Wednesday, March 31, 2010

> விரும்பத்தகுந்த மாற்றம் - வினய்

தெலுங்கில் ஒரு ஹீரோ நடிக்க ஒப்புக் கொண்டால் அட்வான்ஸாக சில ஆயிரங்கள் கொடுத்தால் போதும். சம்பளத்தில் பாதியை உடனே தர வேண்டும் என்றெல்லாம் அடம் பிடிப்பதில்லை. படப்பிடிப்பு முடிந்து படம் திரைக்கு வரும் போது சம்பளத்தை செட்டில் செய்தால் போதும்.

ஆனால் இங்கு?

ஒப்பந்தம் கையெழுத்தாகும் போதே முக்கால்வாசி சம்பளத்தை பிளாக் அண்ட் ஒயிட்டில் தந்துவிட வேண்டும். சிலர் மொத்த சம்பளத்தை வைத்தால்தான் ஆயிற்று என்று அடம்பிடிப்பதும் உண்டு.

இதன் காரணமாக படப்பிடிப்புக்கு முன்பே படத்தின் மொத்த பட்ஜெட்டில் பாதி, சம்பளம் என்ற பெய‌ரில் தயா‌ரிப்பாள‌ரின் கைவிட்டு போய்விடும். இதனால் கடன் வாங்கி படம் தயா‌ரிக்கும் தயா‌ரிப்பாளர்களின் நிலைமை கவலைக்குள்ளாகிவிடும். படப்பிடிப்பு முடியும் வரை ஹீரோவுக்கு கொடுத்தப் பணத்துக்கு வட்டி கட்ட வேண்டுமே. இந்த நிலை தெலுங்கில் அனேகமாக இல்லை.

தெலுங்கில் உள்ள அந்த நல்ல பழக்கத்தை இங்கேயும் புழக்கத்தில்விட்டுள்ளார் நடிகர் வினய். இவர் நடித்த எந்தப் படமும் ச‌ரியாகப் போகவில்லையென்றாலும் இயக்குனர்கள் இவரை தேடி வரவே செய்கிறார்கள். விரைவில் செல்வா இயக்கத்தில் இவர் நடித்த நூற்றுக்கு நூறு வெளிவரவுள்ளது.

இனி தன்னை ஒப்பந்தம் செய்யும் தயா‌ரிப்பாளர்கள் அட்வான்ஸாக அதிகம் தர வேண்டியதில்லை, அச்சாரமாக ஒரு ரூபாய் தந்தாலும் போதும் என அறிவித்துள்ளார் வினய். சம்பளமும் இவ்வளவு என்று இல்லை, படம் விற்பதைப் பொறுத்து கொடுத்தால் போதும்.

இந்த ஓபன் மார்க்கெட்டுக்குப் பிறகேனும் வினய்க்கு வாய்ப்புகள் வருமா?
மேலும் அறிய

> விஜய டி.ஆர். ,பேரரசு கூட்டணி

பேரரசு தனது குருவாக குறிப்பிடுகிறவர் விஜய டி.ராஜேந்தர். அவரது திரை நுணுக்கங்களை தானும் பின்பற்றுவதாக பெருமையுடன் குறிப்பிடுகிறார் பேரரசு.

வல்லவன் படத்தில் அம்மாடி ஆத்தாடி பாடலை பேரரசு எழுத, டி.ஆர். பாட சிம்பு ஆடிய ச‌ரித்திர நிகழ்வை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. அதேபோலொரு ச‌ரித்திர சம்பவம் சமீபத்தில் நடந்தது.

பேரரசு இயக்கத்தில் பரத் நடிக்கும் திருத்தணி படத்தில் யம்மா... யம்மா... என்றொரு பாடல் இடம்பெறுகிறது. பாடலை எழுதியிருப்பதுடன் அதற்கு இசையும் அமைத்திருக்கிறார் பேரரசு. இந்தப் பாடலை பாடியிருப்பவர் டி.ஆர்.

பூகம்பமும், சுனாமியும் சேர்ந்து வந்தது போலிருக்கும் இந்தப் பாடலை பரத், சுனேனாவை ஆடவிட்டு படமாக்கியிருக்கிறார் பேரரசு. ம்... ஸ்கி‌‌ரீன் கிழியப் போகுது.
மேலும் அறிய

> ஏப்ரல் படங்கள் ஒரு முன்னோட்டம்

கோடை விடுமுறையை குறிவைத்து படங்கள் வெளியாவது ஒவ்வொரு வருடமும் சகஜம்தான். ஆனால் இந்த கோடை சம்திங் ஸ்பெஷல். விஜய், சூர்யா என பெ‌ரிய நடிகர்களால் களைகட்டியிருக்கிறது.

ஏப்ரல் 2ஆம் தேதி லிங்குசாமியின் பையா வெளியாகிறது. கிளவுட் நைன் இந்தப் படத்தை விநியோகிப்பதால் கலைஞர் தொலைக்காட்சி நிமிடத்துக்கொரு விளம்பரம் செய்து படத்தை பிரமாண்டப்படுத்தி வருகிறது.

இதையடுத்து 9ஆம் தேதி சிம்புதேவனின் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் திரைக்கு வருகிறது. 28 வருடங்களுக்குப் பிறகு தமிழில் உருவாகியிருக்கும் கௌபாய் படம் என்பதால் ஒருமுறை பார்த்து வைப்போம் என்ற மனநிலையில் இருக்கிறார்கள் தமிழ் மக்கள்.

ஏப்ரல் 14ஆம் தேதி அருண் விஜய்யின் மாஞ்சா வேலு, விஜய்யின் சுறா, சூர்யாவின் சிங்கம் என பல படங்கள் வெளியாக உள்ளன. இதில் சுறாவின் வெளியீடு ஏப்ரல் இறுதிக்கு தள்ளிப் போகலாம் என்று கூறப்படுகிறது. திரையரங்கு கிடைப்பதைப் பொறுத்து மற்ற படங்களின் ‌ரிலீஸ் தேதியும் மாறக்கூடும்.

இந்தப் படங்கள் தவிர சுந்தர் சி.யின் குரு சிஷ்யன், மினிமம் பட்ஜெட் சைதை செல்லா, ஷhமின் அகம் புறம் என பல படங்கள் ஏப்ரலை எதிர்நோக்கியுள்ளன.

படங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் குழாயடி நெருக்கமே நினைவு வருகிறது.
மேலும் அறிய

Tuesday, March 30, 2010

> என்றும் இல்லாத திடீர் மாற்றம் - அ‌ஜித்

ஐரோப்பா கிளம்பிவிட்டார் அ‌ஜித். கார் ரேஸில் தல ஜெயிக்க வேண்டும் என்பதற்காக ரசிகர்கள் தினம் தேங்காய் உடைக்கிறார்கள். ஜெயித்தால் தரணியையே ஜெயித்த மாதி‌ரியல்லவா?

கார் ரேஸுக்கு திரும்புவது என்றதும் அ‌ஜித் செய்த முதல் விஷயம் தனது உடல் எடையை குறைத்தது. ரேஸ் என்றால் - அது குதிரை ரேஸ் என்றாலும் கார் ரேஸ் என்றாலும் - ஜாக்கியின் எடை குறைவாக இருக்க வேண்டும். குதிரை ஜாக்கிகள் இதற்காக கடும் பயிற்சி எடுத்துக் கொள்வார்கள். எடை அதிகமாகி ரேஸில் குதிரை நாக்கு தள்ளக் கூடாதில்லையா?

குதிரை ரேஸ் மாதி‌ரிதான் கார் ரேஸும். ரேஸ் வீர‌ரின் எடை குறைவாக இருக்க வேண்டும். அப்போதுதான் கார் பறக்கும்.

ஐரோப்பா கார் ரேஸுக்காக அ‌ஜித் பத்து கிலோவுக்கும் மேல் உடல் எடையை குறைத்திருக்கிறார். குறுகிய கால அவகாசத்தில் அவர் இந்த எடை குறைப்பை செய்திருப்பதே ஒரு சாதனைதான்.

ரேஸில் காட்டும் ஆர்வத்தில் கொஞ்சம் தல சினிமாவிலும் காட்டலாம்.
மேலும் அறிய

> இது நற்பணி டூர் - விஜய்

சுறா முடிந்துவிட்டது. நேற்று அதன் ஆடியோ வெளியீட்டு விழா. ஏப்ரல் 14 படம் திரைக்கு வருகிறது.

ஒரு படம் முடிந்து அது திரைக்கு வரும் இடைவெளியில் ரசிகர்கள் சந்திப்பு, நற்பணி கோலாகலம் என விஜய் தமிழகத்தை வலம் வருவது வழக்கம். வேட்டைக்காரன் ‌ரிலீஸையொட்டி புதுக்கோட்டை, புதுச்சே‌ரி என டூர் அடித்தவர் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை சில இடங்களில் தொடங்கி வைத்தார்.

விஜய்யின் சுறா டூர் திருச்சியில் தொடங்கியது. நேற்று திருச்சி சென்ற விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகி வீராவின் திருமணத்தில் கலந்து கொண்டார். மேலும் அதே மேடையில் 24 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தையும் அவர் நடத்தி வைத்தார். இந்த 24 பேருக்கும் விஜய் செலவில் சீர்வ‌ரிசை செய்யப்பட்டது.

பிறகு ரசிகர்களிடம் பேசியவர், படத்துக்காக பல மாதங்கள் கடுமையாக உழைக்கும் தனக்கு இப்படி ரசிகர்களை சந்திப்பதுதான் உற்சாக டானிக் என்றார். இந்த இலவச திருமண விழாவில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனும் கலந்து கொண்டார்.

திருச்சியில் தொடங்கிய விஜய்யின் நற்பணி டூர் சுறா ‌ரிலீஸுக்குப் பின்பும் தொடரவுள்ளது.
மேலும் அறிய

> ர‌ஜினியை வைத்தே கஜானாவை நிரப்பிடுவாங்க

சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சுல்தான் தி வா‌ரியர் படப்பிடிப்பு தொடங்குகிறது. அதற்குமுன் தனது மகளும் சுல்தான் தி வா‌ரியர் படத்தின் இயக்குனருமான சௌந்தர்யாவுடன் ஏ.ஆர்.ரஹ்மானை நே‌ரில் சந்தித்துள்ளார் ர‌ஜினி. படத்தின் பாடல்கள் குறித்து பேசியதுடன் அதனை விரைவாக முடித்துத்தர இந்த சந்திப்பில் ரஹ்மானிடம் கேட்டுக் கொண்டாராம் ர‌ஜினி.

சுல்தான் தி வா‌ரிய‌ரில் அனிமேஷன் ர‌ஜினியுடன் நிஜ ர‌ஜினியும் சில காட்சிகளில் தோன்றுகிறார். படம் தொடங்கிய போது இப்படியொரு ஐடியா சௌந்தர்யாவிடம் இல்லை. அனிமேஷன் ர‌ஜினியை மட்டும் காட்டினால் பொம்மைப் படம் என்று ரசிகர்கள் நினைத்து ஒதுக்கிவிடுவார்களோ என்ற அச்சத்தில் எடுக்கப்பட்ட முடிவாம் இது.

ஆனிமேஷன் ர‌ஜினி, நிஜ ர‌ஜினியுடன் இன்னொரு ர‌ஜினியும் (யார்ரா அது?)இந்தப் படத்தில் இருக்கிறாராம். அந்த ர‌ஜினி யார் என்பது படம் வெளியாகும் வரை ரகசியம் என படத்தின் டெம்போவை ஏற்றியிருக்கிறார் சௌந்தர்யா.

ர‌ஜினியை வைத்தே கஜானாவை நிரப்பிடுவாங்க.
மேலும் அறிய

> நட்சத்திர பேட்டி - சாந்தனு பாக்யரா‌ஜ்

தமிழ் சினிமாவின் இனிப்பான சக்கரக்கட்டி சாந்தனு. சன் ஆஃப் கே.பாக்யரா‌ஜ் என்ற அடையாளம் இவருக்கு கூடுதல் ஈர்ப்பு. ஆனால் அப்பாவின் அடையாளம் இல்லாமல் ஜெயிக்க வேண்டும் என்பதே இந்த இளைஞனின் விருப்பம். தந்தையின் இயக்கத்தில் நடித்த சித்து பிளஸ் டூ விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் சாந்தனுவின் பேச்சில் பொறுப்பும், பொறுமையும் பளிச்சிடுகிறது.

