Tuesday, January 26, 2010

> சினிமாவுக்குத் தடை

இனிமேல் பாகிஸ்தானில் இந்திய சினிமாவை வெளியிட விடமாட்டோம், அதற்கு தடை விதிக்க வேண்டும் என எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாகிஸ்தான் பாராளுமன்றமும், இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. சினிமா மட்டுமல்லாமல் இந்திய சேனல்களையும் ஒளிபரப்ப தடை விதித்துள்ளது.

ஐ.பி.எல். போட்டிக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் எவரையும் எந்த நிறுவனமும் ஏலம் எடுக்காத காரணத்தால்தான் இப்படியொரு தடை வந்திருக்கிறது.

இந்தி படம் ஒவ்வொன்றும் பாகிஸ்தானில் நல்ல லாபம் சம்பாதித்துக் கொடுத்துள்ளது. அப்படிப்பட்ட நிலையில் பாகிஸ்தான் மக்களின் பணம் மட்டும் இந்தியர்களுக்கு வேண்டும், எங்கள் வீரர்கள் வேண்டாமா... என்கிறார்கள்.

இதனால் கலங்கிப் போன இந்திப் படத் தயாரிப்பாளர்கள் சிலர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஒன்றிரண்டு பேரையாவது ஏலம் எடுக்கலாமா என ஆலோசித்து வருகிறார்கள்.
மேலும் அறிய

> மூன்று படங்கள் கைவசம்

கந்தசாமி வெற்றிக்குப் பிறகு விக்ரமும், ஆயிரத்தில் ஒருவன் வெற்றிக்குப் பிறகு செல்வராகவனும் இணைந்து ஒரு படத்தை உருவாக்கி வருகின்றனர். பெயர் இன்னும் தேர்வு செய்யாத நிலையிலும் படப்பிடிப்புக்காக லடாக் சென்று ஒரு பாடலை முடித்துவிட்டு வந்திருக்கிறார்கள்.

இதற்கிடையே யாவரும் நலம் படத்தை இயக்கிய விக்ரம் கே.குமார் இயக்கத்தில் 24 என்ற படத்திலும் விக்ரம் நடித்து வருகிறார். ஒரே படத்துக்காக ஆண்டுக் கணக்கில் தேதி கொடுக்காமல் பல படங்களில் நடிப்பது மூலம் தொடர்ந்து படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும். ரசிகர்கள் மத்தியில் இருக்கிறேன் என காட்டிக் கொள்வதாகவும் இருக்கும் என்கிறார் விக்ரம்.

அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருப்பவர், முக்கியமான காட்சி ஒன்றிற்காக பொள்ளாச்சியில் ராவ‌ண் படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளவிருக்கிறார் விக்ரம்.
மேலும் அறிய

> சூடேற்றும் கோவா

கோவா படத்துக்கு ஏ முத்திரை குத்தி சான்றிதழ் வழங்கியதால் கலக்கத்தில் இருக்கின்றனர் கோவா டீம். ஆனாலும் இது அனைவராலும் பார்க்கும் படமாக இருக்கும் என்கிறார் இப்பட இயக்குனர் வெங்கட்பிரபு.

கிராமத்தில் வசிக்கும் நான்கு இளைஞர்கள் வெளிநாட்டுப் பெண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என லட்சியத்துடன் கோவா செல்கிறார்கள். அங்கே என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

கோவா கடற்கரை காட்சிகளை சுடச்சுட சுட்டுத்தள்ளிக் கொண்டு வந்திருப்பதுடன், இளைஞர்கள் குடித்துவிட்டு கூத்தடிக்கும் பல காட்சிகள் கொஞ்சம் அப்படியும் இப்படியுமாக இருந்ததால்தான் இந்த ஏ முத்திரையாம். எப்படியோ படத்துக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டார்கள் என்பது உண்மை.
மேலும் அறிய

Monday, January 25, 2010

> கா‌‌க்‌கி ச‌‌ட்டை‌க்கு‌ள் கே‌ப்ட‌ன்

முத‌ன் முதலாக த‌ன் இய‌க்க‌த்‌தி‌ல் உருவாகு‌ம் ‌விருத‌கி‌ரியை பொருமையாக எடு‌த்து வரு‌கிறா‌ர் கே‌ப்ட‌ன் ‌விஜயகா‌ந்‌த். காவ‌ல்துறை அ‌திகா‌ரியாக வரு‌ம் அவ‌ர் நா‌ட்டு ம‌க்க‌ளி‌ன் தோழனாக இரு‌ந்து வா‌ழ்‌க்கை‌க்கு வ‌ழிகா‌ட்டியாக இரு‌க்க‌ப் போ‌கிறா‌ர்.

கு‌றி‌ப்பாக மாணவ‌ர்களை ‌திரு‌த்தும‌் ‌விதமாக இ‌ப்பட‌த்‌தி‌ன் கதை ‌பி‌ன்ன‌ப்ப‌ட்டிரு‌க்‌கிறது எ‌ன்று சொ‌ன்னாலு‌ம் இது பல பட‌ங்‌க‌ளி‌ன் உ‌ல்டாவா‌ம்.

கு‌றி‌ப்பாக டே‌க்க‌ன் எ‌ன்ற ஆ‌ங்‌கில‌ப் பட‌த்‌தி‌ன் கதை ப‌ற்ற ‌‌விஜயகா‌ந்‌திட‌ம் சொ‌ல்ல, அதையே எடு‌க்கலா‌ம் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

மேலு‌ம், அரவா‌ணிக‌ள் ப‌ற்‌றிய தவறான க‌ண்ணோ‌ட்ட‌த்தை போ‌க்கு‌ம் ‌விதமாக அவ‌ர்களு‌க்கு ஆறுதலான ‌வி‌ழி‌ப்புண‌ர்வு கா‌ட்‌சிகளு‌ம் பட‌த்‌தி‌ல் இட‌ம்பெ‌ற்று‌ள்ளனவா‌ம். காவ‌ல்துறை கேர‌க்ட‌ரி‌ல் கே‌ப்ட‌ன் நடி‌த்தா‌ல் ‌நி‌ச்சய‌ம் அ‌ப்பட‌ம் வெ‌ற்‌றிதா‌ன் எ‌ன்‌கி‌ன்றன‌ர் அவரது தொ‌ண்ட‌ர்க‌ள்.
மேலும் அறிய

> சுறா கட‌ற்கரை‌யி‌ல்

முத‌ல்க‌ட்ட பட‌ப்‌பிடி‌ப்பை கேரளா‌வி‌ல் முடி‌த்து‌வி‌ட்டு, இர‌ண்டா‌ம் க‌ட்ட படி‌ப்‌பிடி‌ப்பு‌க்காக பா‌ண்டி‌ச்சே‌ரி‌க்கு‌ம், காரை‌க்காலு‌க்கு‌ம் இடை‌ப்ப‌ட்ட கட‌ற்கரையோ‌ர‌ங்க‌ளி‌ல் தொட‌ர்‌ந்து பட‌‌ம் ‌பிடி‌த்து வரு‌கிறது சுறா டீ‌ம்.

கதை ‌மீனவ‌ர்க‌ள் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்டது எ‌ன்பதா‌ல் காரை‌க்கா‌‌லி‌ல் ஒரு ‌பிர‌ம்மா‌ண்டமான பெ‌ரிய ‌மீனவ‌க் கு‌ப்ப‌த்தை உருவா‌க்‌கி அ‌தி‌ல் பட‌ப்‌பிடி‌ப்பு நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர். இத‌ற்காக ம‌ட்டு‌ம் ‌சில கோடிகளை செலவு செ‌ய்து‌ள்ளா‌ர் தயா‌ரி‌ப்பாள‌ர் ச‌ங்‌கில‌ி முருக‌ன்.

ப‌தினை‌ந்து நா‌ட்க‌ள் தொட‌ர்‌ந்து நடைபெறுவதா‌ல் மொ‌த்த நடிக-நடிகைகளு‌க்கு‌ம் பா‌ண்டி‌ச்சே‌ரி‌‌யிலேயே த‌ங்க வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்‌கி‌ன்றன‌ர். ‌ரிய‌ல் கு‌ப்பமாகவே இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பத‌ற்காக ‌தின‌ம் ஐநூறு‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ஜூ‌னிய‌ர் ஆ‌ட்டி‌ஸ்டுகளு‌க்கு வேலை இரு‌ந்தபடியே இரு‌க்‌கிறது.
மேலும் அறிய

> சூ‌ப்ப‌ர் ‌ஸ்டாருட‌ன் நேரடி

சி‌னிமாவ‌ி‌ல் ம‌ட்டு‌ம் ‌ஹ‌ீரோவாக அ‌றி‌ந்த ஷாரு‌க்கா‌ன் ர‌சிக‌ர்க‌ள் அவ‌ரி‌ன் ஏ டூ இச‌ட் வரை‌யிலான ‌விஷய‌ங்களை அ‌றி‌ந்து கொ‌ள்ள போ‌கிறா‌ர்க‌ள். அவ‌ரி‌ன் வா‌ழ்‌க்கை வரலா‌ற்றை தொகு‌த்து வழ‌ங்கு‌கிறது டி‌ஸ்கவ‌ரி டிராவ‌ல் ‌வி‌லி‌ங் சேன‌‌ல்.

