிர்பார்க்கலாம்.

> ஷாருக் படத்தில் தபு

ஃபராகான் இயக்கும் புதிய படம் ஹேப்பி நியூ இயர். இவரது முந்தைய இரு படங்களான மேன் ஹு னா, ஓம் சாந்தி ஓம் இரண்டிலும் ஃபராகானின் நெருங்கிய நண்பரான ஷாருக் கான்தான் ஹீரோ. மூன்றாவது படத்திலும் அவர்தான் ஹீரோ என்பது தெ‌ரிந்த விஷயம்.

இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் நடிப்பதாக வெளியான செய்தியை ஃபராகான் மறுத்திருந்தார். படத்தில் ஷாருக்கான் நடிக்கிறார். இந்த ஒரு விஷயத்தை தவிர வேறு எதையும் இப்போதைக்கு முடிவு செய்யவில்லை என்று அவர் தெ‌ளிவுப்படுத்தியிருந்தார்.

நாட்கள் கடந்த நிலையில் மேலுமொரு விஷயத்தை அவர் முடிவு செய்துள்ளார். அது, நடிகை தபு. ஆம், ஹேப்பி நியூ இய‌ரில் ஷாருக் கானுடன் தபுவும் நடிக்கிறாராம். ஹீரோயினா அல்லது முக்கியமான வேடமா என்பது தெ‌ரியவில்லை. ஆனால், அவர் நடிப்பது மட்டும் உறுதி என்கிறார்கள்.

ஃபராகானின் நெருங்கிய தோழி தபு என்பது பலருக்கு தெ‌ரியாத சேதி.

> கமலுக்கு வில்லனாக வேண்டும்

உன்னைப்போல் ஒருவனில் போலீஸ் அதிகா‌ரியாக நடித்தவர் பிரேம்குமார். தெலுங்கு ஈநாடு படத்திலும் இவர் நடித்திருந்தார்.

தமிழில் மோகன்லாலுடனும், தெலுங்கில் வெங்கடேஷுடனும் நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்கிறார் பிரேம். கமலின் தீவிர ரசிகரான இவரது ஆசை என்ன தெ‌ரியுமா? கமலுக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்பதுதான்.

கமல் படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைப்பதைவிட வில்லனாக வாய்ப்பு கிடைத்தால் அதிக சந்தோஷமடைவேன். கமலுடன் நேருக்கு நேர் மோதும் போதுதான் நம் திறமை வெளிப்படும் என்பது பிரேமின் நம்பிக்கை.

உன்னைப்போல் ஒருவனில் கமல் இவரது நடிப்பைப் பார்த்து பாராட்டியிருக்கிறார். புல்ல‌ரித்துபோய் சொல்கிறார் பிரேம். நியாயமான சந்தோஷம்தான்.

> பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி

இந்திப் படவுலகின் வான்டட் லிஸ்டில் சேர்ந்திருக்கிறார் பிரபுதேவா. இவரது இயக்கத்தில் சல்மான் நடித்த வான்டட் இன்னும் வசூலில் பட்டையை‌க் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இந்திப் படங்களை இயக்க வாய்ப்புகள் வ‌ரிசைகட்டி நின்றாலும், பிரபுதேவா அடுத்து இயக்கப் போவது ஒரு தமிழ்ப் படத்தை என்கிறார்கள். அந்தப் படத்தை தயா‌ரிப்பவர் ஏ‌ஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் கல்பாத்தி எஸ் அகோரம்.

இவரது தயா‌ரிப்பில் விஷால் நடிக்கும் படத்தை பிரபுதேவா இயக்குவதாக‌த்தான் முதலில் கூறப்பட்டது. விஷால் பாலா இயக்கும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளதால் அவருக்கு பதில் ஜெயம் ரவியை ஒப்பந்தம் செய்யவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

ஜெயம் ரவி தெலுங்கு கிக் படத்தின் ‌‌ரீமேக்கான தில்லாலங்கடியில் தற்போது நடித்து வருகிறார். அடுத்து அமீ‌ரின் கண்ணபிரானில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, October 13, 2009

> ச‌ரித்திரப் படத்தில் அபிஷேக் பச்சன்

ச‌ரித்திரத்துக்கும் அபிஷேக் பச்சனுக்கும் அவ்வளவு ராசியில்லை. ஹிருத்திக் ரோஷனின் ச‌ரித்திரப் படங்கள் வெற்றி பெற்ற அளவுக்கு அபிஷேக்கின் ச‌ரித்திரப் படம் வெற்றி பெறவில்லை. விரைவில் இந்த தீர்ப்பு மாற்றி எழுதப்படலாம். காரணம் அபிஷேக்கை வைத்து அடுத்த ச‌ரித்திரப் படத்தை எடுப்பவர், அஷுதோஷ் கோவா‌ரிகர்.