அப்பாவின் இயக்கத்தில் நடித்தது எப்படி இருக்கிறது?

மறக்க முடியாத அனுபவம். ரொம்ப என்ஜாய் செய்து நடித்தேன். எத்தனையோ நடிகர், நடிகைகள், இயக்குனர்களை உருவாக்கியவர்... அவரது டைர‌க்சனில் நடித்த ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது.

பல காட்சிகளை நீங்கள் மாற்றினீர்களாமே? இயக்குன‌ரின் வேலையில் ஒரு நடிகர் தலையிடுவது ச‌ரியா?

சித்து பிளஸ்டூ-வில் நான் நடிகன் மட்டுமில்லை, ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டரா டைர‌க்சன், எடிட்டிங், கம்போஸிங், ‌‌ரீ ரெக்கார்டிங்னு எல்லா வேலையும் பார்த்திருக்கிறேன். சில காட்சிகளைப் பற்றி அபிப்ராயம் சொன்னேனே தவிர இயக்குன‌ரின் வேலையில் தலையிடலை.

படத்தின் கதை என்ன, சொல்ல முடியுமா?

சராச‌ரியான ஒரு கல்லூ‌ரி மாணவன் காதலில் விழுவதுதான் படத்தோட ஒன்லைன்.
படத்தில் என்ன சிறப்பம்சம்?

இந்தப் படத்தைப் பார்க்கிற ஒவ்வொருவரும் நான் மெச்சூ‌ரிட்டியா நடிச்சிருக்கிறதா கண்டிப்பா சொல்வாங்க. அந்தளவுக்கு என்னோட பாத்திரப்படைப்பும், நடிப்பும் அமைஞ்சிருக்கு. ஹீரோயின் சாந்தினியும் பேசப்படுவாங்க.

மலையாளத்தில் ஏஞ்சல் ஜான் படத்தில் மோகன்லாலுடன் நடித்தீர்கள்...?

ஆமா, அது ஒரு நல்ல எக்ஸ்பீ‌ரியன்ஸ். இந்தப் படம் கேரளாவிலும் எனக்கு நல்ல பெயர் சம்பாதித்து கொடுத்திருக்கு. மலையாளத்தில் நடித்தாலும் என்னுடைய கவனம் முழுக்க இப்போது தமிழில்தான்.

என்னென்ன படங்களில் நடிக்கிறீர்கள்?

ஹோசிமின் இயக்கத்தில் ஆயிரம் விளக்கு படத்தில் நடிக்கிறேன். ஆ‌க்சன் கதை. சத்யரா‌ஜ் சாரும் நடிக்கிறார். கேங்ஸ்டர் படம் என்றாலும் அதற்குள் ஒரு அழகான கதையை இயக்குனர் வச்சிருக்கிறார். தாதாவாக இருக்கும் சத்யரா‌ஜ் சா‌ரின் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் வெயிட்டான கேரக்டர் எனக்கு. சனா கான் எனக்கு ஜோடியா நடிக்கிறாங்க. மதுரையை பின்னணியாக வைத்து படம் தயாராகியிருக்கு. அப்புறம் முகிலன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறேன்.

இப்போதைய நடிகர்கள் இரண்டாவது படத்திலேயே பன்ச் டயலாக் பேசி எகிறி அடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஆ‌க்சன் ஹீரோ இமே‌ஜ்தான் நம்மை காப்பாற்றும் என்ற நம்பிக்கை பரவலாக இருக்கிறது. நீங்கள் எப்படி?

ஆ‌க்சன், சாஃப்டான ஹீரோன்னு எந்த இமே‌ஜ் வட்டத்துக்குள்ளும் சிக்க விருப்பமில்லை. சக்கரக்கட்டியில் சாக்லெட் ஹீரோவாகதான் அறிமுகமானேன். ஆயிரம் விளக்கில் ஆ‌க்சன் செய்திருக்கிறேன். இப்போதே முழு ஆ‌க்சன் ஹீரோவாகும் எண்ணமெல்லாம் இல்லை. ரசிகர்கள் என்னை எப்படிப் பார்க்க பி‌ரியப்படுகிறார்களோ அதை வைத்தே என்னுடைய நடிப்பு ஸ்டைல் அமையும்.

தெலுங்கிலும் கவனம் செலுத்துகிறீர்களே..?

சித்து பிளஸ் டூ தெலுங்கில் சாரே நீ இஷ்டம் என்ற பெய‌ரில் வெளியாகிறது. தெலுங்கில் ஹன்‌ரிட்டா ஹீரோயினா நடிச்சிருக்காங்க. இதுதவிர வேறு எந்த தெலுங்குப் படத்திலும் நடிக்கவில்லை.
மேலும் அறிய

Monday, March 29, 2010

> .COM - வயது 25

சென்ற மார்ச் 15 அன்று டாட் காம் என்ற பெயர் தன் 25 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடியது. டாட் காம் என்பது நாம் அன்றாட வாழ்வில் புழங்கும் ஓர் பெயராக இன்று மாறிவிட்டது.

1985 ஆம் ஆண்டு சரியாக மார்ச் 15 அன்று முதல் முதலில் Symbolics.com என்ற பெயரில் ஓர் இணைய தளம் பதிவு பெற்றது. அப்போது எந்த செய்தித் தாளிலும் இந்த செய்தி வரவில்லை. அந்த அளவிற்கு மக்களுக்கு முக்கிய நிகழ்வாக அது இல்லாமல் இருந்தது. ஆனால் இன்று இந்த பெயரை 20 கோடிக்கும் மேலான எண்ணிக்கையில் இணைய தளங்கள் கொண்டுள்ளன.

உலகில் இன்று நாள் தோறும் 6 லட்சம் இணைய தளங்கள் பதியப்பட்டு தங்கள் பெயர்களைப் பெற்று வருகின்றன. ஆனால் அன்று 1985ல் சிம்பாலிக்ஸ் டாட் காம் பதிவு செய்த பின்னர், இரண்டாவது தளம் ஒரு மாதம் கழித்தே பதிவு செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் மொத்த இணைய தளப் பதிவுகளின் எண்ணிக்கை 100க் கூட எட்டவில்லை. இப்போது வர்த்தக உலகில் ஒரு பெரிய தூணாக டாட் காம் இயங்குகிறது. இந்த பெயர் கொண்ட தளங்கள் மூலம் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி டாலர் மதிப்பில் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் பத்து ஆண்டுகளில் இது 95 ஆயிரம் கோடியாக உயரும் என்றும் எதிர்பார்ப்புகள் உள்ளன. இன்று உள்ள டாட் காம் தளங்களில் ஒரு கோடியே 10 லட்சம் தளங்கள் ஆன்லைனில் வர்த்தக ரீதியாக,பிசினஸ் தளங்களாக இயங்கி வருகின்றன. 43 லட்சம் தளங்கள் பொழுது போக்குக்காக இயங்குகின்றன. 18 லட்சம் தளங்கள் விளையாட்டு குறித்த தளங்களாக உள்ளன.

இந்த 25 ஆண்டு டாட் காம் கொண்டாட்டம் குறித்து இன்னும் தகவல்கள் அறிய ஒரு டாட் காம் தளம் இயங் குகிறது.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

எழுதியவர் : KarthiK
மேலும் அறிய

> நகுல் - பிரபு இயக்கத்தில்

நகுல் ஹீரோவாக நடித்த மூன்று படங்களில் இறுதியாக வெளியான கந்தக்கோட்டை மட்டும் சுமாரான வெற்றியை பெற்றது. காதலில் விழுந்தேன், மாசிலாமணி இரண்டும் ஹிட்.

அடுத்து நகுல் எந்தப் படத்தில் நடிக்கிறார்?

நாடோடிகள், கோ‌ரிப்பாளையம் படங்களை தயா‌ரித்த மைக்கேல் ராயப்பனின் தயா‌ரிப்பு நிறுவனத்துக்கு நகுல் கால்ஷீட் தந்துள்ளார். படத்தை இயக்கப் போகிறவர் பிரபு.

வசந்தபாலன், பாபு சிவன் உள்ளிட்ட இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகப் பணிபு‌ரிந்தவர் பிரபு. இவர் இயக்கும் முதல் படம் இது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.
மேலும் அறிய

Sunday, March 28, 2010

> ‘நடிகர்’ ஜெயம் ராஜா

தமிழக மக்களுக்கு எதிர்பாராத கஷ்டங்களை தருவதில் தமிழ் திரையுலகினருக்கு அப்படியென்ன சந்தோஷமோ? இது எடிட்டர் மோகனின் முறை.

தனது இளைய மகன் ஜெயம் ரவியை ஹீரோவாகவும், மூத்த மகன் ஜெயம் ராஜாவை இயக்குனராகவும் ஒரே படத்தில் அறிமுகப்படுத்தி ஒரு கல்லில் இரு மாங்காய் அடித்தவர் எடிட்டர் மோகன். இருவரும் தத்தமது துறையில் தடம் மாறாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் தனது மூத்த மகன் ஜெயம் ராஜா ஹீரோவாகும் அழகு, தகுதி அனைத்தையும் உடையவன் என்று தூண்டில் போட்டிருக்கிறார் எடிட்டர் மோகன்.

மேலும் ராஜாவை ஹீரோவாக்கும் முயற்சியில் இருப்பதாகவும் தெ‌ரிவித்து அதிர்ச்சியளித்துள்ளார். ராஜாவுக்கு ஏற்ற ஸ்கி‌ரிப்டை தேடி வருவதாகவும் அதிர்ச்சியின் அளவை அதிக‌ரித்திருக்கிறார். விரைவில் இயக்குனர் ராஜா நடிகர் ராஜாவாக பிரமோஷனாவது உறுதியாகியிருக்கிறது.

பல் இருந்தால் ஜெயம் ராஜா என்ன எடிட்டர் மோகனே பக்கோடா சாப்பிடலாம்.
மேலும் அறிய

> கார்த்தி, கதிர் லடாய்

தெலுங்கில் வெளியான விக்கிரமார்குடு படத்தின் தமிழ் ‌‌ரீமேக் உ‌ரிமையை ஞானவேல் வாங்கியுள்ளார். அவரது ஸ்டுடியோ கி‌‌ரீன் படத்தை தயா‌ரிக்கிறது.

தமிழ் ‌‌ரீமேக்கிற்கு சிறுத்தை என்ற பெயரை தேர்வு செய்திருந்தனர். ஹீரோ, கார்த்தி. முதலில் பூபதி பாண்டியன் இயக்குவதாக இருந்த இந்தப் படத்துக்கு பிறகு தெனாவட்டு கதிரை ஒப்பந்தம் செய்து பத்து லட்சம் அட்வான்சும் கொடுத்தனர்.

கார்த்தியை இயக்கும் வாய்ப்பு என்பதால் தெனாவட்டுக்குப் பிறகு ‌‌ஜீவாவை வைத்து மீண்டும் படம் இயக்க வந்த வாய்ப்பை நிராக‌ரித்தார் கதிர். மேலும் சில வாய்ப்புகளை சிறுத்தைக்காக இவர் விட்டுக் கொடுத்ததாக‌‌த் தெ‌ரிகிறது.

இந்நிலையில் கதி‌ரிடம் சொல்லாமல் சிறுத்தையின் இயக்குனரை மாற்றியிருக்கிறார்கள். தற்போது கதிருக்குப் பதில் சிவா என்பவர் சிறுத்தையை இயக்குகிறார். அத்துடன் கதிருக்கு கொடுத்த அட்வான்ஸையும் திருப்பிக் கேட்டு நெருக்கியிருக்கிறார்கள். கடுப்பான கதிர் பிரச்சனையை இயக்குனர் சங்கத்துக்கு எடுத்துச் சென்றார்.