அவ‌ரி‌ன் மேடை ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள், பே‌ட்டிக‌ள் சூ‌ட்டி‌ங் ‌ஸ்பா‌ட்டி‌ல் எடு‌க்க‌ப்ப‌ட்டவை, அர‌சிய‌ல் தலைவ‌ர்களுடனான ச‌ந்‌தி‌ப்பு ‌என ‌‌லி‌வி‌ங் ‌‌வி‌த் எ சூ‌ப்ப‌ர் ‌ஸ்டா‌ர் எ‌ன்ற பெய‌ரி‌ல் வாரா வார‌ம் வழ‌ங்கு‌கிறது.

அதே‌ப்போல அ‌ன்றாட‌ம் அவ‌ரி‌ன் ‌வீ‌ட்டி‌ன் நடைமுறை பழ‌க்க வழ‌க்க‌ங்களை ஒரு நா‌ள் முழு‌க்க லை‌வ்வாக பட‌ம் ‌பிடி‌த்து‌ம் கா‌ட்ட‌ப் போ‌கி‌ன்றன‌ர். இதனா‌‌ல் பல‌ பு‌தி‌ர்களு‌க்கு ‌விடை ‌கிடை‌க்கு‌ம் என நூ‌ற்று‌க்கு நூறு ந‌ம்பலா‌ம். அ‌வ்வ‌ப்போது ர‌சிக‌ர்க‌ளி‌ன் கே‌ள்‌விகளு‌க்கு‌ம் ப‌தில‌ளி‌க்‌கிறா‌‌ர்.
மேலும் அறிய

> பாடலை ஆவலுட‌ன் கே‌ட்கு‌ம் பாவனா

ஆர‌ம்ப‌த்‌தி‌ல் அச‌ல் பட‌த்‌தி‌ன் நாய‌கி பாவனா எ‌ன்றுதா‌ன் சொ‌ல்ல‌ப்ப‌ட்டது. ஆனா‌ல் பட‌த்‌தி‌ல் கூடுதலாக கொ‌ஞ்ச‌ம் ‌கிளாமரு‌ம் இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பத‌ற்காக ச‌மீரா ர‌ெ‌ட்டியை கூ‌ப்‌பி‌ட்டு நடி‌க்க வை‌த்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ள்.

முத‌லி‌ல் ஆடைகுறை‌ப்பு ‌கிளாம‌‌ர் கா‌ட்ட மா‌‌ட்டே‌ன் எ‌ன்றெ‌ல்லா‌ம் க‌ண்டிஷ‌ன் போ‌ட்ட பாவனா, ச‌மீரா ரெ‌ட்டி‌க்கு அ‌திக மு‌க்‌கிய‌த்துவ‌ம் கொடு‌க்க‌ப்படுவதா‌ல் கல‌ங்‌கி‌ப் போயு‌ள்ளா‌ர். ‌பிடிவாத‌ம் ‌பிடி‌த்து க‌ண்டிஷ‌ன் போ‌ட்டதெ‌ல்லா‌ம் தவறோ எ‌ன்றெ‌ல்லா‌ம் ‌பீ‌ல் ப‌ண்ண ஆர‌ம்‌பி‌த்து ‌வி‌ட்டா‌ர்.

இ‌ப்படியே போனா‌ல் பட‌‌த்‌தி‌ல் தா‌ன் காணாம‌ல் போ‌ய்‌விடுவோ‌ம் எ‌ன்பதா‌ல் தலையை ச‌ந்‌தி‌த்து அவரோடு ஒரு பாட‌ல் கா‌ட்‌சி‌யி‌ல் டூய‌ட் பாட வே‌ண்டு‌ம் என கே‌ட்டு‌க் கொ‌ள்ள, இய‌க்குந‌ர் காது‌க்கு போன இ‌வ்வ‌ிஷய‌ம் த‌ற்போது ப‌ரி‌சீலனை‌யி‌ல் உ‌ள்ளது. ஆடுவாரா எ‌ன்பது போக‌ப் போக‌த்தா‌ன் தெ‌ரியு‌ம்.
மேலும் அறிய

Saturday, January 23, 2010

> க‌விஞரான இசை

ஆ‌‌‌ஸ்கா‌ர் நாயக‌ன் ஏ.ஆ‌ர். ரகுமா‌ன் த‌ன் முத‌ல் ஹா‌லிவு‌ட் படமான க‌‌ப்பு‌ள்‌ஸ் ‌ரீ‌ட்‌ரீ‌ட்‌க்கு இ‌ந்‌திய கலா‌ச்சார இசை‌க் கரு‌விகளை கொ‌ண்டு இசையமை‌த்து‌ள்ளா‌ர். நாத‌ஸ்வர‌ம், த‌வி‌‌ல் போ‌ன்ற கரு‌விக‌ளி‌ன் இ‌னிமை ஆ‌ங்‌கிலேய‌ர்களை ‌மிகவு‌ம் கவ‌ர்‌ந்தது எ‌ன்‌கிறா‌ர்.

ஒரு ‌தீ‌வி‌ல் நட‌க்கு‌ம் கதை எ‌‌‌ன்பதோடு அ‌ங்கு அனை‌த்து நா‌ட்டு ம‌க்களு‌ம் வ‌ந்து போகு‌ம் இடமாக இரு‌ப்பதா‌ல் அனை‌த்து நா‌ட்டினரு‌ம் ர‌சி‌க்கு‌ம்படி இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பத‌ற்காக மே‌ற்க‌த்‌திய இசை, இ‌ந்‌திய இசை இர‌ண்டையு‌ம் கல‌ந்து இசையமை‌த்து‌ள்ளா‌ர்.

அ‌த்துட‌ன் அ‌ப்பட‌த்‌தி‌ல் ‌க்ரு ‌க்ரு என‌‌த் தொட‌ங்கு‌ம் ஒரு த‌மி‌ழ் பாடலையு‌ம் ஏ.ஆ‌ர்.ஆ‌‌ர். எழு‌தியு‌ம் உ‌ள்ளா‌ர். எ‌த்தனையோ பட‌ங்களு‌க்கு இசை அமை‌த்து‌ப் பாட‌ல் எழுதாத இவ‌ர் ஆ‌ங்‌கில‌ப் பட‌த்‌தில த‌மி‌ழ் பாடலொ‌ன்றை புகு‌த்‌தி‌யிரு‌ப்பது த‌மிழரு‌‌க்கு பெருமைதா‌ன்.
மேலும் அறிய

Wednesday, January 13, 2010

> தமிழ் படம் இலங்கையில்

துரை தயாநிதியின் கிளவுட் நைன் தயா‌ரித்திருக்கும் படம் தமிழ் படம். சிவா, ஷிஷா நடித்திருக்கும் இந்தப் படத்தை சி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கிறார்.

இதுவரை வந்த அனைத்து தமிழ்ப் படங்களையும் கிண்டல் செய்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். கமல், ர‌ஜினி போன்றவர்களும் இவர்களின் கிண்டலில் இருந்து தப்பிக்கவில்லை.

முத்தமிழ் அறிஞ‌ரின் பேரன் தயா‌ரிக்கும் படத்தின் பெய‌ரிலேயே தகராறு. உண்மையில் தமிழ்ப் படம் என்றிருக்க வேண்டும். நியூமரால‌ஜியா தெ‌ரியவில்லை, ப் பை எடுத்துவிட்டு தமிழ் படம் என்று வைத்திருக்கிறார்கள்.

ஈழத் தமிழர்களை ஈவிரக்கமின்றி கொன்றொழித்த இலங்கை அரசுக்கு எந்த வகையிலும் உதவக் கூடாது என புலம் பெயர் தமிழர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பை இலங்கையில் நடத்தாதீர்கள் என்பது அதில் ஒன்று.

தமிழ் படத்தின் ஒரு பாடல் காட்சியை இலங்கையில் படமாக்கியிருக்கிறார்கள். ஒமகசீமா என்று தொடங்குகிறது அந்தப் பாடல்.

வாழ்க தமிழ்.
மேலும் அறிய

> விஜயலட்சுமியின் விளக்கம்

சென்னை 28ல் அறிமுகமான விஜயலட்சுமி சுல்தான் தி வா‌ரிய‌ரில் ர‌ஜினிக்கு ஜோடி. குறுகிய காலத்தில் கோபுரத்தை எட்டிய இவர் இன்னும் பிற மொழிகளில் நடிக்கப் போகாமலிருப்பது ஆச்ச‌ரியம். வாய்ப்புகள் வருவதில்லையா?

‘பிற மொழிகளில் நடிக்க கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். நான்தான் வேண்டாம் என்று மறுத்து வருகிறேன்.’

தமிழில் தனக்கென நிலையான ஒரு இடத்தைப் பிடித்த பிறகே பிற மொழிகளில் நடிப்பது என முடிவு செய்திருப்பதாக விளக்கம் தருகிறார் விஜயலட்சுமி.

விரைவில் இவர் நடித்த கற்றது களவு படம் வெளியாகிறது. இதில் ஏர் ஹோஸ்டஸாக நடித்திருக்கிறாராம். வித்தியாசமான கதை, வித்தியாசமான வேடம் என்பதால் படம் நிச்சயம் பேசப்படும் என்கிறார் விஜயலட்சுமி.