அஷுதோஷ் கோவா‌ரிகர் அடுத்து கலீன் ஹம் ‌ஜி ஜான் ஸே என்ற படத்தை இயக்குகிறார். இதுவொரு ச‌ரித்திரப் படம். பிரதான வேடத்தில் அபிஷேக் நடிக்கிறார். ஹீரோயினாக நடிப்பவர் அசின்.

கஜினி படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமான அசின் க‌ஜினிக்குப் பிறகு ஒரேயொரு படத்தில் மட்டுமே நடித்தார். லண்டன் ட்‌‌ரீம்ஸ் என்ற அந்தப் படம் விரைவில் வெளிவரவுள்ளது. இந்நிலையில் அஷுதோஷ் அசினிடம் தனது புதிய படத்துக்கு கால்ஷீட் கேட்க மறுக்காமல் உடனடியாக கொடுத்திருக்கிறார். இதற்கு காரணங்கள் இரண்டு.

ஒன்று படத்தை இயக்குகிறவர் அஷுதோஷ் கோவா‌ரிகர். இரண்டு, உடன் நடிப்பவர் அபிஷேக் பச்சன். பொறாமையில் பொசுங்கிக் கொண்டிருக்கிறார்கள், வாய்ப்பு கிடைக்காத மற்ற நடிகைகள்.

> ஷாம் படத்துக்கு தடை

ஷாம் நடித்துவரும் அகம்புறம் படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை வித்தித்துள்ளது.

ஆகம்புறம் படத்தை கோபாலகிருஷ்ணன் தயா‌ரித்து வருகிறார். இவர் மதுரை காமராஜர் நினைவு மருத்துவக் கல்வி அறக்கட்டளையிடமிருந்து 72 லட்சம் வாங்கியிருக்கிறார். மதுரை அருகே நிலம் வாங்குவதற்காக இந்தப் பணம் கோபாலகிருஷ்ணனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் பணத்தில் 25 லட்சத்தை இதுவரை கோபாலகிருஷ்ணன் திருப்பிச் செலுத்தவில்லை என தெ‌ரிகிறது. இந்தப் பணத்தை வட்டியுடன் திருப்பிச் செலுத்தும் வரை அவர் தயா‌ரித்துவரும் அகம்புறம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசா‌ரித்த நீதிபதி அகம்புறம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தார். வழக்கு விசாரணை வரும் 13ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

> கூகிளின் தற்போதைய நிலை...!!!

அமெரிக்காவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களில் 9 சதவிகிதம் பேர்,கூகுள் தரும் ஏதாவது ஒரு வசதியைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவைகளில் முதன்மையானது அதனுடைய சர்ச் இஞ்சின், அடுத்ததாக யு–ட்யூப் மற்றும் அடுத்து பிற சேவைகள் வருகின்றன.

ஆனால் இன்னும் சில நாடுகளில் கூகுள் சேவை மிக அதிகமாகவே பயன்படுத்தப்படுவதாக இது குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்திவரும் காம் ஸ்கோர் (ComScore) என்னும் நிறுவனம் அறிவித்துள்ளது.

அவ்வகையில் முன்னணியில் இருக்கும் நாடுகள் பிரேசில்; அடுத்ததாக, நம்புங்கள், இந்தியா. இந்த இரண்டு நாடுகளிலும் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் சராசரியாக ஒரு மணி நேரத்தில் 18 நிமிடங்கள் கூகுள் நிறுவன சேவையைப் பயன்படுத்துகின்றனர். கூகுள் சேவையில் 30 நிமிடங்கள் பிரேசில் நாட்டில் உள்ளவர்களாலும், 29 நிமிடங்கள் இந்தியாவில் உள்ளவர்களாலும் பயன்படுத்தப்படுகின்றன.