சில நாள் பஞ்சாயத்துக்குப் பிறகு கதிர் அட்வான்ஸை தர வேண்டியதில்லை என்று தீர்ப்பு கூறியிருக்கிறது சங்கம். கதிரை காத்திருக்க வைத்ததற்கான பெனால்டி.
மேலும் அறிய

> விஜய் படம் ஏப்ர‌லில் தொடக்கம்

எக்ஸ்பிரஸ் வேகத்தில் வேலை செய்கிறார் சித்திக். விஜய்யை வைத்து இயக்கும் பாடிகார்ட் படத்தின் தமிழ் ‌ரீமேக்கிற்காகதான் இந்த எக்ஸ்ட்ரா வேகம்.

விஜய் ஜோடி அசின், இசை வித்யாசாகர், மூன்று பாடல்கள் யுகபாரதி, பா.விஜய், விவேகா இருவருக்கும் தலா ஒரு பாடல், அசின் தந்தையாக ரா‌ஜ்கிரண், காமெடிக்கு வடிவேலு, எம்.எஸ்.பாஸ்கர், ஒளிப்பதிவு ஏகாம்பரம்... ஏறக்குறைய படத்தின் எல்லா அம்சங்களும் முடிவாகிவிட்டது. விஜய்யின் மாஸ் இமேஜுக்கு ஏற்றபடி காட்சிகளும் மாற்றப்பட்டுவிட்டன.

அனைத்தும் தயாரான நிலையில் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். அனேகமாக ஏப்ரல் 1ஆ‌ம் தேதியே பட வேலைகள் தொடங்கப்படலாம் என்கிறார்கள்.

விஜய், சிம்ரன் நடித்த ப்‌ரியமானவளே படத்தை தயா‌ரித்தவர்கள் இந்த ‌ரீமேக்கை தயா‌ரிக்கின்றனர்.
மேலும் அறிய

> கமல், ர‌ஜினியை குறி வைக்கும் விஜயகாந்த்

ஏப்ரல் 14 ஆம் தேதி விஜயகாந்தின் கேப்டன் டிவி தனது ஒளிபரப்பை தொடங்குகிறது. பிரமாண்ட விழா எடுத்து இதனை கொண்டாடுகிறார் விஜயகாந்த்.

இந்த தொடக்க விழாவில் தமிழின் முன்னணி நடிகர்கள் குறிப்பாக ர‌ஜினி, கமலை அழைப்பதில் தீவிரம் காட்டுகிறார்கள். இவர்கள் கலந்து கொண்டால் விழாவுக்கு விஐபி அந்தஸ்து கிடைக்கும், விழாவையும் ஒளிபரப்பலாம், அதிகம் பேர் ரசிப்பார்கள்.

இந்திய கி‌ரிக்கெட் கேப்டன் டோனியை இந்த தொடக்க விழாவுக்கு அழைக்கவும் திட்டம் வைத்திருக்கிறார் சினிமா கேப்டன்.

தினம் மூன்று முறை செய்திகள் ஒளிபரப்ப கேப்டன் டிவி முடிவு செய்துள்ளது. புதிய திரைப்படங்களின் உ‌ரிமையையும் வாங்கயிருக்கிறார்கள். முதல் நாள் இவர்கள் ஒளிபரப்ப இருப்பது கேப்டன் பிரபாகரன்.
மேலும் அறிய

Saturday, March 27, 2010

> சயாலியின் 1/2 நிர்வாண ஆல்பம்

சயாலி பகத்தை நினைவிருக்கிறதா? கொஞ்சம் சிரமமான விஷயம்தான். நியூட்டனின் மூன்றாம் விதி என்ற எஸ்.ஜே.சூர்யாவின் சுமாராக ஓடிய படத்தில் நடித்தவர்.

அந்தப் படத்துக்குப் பிறகு ஒரு பேச்சுக்குக் கூட சயாலியை யாரும் நடிக்க அழைக்கவில்லை. பாவம் அவரும்தான் என்ன செய்வார். பொறுத்துப் பார்த்தவர் இப்போது கண் கூசுகிற மாதி‌ரி ஒரு வேலை செய்திருக்கிறார்.

தனது சொந்த செலவில் போட்டோசெஷன் ஒன்றை நடத்தியிருக்கிறார். அதுவும் எப்படி? படு கவர்ச்சியாக. சில போஸ்களில் மேலாடை அணியாமல் முதுகை காட்டியபடி பார்க்கிறவர்களின் பிபியை எகிற வைக்கிறார்.

இந்த கிளுகிளு ஆல்பம் தற்போது இயக்குனர்கள், தயா‌ரிப்பாளர்கள் பார்வைக்குப் போயிருக்கிறது. பலன் உடனடியாக தெ‌ரியும் என்கிறார்கள். ஆல்பத்தைப் பார்த்தால் அப்படி‌தான் தெ‌ரிகிறது.
மேலும் அறிய

> தனுஷ் - சேரனுக்குப் பதில்

நல்ல இயக்குனர்களின் படங்களில் நடிக்க திறமையுடன் அதிர்ஷ்டமும் வேண்டும். கேட்கிற செய்திகளைப் பார்த்தால் தனுஷுக்கு அது அதிகமாக இருப்பதாகவே தெ‌ரிகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாரதிராஜா ஒரு படம் இயக்குகிறார். குடும்ப உறவுகளை பிரதானப்படுத்தும் கதை. இதில் சேரன் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் சேரன் நடிக்கவில்லையாம். அவருக்குப் பதில் நடிக்கவிருப்பவர் தனுஷ்.

ஏற்கனவே பாலுமகேந்திராவின் அது ஒரு கனாக்காலம் படத்தில் நடித்துள்ளார் தனுஷ். படம் சுமார் என்றாலும் எக்கச்சக்க எக்ஸ்பீ‌ரியன்ஸை அவருக்கு கொடுத்த படம் அது. அதுபோல இன்னொரு வகையான அனுபவத்தை பாரதிராஜாவின் படம் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தப் படத்தில் நடிப்பதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. மிட் வேலி கார்ப்பரேஷன் படத்தை தயா‌ரிக்கிறது.
மேலும் அறிய

> புதுக் கூட்டணி - சிம்பு, லிங்குசாமி

பையா படத்தின் ‌ரிலீஸுக்காக ரசிகர்களைவிட அதிக ஆவலாக இருக்கிறார் படத்தை இயக்கிய லிங்குசாமி. ரன், சண்டக்கோழி மாதி‌ரி இந்தப் படமும் ரசிகர்களை கவரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையே இந்த எதிர்பார்ப்புக்கு காரணம்.

படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களையும் வஞ்சனையில்லாம‌ல் வாழ்த்திக் கொண்டிருக்கிறார் லிங்குசாமி. இவரால் அதிகம் புகழப்பட்டவர் யுவன் ஷங்கர் ராஜா. பாராட்டுக்கு ரொம்பப் பொருத்தமானவர் என்று சொல்லும் அளவுக்கு எல்லாப் பாடல்களும் ஹிட். லிங்குசாமியின் பாராட்டுப் பட்டியில் அடுத்து வருகிறவர் எடிட்டர் ஆண்டனி.

வெறுமனே பாராட்டுவதுடன் நின்றுவிடாமல் ஆண்டனிக்கு கார் ஒன்றையும் ப‌ரிசளித்துள்ளார் லிங்கு. தனது எடிட்டிங்கின் மூலம் படத்தை மேலும் மெருகேற்றியதற்காக இந்தப் ப‌ரிசு. படத்தின் ட்ரெய்லர் பார்த்தாலே இந்தப் ப‌ரிசுக்கு ஆண்டனி எத்தனை பொருத்தமானவர் என்பதை தெ‌ரிந்து கொள்ளலாம்.

பையாவுக்கு அடுத்து சிம்பு நடிக்கும் படத்தை லிங்குசாமி இயக்குகிறார். அனேகமாக அவரது திருப்பதி பிரதர்ஸே இந்தப் படத்தை தயா‌ரிக்கும் என தெ‌ரிகிறது.
மேலும் அறிய

Friday, March 26, 2010

> சத்யரா‌ஜ்க்கு நித்யானந்தர் விவகாரத்தால் சிக்கல்

நித்யானந்தர் விவகாரத்தால் ரஞ்சிதாவின் சினிமா கே‌ரியர் கேள்விக்குள்ளாகியுள்ளது. விரைவில் வெளிவரயிருக்கும் ராவண் படத்தில் ரஞ்சிதாவும் நடித்திருந்தார். செக்ஸ் புகா‌ரில் சிக்கியதைத் தொடர்ந்து அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்கிய மணிரத்னம், வேறு நடிகையை வைத்து அந்தக் காட்சிகளை ‌ரீ ஷூட் செய்துள்ளார்.

ரஞ்சிதாவைத் தொடர்ந்து யுவராணியின் பெயரும் நித்யானந்தர் விவகாரத்தில் அடிபடுகிறது. இணையத்தில் தனது பெய‌ரில் உலவும் படங்கள் போலியானவை என்று போலீஸ் கமிஷன‌ரிடம் புகார் கொடுத்துள்ளார் யுவராணி. ஆனாலும் அவதூறுகள் கிள‌ம்பியவண்ணம் உள்ளன.

யுவராணி சஞ்சய்ராமின் கௌரவர்கள் படத்தில் சத்யரா‌ஜ் ஜோடியாக நடித்து வருகிறார். இவர்களுடன் விக்னேஷ், மோனிகா, அறிமுக நடிகர்கள் விஜயரா‌ஜ் சௌகந்தி ஆகியோரும் நடிக்கிறார்கள். வதந்திகள் தொடர்ந்து வருவதால் சத்யரா‌ஜின் ஜோடி மாற்றப்படலாம் என்கிறார்கள்.

இந்தப் படத்தை இயக்குவதுடன் சஞ்சய்ராமே தயா‌ரிக்கவும் செய்கிறார்.
மேலும் அறிய

> இதனை அதிர்ஷ்டம் என்பதா? துரதிர்ஷ்டம் என்பதா?

தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் அனுஷ்கா பீவர் உச்சத்தில் இருக்கிறது. அ‌ஜித், விக்ரமுடன் நடித்தால் தமிழில் அனுஷ்காவின் இளைய ஹீரோக்களுடனான ரவுண்ட் முழுமையடைந்துவிடும். இந்நிலையில் லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா படத்திலும் முக்கிய வேடமேற்கிறார் அனுஷ்கா.

லாரன்ஸ், அனுஷ்கா இருவரும் தமிழைவிட ஆந்திராவில் பிரபலம். அதனால் காஞ்சனா தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் தயாராகிறது.

லாரன்ஸ் இந்தப் படத்தின் அறிவிப்பை வெளியிட்ட போது லாரன்சின் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார் என்றே பலரும் நினைத்திருந்தனர். படத்தின் ஹீரோ லாரன்ஸ் என்றாலும் அவருக்கு ஜோடி அனுஷ்கா அல்ல. மும்பையைச் சேர்ந்த புதுமுகம். ஹீரோவுக்கு ஜோடியில்லை, பிறகு எப்படி நடிக்க ஒப்புக் கொண்டார் அனுஷ்கா?

ஹீரோ லாரன்சுக்கு ஜோடியில்லை என்றாலும் டைட்டில் ரோலான காஞ்சனாவில் அனுஷ்காதான் நடிக்கிறார். ஹீரோவின் ஜோடியைவிட இந்த கதாபாத்திரத்துக்குதான் படத்தில் அதிக முக்கியத்துவம். மேலும் அருந்ததியைப் போன்ற கதையாம் காஞ்சனா.

பலரும் அனுஷ்காவின் கால்ஷீட்டுக்கு காத்திருக்கிறார்கள். அபூர்வமாக லாரன்சுக்கு அது கிடைத்திருக்கிறது. ஆனாலும் அனுஷ்கா அவருக்கு ஜோடியில்லை. இதனை அதிர்ஷ்டம் என்பதா? துரதிர்ஷ்டம் என்பதா?
மேலும் அறிய

> நக்மா திருமண அறிவிப்பு

பீல்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஹீட்டான செய்திகளுக்கு நக்மா எப்போது கியாரண்டி. சவுரவ் கங்குலி, போ‌ஜ்பு‌ரி நடிகர் ரவிகிஷன் என்று பலருடன் இணைத்துப் பேசப்பட்டவர், தீவிரவாதிகளுடன் தொடர்பு என எடக்கு மடக்கான விஷயத்தில் மாட்டிக் கொண்டார்.