இந்தப் படத்துக்குப் பிறகு அவர் எதிர்பார்க்கும் நிலையான இடம் தமிழில் கிடைக்கும் என்று நம்புகிறாராம். அதாவது, இந்தப் படத்துக்குப் பிறகு பிற மொழிப் படங்களில் விஜயலட்சுமியை பார்க்கலாம்.
மேலும் அறிய

> பையா - பல மொழிகளில்

20 கோடி ரூபாயில் தயாராகியிருக்கிறது பையா. தமிழின் முதல் ரோட் படம். ராம்கோபால் வர்மாவின் தயா‌ரிப்பில் வெளிவந்த ரோட் படத்தின் தழுவல் பையா என்று பரவலான பேச்சு. இதனை திட்டவட்டமாக மறுக்கிறார் லிங்குசாமி.

ஹாலிவுட் படத்தின் காப்பி என்பதையும் கறாராக மறுத்திருக்கிறார் லிங்கு. முழுக்க அவரது சிந்தையில் உதித்த கதையாம் பையா. மிலிந்த் சோமன் வில்லனாக நடித்திருப்பது படத்தின் எதிர்பார்ப்பை மேலும் சில சதவீதம் உயர்த்தியிருக்கிறது.

விஜய்க்கு லிங்குசாமி கதை தயார் செய்து காத்திருந்தாலும் பையாவை தெலுங்கு, இந்தி மொழிகளில் இயக்கும் எண்ணமும் அவருக்கு இருக்கிறது. தெலுங்கில் லிங்கு இயக்கத்தில் நடிக்க ராம்சரண் தேஜா தயாராக இருக்கிறார். ஏற்கனவே இவரது ரன் இந்தியில் அபிஷேக்பச்சன் நடிப்பில் ‌‌‌ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. இயக்கியவர் கேமராமேன் ‌‌ஜீவா.

ஆனால் இந்த பிற மொழி கொள்கையெல்லாம் பையாவின் வெற்றியை பொறுத்தே அமையும் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
மேலும் அறிய

> ஆயிரத்தில் ஒருவன் - மு‌ன்னோ‌ட்ட‌ம்

செல்வராகவனின் பிரமாண்ட படைப்பு. ட்‌‌ரீம் வேலி கார்ப்பரேஷன் ரவீந்திரன் படத்தை தயா‌ரித்திருக்கிறார். ஏழு கோடி பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட இப்படம் 32 கோடிகளில் தயாராகியிருக்கிறது.

நிகழ்காலத்தில் தொடங்கி பல நூற்றாண்டுகள் பின்னோக்கி பயணிப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. கார்த்தி ஹீரோ. ஆண்ட்‌ரியா, ‌ரீமா சென் ஹீரோயின்கள். பார்த்திபன் அரசராக வித்தியாச வேடமேற்றிருக்கிறார்.

படத்தின் பெரும் பகுதி அடர்ந்த காட்டில் படமாக்கப்பட்டுள்ளது. முன்னணி நடிகர்களுடன் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட துணை நடிகர்களும் இதில் நடித்துள்ளனர்.

நீண்ட பாலைவனங்கள், ரோம பேரரசை நினைவுப்படுத்தும் பழங்கால போர் முறைகள், காட்டாறுகள், பழங்கால நினைவுச் சின்னங்கள் என கதை பயணிக்கும் ஏ‌ரியா ரொம்பவே பெ‌ரிது. தமிழ் சினிமா இதுவரை தொட்டுப் பார்த்திராத பகுதிகள் என்று தை‌ரியமாகச் சொல்லலாம்.

நூற்றாண்டு பழமையான இசைக்காக மிகுந்த ஹோம் வொர்க் செய்திருக்கிறார் இசையமைப்பாளர் ‌ஜி.வி.பிரகாஷ்குமார். ஆ‌க்சன் காட்சிகளை அமைத்திருப்பவர் ராம்போ ரா‌ஜ்குமார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். செல்வராகவன் படத்துக்கு அவர் பாடல் எழுதியிருப்பது இதுவே முதல்முறை.

பொங்கலுக்கு வெளியாகும் இந்தப் படம் எல்லா வகையிலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. சென்சார் இந்தப் படத்துக்கு ஏ சான்றிதழ் அளித்துள்ளது.
மேலும் அறிய

Monday, January 11, 2010

> நடிகரான ஆஸ்கர் நாயகன்

ஒரு இசை விழாவுக்காக போக்குவரத்து நெரிசல் ஏற்படும், எனவே காரில் யாரும் வரவேண்டாம் என்று கூறியிருக்கிறது சிட்னி நகர காவல்துறை.

அந்த நிகழ்ச்சியை நடத்தப் போகிறவர் வேறுயாருமல்ல நம் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான்தான். இந்த இசை நிகழ்ச்சியைக்கான கிட்டத்தட்ட லட்சக்கணக்கில் டிக்கெட் விற்றிருக்கிறதாம்.

மேலும் ஆஸ்திரேலியப் பாடகர் மார்ட்டன் என்பவர் இயக்கும் இசை பற்றி டாக்குமெண்ட்ரி படத்தில் ஏ.ஆர். ரஹ்மானும் நடிக்க இருக்கிறார். பெரும்பாலும் எந்தப் படத்திலும் நடிக்க ஆர்வம் காட்டாதவர்.

ஆனால் இசை சம்பந்தப்பட்ட படம் என்பதாலும், மார்ட்டன் நல்ல நண்பர் என்பதாலும் ஒப்புக்கொண்டேன் என்கிறார் ஆஸ்கர் நாயகன்.

இதனால் இங்குள்ள தமிழ் இயக்குனர்களும் ஏதாவது ஒரு காட்சியில் நடிக்கவைக்க கேட்கலாமா என யோசித்து வருகின்றனர்.
மேலும் அறிய

> ரசிகர்கள் சூழ்ந்துகொண்ட - நயன்

நயன்தாராவை திடீரென்று பஸ்ஸில் பார்த்தால் யாருக்குத்தான் தொட்டுப்பார்க்க ஆசையிருக்காது. அப்படித்தான் ஒரு சம்பவம் கும்பகோணத்தில் நடைபெற்றது.

வாசன் விஷுவல்ஸ் வென்சர்ஸ் சார்பாக கே.சீனிவாசன், கே.சிவராமன் இணைந்து தயாரிக்கும் படம் பாஸ் என்கிற பாஸ்கரன்.

ஆர்யா ஹீரோவாக நடிக்கும் முழுக்க முழுக்க காமெடி படம். ஆர்யாவும், நயன்தாராவும் பஸ்ஸில் பயணமாகும் காட்சிக்காக ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் இல்லாமல் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக பொதுமக்களோடு பயணமாவது போல் நயன்தாராவை பஸ்ஸில் ஏற்றிவிட, அவரைப பார்த்து ரசிகர்கள் சூழ்ந்துகொண்டதால் படப்பிடிப்பு நடத்த முடியாமல் பாதியிலேயே நிறுத்தியிருக்கிறார் இயக்குனர் ராஜேஷ்.

எனவே தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த சென்னையிலிருந்து ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளை வரவழைக்க ஏற்பாடு செய்துள்ளார்.
மேலும் அறிய

> பிரபுவுக்கு தெலுங்கு தெரியும்

முதல் முறையாக இரண்டு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் நடிகர் பிரபு. நாயகனாக நடித்து புகழ்பெற்ற பிரபு தற்போது குணச்சித்திர வேடங்களில் தூள் கிளப்புகிறார். அவருக்காகவே கதைகளில் மாற்றம் செய்யவும் தயாராக இருக்கின்றனர்.

அயன் படத்துக்குப் பின் கிவும் பிஸியாகிவிட்டவர், தற்போது தெலுங்கிலும் கால் பதிக்க ஆரம்பித்துவிட்டார். இங்குபோல் இல்லாமல் அங்கே எதிர்பார்த்த சம்பளம் வாங்கிக் கொண்டே நடிக்கிறார்.

ஒரு படத்தின் பெயர் டார்லிங். பிரபாஸ், காஜல் அகர்வால் இணையும் இப்படத்தில் முக்கிய வேடமேற்று நடிக்கிறார்.

அடுத்து பொம்மரிலு வெற்றிப் படத்தை இயக்கிய பாஸ்கர் இயக்குகிறார். இப்படத்தை நடிகர் சிரஞ்சீவி தயாரிக்கிறார். இந்த இரண்டு படங்களிலும் பிரபு சொந்தக் குரலில் தெலுங்கே பேசுகிறார்.

பிரபுவுக்கு தெலுங்கு தெரியும் என்கிற விஷயம் பலருக்குத் தெரியாது.
மேலும் அறிய

Sunday, January 10, 2010

> 'தல'யின் மக்கள் செல்வாக்கு

புத்துணர்வோடு புதுகளம் இறங்கிவிட்டார் போல தெரிகிறது அஜித். தான் உண்டு தன் தொழில் உண்டு என்றிருந்தவர், படத்தின் விவாதங்களில் கலந்துகொண்டு ஆலோசனை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.

அசல் கேசட் வெளியீட்டு விழாவை அந்தந்த மாவட்டங்களில் நடத்தியிருக்கிறது அஜித் மன்றம். மேடைபோட்டு விளையாட்டுப் போட்டிகள், நடனப் போட்டிகள் என நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் கொடுத்திருக்கிறார்கள்.

இப்படி சேலம், கோவை, மதுரை என பல மாவட்டங்களில் அமர்க்களப்படுத்தியிருக்கும் தல ரசிகர்கள், இப்படி கூட்டத்தைக் கூட்டி விழா நடத்தினால்தானே மக்கள் செல்வாக்கை பெறமுடியும் என்கிறார்கள்.