உலக அளவில் இந்த பயன்பாட்டு சதவிகிதம் 9.4 சதவிகிதம் மட்டுமே. கூகுள் நிறுவனத்தின் சோஷியல் இணைய தளமான ஆர்குட் மற்ற நாடுகளில் அவ்வளவாக வரவேற்பினைப் பெறவில்லை. ஆனால் இந்த இரண்டு நாடுகளிலும் சோஷியல் இணைய தளங்களில் முதல் இடத்தைப் பெற்றுள்ளன.


பிரேசில் நாட்டில் சர்ச் இஞ்சின் மூலம் மேற்கொள்ளப்படும் தேடல்களில் 90% கூகுள் மூலமே மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியாவில் இது 88%. 71% நேரம் குகூள் மேப் சேவையில் செலவழிக்கப்படுகிறது. இந்தியாவில் இது 64%. பிளாக்குகளில் பிரேசிலில் 43% செலவழிக்கப்படுகிறது. இந்தியாவில் இது 48% . இந்திய வெப் இமெயில் மார்க்கட்டில் கூகுள் நிறுவனத்தின் மார்க்கட் 50%. இந்தியாவும் பிரேசில் நாடும் உலகின் எதிர் எதிர் முனைகளில் இருக்கின்றன.

ஆனால் எப்படி இணையத்தைப் பொருத்தவரை இணையாக இருக்கின்றன என்ற கேள்வி எழலாம். இன்டர்நெட் பயன்பாட்டினைப் பொருத்தவரை இரண்டு நாடுகளும் ஒரே நேரத்தில் இணையாக வளரத் தொடங்கின. இவை வளரத் தொடங்கிய போதுதான், கூகுள் நுழைந்தது. எனவே அதனையே டிபால்ட் சாதனமாக இரு நாட்டில் உள்ளவர்களும் பயன்படுத்தத் தொடங்கினர்.

சீனாவில் கூகுள் இடம் பெறாமல் போனதற்கு அங்குள்ள தேடல் இஞ்சின் பைடு (Baidu)காரணம் ஆகும். சீன மொழியிலேயே இது தேடல் வசதிகளைத் தொடக்கத்தில் இருந்து தருகிறது. அதே போல ரஷ்யாவில் யான்டெக்ஸ் (Yantex) என்னும் தேடல் இஞ்சின் தான் பிரபலம். ஆனால் இன்டர்நெட் பயன்பாட்டில் இந்தியா உலக அளவில் ஏழாவது இடத்திலும், பிரேசில் ஒன்பதாவது இடத்திலும் உள்ளன. இந்த இரண்டும் தான் தற்போது இன்டர்நெட் பயன்பாட்டைப் பொறுத்தவரை வேகமாக வளர்ந்து வரும் நாடுகள். கூகுள் அமெரிக்காவில் தன் இடத்தை இன்னும் வளர்க்கலாம். வளர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குத் தான் சரியான போட்டி என்பதனைக் காட்டலாம்.

எழுதியவர் : கார்த்திக்

> பிரேமின் வழிப்போக்கன்

நாடாறு மாதம் காடாறு மாதம் என்பார்களே... அது யாருக்கு பொருந்துமோ இல்லையோ பிரேமுக்கு நூறு சதவீதம் பொருந்தும்.

ஒரு படத்தில் நடிப்பது, பிறகு ஆறு மாதத்துக்கு கோடம்பாக்கத்தை எட்டியே பார்க்காமல் விலகி இருப்பது. கடந்த பல வருடங்களாக இப்படிதான் ஓடிக் கொண்டிருக்கிறது அவரது திரையுலக வாழ்க்கை. அசோகா படத்துக்குப் பிறகு பிரேமை சென்னையிலேயே பார்க்க முடியவில்லை.

ஏறக்குறைய அனைவரும் அவரை மறந்த நிலையில் மீண்டும் அவரைப் பற்றி செய்தி. புதிய படத்தை விரைவில் தொடங்கயிருக்கிறாராம்.

படத்துக்கு வழிப்போக்கன் என்று பெயர் வைத்திருக்கிறார். எப்போதும்போல படத்தை இயக்கி பிரேமே ஹீரோவாக நடிக்கிறார். படத்தை தயா‌ரிப்பது இந்திரா பிரேம். ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் கிராமத்து கதையை பாசம், காதல், சென்டிமெண்ட், சஸ்பென்ஸ் கலந்து சொல்லப் போகிறாராம்.