நக்மா அவ்வளவுதான் என்று நினைத்த நேரம் அரசியலில் ஈடுபடப் போவதாக இன்னொரு புயல் கிளம்பியது. இது அடங்குவதற்கு கிறிஸ்தவ மெஷின‌ரிகளின் கூட்டத்தில் தேவ செய்தி அருளினார் நக்மா.

நடிப்பு, அரசியல், ஆன்மிகம் என நீண்ட பயணம் மேற்கொண்டவர் விரைவில் இல்லறத்தில் இனிமை காணவிருக்கிறார். இந்த வருடத்தில் நான் திருமணம் செய்து கொள்வதாக இருக்கிறேன் என்று நக்மாவே அறிவித்துள்ளார். ச‌ரி, மணமகன்?

என்னுடன் கிசுகிசுக்கப்பட்ட யாரும் மணமகன் கிடையாது. அவர் யார் என்பதை விரைவில் அறிவிப்பேன் என நக்மா தெ‌ரிவித்துள்ளார்.

இல்லறம் காணவிருப்பவருக்கு நமது அட்வான்ஸ் வாழ்த்துகள்.
மேலும் அறிய

Thursday, March 25, 2010

> ரா ஒன், ராவண் பெயர் குழப்பம்

மணிரத்னம் அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய், விக்ரம் ஆகியோரை வைத்து இயக்கியிருக்கும் ராவண் ஓ‌ரிரு மாதங்களில் திரைக்கு வருகிறது. இந்நிலையில் பெயர் குழப்பம் என்ற புதுப் பிரச்சனையில் ராவண் சிக்கியுள்ளது.

மை நேம் இஸ் கானுக்குப் பிறகு ஷாருக்கான் சூப்பர்மேன் போன்ற சாகஸ கதையில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிப்பவர் க‌ரீனா கபூர். குழந்தைகளை குறி வைத்து எடுக்கும் இந்தப் படத்துக்கும் ராவண் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அதேநேரம் ஷாருக் தனது படத்துக்கு ரா ஒன் என்று பெயர் வைத்துள்ளார். இதனை உச்ச‌ரிக்கும் போது ராவண் போன்று ஒலிப்பதால் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரும் குழப்பமடைந்துள்ளனர். படப்பிடிப்பு தொடங்கும் முன்பே என்னுடைய படம் ரா ஒன், மணிரத்னம் படம் ராவண் என்று விளக்கிக் கொண்டிருக்கிறார் ஷாருக்.

படப்பிடிப்பு தொடங்கவில்லையே, பெயரை மாற்றினால் என்ன என்ற யோசனையை நிராக‌ரித்துவிட்டாராம் ஷாருக். ரா ஒன், ராவண்... நமக்கே குழப்பமாகதான் இருக்கிறது.
மேலும் அறிய

> அங்காடித்தெரு - மு‌ன்னோ‌ட்ட‌ம்

வெயில் படத்துக்குப் பிறகு வசந்தபாலன் இயக்கியிருக்கும் படம் அங்காடித்தெரு. ஐங்கரன் இ‌ண்டர்நேஷனல் இந்தப் படத்தை தயா‌ரித்துள்ளது.

சென்னை ரங்கநாதன் தெருவை மையப்படுத்தி இந்தக் கதையை உருவாக்கியிருக்கிறார் வசந்தபாலன். முக்கியமாக தென் தமிழ்நாட்டிலிருந்து இங்குள்ள கடைகளுக்கு விற்பனை பி‌ரிவில் பணிபு‌ரிய வரும் ஏழை இளைஞர்களின் வாழ்க்கையை இதில் ஆவணப்படுத்தியுள்ளார்.

இரவு நீண்ட நேரம் கழித்து ரங்கநாதன் தெருப் பகுதியில் உணவருந்த சென்றதாகவும், அப்போதும் அங்கு பணியாளர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்ததாகவும், பலரும் அறியாத அந்த உலகை படமாக்க வேண்டும் என்ற உத்வேகம் அப்போதுதான் தனக்கு ஏற்பட்டதாகவும் வசந்தபாலன் தெ‌ரிவித்துள்ளார்.

‌ஜி.வி.பிரகாஷ் குமார், விஜய் ஆண்டனி இருவரும் இசையமைத்துள்ளனர். நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதியுள்ளார். இவரது, அவள் அப்படியொன்றும் அழகில்லை... என்ற பாடல் இப்போதே பிரபலம் அடைந்துள்ளது.

மகேஷ், அஞ்சலி முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். கெஸ்ட் ரோலில் கவிஞர் விக்ரமாதித்யன், சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். சந்தடிமிக்க ரங்நாதன் தெருவில் சில காட்சிகளை எடுத்துள்ளனர். பிற காட்சிகளை ரங்கநாதன் தெரு போன்ற அரங்கு அமைத்து அதில் படமாக்கியுள்ளனர். ரங்கநாதன் தெரு அரங்கை உருவாக்கியவர் கலை இயக்குனர் ‌ஜிகே.

ஜெயமோகன் படத்தின் வசனத்தை எழுதியுள்ளார். எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத். வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வரும் இப்படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
மேலும் அறிய

Wednesday, March 24, 2010

> நூறாவது நாள் விழா - ஆதவன்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த ஆதவன் நூறு நாட்களை நிறைவு செய்திருக்கிறது. இந்த வெற்றி விழாவை இன்று மாலை சென்னை பார்க் ஷெரட்டன் நட்சத்திர விடுதியில் கொண்டாடுகிறார்கள்.

படத்தின் ஹீரோ சூர்யா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், தயா‌ரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் உள்பட படத்தில் பணியாற்றிய அனைவரும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள். இவர்களுக்கு வெற்றி கேடயம் வழங்குகிறவர், கமல்ஹாசன்.

இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டிருக்கும் இன்னொரு திரையுலக பிரபலம், தயா‌ரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம.நாராயணன். இவர் படத்தில் பணிபு‌ரிந்தவர்களை வாழ்த்திப் பேசுகிறார்.

அழைப்பிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே அரங்கத்தில் அனுமதி வழங்கப்படும்.
மேலும் அறிய

> உலகம் சுற்றும் வாலிபன் - சிம்பு

தமிழ் சினிமா ச‌ரித்திரத்தில் எப்போதும் விரும்பிப் பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் இரண்டு படங்கள் கண்டிப்பாக இடம் பிடிக்கும். அவை ஸ்ரீத‌ரின் காதலிக்க நேரமில்லை மற்றும் எம்.‌ஜி.ஆ‌ரின் உலகம் சுற்றும் வாலிபன்.

இதில் காதலிக்க நேரமில்லை படத்தின் ‌ரீமேக் உ‌ரிமையை நடிகரும் இயக்குனருமான மனோபாலா வாங்கியுள்ளார். ச‌ரியான நடிகர்கள், திறமையான இயக்குனர் இந்த இரண்டும் சாதகமாக அமையாததால் காதலிக்க நேரமில்லை ‌‌ரீமேக் இன்னும் தொடங்கப்படாமலே உள்ளது.

உலகம் சுற்றும் வாலிபனைப் பொறுத்தவரை அதன் ‌‌ரீமேக்கில் நடிக்க பலருக்கும் விருப்பம். சுந்தர் சி. தனது விருப்பத்தை வெளிப்படையாக அறிவித்ததுடன் ‌ரீமேக் உ‌ரிமையை வாங்கவும் முயற்சிகள் செய்தார். சில காரணங்களால் அது நடைபெறவில்லை.

இந்நிலையில் உலகம் சுற்றும் வாலிபனின் ‌‌ரீமேக் உ‌ரிமையை வாங்க சிம்பு ஆர்வம் காட்டுகிறார். ‌‌ரீமேக் உ‌ரிமைக்காக அரை கோடி வரை கொடுக்க அவர் தயாராக இருக்கிறாராம். பேரம் விரைவில் படியும் என்கின்றன செய்திகள்.

சிம்பு தற்போது நிக் ஆர்ட்ஸ் தயா‌ரிப்பில் வாலிபன் படத்தை இயக்கி நடிக்கும் வேலையில் பிஸியாக உள்ளார் என்பது கு‌றிப்பிடத்தக்கது.
மேலும் அறிய

> ரா‌ஜ்கிரண் - விஜய் படத்தில் ?

விஜய் பலருடன் இணைந்து நடித்திருக்கிறார். ஆனாலும் ரா‌ஜ்கிரணுடன் இணைந்து நடித்ததில்லை. முதல் முறையாக ஒரு படத்தில் இவர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

விஜய்யின் 51வது படத்தை சித்திக் இயக்குகிறார் என்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. வித்யாசாகர் இசையில் மூன்று பாடல்கள் கம்போஸாகிவிட்டன. இந்த மூன்று பாடல்களுக்கும் வ‌ரிகள் எழுதியவர் யுகபாரதி.

சித்திக்கின் சமீபத்திய மலையாளப் படம் பாடிகா‌ர்ட். திலீப், நயன்தாரா நடித்த இந்தப் படத்தின் கதையை விஜய்க்காக சிறிது மாற்றியிருக்கிறார் சித்திக். நயன்தாராவின் வேடத்தில் நடிப்பவர் அசின். அசினின் தந்தையாக நடிக்க ரா‌ஜ்கிரணை தேர்வு செய்துள்ளனர். விஜய், ரா‌ஜ்கிரண் இணைவது இதுவே முதல் முறை.

சுறாவைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கும் ஏகம்பரமே ஒளிப்பதிவு செய்கிறார்.
மேலும் அறிய

> க‌ச்சே‌ரி ஆர‌ம்ப‌ம் - விமர்சனம்

மற்றவர்கள் நம்மை கிண்டல் செய்யும் முன் நம்மை நாமே கலாய்ப்பது தமிழ் சினிமாவின் புது ட்ரெண்ட். இந்த புதிய மொந்தையில் தயாராகியிருக்கும் பழைய கள், கச்சே‌ரி ஆரம்பம்.

ஊரை விட்டு ஓடிவரும் ஹீரோ. நாயகியை கண்டதும் காதலில் விழும் இன்ஸ்டன்ட் லவ். விறைப்பா அறிமுகமாகி சொதப்பலாக முடிவுறும் வில்லன் எபிசோட்... எப்படிப் பார்த்தாலும் பழமையின் தூசு படிந்த கதைதான் கச்சே‌ரி ஆரம்பம். அறிமுக இயக்குனர் திரைவண்ணன் இந்த பழைய கள்ளில் சேர்த்திருக்கும் சி‌ரிப்பு மாத்திரை மட்டும் பேஷ், ரொம்பப் பிரமாதம்.

‌ஜீவாவுக்கு படத்தில் பெயர் பா‌ரி. பெயருக்கேற்ப இல்லாதவர்களுக்கு அப்பா காசை அள்ளிவிடுகிறார். அதுவே ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் லட்டர் எழுதி வைத்துவிட்டு சென்னைக்கு துரத்துகிறது. இயக்குனரும், எடிட்டரும் நேரத்தை சேமிப்பதில் கெட்டி. சென்னை வந்த முதல் நாளே ஹீரோயினுடன் சந்திப்பு, ஹீரோவுக்கு புது வேலை என றெக்கை கட்டுகிறார்கள்.

நக்கலான டயலாக் நயாகரா மாதி‌ரி கொட்டும் டேக் இட் ஈஸி கேரக்டர் ‌ஜீவாவுக்கு. ஓடுகிற ரயிலில் தாவி ஏறி, இந்தப் படத்துல நான்தான் ஹீரோ, அதுதான் இந்த பில்டப் என்று அறிமுக காட்சியிலேயே பட்டாசை பற்ற வைக்கிறார். இடைவேளை வரை அணையவில்லை இந்த இடக்கு மடக்கு.