மக்கள் செல்வாக்கு என்றால் புரிந்திருக்கும்தானே.
மேலும் அறிய

> ஏமாற்றம்மடைந்த ரஜினி ரசிகர்கள்

சூப்பர் ஸ்டாரின் இளைய மகள் சவுந்தர்யா இயக்கிய சுல்தான் தி வாரியர் கிராஃபிக்ஸ் படத்திற்குப் பின் தயாரித்துக் கொண்டிருக்கும் படம் கோவா.

வெங்கட்பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படதின் பாடல் வெளியீடு நடைபெற்றது.

தான் தயாரிக்கும் முதல் தமிழ்ப் படம் என்பதால் பாடல் வெளியீட்டு விழாவை மிகவும் சிறப்பாக செய்ய வேண்டுமென ஆசைப்பட்டார். அதற்கான இடம், அழைக்க வேண்டிய வி.ஐ.பி.களையும் தேர்வு செய்து வைத்திருந்தார்.

அதாவது ரஜினி வெளியிட பாலசந்தர் பெற்றுக்கொள்வது அல்லது இளையராஜா என முடிவான சமயத்தில் எந்திரன் பட வேலையாக மற்றும் பல்வேறு பணியின் காரணமாக சூப்பர் ஸ்டாரின் தேதி தள்ளிக்கொண்டே செல்ல, ரஜினியின் யோசனைப்படி அவரது வீட்டிலேயே கோவா பட யூனிட்டோடு சேர்ந்து பாடல்களை வெளியிட்டு மிகவும் சிம்ப்ளாக முடித்துவிட்டார் சூப்பர் ஸ்டார். இதனால் ஏமாற்றமடைந்தவர்கள் ரஜினி ரசிகர்கள்தான்.
மேலும் அறிய

> 12 நாட்கள் - ஃபைட்டுக்கு

இதுவரை இல்லாத அளவுக்கு இருபது கோடி பட்ஜெட்டில் தனது பையா படத்தை இயக்கிவரும் லிங்குசாமி, எதிர்பார்த்ததைவிட படம் பிரமாதமாக வந்திருப்பதாகக் கூறியுள்ளார். தமன்னாவும், கார்த்திக்கும் வரும் காதல் காட்சிகள் இளம் ரசிகர்களுக்கு புதியதாக இருக்கும் அளவுக்கு உள்ளதாம்.

ஒரே ஒர சண்டைக் காட்சிக்காக மட்டும் ஐந்து நவீன கேமராக்களுடன் 12 நாட்கள் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. காதலுடன் ஆக்சன் கலந்திருப்பதால் தான் இயக்கிய ரன் படத்தைத் தாண்டி ஹிட்டாகும் என பெரிதும் நம்பியுள்ளார்.

மேலும், படம் சிறப்பாக வந்திருப்பதால் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடும் ஐடியாவும் வைத்துள்ளார். இந்த மாதம் கார்த்திக் நடித்த ஆயிரத்தில் ஒருவன் வெளியாக இருப்பதால் ¨பாய படத்தை ஒரு மாதம் தள்ளி வெளியிட உள்ளார்.

இப்படத்தின் பாடல்களும் பெரிய ஹிட்டானதால், படமும் பெரிய ஹிட்டாகும் என்பதில் நம்பிக்கை வைத்துள்ளார் லிங்குசாமி.
மேலும் அறிய

Saturday, January 9, 2010

> நடிகையின் உண்மை சம்பவம்

பாலியல் தொழில் செய்துவரும் ஒரு பெண்ணைப் பற்றின கதைதான் அந்தரங்கம். மும்பை சிவப்பு விளக்கு பகுதி போல ஒவ்வொரு மாநிலத்திலும் பாலியல் தொழில் செய்வதற்கான இடத்தை ஒதுக்க வேண்டும் என வலியறுத்தும் படம் என்பதால் இப்போதே எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இப்படத்தை இயக்கும் ருக்மாங்கதனே இசையினையும் கவனித்துக் கொள்கிறார். நான்கு மொழிகளில் மொழிகளில் தயாராகும் இப்படம் கிட்டத்தட்ட முடிவுற்ற நிலையில் அடுத்த படத்துக்கான கதை விவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.

அடுத்த படம் ஒரு நடிகையின் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து கதை தயார் செய்து வருகிறார். அதனால் பல நடிகைகளை நேரில் சந்தித்து அவர்களின் அனுபவங்களை சேகரித்து வருகிறார். நடிகையின் கதை என்பதால் காட்சிகள் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்குமாம்.
மேலும் அறிய

> அசலில் நடிகர் திலகம் சிவாஜி

அஜித் நடித்து சரண் இயக்கும் அசல் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ஒரு பாடலை அர்ப்பணம் செய்திருக்கிறார்கள். அப்பாடலில் வரும் ஒவ்வொரு வரிகளும் நடிகர் திலகத்தை நினைவுபடுத்துவதாக இருக்குமென்கிறார் சரண்.

அஜித் ஆசைபட்டபடி இந்தப் பாடலை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். படத்தில் அஜித் தன் தந்தையை நினைத்து பாடுவது போன்ற காட்சி அது. அதில் வரும் வரிகள் தந்தைக்கு மகன் ஆற்றும் கடமைகள் பற்றிய கருத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டதாகும்.

இப்படித்தான் பாடல் வேண்டும் என்று வைரமுத்துவிடம் கேட்டதும் மிகவும் உற்சாகத்துடன் ஒரே நாளில் எழுதிக் கொடுத்து பதிவும் செய்யப்பட்டது.

இந்த விஷயம் கேள்விப்பட்ட நடிகர் திலகம் குடும்பத்தார் மிகவும் நெகிழ்ந்து போயினர். சொந்தப் படம்தான் என்றாலும், இப்படியொரு பாடலை வைக்க வேண்டும் என தோன்றிய எண்ணத்துக்குத்தான் இந்தப் பாராட்டு.
மேலும் அறிய

> பிரபுதேவா மீண்டும் டான்ஸில்

இயக்குனராக ஆவதற்கு முன் டான்ஸ் மாஸ்டராக இருந்த பிரபுதேவா, சோனி நிறுவனத்திற்காக பல்வேறு நடன ஆல்பங்களை எடுத்துக் கொடுத்து வந்தார். வருமானம் குறைவு என்றாலும் ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்டு செய்து கொண்டிருந்தார்.

அதன்பின் டான்ஸிலும், தற்போது இயக்குனராகவும் பிஸியாகிவிட தொடர்ந்து சோனி நிறுவனத்திற்கு ப்ரோக்ராம் செய்ய முடியாமல் நிறுத்தியிருந்தார். ஆனால் சோனி கம்பெனி விடுவதாக இல்லை. மீண்டும் தொடர்புகொண்டு தொகையை தருவதாகக் கூறி ஒப்பந்தம் பெற்றுள்ளது.

அதனால் தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களை இயக்குவதோடு, இனி நடன ஆல்பங்களும் எடுத்துக் கொடுக்கவுள்ளார் பிரபுதேவா. மைக்கேல் ஜாக்சன் இல்லாத குறையில் பாதியாவது இவர் தீர்த்து வைப்பாரா பார்ப்போம்.
மேலும் அறிய

> ச‌ச்‌சி‌ன், தோ‌னி - விஜயின் சுறாவில்

விஜய் வேட்டைக்காரனுக்குப் பின் அதிரடியாய் களமிறங்கும் படம் சுறா. வேட்டைக்காரன் எதிர்பார்த்த அளவுக்கு போகாததால் சுறா சீன்களை மிகவும் அற்புதமாக உருவாக்கி வருகிறார் இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார்.

காமெடிக்கு பெயர்போன இயக்குனரான இவர், விஜய்க்காக ஒவ்வொரு காட்சியிலும் சிரிக்கும்படி ஒரு டயலாக்காவது வரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

மேலும் சுறாவில் ஏதேனும் புதுமையாக செய்ய வேண்டும் என்பதற்காக யோசித்த விஜய், இந்திய கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி இருவரையும் ஒவ்வொரு காட்சியில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்று கேட்க, ஒரு அரசியல் புள்ளி மூலம் தூதுவிட்டு ஓ.கே.யும் வாங்கியுள்ளார்.

எனவே, சுறா விளம்பர போஸ்டர்களில் சச்சின், தோனியும் இடம்பிடிக்கிறார்கள்.
மேலும் அறிய

Friday, January 8, 2010

> முக்கிய அறிவித்தல்

எமது இயங்கு தளம் தாய்லாந்திலிருந்து ஐக்கியஅமேரிக்கா நாட்டிற்கு நகத்த படவிருப்பதால் எமது செய்தி சேவை 14/01/2010 முதல் சில நாட்களுக்கு தடை பட்டிருக்கு என்பதை அறியதருகிறோம்

இப்படிக்கு
தமிழ்நெட்வேர்க்.இன்போ நிர்வாகம்




மேலும் அறிய

> வாயால் கெடும் நகுலன்

தவளை தன் வாயால் கெடும் என்பது தவளைக்குப் பொருத்தமாக இருந்ததோ என்னவோ நடிகர் நகலனுக்கு பொருத்தமாக அமைந்துவிட்டது.

நகுலன் நடித்த ஒன்றிரண்டு படங்கள் சுமாராக ஓடியது என்றால் அதற்குக் காரணம் சன் டிவியும்தான்.

ஆனால் தன் படத்தை வாங்கியதால்தான் சன் டிவிக்கு பெருமை என்பது போல பையன் அலட்டிக் கொண்டிருக்கிறார். ரசிகர்களை குஷிப்படுத்த படம் ஓடும் மாவட்டங்களுக்கு சென்று வருவது விஜய் உட்பட அனைவரும் செய்து வருவதுதான்.