அதாவது வழக்கமான கமர்ஷியல் மிக்ஸ். அசத்துங்க ‌ஜி.

Monday, October 12, 2009

> திரைப்பட விழாவில் ரெட்டைச்சுழி

தாமிரா இயக்கத்தில் ஷங்க‌ரின் எஸ் பிக்சர்ஸ் தயா‌ரித்திருக்கும் படம் ரெட்டைச்சுழி. முத‌ல் முறையாக பாரதிராஜாவும், பாலசந்தரும் இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

கார்த்திக்ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படம் துபாயில் நடைபெறும் திரைப்பட விழாவில் கலந்து கொள்கிறது.

துபாயில் டிசம்பர் 9ஆ‌ம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதில் ரெட்டைச்சுழி திரையிட தேர்வாகியுள்ளது. இது தவிர சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் அமீர் நடித்திருக்கும் யோகி, மீரா கதிரவன் இயக்கத்தில் மோசர் பேர் தயா‌ரித்துவரும் அவள் பெயர் தமிழரசி ஆகிய படங்களும் திரையிட தேர்வாகியுள்ளன.

இந்த மூன்று படங்களின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

> சி‌க்கலில் சூர்யா படம்

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ரக்த ச‌ரித்ரா படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ரக்த ச‌ரித்ரா படம், ஆந்திராவில் பிரபல ரவுடியாக இருந்து பின் அரசியலில் நுழைந்து எம்.எல்.ஏ. ஆன பிரபல ரவுடி ப‌ரி‌ட்டால ரவியை பற்றியது. இதில் ப‌ரி‌ட்டால ரவியாக விவேக் ஓபராய் நடிக்கிறார். ரவியின் வலதுகரமாக இருந்து, பிறகு அவனது சாவுக்கு காரணமாக அமைந்த அவரது கூட்டாளி சூ‌ரியாக சூர்யா நடிக்கிறார்.

ரக்த ச‌ரித்திராவின் படப்பிடிப்பு தற்போது ஆந்திர மாநிலம் அனந்தபூ‌ரில் நடந்து வருகிறது. இந்நிலையில் ரவியின் மனைவியும் அவரது ஆதரவாளர்களும் வர்மா படப்பிடிப்பை நடத்தக் கூடாது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனந்தபூ‌ரிலிருந்துதான் ப‌ரி‌ட்டால ரவி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டா‌ர் என்பது குறிப்பிடத்தக்கது.

ப‌ரி‌ட்டால ரவி ஒரு ஹீரோ, அவரை ரவுடியாக வர்மா சித்த‌ரிக்கிறார் என்பது ரவி மனைவியின் குற்றச்சாட்டு. வர்மா இதற்கு விளக்கமளித்தப் பிறகும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிடுவதாக இல்லை. இதன் காரணமாக படப்பிடிப்புக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வர்மாவின் பூர்வீகம் ஆந்திரா. அவரது முதல் படம் சிவா. தமிழில் உதயம் என்ற பெய‌ரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திராவில் அவருக்கு ச‌ரியான ஒத்துழைப்பு கொடுக்காததால் கோபித்துக் கொண்டு இந்திக்கு சென்றார்.

அதன் பிறகு பல வருடங்கள் அவர் தெலுங்கில் படம் இயக்கவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு தெலுங்குக்கு திரும்பி வந்திருக்கிறார். இப்போதும் பிரச்சனை. என்ன செய்யப் போகிறார் வர்மா?

Sunday, October 11, 2009

> விவேக் சென்ட்டிமென்ட் அலறும் கோலிவுட்!

படம் முடிந்த பின்பும் வெளிவராமல் தவிக்கும் படங்களை வாங்கி வெளியிடும் முயற்சியில் இருக்கிறது முன்னணி சேனல் ஒன்று. திரைக்கு வந்து சில மாதங்களே ஆன.... என்ற முழக்கத்துடன் படத்தை வெளியிடும் இவர்கள், இனிமேல் திரைக்கே வராத... என்று முழங்கத்துடன் இந்த படங்களை வெளியிடக் கூடும். அது போகட்டும்... இப்படி இவர்கள் வாங்கப் போகிற படங்களை பார்த்து மதிப்பீடு செய்வதற்கென்றே ஒரு குழுவை போட்டிருக்கிறார்கள்.