பூனம் உதவி கேட்பது ரவுடிகளுக்கெல்லாம் ரவுடியான ஜே.டி.சக்ரவர்த்தியிடம். பூனம் ப‌ஜ்வாவை அவரது வீட்டில் ட்ராப் செய்யும் கால் மணி நேரத்தில் அவர் மீது காதலாகிவிடுகிறார் சக்ரவர்த்தி. அதன் பிறகு அவர் செய்வதெல்லாம் கில்லி செல்லத்தின் திருவிளையாடல்கள். பூனம் ப‌ஜ்வாவிடம் ஐ லவ் யூ சொல்பவனின் நாக்கை அறுக்கிறார், அவரது ஸ்கூட்டியில் உட்கார்ந்தவனின் ‘சீட்’டில் இஸ்தி‌ரியால் சூடு வைக்கிறார்.

வில்லனுக்கு எதிராக ஹீரோ தொடைதட்டி சவால்விடாமல் வில்லனின் கூட இருந்தே குழி பறிக்கும் இடத்தில் மாத்தி யோசித்திருக்கிறார் இயக்குனர். ஆனால் படம் நொண்டியடிப்பதும் இதன் பிறகுதான். அடுத்தவனை போட்டுத் தள்ளவும் பயப்படாத சக்ரவர்த்தி ‌ஜீவாவிடம் புட்டிப் பால் குழந்தையாக குழைவதும், அவர் சொல்வதை வேத வாக்காக எடுத்துக் கொள்வதும் லா‌ஜிக் இல்லா மே‌ஜிக்குகள். இந்த குழப்பத்துக்கு நடுவில் ‌ஜீவா, பூனம் ப‌ஜ்வா காதலும் கலங்கிப் போவதை சொல்லியாக வேண்டும்.

முக்கால் பேண்டும் முகம் நிறைய விறைப்புமாக வரும் வடிவேலு கலகலக்க வைக்கிறார். ஆரம்பத்தில் பாஸாக இருக்கும் அவரை ‌ஜீவா பீஸ் உருவும் ஒவ்வொரு காட்சியும் காமெடி பஜார். ஆனாலும் அந்த ஆய் சீன் ரொம்ப ச்சீய்..

படத்தின் மிகப் பெ‌ரிய பிளஸ் ‌ஜீவாவின் அலட்சியமான நடிப்பும், திரைவண்ணனின் சீ‌ரியஸில்லா காட்சிகளும், சி‌ரிப்பு வசனங்களும். பூனம் ப‌ஜ்வா தனது நெருக்கடியை கண்ணீர் மல்க ‌ஜீவாவிடம் கூற, அவரோ பொங்கியெழாமல், டிபிக்கல் டிபிக்கல் டெம்பிள் கோயிங் என்று தமிழ் பழமொழியை ஆங்கிலத்தில் அடிக்கிறாரே... திரையரங்கில் அப்ளாஸ் அள்ளுகிறது. ஆய் ஊய் என்று கத்தாத ஜே.டி.சக்ரவர்த்தியின் வில்லத்தனத்துக்கு பாஸ் மார்க் போடலாம்.

கிளைமாக்சில் வில்லனின் நெஞ்சில் ஏறி மிதித்து பன்ச் டயலாக் பேசாமல் வித்தியாசமாக முடித்திருப்பதும் நன்றாகவே உள்ளது.

சராச‌ரியான பாடல்கள், சராச‌ரிக்கும் கீழான பின்னணி இசை. புதிதாக எதுவும் சொல்ல முடியாத ஒளிப்பதிவு. சொல்ல வந்த கதைக்கு தொந்தரவு செய்யாமல் இருந்ததே தொழில்நுட்ப சைடின் ஒரே ஆறுதல்.

காமெடி தூக்கலான கமர்ஷியல் கச்சே‌ரி.
மேலும் அறிய

Tuesday, March 23, 2010

> விஜய் படம் + வித்யாசாகர் இசை

விஜய்யின் 51வது படத்தை யார் இயக்குகிறார்கள் என்பது இன்னமும் இழுபறியாகவே இருக்கிறது. 51வது படத்தை நாங்கதான் தயா‌ரிக்கிறோம், ஜெயம் ராஜா இயக்குகிறார் என ஓபனாகவே அறிவித்துள்ளது ஆஸ்கர் பிலிம்ஸ்.

அதேநேரம் தனது பாடிகார்ட் படத்தின் ‌‌ரீமேக்கில்தான் விஜய் நடிக்கிறார் என்பது போல அவசர அவசரமாக வேலைகளை முடுக்கிவிட்டுள்ளார் இயக்குனர் சித்திக்.

பட அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளிடும் முன்பே படத்தின் பாடல் கம்போஸிங்கை வித்யாசாகரை வைத்து முடித்துள்ளார் சித்திக். மொத்தம் ஆறு பாடல்கள் இதுவரை முடிவடைந்துள்ளன. அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பவர் யுகபாரதி.

இந்த சுறுசுறுப்பு காரணமாக விஜய்யின் 51வது படம் சித்திக்கிற்குதான் என்கிறார்கள் இன்டஸ்ட்‌ரியில். ஆஸ்கர் விட்டுக் கொடுக்குமா இல்லை வம்புக்கிழுக்குமா என்பது சுறா வெளிவந்த பிறகு தெ‌ரிந்துவிடும்.
மேலும் அறிய

> அஜித் மீண்டும் சிவாஜி பிலிம்ஸில் ?

அசல் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. நகரத்தில் படம் வசூலித்ததைவிட பி அண்டு சி சென்டரில் வசூல் மிகக் குறைவு என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். நஷ்டமடைந்தவர்கள் பிரபுவிடம் வைத்திருக்கும் டிமாண்ட், இன்னொரு படத்தை எங்களுக்கு தாருங்கள்.

அஜித்தின் கவனத்துக்கும் இந்த டிமாண்ட் சென்றிருக்கிறது. தன்னால் எந்த தயாரிப்பாளரும் பாதிக்கப்படக் கூடாது என்று நினைப்பவர் அஜித். அதனால் சிவாஜி பிலிம்ஸுக்கு மீண்டும் கால்ஷீட் கொடுக்க முன் வந்துள்ளாராம்.

படத்தை யார் இயக்குவது? படத்தின் கதை என்ன? என்பதெல்லாம் இன்னும் முடிவாகவில்லை. விரைவில் அறிவிப்பு வரலாம்
மேலும் அறிய

> புதிய பாட்டு ‘பையா’வில்

பொதுவாக படம் முடிந்த பிறகு பாடல் கம்போஸ் செய்தால் அந்தப் பாடல் படத்தில் இடம் பெறாது. ஆடியோ சி.டி.யில் மட்டுமே இருக்கும்.

ஆனால் ‘பையா’வில் சின்ன வித்தியாசம். யுவன் ஷங்கர் ராஜா பையாவுக்காக ஒரு பாடலை ரொம்ப லேட்டாக கம்போஸ் செய்திருக்கிறார். லேட்டாக என்றால் ஆடியோ சி.டி. எல்லாம் வெளியிட்ட பிறகு. இந்த புதிய பாடல் தற்போது விற்பனையில் இருக்கும் சி.டி.களில் இல்லை.

ஆனால், படத்தில் இந்தப் பாடல் பொருத்தமான இடத்தில் வரும்” என்று கூறுகிறார் யுவன். இந்த புதிய பாடலை இனி வெளிவரும் சி.டி.களில் இடம்பெறச் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்திருக்கும் ‘பையா’ ஏப்ரல் 2ஆம் தேதி திரைக்கு வருகிறது. படத்தை தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் உலகமெங்கும் விநியோகித்துள்ளது.
மேலும் அறிய

> அமைச்சராகவே திரையில் தோன்றுகிறாராம் அழகிரி

மத்திய அமைச்சதர் மு.க.அழகிரி ஒரு படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்கிறார். நம்ப முடியாத செய்திதான் என்றாலும் நம்பத் தகுந்த இடத்திலிருந்து வந்திருப்பதால் நம்பாமல் இருக்க முடியவில்லை.

அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தனது கிளவுட் நைன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ‘தூங்கா நகரம்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். மதுரை பின்னணியில் தயாராகும் இந்தப் படத்தின் தொடக்க விழா மதுரையில் நடந்தது. படப்பிடிப்பை தொடங்கி வைத்தவர் அழகிரி.

இந்தப் படத்தின் முக்கியமான ஒரு காட்சியில் மத்திய அமைச்சராகவே திரையில் தோன்றுகிறாராம் அழகிரி. முதலில் நடிக்க மறுத்தவர் மகனின் படம் என்பதால் ஒப்புக் கொண்டாராம்.

தூங்கா நகரத்துக்குப் பிறகு அஜித் நடிக்க கௌதம் இயக்கும் படத்தை கிளவுட் நைன் தயாரிக்கிறது.
மேலும் அறிய

Monday, March 22, 2010

> Gmail Drive - எக்ஸ்ட்ரா டிரைவ்

நம் கம்ப்யூட்டரில் மட்டுமின்றி வேறு ஒரு இடத்தில் நம் பைல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவே நாம் விரும்புவோம். சிடிக்களிலும், மேக்னடிக் டேப்களிலும் பைல்களைப் பதிந்து பாதுகாக்கலாம். ஆனால் இவற்றை நாம் செல்லும் இடத்திற்கு எடுத்துச் செல்வது கடினம். மேலும் இவையும் நிலையாகப் பல ஆண்டுகளுக்கு இவற்றைக் கொண்டிருக்குமா என்பதுவும் ஐயமே.

ஆன்லைனில் பல தளங்கள், மாதக்கட்டணம் பெற்றுக் கொண்டு நம் பைல்களை ஸ்டோர் செய்து வைக்கின்றன. இதற்கென பல நிலைகளில் கட்டணங்கள் அடங்கிய திட்டங்களை வழங்குகின்றன. ஆனால் இவற்றின் நம்பகத்தன்மையும் முழுமையானதாக இல்லை.

இந்த வகையில் இலவசமாக சேவை செய்திடும் சிலதளங்கள், பாதுகாப்பிற்கு அனுப்பப்படும் பைல்களின் அளவு, தன்மை, தளங்களுக்கான இணைப்பு ஆகியவை குறித்து பல வரையறைகளைக் கொண்டுள்ளன. எனவே இவற்றை எந்த அளவிற்கு நம்பிக்கையுடன் நம் பைல்களை அப்லோட் செய்து வைக்க முடியும் என்பது கேள்விக் குறியே. ஆனால் நம் அருகிலேயே ஓர் அருமையான ஆன்லைன் சேவிங் தளம் உள்ளது என்பதனை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. அதுதான் ஜிமெயில். உலகில் இயங்கும் இமெயில் சேவைகளில் தலையானதும் மிகச் சிறந்ததுவும் ஜிமெயில் என அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஜிமெயில் ஸ்பாம் மெயில்களைத் தடுப்பதில் சிறப்பாகச் செயல்படுகிறது. நம் செயல்பாடுகளுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. 7 ஜிபிக்கும் மேலாக நம் மெயில்கள் மற்றும் இணைப்புகளுக்கு இடம் தருகிறது. இந்த அளவும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுள்ளது. நமக்கு ஜிமெயில் தரும் இட வசதியில், மிகக் குறைந்த அளவே நாம் பயன்படுத்துகிறோம். ஜிமெயில் தளம் சென்றவுடன் இந்த செய்தி நமக்குக் காட்டப்படும். எனவே இந்த பயன்படுத்தாத ஜிமெயில் டிரைவ் இடத்தை ஏன் நாம் நம் பைல்களைப் பாதுகாத்து வைக்கும் இடமாகப் பயன்படுத்தக் கூடாது.