அப்படி ஒரு ஊருக்குச் சென்றுவர நகுலை கேட்டதற்கு, 'கூப்பிடும் போதெல்லாம் ஓட நான் என்ன அடிமையா?' என்பதுபோல் நண்பர்களிடம் புலம்ப, அவர்கள் அப்படியே போட்டுக்கொடுக்க, இப்போது நகுல் சன் டிவி இருக்கும் சாலை பக்கம் கூட செல்வதில்லை.

வளர வேண்டிய வயசுல இந்த பந்தா தேவைதானா?
மேலும் அறிய

> சினிமா சென்டிமெண்ட்

அயன் படம் எடுத்த கே.வி. ஆனந்தின் அடுத்த படம் கோ. அதாவது அரசன். சிம்பு ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கும் வழக்கம்போல எழுத்தளார்கள் சுபா கதை, வசனம்.

அயன் டீம் அனைத்தும் அப்படியே இருக்க, இரண்டு விஷயத்தில் மட்டும் கொஞ்சம் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

ஒன்று இந்தப் படத்தில் வைரமுத்து பாடல்கள் எழுதவில்லை. பா.விஜய், கபிலன், யுகபாரதி போன்றவர்கள் எழுதுகிறார்கள்.

அடுத்த மாற்றம், தன்னிடம் போன இரண்டு படங்களில் உதவி இயக்குனர்களாக இருந்த மூன்று பேருக்கு பதிலாக வேறு மூன்று உதவி இயக்குனர்களை சேர்த்துள்ளார்.

மேலும், பாடல்கள், முக்கிய காட்சிகள் வெளிநாட்டில் படமாகிறது. வெளிநாட்டை திரையில் காட்டினால் ஹிட் என முழுமையாக நம்புகிறார் கே.வி. ஆனந்த்.
மேலும் அறிய

> A.R ரஹ்மான் 44வது பிறந்தநாளில் நடந்தது?

எளிமைதான் ஒரு மனிதனை பக்குவப்படுத்துவதோடு பல்வேறு உயர் நிலைக்கு கொண்டு செல்லும் என்பதற்கு உதாரணம் ஏ.ஆர்.ரஹ்மான். எப்போதும் தலைகனத்தில் ஆடாதவர். அதனால்தான் ஆஸ்கர் விருது வரை உயர்த்தியிருக்கிறது.

வழக்கம்போல தனது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார் இசைப்புயல். இந்த 44 வயதில் இரண்டு ஆஸ்கர் விருது பெற்ற சந்தோஷத்தை எவ்வளவு ஆர்ப்பாட்டமாகவும் கொண்டாடி இருக்கலாம். ஆனால் தனது குடும்பத்தார் நெருங்கிய நண்பர்களோடு மட்டும் நேற்று முன் தினம் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

ஒவ்வொரு பிறந்தநாளிலு‌ம் ஏதோ ஒரு நாட்டில் இருந்த ரஹ்மான், இந்த பிறந்த தினத்தில் சென்னையில் வீட்டில் இருந்ததை சொல்லி மகிழ்கின்றனர் ஏ.ஆர். ரஹ்மான் குடும்பத்தினர்.
மேலும் அறிய

Thursday, January 7, 2010

> முதல்வருக்கு கோரிக்கை

வித்தியாசமான படம் என்றால் மா படத்தைத்தான் சொல்ல வேண்டும். படத்தின் இயக்குனர், நடிகர், நடிகைகள் என அனைவரும் ஊனமுற்றவர்கள். அவ‌ர்களின் வேதனையை, வலியை கதையாக சொல்லும் படம் மா.

இப்படத்தின் பாடல்கள் வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. கவிஞர் கனிமொழி பாடல் கேசட்டை வெளியிட, ராஜீவ் மேனன் பெற்றுக்கொண்டார். இவ்விழா ஏற்பாட்டினை உடல் ஊனமுற்றோர் கூட்டமைப்பின் தலைவர் ஜி.சிதம்பரநாதன் செய்திருந்தார்.

விழாவில் படத்தின் தயாரிப்பாளர் ஹெலன் பிரியா, படத்தின் இயக்குனர் பாத்திமாபீவி மற்றும் நடிகர், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

இப்படம் தங்களது கோரிக்கையை முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் விளக்கும் படமாகவும் இருக்கும் என்றார் விழாவில் கலந்துகொண்ட ஊனமுற்ற நண்பர். இந்த முயற்சி மூலம் பல்லாயிரக்கணக்கான ஊனமுற்ற தோழர்கள் பயன் பெறட்டும். வாழ்த்துவோம்.
மேலும் அறிய

> காதலிக்க நேரமில்லை

நீண்ட காலமாக இயக்க வேண்டும் என மனோபாலா ரைட்ஸ் வாங்கி வைத்திருந்த படம் காதலிக்க நேரமில்லை. செலவு பற்றி கவலைப்படாத தயாரிப்பாளர் கிடைப்பது மட்டுமல்லாமல், தொடர்ந்து படங்களில் நடித்து வருவதால் மனோபாலா இயக்க நேரமில்லாமல் இருந்தார்.

தற்போது ரைட்ஸை மாத்திக் கொடுத்துவிடலாம் என்று முடிவெடுத்து பல லட்சங்களை கேட்க, முதலில் தயங்கிய ஓரிரு கம்பெனிகள் வடிவேலுவை வைத்து எடுத்தால் போட்ட பணம் வந்துவிடும் என கணக்குப் போட்டிருக்கிறது.

இதையே பலரும் பாலோ பண்ணி படத்தின் ரைட்ஸை கேட்க, இந்த வரவேற்பைக் கண்ட மனோபாலா இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் தானே இயக்க வேண்டும் என்பதில் உறதியாக இருக்கிறார்.

அவரும் வடிவேலுவை வைத்தே படத்தை இயக்கவும் முடிவெடுத்துள்ளார்.
மேலும் அறிய

> அரசியல் சதி - 'ஜக்குபாய்'

ஒரு படத்தில் விவேக் 'தசாவதாரம்' படம் பாதி எடுத்த வரைக்கும் இருக்கு சி.டி. வேணுமா? என்று காமெடி பண்ணியிருப்பார். அது இன்று உண்மையாகியிருக்கிறது.

ஜக்குபாய் படம் இன்னும் நிறைய வேலைகள் பாக்கி இருக்க, இன்டெர்நெட்டில் பாடல் மற்றும் பல காட்சிகள் வெளிவந்ததைக் கண்டு கலங்கிப் போயிருக்கிறார் சரத்குமார்.

இப்படி வெளிவராமல் தடுக்க என்ன செய்யலாம் என்று ரஜினி, கமல் மற்றும் முன்னணி நாயகர்கள் ஒன்றுகூடி விவாதிக்க... பல பேர் பல கருத்துக்களை சொல்லியிருக்கின்றனர்.

ஆனால், அது அரசியல் சதியாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று ராதிகாவிடம் புலம்பியிருக்கிறார் சரத்.

ஆகவேதான் முளையிலேயே திருட்டு விசிடியை தடுத்து நிறுத்திவிட்டதாக கலைஞருக்கு நன்றி தெரிவித்த விளம்பரம் எல்லாம். இதன்மூலம் திருட்டு சி.டி. ஒழிக்கப்பட வேண்டும், ஒழியும் என பல தயாரிப்பாளர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் அறிய

> சிம்பு குத்துப்பாட்டில்

காமெடி நடிகர் சிங்கமுத்து மகன் கார்த்திக் வாசன் மாமதுரை, அய்யன் படத்துக்குப் பின் நடிக்கும் படம் சங்கரா. பாதி படம் முடிந்த நிலையில்... படத்தின் தயாரிப்பாளர் படத்தை கிடப்பில் போட்டுவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.

வருமா வராதா என்றிருந்த நிலையில் படத்தின் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா அருமையான ஆறு பாடல்களுக்கு இசையமைத்து புரொடியூசருக்குப் போட்டுக்காட்ட, சென்னைக்கு வரவே கூடாதென்று பிடிவாதமாக இருந்தவரை பாடல்கள் ஈர்த்து படப்பிடிப்பை தொடர வைத்திருக்கிறது.

ஜனவரியில் மீண்டும் படம் துவங்க... அப்படத்தில் ஸ்ரீகாந்த் தேவாவின் நெருங்கிய நண்பர் சிம்பு ஒரு குத்துப் பாடலைப் பாடவிருக்கிறார்.
மேலும் அறிய

Wednesday, January 6, 2010

> முதல் அனுபவம் - த்‌ரிஷா

த்‌ரிஷா இதுவரை எத்தனையோ வேடங்களில் நடித்துவிட்டார். ஆனாலும், நடிகையாக அவர் இதுவரை எந்தப் படத்திலும் நடித்ததில்லை. அந்தக் குறையை போக்கியிருக்கிறது விண்ணைத்தாண்டி வருவாயா.

கௌதமின் இந்தப் படத்தில் கேரளாவிலிருந்து தமிழில் நடிக்கவரும் இளம் நடிகை வேடத்தில் த்‌ரிஷா நடித்துள்ளார். நடிகையாக இது அவருக்கு முதல் அனுபவம். ‌

த்‌ரிஷா நடிக்கும் படத்தில் உதவி இயக்குனராக பணிபு‌ரிபவர் சிம்பு. இருவருக்கும் ஒரு கட்டத்தில் காதல் ஏற்படுகிறது. காதல் கூடலில் முடிந்ததா, ஊடலில் பி‌ரிந்ததா என்பது கதை.