அந்த குழு நடிகர் விவேக் நடித்த ஒரு படத்தை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறது. அதுபற்றிய செய்திதான் இது. விவேக் ஹீரோவாக நடித்தால் அந்த படத்தின் தயாரிப்பாளர் இறந்து போவார். அல்லது இருப்பதையும் இழந்து நொந்து நூலாகி அந்து அவலாகிவிடுவார் (டயலாக் உபயம் விவேக்குதான்) இதற்கு இரண்டே இரண்டு உதாரணங்கள் வெகு அழுத்தமாக இருக்கிறது. இவரது ராசி இன்னும் கொஞ்சம் ஃபாஸ்ட் பார்வேர்டில் வொர்க் ஆகியிருப்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம் சுந்தர் சி, குஷ்பு.

இவர்கள் தயாரிக்கும் அடுத்த படத்தில் விவேக்தான் ஹீரோ. வெளிப்படையாக இந்த செய்தியை அவர்கள் அறிவித்த பிறகுதான் பெரும் விபத்திற்கு ஆளாகி உயிர் பிழைத்திருக்கிறார்கள். ஐயோ... அது எப்போ? படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருந்த போது நடுக்கடலில் படகு கவிழ்ந்து ஒரே களேபரம். விவேக்கின் ராசி இப்படி அலங்க மலங்க அடித்தாலும், இறைவன் அருளால் உயிர் தப்பினார்கள். சரி முதல் பாராவுக்கு வருவோம்.

விவேக் ஹீரோவாக நடித்த அந்த படத்தை பார்த்த குழுவினர், ஆபிசுக்கு வந்து உதட்டை பிதுக்கினார்களாம். எனவே விவேக் படத்தை வாங்குவதா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருக்கிறது சேனல்!

Saturday, October 10, 2009

> மாத்தியோசிக்காத தயா‌ரிப்பாளர்

முதல் படத்தில் 35 புதுமுகங்களை அறிமுகப்படுத்த எக்ஸ்ட்ரா தில் வேண்டும். அந்த தில் மாத்தியோசி தயா‌ரிப்பாளர் பி.எஸ்.சேகர் ரெட்டியிடம் நிறையவே இருக்கிறது.

இவரது மாத்தியோசி படத்தில் 35 புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். படத்தை இயக்குகிறவர் நந்தா பெ‌ரியசாமி.

ஒரு கல்லூ‌ரியின் கதை படத்துக்குப் பிறகு நந்தா பெ‌ரியசாமி இயக்கும் படம் இது. புதுமுகங்களை சர்க்கஸ் ட்‌ரில் மாஸ்டர் தோற்று‌ப் போகும் அளவுக்கு பெண்ட் நிமிர்த்தியிருக்கிறார்.

இவரது வேலைத் திறனைப் பார்த்த தயா‌ரிப்பாளர் சேகர் ரெட்டி எனது அடுத்தப் படத்துக்கும் நீங்கதான் இயக்குனர் என இப்போதே வாய்மொழி வாக்குறுதி அளித்திருக்கிறார்.

பொதுவாக படம் தொடங்கிய பிறகு இயக்குனரும், தயா‌ரிப்பாளரும் பட்ஜெட் விஷயத்தில் கட்டிப்புரள்வதுதான் தமிழ் சினிமா வாடிக்கை. அதற்கு மாறாக கட்டித் தழுவி பரஸ்பரம் பாராட்டுகிறார்கள் மாத்தியோசி இயக்குனரும், தயா‌ரிப்பாளரும். நல்ல மாற்றம்தான் இல்லையா?

> ஆதவன் பத்தி‌ரிகையாளர்கள் சந்திப்பு

ஆதவன் தீபாவளிக்கு வெளிவருகிறது. அதனை முன்னிட்டு படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், தயா‌ரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் சூர்யா ஆகியோர் பத்தி‌ரிகையாளர்களை சந்தித்தனர்.

அவங்களைப் பற்றி பத்தி‌ரிகைகள் எழுதிய செய்தியால் ரொம்ப அப்செட்டா இருக்காங்க. அதனாலதான் இங்க அவங்க வரலை என்றார் ரவிக்குமார். அவர் அவங்க என்று குறிப்பிட்டது, படத்தின் ஹீரோயின் நயன்தாராவை.