இந்த வகையில் ஜிமெயில் டிரைவ் என்ற ஒரு வசதியை கூகுள் தருகிறது. ஜிமெயில் டிரைவ் நம் கம்ப்யூட்டரில் உள்ள மை கம்ப்யூட்டரில் ஒரு சிஸ்டம் பார்ட்டிஷனை ஏற்படுத்துகிறது. இதனை நம் விண்டோஸ் எக்ஸ்புளோரருடன் இணைக்கிறது. ஆன்லைனில் கூகுள் தரும் டிரைவ் இடத்தை, நம் கம்ப்யூட்டரில் உள்ள டிரைவ் போலப் பயன்படுத்தும் வசதியினைத் தருகிறது. நம் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்ட ஒரு டிரைவ் போல இந்த ஆன்லைன் ஜிமெயில் டிரைவ் இயங்குகிறது. எனவே பைல்களை உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டிரைவிலிருந்து ட்ராக் அண்ட் ட்ராப் வசதி மூலம் இந்த ஆன்லைன் டிரைவில் இழுத்துவிட்டு காப்பி செய்திடலாம். இதிலும் சில வரையறைகள் உள்ளன. பைல் ஒன்று 25 எம்பி என்ற அளவிலே தான் இருக்க வேண்டும். இந்த வரையறையைச் சமாளிக்க ஜிமெயில் டிரைவ், பைலைப் பிரித்து அடுக்கி வைத்துக் கொள்கிறது.புதிய போல்டர்களை உருவாக்குவது, பைல்களை காப்பி, பேஸ்ட் மற்றும் டெலீட் செயல்பாடுகளுக்கு உள்ளாக்குவது போன்றவற்றை ஜிமெயில் டிரைவில் மேற்கொண்டாலும், இதற்கென தனியாக ஒரு டிரைவ் எழுத்து தரப்படுவதில்லை.
மேலும் பைல்களின் பெயர்கள் 40 கேரக்டர்களுக்கு மேல் இருக்கக் கூடாது. உங்களிடம் ஜிமெயில் அக்கவுண்ட் இருந்தால், இந்த ஜிமெயில் டிரைவினை எப்படிப் பெறுவது என்று பார்ப்போம்.

முதலில் உள்ள முகவரிக்கு செல்லவும். இந்த இணையப் பக்கத்தில் கீழாக ஸ்குரோல் செய்து செல்லவும். இதில் இரண்டு டவுண்லோட் லிங்க் தரப்பட்டுள்ளது. இதில் ஏதாவது ஒன்றில் கிளிக் செய்து அதனை எளிதாக இயக்கும் வகையில் டெஸ்க் டாப்பில் வைத்துக் கொள்ளவும். அடுத்து gmailfs115.zip இந்த பைலை அன்ஸிப் செய்திடவும். அனைத்து பைல்களையும் எக்ஸ்ட்ராக்ட் செய்து பெற்ற பின்னர் gmailfs115 என்ற போல்டருக்குச் செலல்வும். பின் இதில் உள்ள செட் அப் பைல் மீது டபுள் கிளிக் செய்திடவும். இப்போது பைல் திறக்கும் செயலுக்கான எச்சரிகை வந்தால், அதனைக் கண்டு கொள்ளாமல் கீதண கட்டளை கொடுக்கவும்.

இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் முழுமையாக இன்ஸ்டால் ஆகும். உங்கள் கம்ப்யூட்டரில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். பின் உங்கள் கம்ப்யூட்டரில் மை கம்ப்யூட்டரைத் திறந்து பார்த்தால், அங்கே Other என்ற வகையில் புதியதாக டிரைவ் ஒன்று இருப்பதனைப் பார்க்கலாம். பின் GMail Drive என்பதில் டபுள் கிளிக் செய்திடவும். இங்கே லாக் இன் விண்டோ திறக்கப்படும். இங்கு கிடைக்கும் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களுக்கான பீல்டுகளில் உங்கள் ஜிமெயில் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினைத் தரவும்.இதில் உள்ள ஆட்டோ லாக் இன் டிக் செய்து வைத்தால், அடுத்த முறை இன்டர்நெட் இணைப்பு கிடைத்தவுடன், நீங்கள் தானாகவே லாக் இன் செய்துவிடுவீர்கள்.

லாக் இன் தகவல்களைத் தந்த பின் ஓகே கிளிக் செய்திடும் முன் சில ஆப்ஷன்களை நீங்கள் படித்தறியலாம். More பட்டனை அழுத்தினால் இவை கிடைக்கும். இதில் 'Preserve Filenames' என்ற ஆப்ஷனைக் கட்டாயம் தேர்ந்தெடுக்கவும்.

அடுத்து மிக முக்கியமானதான Use Secure HTTP என்ற ஆப்ஷனைக் கட்டாயம் தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் கம்ப்யூட்டருக்கும் ஜிமெயிலுக்கும் உள்ள இணைப்பிற்குப் பாதுகாப்பளிக்கும்.

இறுதியாக Use Draft Folder என்ற ஆப்ஷனையும் தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் பைல்களை ட்ராப்ட் போல்டருக்கு அனுப்பும். உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸுக்குத் தொல்லை கொடுக்காது.

முக்கியமான அனைத்து செட்டிங்ஸ் மேற்கொண்ட பின், ஜிமெயிலுக்கு இணைப்பை ஏற்படுத்த ஓகே கிளிக் செய்திடவும். அடுத்து ஜிமெயில் டிரைவ் காட்டப்படும். இதில் பைல்களை இழுத்துச் சென்று விடலாம். பைல்கள் அனைத்தும் ஜிமெயில் ட்ராப்ட் போல்டரில் விழும். பைல் மாற்ற வேகம் உங்கள் இன்டர்நெட் இணைப்பைப் பொறுத்து இருக்கும்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்
எழுதியவர் : KarthiK
மேலும் அறிய

Sunday, March 21, 2010

> சிங்கம் மீண்டும் பதுங்கும் ?

சிம்புதேவனின் மிகவும் எதிர்பார்ப்புக்கு‌ரிய படமான இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் மீண்டும் தள்ளிப் போகிறது. ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த மாற்றம் என்கிறார் சிம்புதேவன்.

28 வருடங்களுக்குப் பிறகு தமிழில் தயாராகியிருக்கும் கௌபாய் படம் என்ற அறிமுகத்துடன் அட்டகாசமாக பொங்கல் ரேசுக்கு தயாரானது இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்.

ஆனால் பொங்கலுக்கு படம் வெளியாகவில்லை. சில பிரச்சனைகளால் படத்தின் ‌ரிலீஸை மார்ச் மாதத்துக்கு தள்ளிவைத்தனர். மார்ச் 26 படம் திரைக்கு வருவதாக விளம்பரங்கள் செய்த நிலையில் மீண்டும் ‌ரிலீஸ் தேதியில் மாற்றம்.

ரசிகர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம் என தற்போது அறிவித்துள்ளார் சிம்புதேவன். இந்த மாதம் அதிக படங்கள் திரைக்கு வருவதால்தான் இந்த மாற்றம் எனவும் கூறப்படுகிறது.
மேலும் அறிய

> சுறா பாட்டு மார்ச் 26 முதல்

ச‌ரியாகப் படிக்கவும், சுறா புட்டு அல்ல சுறா பாட்டு. விஜய்யின் 50வது படம் என்ற கெத்துடன் காஸ்ட்லியாகவே தயாராகியிருக்கிறது சுறா. சங்கிலி முருகன் தயா‌ரித்திருக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது.

வேட்டைக்காரன் படம் முடிந்தும் வெளியிடாமல் இழுத்தடித்த சன் பிக்சர்ஸ், சுறா விஷயத்தில் காட்டுவது ஜெட் வேகம். தீபாவளிக்குப் பார்த்தால் போதும் என்றுதான் சொன்னார்கள். ஆனால் சன் பிக்சர்ஸ் முடுக்கிவிட்ட வேகத்தில் அடுத்த மாதமே படம் திரைக்கு வருகிறது.

முன்னோட்டமாக படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை விம‌ரிசையாகக் கொண்டாட இருக்கிறார்கள். இதற்காக தேர்வு செய்திருக்கும் தேதி மார்ச் 26. அன்று சுறாவின் பாடல்களை வெளியிடுகிறார்கள்.

மணிசர்மா சுறாவுக்கு இசையமைத்திருக்கிறார். இவரும் விஜய்யும் இணைந்து பணியாற்றிய அனைத்துப் படங்களின் பாடல்களும் சூப்பர்ஹிட் என்பதால் சுறா பாடல்களும் நிச்சயம் ஹிட்டாகும் என்பதில் விஜய்யின் எதி‌ரிகளுக்கே நல்ல நம்பிக்கை இருக்கிறது.

விஜய் ஜோடியாக முதல் முறையாக தமன்னா நடித்துள்ளார்.
மேலும் அறிய

> சூர்யாவின் மனைவியாகும் ப்‌ரியாமணி

சூர்யாவின் மனைவியாக நடிக்கிறார் ப்‌ரியாமணி. இவர்கள் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது.

ராம்கோபால் வர்மா ஆந்திராவின் அரசியல் ரவுடி ப‌ரி‌ட்டால ரவியின் கதையை படமாக்குகிறார். ப‌‌ரி‌ட்டால ரவியாக விவேக் ஓபராயும், அவரது கூட்டாளி சூ‌ரியாக சூர்யாவும் நடிக்கின்றனர். ரக்த ச‌ரித்ரா என்று பெய‌ரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

இந்தப் படத்தில் சூ‌ரியின் மனைவி பானுமதி வேடத்தில் ப்‌ரியாமணி நடிக்கிறார். அதாவது சூர்யாவின் மனைவியாக ரக்த ச‌ரித்ராவில் நடிக்கிறார் ப்‌ரியாமணி. இவர்கள் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சூர்யா நடிக்கும் முதல் தெலுங்கு மற்றும் இந்திப் படம் இது என்பதும் முக்கியமானது.
மேலும் அறிய

Saturday, March 20, 2010

> ஆறு படங்கள் - நேற்று

வெள்ளிக்கிழமையான நேற்று மொத்தம் ஆறு படங்கள் திரைக்கு வந்துள்ளது. நேரடித் திரைப்படங்கள், இந்தி மற்றும் ஆங்கில மொழிமாற்றுப் படங்கள் என அனைத்தும் இதில் அடக்கம்.

‌‌ஜீவா நடிப்பில் திரைவண்ணன் இயக்கியிருக்கும் கச்சே‌ரி ஆரம்பம் நேற்று வெளியாகியுள்ளது. ‌ஜீவாவின் தந்தை ஆர்.பி.சௌத்‌ரி இந்தப் படத்தை தயா‌ரித்துள்ளார். பூனம் ப‌ஜ்வா ஹீரோயின். ‌‌ஜீவாவுடன் முதல் முறையாக இணைந்து காமெடி செய்திருக்கிறார் வடிவேலு. ஆறு படங்களில் அதிக எதிர்பார்ப்பு இந்தப் படத்திற்கே என்பது குறிப்பிடத்தக்கது.

செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் தயா‌ரித்திருக்கும் புதுமுகங்களின் காதல் படமான முன்தினம் பார்த்தேனே இன்று திரைக்கு வந்துள்ளது. அறிமுகமில்லாத நடிகர்கள், இயக்குனர் என்பதால் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பில்லை. இத்துடன் செல்வேந்திரன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் ஒரு காதலன் ஒரு காதலியும் இன்று வெளியாகியுள்ளது.

ஹாலிவுட் படமான ‌‌ரீ‌ஜியன் கருடயுத்தம் என்ற பெய‌ரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிராஃபிக்ஸ் சண்டைகள் நிறைந்த படம் என்பதால் சிறுவர்களை இப்படம் கவர வாய்ப்புள்ளது.

இதுதவிர மகேஷ்பட்டின் அட்வென்சர் த்‌ரில்லர் ஷாபித் சாபம் என்ற பெய‌ரிலும், நேகா துபியா நடித்த இந்திப் படம் ஜூலியும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இன்று வெளியாகியுள்ளன.

இவற்றில் எந்தப் படம் ரசிகர்களின் ஆதரவைப் பெறப் போகிறது என்பது இரண்டு தினங்களில் தெ‌ரிந்துவிடும்.
மேலும் அறிய

> சுறா ஏப்ரல் 14 ?