தனது வாழ்வில் நடந்த சம்பவம்தான் விண்ணைத்தாண்டி வருவாயா என்று கூறுகிறார் கௌதம். அதாவது அவரது சொந்த காதல் கதை.

காதல் யூனிவர்சல் சப்ஜெக்ட் என்பதாலா தெ‌ரியவில்லை, படத்தின் பி‌ரிமியரை நியூயார்க்கில் நடத்த திட்டமிட்டிருக்கிறார். படத்தின் கிளைமாக்ஸ் உள்பட பல முக்கிய காட்சிகள் நியூயார்க்கில்தான் எடுக்கப்பட்டன.

ஹாலிவுட் படம் எப்போ சார்?
மேலும் அறிய

> ர‌ஜினியின் க‌ரிசனம் ரசிகர்களுக்கு

யாரும் யோசிக்காததை அதிரடியாக‌ச் செய்வது ர‌ஜினி ஸ்டைல். சமீபத்தில் நாம் கேள்விப்பட்ட விஷயமும் அப்படிதான் இருக்கிறது.

ர‌ஜினி சென்னையில் இருந்தால் அவரது வாசஸ்தலம் பெரும்பாலும் கேளம்பாக்கம் பண்ணை வீடாகவே இருக்கும். அமைதி சூழ்ந்த இந்த பண்ணை வீட்டில்தான் அவர் ஓய்வு எடுப்பது வழக்கம். முக்கியஸ்தர்கள் சந்திப்பும் இங்குதான் நடைபெறும்.

இந்த பண்ணை வீட்டைச் சுற்றியுள்ள இடத்தை ர‌ஜினி வாங்கியிருக்கிறார். அவருக்காக இல்லை, அவரது ரசிகர்களுக்காக.

தனது மன்றங்களைச் சேர்ந்த 32 நிர்வாகிகளுக்கு ஆளுக்கு அரை கிரவுண்ட் என்று பி‌ரித்துக் கொடுக்கப் போகிறாராம். சும்மாயில்லை, அரை கிரவுண்டில் ஆளுக்கொரு வீட்டுடன். இந்த வீட்டின் கட்டுமான பணி செலவு முழுக்க ர‌ஜினியுடையது. நெகிழ்ந்து போயிருக்கிறார்கள் ரசிகர்கள்.
மேலும் அறிய

Tuesday, January 5, 2010

> பெயர் போனவர் - அமீர்

படங்களுக்கு சர்ச்சைக்கு‌ரிய பெயர் வைத்தால், சேம்ப‌ரிலேயே வடிகட்டி விடுகிறார்கள். ஆதிராஜா இயக்கும் ராமர் படத்துக்கு முதலில் அந்தப் பெயர் சேம்பரால் மறுக்கப்பட்டது. ராமர் என்றாலே வில்லங்கம் வீடு தேடி வரும் என்ற முன்னெச்ச‌ரிக்கைதான் காரணம்.

படத்தின் தயா‌ரிப்பாளர் முழு ஸ்கி‌ரிப்டையும் சேம்ப‌ரில் சமர்ப்பித்து, புராண ராமருக்கும் இந்த கதைக்கும் தொடர்பு இல்லை என்பதை நிரூபித்த பிறகே ராமர் பெயரை பயன்படுத்த அனுமதித்தனர்.

சேம்பரால் அனுமதி மறுக்கப்பட்ட இன்னொரு பெயர் அழகி‌ரி. தயா‌ரிப்பாளர் தலைகீழாக நின்றும் இந்தப் பெயரை பயன்படுத்த அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.

சேம்பர் உறுப்பினர்களை திடுக்கிட வைத்த இன்னொரு பெயர், அமீர். அமீர் என்றாலே இயக்குனர் அமீர்தான் நினைவுக்கு வருவார். அவரது பெயரை படத்துக்கு பயன்படுத்துவது ச‌ரியாக அமையாது என அனுமதி மறுத்தனர்.

தயா‌ரிப்பாளரும், இயக்குனருமான ஜெய்லானி - இவர்தான் அமீர் டைட்டிலை பதிவு செய்ய விரும்பியவர் - தனது முயற்சியில் சற்றும் மனம் தளராமல் அமீ‌ரிடமே இந்த பஞ்சாயத்தை கொண்டு சென்றார்.

என்ன இருந்தாலும் கலைஞனாயிற்றே... பெய‌ரில் என்ன இருக்கிறது என்று தனது பெயரை படப் பெயராக பயன்படுத்த அனுமதி அளித்திருக்கிறா‌‌ர் அமீர். சாமியே வரம் கொடுத்தபின் பூசா‌ரிகளுக்கு என்ன கஷ்டம்? சேம்பரும் பச்சைக்கொடி காட்ட, தனது அமீர் பட வேலைகளை முடுக்கி விட்டுள்ளார் ஜெய்லானி.
மேலும் அறிய

> ஜக்குபாய் இணையத்தில்

சரோஜா படத்தில் டிவிடி ஒன்றை காட்டி, ‘மருதநாயகம் டிவிடி சார்’ என்பார் பிரேம்‌ஜி. அது காமெடி அல்ல, நிஜமாகவே நடக்க சாத்தியமுள்ளது. திரையில் வெளியாகாத சரத்குமா‌ரின் ஜக்குபாய் இணையதளத்தில் வெளியாகியிருப்பதே அதற்கு‌ச் சான்று.

சரத்குமார், ஸ்ரேயா நடித்திருக்கும் ஜக்குபாயை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருக்கிறார். படத்தில் சரத்தின் மகளாக நடித்திருக்கிறாராம் ஸ்ரேயா. பெரும்பாலான காட்சிகளை வெளிநாட்டில் படமாக்கியிருக்கிறார்கள். பொங்கலுக்கு வெளியாவதாக இருந்த இப்படத்தின் ‌ரிலீஸ் சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பின்னணி இசை சேர்க்காத ஜக்குபாய் படம் வெளிநாட்டு இணையதளங்கள் சிலவற்றில் வெளியாகி திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

இந்த‌ச் செய்தி கிடைத்ததும் படத்தை தயா‌ரித்த ராடன் உடனடியாக சைபர் கிரைமில் புகார் செய்தது. இதையடுத்து கோவையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும், ஜக்குபாய் திருட்டு விசிடி விற்ற பலரை போலீஸார் கைது செய்தனர்.

‌ரிலீஸாகாத ஒரு படம் டிவிடியாக விற்பனைக்கு வந்தது திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருட்டு விசிடி வி‌‌‌ற்பவர்களுக்கு குண்டர் சட்டத்தில் சிறை என்பது மட்டுமே அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை, ஆறுதல்.

ஒரு சந்தேக கேள்வி. ஜக்குபாய் படம் ழான் ரெனே நடித்த வசாபி படத்தை தழுவி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முறையான அனுமதி பெறாமலே இந்த தழுவல் நடந்திருக்கிறது. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், திருட்டு டிவிடி விறபவர்களை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளும் அரசு, கதை திருடியவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கும்?
மேலும் அறிய

> கண்ணியம், கட்டுப்பாடு – அ‌ஜித் வலியுறுத்தல்

கட்டுக்கோப்பான இயக்கம் என பெயர் எடுத்த அ‌ஜித் ரசிகர் மன்றத்தில் சில வாரங்களாக சலசலப்பு. தலைமை நிர்வாகிக்கு எதிராக சிலர் போஸ்டர் அடிக்கும் அளவுக்கு இந்த வில்லங்கம் விஸ்வரூபமெடுத்திருக்கிறது. இதுபற்றி அ‌ஜித்தே ரசிகர்களுக்கு எச்ச‌ரிக்கை கலந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘என்னுடைய கலைப் பயணத்தில் கடந்த 18 வருடங்களாக எனக்கு உறுதுணையாக இருந்த என் ‘அசல்’ ரசிகர்களுக்கு வணக்கம் கலந்த புத்தாண்டு வாழ்த்துகள்’ எனத் தொடங்கும் அந்த அறிக்கை போகப் போக கார மிளகாயாக ரசிகர்களை காய்ந்தெடுக்கிறது.

அசல் படப்பிடிப்பை முடித்து, ஐம்பதாவது படத்துக்கான வேலைகளை தொடங்கியிருப்பதுடன், தனது செயலாளரும், நற்பணி இயக்கத்தின் தலைமை நிர்வாகியுமான சுரேஷ் சந்திரா மூலமாக இயக்கத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக அ‌ஜித் அவ்வறிக்கையில் தெ‌ரிவித்துள்ளார்.

படம் ஓட ரசிகர்களின் பங்களிப்பு தேவை என்று சொல்லியிருப்பவர், படம் தரத்துடன் இருந்தால் மட்டுமே அந்தப் பங்களிப்பு இருக்கும் என்பதையும் தெ‌ரிவித்திருக்கிறார். படப்பிடிப்புக்கு நடுவில் தொந்தரவு கொடுக்கும் ரசிகர்களையும் தனது அறிக்கையில் ஒரு பிடிபிடித்திருக்கிறார் அ‌ஜித்.