ஆதவனில் பத்து வயது சிறுவனாக சூர்யா நடித்திருக்கிறார். இருபது நிமிடங்கள் வரும் இந்த காட்சியில் அவரே டப்பிங்கும் பேசியிருக்கிறார்.

சூர்யாவின் ஒத்துழைப்பால்தான் இது சாத்தியமாயிற்று என்று ரவிக்குமாரும், இயக்குனரால்தான் இது சிறப்பாக நடந்தேறியது என்று சூர்யாவும் பரஸ்பரம் பாராட்டிக் கொண்டனர்.

நீங்களும் நடிக்கப் போறீங்களாமே என்று உதயநிதி ஸ்டாலினை கேட்டதற்கு, நல்ல கதையும், திறமையான இயக்குனரும் கிடைத்தால் நானும் தயார் என்றார் உற்சாகமாக.

> ரஹ்மான் மறுப்பு

காதலே எனத் தொடங்கும் பாடல் இணையதள ரசிகர்களிடையே பரபரப்பாக கேட்கப்பட்டு வருகிறது. ராவண் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தப் பாடல் என்பதால்தான் இந்த டிமாண்ட்.

ஆனால், குறிப்பிட்ட அந்தப் பாடல் ராவண் படத்தில் இடம்பெறவில்லை என்று தெ‌ளிவுபடுத்தியிருக்கிறார் ரஹ்மான். மேலும், அது அவர் இசையமைத்த பாடலே இல்லையாம்.

சமீபத்தில் வேட்டைக்காரன் பாடலொன்று இணையதளங்களை கலக்கியது. அந்தப் பாடல் உண்மையில் வேட்டைக்காரன் படத்தின் பாடலல்ல என்றும், யாரோ ஒருவர் தவறாக செய்தி பரப்பியதாக வேட்டைக்காரன் படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி விளக்கமளித்தார். இப்போது ராவண் பாடல்.

வரவர இணையதளதம் என்றாலே இல்லீகல் நபர்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள்.

Friday, October 9, 2009

> ர‌ஜினி ரசித்த கோவா

பார்ட்டி என்றாலே பிரேம்‌ஜிதான் நினைவுக்கு வருவார். அப்படியொரு பார்ட்டி போபியா இவருக்கு. அவரது குணத்துக்கேற்ப கோவா படத்திலும் ஒரு பார்ட்டி வைத்திருக்கிறார் வெங்கட்பிரபு.

அதாவது கதைப்படி ஜெய்யும், பிரேம்‌ஜியும் என்‌ஜினிய‌ரிங் ஸ்டூடண்ட்ஸ். பைனல் இயர் நடக்கும் போது கேம்பஸ் இன்டர்வியூவில் இருவரும் வேலைக்கு செலக்ட் ஆகிறார்கள். அதனை கொண்டாட நண்பர்களுடன் கோவா வருகிறார்கள். வேலை கிடைத்ததற்காக பார்ட்டி கொடுப்பதற்காகதான் இந்த கோவா ட்‌ரிப்.

வந்த இடத்தில் சில அழகிகளுடன் அவர்களுக்கு நட்பு ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து நடக்கும் காதலும், மோதலும், காமெடியும்தான் கதை.

கோவாவை சௌந்தர்யா தயா‌ரிக்கிறார். அவரது ஆக்கர் ஸ்டுடியோ தயா‌ரிப்பில் வெளிவரயிருக்கும் முதல் படம் இது. மகள் தயா‌ரிக்கும் முதல் படம் அல்லவா? படம் எப்படி வந்திருக்கிறது என்று ஆர்வமாக ரஷ் பார்த்திருக்கிறார் ர‌ஜினி. படத்தின் ஒவ்வொரு சீனிலும் அவர் வாய்விட்டு சி‌ரித்திருக்கிறார். "அதுவே எங்களுக்கு எனர்‌ஜி பூஸ்டாக இருந்தது" என பரவசமாகிறார் வெங்கட்பிரபு.

ர‌ஜினிக்கு பிடித்த படம் ரசிகர்களுக்கு பிடிக்காமலா போகும்.
உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.