விஜய்யின் சுறா படத்தை திட்டமிட்டதற்கு முன்பாகவே வெளியிட தீர்மானித்திருக்கிறது சன் பிக்சர்ஸ். அனேகமாக படம் ஏப்ரலில் திரைக்கு வரலாம் என்கிறார்கள்.

வேட்டைக்காரன் படத்துக்குப் பிறகு விஜய் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது சுறா. விஜய்யின் 50வது படம் என்பதால் எக்ஸ்ட்ரா கவனம் எடுத்து படத்தை செதுக்கியிருக்கிறார்கள். படத்தை இயக்கியிருப்பவர் ராஜகுமார், அழகர்மலை படத்தை இயக்கியவர்.

வடிவேலு, தமன்னா என்று வெயிட்டான நட்சத்திரங்களுடன் தயாராகியிருக்கும் சுறாவின் சில பகுதிகளை மலையாளத்தில் வெளியான சோட்டா மும்பை படத்தை தழுவி எடுத்திருக்கிறார்கள். ஆனால் படத்தின் மெயின் கதை வேறு. மீனவர்க‌ள், கடல் என்று விஜய் இதுவரை புழங்காத ஏ‌ரியா.

தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம் அடுத்த மாதமே திரைக்கு வரவிருக்கிறது என்கிறார்கள் உற்சாகமாக. படத்தை வாங்கியிருக்கும் சன் பிக்சர்ஸ் காட்டும் ஆர்வமும், அவசரமும்தான் இதற்கு காரணம் என்கிறார்கள். ஏப்ரல் 14 படத்தை திரையில் பார்க்கலாம் என்கிறது விஜய் தரப்பு.

ரசிகர்களுக்கு தீபாவளி ஏப்ரலிலேயே வருவது நல்லதுதானே.
மேலும் அறிய

> விஜய்யுடன் நடிப்பது மகிழ்ச்சி – தமன்னா பேட்டி

தமன்னா... இன்றைய தேதியில் தமிழின் நெ.ஒன் நடிகை. இதைச் சொன்னால் அப்படியா என்று அப்பாவியாக முகம் மலர்கிறது. தனுஷ், சூர்யா, பரத், கார்த்தி, ஜெயம் ரவி இப்போது விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவரைப் பற்றிய லேட்டஸ்ட் வதந்தி, அதிகமாக சம்பளம் கேட்கிறார். புகழ்ச்சிக்கு மட்டுமல்ல இந்த புறணிக்கும் பொறுமையாகவே பதில் வருகிறது தமன்னாவிடமிருந்து.

கே.வி.ஆனந்தின் கோ படத்தில் முதலில் ஒப்பந்தமான நீங்கள் அந்தப் படத்திலிருந்து விலகியதற்கு அதிக சம்பளம் கேட்டதே காரணம் என்கிறார்களே, இது உண்மையா?

படத்தின் கதை, இயக்குனர், தயா‌ரிப்பு நிறுவனம், உடன் நடிக்கும் நடிகர் இவையெல்லாவற்றையும் வைத்துதான் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்கிறேன். சம்பளத்தைப் பொறுத்தவரை எனக்கு தகுதியான சம்பளத்தையே கேட்கிறேன், தயா‌ரிப்பாளர்களும் தருகிறார்கள். ஒரு படத்துக்கு கொடுக்கும் கால்ஷீட்டைப் பொறுத்தே சம்பளம் வாங்குகிறேன். அதனால் அதிக சம்பளம் கேட்கிறேன் என்ற பேச்சுக்கே இடமில்லை.

சக நடிகைகளுடன் உங்களுக்கு தகராறு என்று வரும் செய்திகள்...?

பையா படத்தில் நயன்தாரா நடிப்பதாக இருந்தது. ஏதோ சில காரணங்களால் அவர் அதில் நடிக்கவில்லை, நான் நடித்தேன். நான் நடிக்காவிட்டாலும் வேறு யாராவது நடித்திருப்பார்கள். இதை வைத்து எனக்கும் நயன்தாராவுக்கும் லடாய் என்று எழுதினார்கள். மீடியாக்கள் அப்படி எழுதியதே தவிர எனக்கும் அவருக்கும் நடுவில் எந்த‌ச் சண்டையும் இல்லை.இப்போது நடித்துவரும் படங்கள்?

ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி என்ற படத்தில் நடிக்கிறேன். படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான கிக் படத்தின் ‌ரீமேக்தான் இது. ஜெயம் ராஜா இயக்கியிருக்கிறார். ஒரு பாடல் காட்சியை புதுமையாக எடுத்திருக்கிறார்கள். ஷோபி மாஸ்ட‌ரின் கோ‌ரியோகிராஃபியில் நானே என்னுடைய நடனத்தை புதிதாக உணர்ந்தேன்.

இதுதவிர விஜய்யுடன் சுறாவில் நடித்து வருகிறேன். விஜய் எனக்குப் பிடித்த நடிகர். சின்சியர் வொர்க்கர். அவருடைய காம்பினேஷனில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

சுறாவில் உங்களுக்கு என்ன மாதி‌ரியான வேடம்?

சிட்டி கேர்ள். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். படம் பார்த்து தெ‌‌ரிந்து கொள்ளுங்கள்.

கல்லூரி வரை நீங்கள் கவனிக்கப்படாத நடிகை. இப்போது தமிழின் முதல்வ‌ரிசை நடிகைகளில் ஒருவர். இந்த மாற்றத்தை எப்படி உணர்கிறீர்கள்?

உண்மையிலேயே மகிழ்ச்சியான விஷயம். இப்படியொரு இடத்துக்கு வருவேன் என்று நான் நினைக்கவில்லை. அதேநேரம் இந்த இடம்தான் என்னுடைய லட்சியமாக இருந்தது. என் லட்சித்துக்கு படிக்காதவனும், அயனும் ரொம்பவே உதவியது என்றுதான் சொல்ல வேண்டும்.

பையா படத்திற்காக கார் ஓட்ட கற்றுக் கொண்டீர்களாமே?

எனக்கு கார் ஓட்ட தெ‌ரியும். பையாவுக்காக பயிற்சி எடுத்துக் கொண்டேன். என்னுடைய கே‌ரிய‌ரில் பையா முக்கியமான படமாக இருக்கும்.

நாலு படம் நடித்ததும் இந்திப் பக்கம் ஒதுங்குவதுதான் இப்போது பேஷன். நீங்கள் எப்படி?

தமிழில் எனக்கு என்று ஒரு இடம் இப்போது இருக்கிறது. முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வருகிறேன். அதனால் இந்தியில் நடிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

ஒருவேளை வாய்ப்பு வந்தால்...?

கதை நன்றாக இருந்தால், யோசிக்கவே மாட்டேன், கண்டிப்பாக நடிப்பேன்.
மேலும் அறிய

Friday, March 19, 2010

> சர்ச்சையில் மாட்டிய நமிதா

அழகான பொண்ணுதான் படத்தின் இயக்குனர் திரு, நமிதா மீது அடுக்கடுக்காக குற்றம் சாற்றியிருக்கிறார். தனது படத்துக்கு நமிதா ஒத்துழைப்பு தரவில்லை, பல காட்சிகளில் ஈடுபாடே இல்லாமல் நடித்தார், ஹீரோவுடன் நெருக்கமாக நடிக்க வேண்டிய காட்சிகளை வேண்டுமென்றே தவிர்த்தார்... திருவின் குற்றச்சாற்று நீள்கிறது.

இந்த குற்றச்சாற்றுகள் அனைத்தையும் நமிதா மறுத்துள்ளார். தான் கொடுத்த கால்ஷீட்களை இயக்குனர் திரு வீணடித்துவிட்டார், அவருக்கு படமே எடுக்க‌த் தெ‌ரியவில்லை என்பது நமிதாவின் பதில்.

இதில் யார் சொல்வது உண்மை?

திருவுக்கு படம் இயக்க‌த் தெ‌ரியவில்லை என்று நமிதா கூறியிருப்பது உண்மை என்பதை படம் பார்க்கும் யாரும் ஒப்புக் கொள்வார்கள்.

அழகான பொண்ணுதான் படத்தை முதலில் இயக்க ஒப்பந்தமானவர் பெ‌ரிசு படத்தை இயக்கிய காமரா‌ஜ். இவருக்காகதான் அந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தார் நமிதா. படப்பிடிப்பு தொடங்கிய போது காமராஜை மாற்றிவிட்டு திருவை ஒப்பந்தம் செய்தனர். திருவின் இயக்கத்தில் நடிக்க முடியாது என்றார் நமிதா. பிறகு தயா‌ரிப்பாளர்கள் சங்கம் பஞ்சாயத்து செய்து நமிதாவை நடிக்க வைத்தனர்.

ஹீரோவாக பெ‌ரிய நடிகர் ஒருவரை ஒப்பந்தம் செய்வதாகச் சொன்னதும் திருவின் வருகையால் மாறியது. திரு தனது அக்கா மகனை ஹீரோவாக்கினார். இந்த‌க் குழப்படிகளால் விருப்பமே இல்லாமல் படத்தில் நடித்தார் நமிதா.

படத்தின் ஒட்டுமொத்த குழப்பத்துக்கும் காரணமான திரு சொந்தமாக ஒரு கதையை யோசித்திருந்தாலும் பரவாயில்லை. இத்தாலி படமான மெலினாவை அப்படியே காப்பியடித்திருக்கிறார். உலகின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றான மெலினாவை திரு அளவுக்கு வேறு யாரும் இந்தளவு கேவலப்படுத்தியிருக்க முடியாது.

திருட்டு வி.சி.டி.க்கு எதிராகப் பேசுகிறவர்கள் திருவுக்கு என்ன தண்டனை தரப் போகிறார்கள்?
மேலும் அறிய

> செல்வராகவன் படம் - ‌‌ரீமா சென் மறுப்பு?

செல்வராகவன் தெலுங்கு நடிகர் ராணாவை வைத்து தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் படம் இயக்குவதாக குறிப்பிட்டிருந்தோம். இந்தப் படத்தில் நடிக்க ‌ரீமா சென் மறுத்ததாக செய்திகள் தெ‌ரிவிக்கின்றன.

ஆயிரத்தில் ஒருவன் படத்துக்காக மற்ற அனைவரையும் விட செல்வராகவனை அதிகம் புகழ்ந்தவர் ‌ரீமா சென். செல்வாவின் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆவலாக இருப்பதாகவும் அவர் தெ‌ரிவித்திருந்தார். இந்நிலையில் செல்வாவின் இருமொழிப் படத்தில் அவர் நடிக்க மறுத்ததாக நம்பத்குந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன. ஏன் இந்த மறுப்பு?

இந்தப் படத்தில் ராணா ஜோடியாக ஆண்ட்‌ரியா நடிக்கிறார். அவர்தான் ஹீரோயின். படத்தின் ஃப்ளேவரை கூட்ட ‌‌ரீமா சென்னின் ஆட்டத்தையும், சில காட்சிகளையும் படத்தில் சேர்க்க விரும்பியிருக்கிறார் செல்வராகவன். படத்தின் முக்கிய பாத்திரமல்ல, தொட்டுக்க ஊறுகாய் இது என்பது தெ‌ரிந்ததால் நடிக்க முடியாது என மறுத்திருக்கிறார் ‌ரீமா சென்.

ஒளிப்பதிவு ராம்‌ஜி, இசை ‌ஜி.வி.பிரகாஷ்குமார் என அதே ஆயிரத்தில் ஒருவன் டீமுடன் மீண்டும் கைகோர்த்துள்ளார் செல்வராகவன்.
மேலும் அறிய

> ‌ரீமேக் வாய்ப்புகள் வரும் ஸருதி ஹாசன்

கமல் நடித்த சில படங்கள் தமிழிலும் இந்தியிலும் ‌‌ரீமேக் ஆகின்றன. இந்தப் படங்களில் நடிக்க ஸ்ருதிக்கு அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளது.

பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோ‌ஜ் படம் இயக்குவதற்கான ஆயத்தங்களில் இருக்கிறார். முதல் படமாக அப்பாவின் சிவப்பு ரோஜாக்களை ‌‌ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார்.