தலைமை நிர்வாகி தனது வழிகாட்டுதலின்படி சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருப்பதாகவும், தலைமை நிர்வாகத்துக்கு எதிராக சிலர் சுய விளம்பரத்துக்காக கண்டன சுவரொட்டிகள் ஒட்டுவதாககவும், அனுமதி இல்லாமல் ஊடகங்களில் கருத்து தெ‌ரிவிப்பதாகவும் கூறி‌யுள்ளார்.

இந்த‌ச் செயல்களை கண்டித்திருக்கும் அ‌ஜித், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் எந்த‌ச் செயலையும் தான் ஆத‌ரிப்பதில்லையென்றும், ரசிகர்கள் கண்ணியம் கட்டுபாட்டுடன் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

2010 ஜனவ‌ரி முதல் நிர்வாகிகளை இரண்டு வருடங்களுக்கொருமுறை சுழற்சி முறையில் நியமிக்கப் போவதாகவும், மன்றம் குறித்த எந்த விஷயத்திலும் தனது முடிவே இறுதியானதும் என்றும் தெ‌ரிவித்துள்ளார்.
மேலும் அறிய

Monday, January 4, 2010

> VEVO மியூசிக் வீடியோ வெப்சைட்

யு–ட்யூப் மற்றும் உலகின் முன்னணி இசை நிறுவனங்கள் இணைந்து வீவோ (VEVO) என்ற பெயரில் ஒரு மியூசிக் வீடியோ வெப்சைட் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

யு–ட்யூப்புடன் யுனிவர்சல் மியூசிக் குரூப் , சோனி மியூசிக் என்டர்டெய்ன்மென்ட், இ.எம்.ஐ., ஏ.டி அண்ட் ட்டி மற்றும் அபுதாபி மீடியா கம்பெனி ஆகிய நிறுவனங்கள் இந்த திட்டத்தில் கை கோர்த்துள்ளன. இந்த திட்டத்திற்கென இந்த நிறுவனங்கள் 30 கோடி டாலர் வழங்கியுள்ளன.

தற்போது இந்த இணைய தளத்தில் 5,191 கலைஞர்களின் 14,675 வீடியோக்கள் உள்ளன. 20 வகையான வீடியோ இசை ஆல்பங்கள் கிடைக்கின்றன. இந்த தளத்தைப் பயன்படுத்தும் பயனாளர்கள் தாங்கள் விரும்பும் வகையில் பிளே லிஸ்ட்டுகளை உருவாக்கிக் கொள்ளலாம். அவ்வகையில் இதுவரை 800க்கும் மேற்பட்ட பிளே லிஸ்ட்டுகள் உள்ளன.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்
மேலும் அறிய

> எய்ட்ஸ் பாதித்த நாயகி

குழந்தை இருப்பது போல் நடிக்கவே தயக்கம் காட்டும் தமிழ் சினிமாவில் எய்ட்ஸ் நோயாளியாக நடித்து வருகிறார் ஒரு நடிகை. அறிந்த முகமல்ல, இவர் புதுமுகம்.

எஸ்.கௌ‌ரி சங்கர் இயக்கும் பேசுவது கிளியா? படத்தின் கதையைக் கேட்டால் பச்சை மிளகாயை கடித்த மாதி‌ரி சுர்ரென்கிறது. பிள்ளைகளுக்கு பணத்தை கொடுத்து படிக்க அனுப்பினால் போதாது, கொஞ்சம் பாசத்தையும் கொடுக்க வேண்டும் என்பதுதான் படத்தின் மெசே‌ஜ். இந்த மெசேஜை அவர் சொல்லியிருக்கும் விதம்தான் பகீர்.

பெற்றோ‌ரின் பாசம் கிடைக்காத நாயகி போதைக்கு அடிமையாகிறார். அவரை மீட்க நண்பர்கள் போராடுகிறார்கள். ஒருகட்டத்தில் போதையின் கோரம் பு‌ரிந்து அதிலிருந்து மீள முயற்சிக்கிறார் நாயகி. ஆனால் காலம் கடந்துவிடுகிறது.

பல பேர் பயன்படுத்திய போதை ஊசியை பயன்படுத்தியதால் அவருக்கு எய்ட்ஸ். நாயகியின் முடிவு என்ன என்பதை முகத்தில் அறைகிற மாதி‌ரி சொல்லியிருக்கிறார்களாம்.

எய்ட்ஸ் நோயாளியாக நடிக்க யாரும் முன்வராத நிலையில் ஷக்தி என்ற கல்லூரி மாணவி விருப்பத்துடன் முன்வந்திருக்கிறார். அவரை கௌரவிக்கும் விதமாக அவரது கேரக்டருக்கு ஷக்தி என்றே பெயர் வைத்திருக்கிறார்கள்.

விஜயகுமார் என்பவர் ஹீரோவாக நடிக்க ரஹ்மானின் சகோத‌‌ரி ஏ.ஆர்.ரைஹானா இசையமைத்திருக்கிறார்.
மேலும் அறிய

> தயா‌ரிப்பாளராகும் வெங்கட்பிரபு

பாடகர், நடிகர், இயக்குனர் என்ற முப்ப‌ரிமாணத்துடன் தயா‌ரிப்பாளர் என்ற இன்னொரு ப‌ரிமாணமும் வெங்கட்பிரபுவை வந்து சேரவிருக்கிறது. ஆம், இந்த வெற்றிகரமான இயக்குனர் தயா‌ரிப்பு நிறுவனம் தொடங்கவிருக்கிறார்.

கோவா படத்தை முடித்த வெங்கட்பிரபு அடுத்து அம்மா கி‌ரியேஷன்ஸ் சிவா தயா‌ரிக்கும் படத்தை இயக்குகிறார். இதையடுத்து சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் திட்டமும் அவருக்கு இருக்கிறது. அத்துடன் தயா‌ரிப்பு நிறுவனம் தொடங்கி புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கவும் முடிவு செய்திருக்கிறார்.

இதற்காக Since 1975 என்ற தயா‌ரிப்பு நிறுவனத்தை தொடங்கவுள்ளார். இந்த வித்தியாசமான பெயருக்கு காரணம் எதுவுமில்லை, 1975 என்பது வெங்கட்பிரபு பிறந்த வருடம். வாழ்த்துகள் இயக்குனரே.
மேலும் அறிய

> ராவண் மே 25 முதல்

மணிரத்னத்தின் ராவண் மே மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தி, தமிழ் என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு இன்னும் தமிழ்ப் பெயர் முடிவு செய்யப்படவில்லை என்பது முக்கியமானது.

இந்திப் பதிப்பில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் நடித்துள்ளனர். வில்லனாக நடித்திருப்பவர் விக்ரம். தமிழில் ஹீரோயின் ஐஸ்வர்யாராய், அபிஷே‌க் பச்சன் நடித்த வேடத்தில் விக்ரம். இந்தியில் விக்ரம் நடித்த வில்லன் வேடம் பிருத்விராஜுக்கு. தமிழ் பதிப்பில் ப்‌ரியாமணி, கார்த்திக் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொட‌க்சன் பணிகள் நடந்து வருகின்றன. இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர். மே மாதம் 25 ஆம் தேதி அனேகமாக படம் திரைக்கு வரலாம் என்கிறார்கள் தயா‌ரிப்பாளர்கள் தரப்பில்.

2010 இந்தி, தமிழ் இரு மொழிகளில் வெளியாகும் படங்களில் அதிக எதிர்பார்ப்புக்கு‌ரிய மெகா பட்ஜெட் படங்களில் ராவண் படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அறிய

Sunday, January 3, 2010

> பொங்கலுக்கு ஐந்து படங்கள்

பொங்கலுக்கு ஐந்து நேரடித் தமிழ்ப் படங்கள் திரைக்கு வருகின்றன. இந்த ஐந்தும் உறுதி செய்யப்பட்டவை. கடைசி நிமிடத்தில் இந்த எண்ணிக்கையில் ஒன்றிரண்டு அதிக‌ரிக்கவும் வாய்ப்புள்ளது.

பொங்கல் படங்களில் அதிக எதிர்பார்ப்புக்கு‌ரியது செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன். காலத்திற்குள் பல நூற்றாண்டுகள் பின்னோக்கி பயணிக்கும் கதை. கார்த்தி, ‌‌ரீமா சென், ஆண்ட்‌ரியா, பார்த்திபன் நடித்துள்ளனர். தமிழ் சினிமாவுக்கே பெருமைக்கு‌ரிய படைப்பாக இது இருக்கும் என்பது அனைவ‌ரின் எதிர்பார்ப்பு.

தனுஷின் ‌‌ரீமேக் படமான குட்டியும் களத்தில் உள்ளது. தெலுங்கில் வெற்றி பெற்ற ஆ‌ரியா படத்தின் ‌‌ரீமேக்தான் குட்டி. ஸ்ரேயா நாயகி. மித்ரன் ஆர் ஜவஹர் படத்தை இயக்கியிருக்கிறார்.

சிபி வில்லனாக நடித்திருக்கும் நாணயமும் போட்டியில் கலந்து கொள்கிறது. பிரசன்னா ஹீரோவாக நடித்திருக்கும் இப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. எஸ்.பி.பி.சரண் தயா‌ரித்திருக்கிறார்.

எதிர்பார்ப்புக்கு‌ரிய இன்னொரு படம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம். 38 வருடங்களுக்கு பிறகு வரும் கௌபாய் படம். சிம்புதேவன் இயக்கியிருக்கிறார். கௌபாய் உலகை காட்சிப்படுத்தும் மெகா அரங்குகள் சுவாரஸியமானவை. லாரன்ஸ், பத்மப்‌ரியா, சந்தியா, லட்சுமிராய், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், மனோரமா, இளவரசு என்று பெ‌ரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது.