கமல் வேடத்தில் ஆர்யாவை நடிக்க வைக்கலாம் என்று அவரை கொஞ்ச நாள் சுற்றி வந்தார் மனோ‌ஜ். பாலா படத்தில் ஆர்யா பிஸியாக இப்போது அவர் பிடித்திருப்பது பி.வாசு மகன் ஷக்தி. ஷக்திக்கு ஜோடியாக நடிக்க கமல் மகள் ஸருதி ஹாசனிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள்.

மனோ‌ஜ் நாயகனாக அறிமுகமான தா‌ஜ்மஹாலில் மணிரத்னம், ரஹ்மான் உள்ளிட்ட ஜாம்பவான்கள் பணிபு‌ரிந்தனர். அதேபோல் மனோ‌ஜ் இயக்கும் முதல் படத்தில் இயக்குனர்கள் அமீர், சேரன் இருவரும் பணியாற்றுகிறார்கள். இதில் ஒருவர் திரைக்கதை அமைக்க இன்னொருவர் வசனம் எழுதுகிறார்.

கமல் இந்தியில் நடித்த ஏக் துஜே கேலியே ‌‌ரீமேக் செய்யப்படுகிறது. கமலுடன் நடித்த ரதியின் மகன் தனு‌ஜ் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக நடிக்க ஸ்ருதி ஹாசனிடம் கேட்டிருக்கிறார்கள்.

மேலே உள்ள எந்தப் படத்துக்கு‌ம் இதுவரை ஸ்ருதி கால்ஷீட் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அறிய

Thursday, March 18, 2010

> ஒரு பாடலுக்கு ஆடும் சுந்தரம் மாஸ்டர், பிரபுதேவா, ராஜு சுந்தரம்

தங்கவேல் இயக்கி நடிக்கும் ப.ரா.பழனிச்சாமி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார் பிரபுதேவா.

பிரபுதேவா ஒரு பாடலுக்கு ஆடுவது புதிதல்ல. ஜென்டில்மேன் படத்தில் அவர் ஆடிய சிக்குபுக்கு ரயிலேதான் அவரது திரைவாழ்க்கையின் முதல் பிரகாசமாக அமைந்தது.

நடிகர், இயக்குனர் என்று படிப்படியாக உயர்ந்த பிறகு ஒரு பாடலுக்கு அவர் ஆடியதில்லை. ஒரு பாடலுக்கு ஆடும்படி கேட்கும் தை‌ரியம் யாருக்கும் இல்லை என்றும் சொல்லலாம். இந்நிலையில் தங்கவேல் என்பவ‌ரின் படத்தில் எப்படி ஒரு பாடலுக்கு ஆட ஒப்புக் கொண்டார் பிரபுதேவா?

இந்தப் படத்தில் பிரபுதேவாவின் தந்தை சுந்தரம் மாஸ்டர் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார். படத்தின் கதையே அவரைச் சுற்றிதான் பயணிக்கிறதாம். தந்தை நடிக்கும் படம் என்பதால் ஒரு பாடலுக்கு ஆடும் சலுகையை வழங்கியிருக்கிறார் பிரபுதேவா. அவருடன் இணைந்து ஆடுவது அவரது அண்ணன் ராஜு சுந்தரம்.

நேற்று அது உனக்கு இன்று அது எனக்கு நாளை அது யாருக்குன்னு தெ‌ரியுமா... என்று தத்துவமாகத் தொடங்கும் அந்தப் பாடலுக்கு நடனம் அமைப்பவர் மாஸ்டர் ஸ்ரீதர்.

சுந்தரம் மாஸ்டர், பிரபுதேவா, ராஜு சுந்தரம் என மூன்று மாஸ்டர்கள் இரு‌ந்தும் நடனம் அமைக்கும் பொறுப்பை ஸ்ரீத‌ரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். ரொம்பப் பெ‌ரிய மனசுதான்.
மேலும் அறிய

> கோ - குலு மணாலியில்

கோ படம் ஆரம்பித்ததிலிருந்து அடுத்தடுத்துப் பிரச்சனைகள். ஹீரோயினாக ஒப்பந்தமான தமன்னா முதலில் படத்திலிருந்து விலகினார். அடுத்து ஹீரோ சிம்பு. ‌‌ஜீவா, கார்த்திகா காம்பினேஷனில் படத்தை எடுக்கலாம் என்றால் அதற்கும் பிரச்சனை. ‌ஜீவாவுக்கு சீனா செல்ல விசா கிடைக்கவில்லை.

இத்தனை தடைகளையும் தாண்டி சந்தோஷமாகவே இருக்கிறார் படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த். சமீபத்தில் எடுத்து வந்த பாடல் காட்சிதான் சந்தோஷத்துக்கு காரணம்.

கோ-வுக்கு ஹாரிஸ் ஜெயரா‌ஜ் இசையமைக்கிறார். இவரது இசையில் உருவான மெலடி ஒன்றை குலு மணாலியில் படமாக்கினார் கே.வி.ஆனந்த். ‌‌ஜீவா, கார்த்திகா நடித்த இந்தப் பாடல் காட்சியின் படப்பிடிப்பு முடிந்து கோ டீம் சென்னை திரும்பிவிட்டது.

குலு மணாலியில் எடுத்தப் பாடலின் ‌ரிசல்ட் படத்தின் முந்தையை ஹீட்டை தணித்து மொத்த யூனிட்டையும் ‌ஜில்லாக்கியிருக்கிறது.
மேலும் அறிய

> கச்சே‌ரி ஆரம்பம் - மு‌ன்னோ‌ட்ட‌ம்

ஆர்.பி.சௌத்‌ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயா‌ரித்திருக்கும் படம், கச்சே‌ரி ஆரம்பம். சௌத்‌ரியின் இளைய மகன் ‌ஜீவா ஹீரோ.

தெனாவட்டு பாணியில் தயாராகியிருக்கும் கமர்ஷியல் பொழுதுபோக்கு இந்தப் படம். ஹீரோயினாக பூனம் ப‌ஜ்வா நடித்துள்ளார். “தெனாவட்டில் ‌ஜீவா, பூனம் ப‌ஜ்வா காம்பினேஷன் சிறப்பாக இருந்தது. அதனால் இந்தப் படத்திலும் பூனம் ப‌ஜ்வாவையே ஹீரோயினாக்கினேன்” என்கிறார் படத்தை இயக்கியிருக்கும் திரைவண்ணன்.

திரைவண்ணனுக்கு இது முதல் படம். பூபதி பாண்டியன், செல்வபாரதி, சீமான் ஆகியோ‌ரிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக பணிபு‌ரிந்தவர். எல்லா தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் இருக்கிறது என்கிறார் உற்சாகமாக.

டி.இமான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு எஸ்.வைத்தி. நா.முத்துக்குமார், விவேகா பாடல்கள் எழுதியுள்ளனர். நவீன கேமரா, காஸ்ட்லி செட்கள் என பாடல் காட்சிகளை கலர்ஃபுல்லாக எடுத்துள்ளனர். படத்தின் முக்கியமான ஹைலைட், ஆ‌க்சன் காட்சிகள். ‌ரிஸ்க் எடுத்து சண்டை போட்டிருக்கிறாராம் ‌ஜீவா.

வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் இந்தப் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
மேலும் அறிய

Wednesday, March 17, 2010

> வடிவேலு வா‌ரிசு நடிக்க வருகிறார்.

வடிவேலு, சிங்கமுத்து ஸ்டார் வா‌ரில், சிங்கமுத்து வைத்த குற்ற‌ச்சாற்றுகளில் ஒன்று, என்னுடைய மகன் (வாசன் கார்த்திக்) ஹீரோவாயிட்டான், அந்த‌ப் பொறாமையில் என்னை வடிவேலு பழிவாங்குகிறார்.

இதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ. சிங்கமுத்துவின் சீண்டலை சீ‌ரியஸாக எடுத்துவிட்டார் போலிருக்கிறது வடிவேலு. அவரது மகனும் நடிக்க வருகிறார்.

தனது வா‌ரிசை திரையில் இறக்க வேண்டும் என்பது வடிவேலின் நீண்ட நாள் கனா. அதற்கான நாள் பார்த்து வந்தவர் சைலண்டாக ரேனிகுண்டா இயக்குனர் பன்னீர் செல்வத்தை சந்தித்திருக்கிறார்.

இரண்டாவது ஹீரோ என்றாலும் பரவாயில்லை, என் மகனை உங்கப் படத்தில் நடிக்க வைங்க என்பதுதான் வடிவேலுவின் கோ‌ரிக்கை. தயா‌ரிப்பாளர், பைனான்ஸ் என மற்ற விஷயங்களுக்கு நான் கியாரண்டி என உறு‌‌தியும் அளித்திருக்கிறார்.

தற்போது தெலுங்குப் படம் இயக்குவதில் பிஸியாக இருக்கும் பன்னீர் செல்வம் அதையடுத்து தமிழ்ப் படம் இயக்குகிறார். வடிவேலுவின் மகனுக்கும் இதில் ஒரு வேஷத்தை எதிர்பார்க்கலாமா?
மேலும் அறிய

> கவுண்டமணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பிரபல நகைச‌ச்சுவை நடிகர் கவுண்டமணிக்கு இன்று திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில வருடங்களாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கவுண்டமனி அதற்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இ‌ந்‌நிலை‌யி‌ல், இன்று காலை அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அப்பலோ மருத்துவமனையில் கவுண்டமணி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அறிய

> சிம்புவின் தேசபக்தி

அதிகம் பேசுவதில்லை, விரல் வித்தை காட்டுவதில்லை, தோழிகளும் கிடையாது... சிம்பு மாறிவிட்டார் ச‌ரிதான். அதற்காக இப்படியா? தேகத்தை பாடிய இவர் முதல் முறையாக தேசத்தைப் பற்றி பாடப்போகிறாராம்.

வாலிபன் படத்தை சிம்பு இயக்கி நடிப்பது தெ‌ரிந்த விஷயம்தான். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய ஒத்துக் கொண்டிருப்பது வாலிபனின் முதல் ஆச்ச‌ரியம். முதல் எனும் போது இரண்டாவது ஆச்ச‌ரியமும் இருக்க வேண்டுமே.

இந்தப் படத்தில் ரஹ்மானின் வந்தே மாதரம் போல் தேசபக்தி பாடலொன்று இடம் பெறுகிறதாம். பெ‌ரிய... பெ‌ரிய தேசிய கொடிகளை இந்தப் பாடல் காட்சியில் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். இசை யுவன் ஷங்கர் ராஜா.

அம்மாடி ஆத்தாடி என்று ஆடிக் கொண்டிருந்தவ‌ரின் படத்தில் தேசபக்தி பாடல். பயமாக இருக்கிறது... ஒருவேளை சாமியாராகிவிடுவாரோ?
மேலும் அறிய

Tuesday, March 16, 2010

> ஆர்யாவுக்கு பாடு‌ம் ‌வி‌க்ர‌ம்

நடிகர்கள் பாடுவது சாதாரணமாகிவிட்டது. கமலில் தொடங்கிய இந்தப் பழக்கம் விஜய்யிடம் வியாபித்து சிம்புவிடம் வளர்ந்து பரத்திடம் பரவி விக்ரமிடம் முடிந்திருக்கிறது. கந்தசாமி படத்தில் அனைத்துப் பாடல்களையும் பாடியிருந்தார் விக்ரம்.

மேலே உள்ள நடிகர்களில் கமலும், சிம்புவும் மற்றவர்களுக்காகவும் பாடியிருக்கிறார்கள். சிம்பு தொழி‌ல்முறை பாடகர் போலவே பிற நடிகர்களின் படங்களிலும் பாட ஆர்வம் காட்டுகிறார். இந்த ஆர்வம் விக்ரமிடமும் இருக்கிறது.

விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் மதராசப்பட்டணம் படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் விக்ரம். ‌ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் பாடலில் பல்வேறு குரல்களில் விக்ரம் பாடியிருக்கிறாராம்.

மதராசப்பட்டணம் சுதந்திரத்துக்கு முந்தையை சென்னையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அறிய

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.