வசந்தபாலனின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான அங்காடித் தெருவும் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. ஐங்கரன் தயா‌ரித்திருக்கும் இந்தப் படம் தி.நகர் பகுதியிலுள்ள கடையில் சேல்ஸ் பி‌ரிவில் வேலை செய்யும் இருவரைப் பற்றியது. மகேஷ், அஞ்சலி நடித்துள்ளனர்.

இந்த ஐந்து படங்களும் பொங்கலுக்கு திரைக்கு வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஐந்தும் வெற்றி பெற வேண்டும் என்பதே சினிமா ஆர்வலர்களின் விருப்பம்.
மேலும் அறிய

> நமிதா விலைமாதுவாக

நமிதா அதிகம் எதிர்பார்த்த ஜெகன்மோகினி காலைவா‌ரிவிட்டதில் அவருக்கு ரொம்பவே வருத்தம். 2010ல் அவருக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை, அழகான பொண்ணுதான்.

ஜெகன்மோகினி மாதி‌ரி இதுவும் ஹீரோயின் ஓ‌ரியண்ட் சப்ஜெக்ட். நமிதாவை 18 வயசு இளைஞன் காதலிப்பதுதான் கதை.

இந்தப் படத்தில் விலை மாதுவாக நடித்திருக்கிறார் நமிதா. க‌ரீனா கபூர் தொடங்கி உள்ளூர் பாரதி வரை விலை மாதுவாக நடித்த அனைவருக்கும் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. ஆக, தனக்கும் அந்த அதிர்ஷ்டம் அடிக்கும் என நம்புகிறார் நமிதா.

தனம் படத்தில் விலை மாதுவாக நடித்த சங்கீதா சேலை கட்டி நடித்ததுபோல், பல காட்சிகளில் சேலையில் தோன்றுகிறாராம் நமிதா. விலை மாது கேரக்டரைவிட இதைதான் ஆச்ச‌ரியமாகப் பேசுகிறார்கள் இன்டஸ்ட்‌ரியில்.
மேலும் அறிய

> ஆயிரத்தில் ஒருவனுக்கு U/A

பொங்கலுக்கு வெளியாகிறது ஆயிரத்தில் ஒருவன். படத்தின் பிரமாண்ட ட்ரெய்லரே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் சென்சாரையும் சிலாகித்து பேச வைத்திருக்கிறது படம்.

ஆயிரத்தில் ஒருவனைப் பார்த்த சென்சார் உறுப்பினர்கள் படத்தின் தரத்தை வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள். படத்தில் இருக்கும் வன்முறை காரணமாக ‘ஏ’ சான்றிதழ்தான் முதலில் கொடுக்க நினைத்தார்களாம். பிறகு செல்வராகவன் கேட்டுக் கொண்டதால் படத்தின் தரம் கருதி ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.

கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியாவுடன் பார்த்திபனும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஸ்டீபன் ஸ்பீல்பெர்கின் ‘இண்டியானா ஜோன்ஸ்’ சீரிஸ் தரத்துக்கு இணையாக இப்படம் உருவாகியிருக்கிறதாம்.
மேலும் அறிய

> மர்மயோகி சன் பிக்சர்ஸில்?

மிஷ்கினுக்கு கமல் கல்தா கொடுத்துவிட்டதாக பரவலாக பேச்சு. என்ன நடந்தது அவர்களுக்குள்?

நந்தலாலாவுக்குப் பிறகு சேரன் நடிக்கும் யுத்தம் செய் படத்தை இயக்குவதாக இருந்தார் மிஷ்கின். சேரனும் சின்சியராக இந்தப் படத்துக்காக தாடி மீசை எல்லாம் வளர்த்தார்.

இந்நிலையில் மிஷ்கினின் நந்தலாலா படத்தைப் பார்த்த கமல், இணைந்து பணிபு‌ரியலாம் என்று சொல்ல, சேரனை கழற்றிவிட்டு கமலுக்கு கதை பண்ணத் தயாரானார் மிஷ்கின். புத்தர் காலத்து ச‌ரித்திர கதை என்பதுவரை முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் மிஷ்கின் ஸ்கி‌ரிப்ட் தயார் செய்ய காலம் பிடிக்கும், அந்த இடைவெளியில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் காமெடி படம் ஒன்றில் கமல் நடிப்பதாக செய்தி வெளியானது. படத்தை உதயநிதி ஸ்டாலின் தயா‌ரிப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதுவரை எல்லாம் ச‌ரியாகதான் போய்க் கொண்டிருந்தது. கடந்த சில நாட்களாக கோடம்பாக்கத்தை சுழற்றியடிக்கும் சில வதந்திகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்துக்குப் பிறகு மீண்டும் மர்மயோகியை தூசு தட்ட இருக்கிறாராம் கமல். பைனான்ஸ் பிரச்சனையால் நின்றுபோன படத்துக்கு பணம் பம்ப் பண்ண முன் வந்திருக்கிறதாம் சன் பிக்சர்ஸ். எந்திரன் படத்துக்குப் பிறகு இந்த புராஜெக்ட் டேக்ஆஃப் ஆகும் என்கிறார்கள் நம்பிக்கையுடன்.

அதேநேரம், கே.எஸ்.ரவிக்குமார் படத்துக்குப் பிறகு கௌதம் இயக்கும் படத்துக்கு கமல் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் எது உண்மையாக இருந்தாலும் மிஷ்கினுக்கு கமல் டாட்டா காட்டியது நிஜமாகிவிடும் என்கிறார்கள். மிஷ்கின் தரப்பு இதுபற்றி எதுவும் கூறாதது சந்தேகத்தை வலுப்படுத்தியிருக்கிறது.
மேலும் அறிய

Saturday, January 2, 2010

> முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌ம்

ம‌னிதனு‌க்கு ந‌ம்‌பி‌க்கை‌க்கு அடு‌த்த படியாக முதுகெலு‌ம்பு ‌மிகவு‌ம் அவ‌சியமா‌கிறது. ஒருவ‌ன் ‌நி‌மி‌ர்‌ந்து நட‌ப்பத‌ற்கே முதுகெலு‌ம்புதா‌ன் காரணமாக அமை‌கிறது.

‌ம‌னித‌னி‌ன் ‌பி‌ன்புற இடு‌ப்‌பி‌ல் துவ‌ங்‌கி மே‌ற்புற‌ம் முகுள‌ம் வரையான த‌ண்டுவட‌ம் ஆ‌ற்று‌ம் ப‌ணி அ‌ரியது.

மூளை‌யி‌ன் செயலை‌ப் போலவே இத‌ன் செய‌ல்களு‌ம் மு‌க்‌கியமானவை. இத‌ன் மே‌ல் முனையான முகுள‌ம் உண‌ர்வுகளை கட‌த்துவ‌திலு‌ம் நர‌ம்பு ம‌ண்டல செய‌ல்பா‌ட்டிலு‌ம் மு‌க்‌கிய ப‌ங்கு வ‌கி‌க்‌கிறது.

த‌ண்டுவட‌ம் இ‌ல்லா‌வி‌‌ட்டா‌ல் ம‌னித‌ன் துவ‌ண்டு போ‌ய்‌த்தா‌ன் இரு‌ப்பா‌ன். த‌ண்டுவட‌ம் செய‌ல் இழ‌ந்தாலு‌ம் பெரு‌ம்பாலான ப‌ணிக‌ள் பா‌‌தி‌க்கு‌ம்.

மூளை‌யி‌ன் க‌ட்டளைகளை‌ப் பெ‌ற்று உண‌ர்வுகளை‌க் கட‌த்து‌ம் ப‌ணியை முதுகெலு‌ம்புக‌ள்‌ ‌மிக‌ச் ‌சிற‌ப்பாக செ‌ய்‌கி‌ன்றன.

முதுகெலு‌ம்‌பி‌ல் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்ப‌ட்டா‌ல் கைகா‌ல்களை அசை‌க்க முடியாத ஜட ‌நிலையை ம‌னித‌ன் அடையு‌ம் வா‌ய்‌ப்பு‌ம் உ‌ள்ளது.
மேலும் அறிய

> மார்பு வலி குறைய கை மரு‌த்துவ‌ம்

பச்சரிசியுடன் பாதியளவு உளுந்து, சிறிது தேங்காய் கூட்டி அரைத்து, மூன்றையும் கஞ்சி போலக் காய்ச்சி சர்க்கரையும், ஏலக்காயும் சேர்த்து குடித்து வர மார்பு வலி குணமாகும்.

உளுந்தம் மாவை களியாக கிண்டி சாப்பிட்டு வர நெஞ்சு வலி தீரும். மார்பு படபடப்பு குணமாகும். உடல் பலமடையும்.

உளுந்தம் பருப்பை வறுத்து, அதனுடன் மிளகு, சீரகம், சேர்த்து பொடியாக்கி நெல்லிக்காய் பொடி சம அளவு சேர்த்து சாப்பிட்டு வர இளமையும், சுறுசுறுப்பும் உண்டாகும். இதனை இட்லி, தோசை போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ளும் பொடியாக தினமும் பயன்படுத்தி வர சிறந்த பலன் கிடைக்கும்.

உளுந்தை இரவு நீரில் ஊற வைத்து மறுநாள் அதிகாலையில் இந்த நீரை அருந்தி வர சிறுநீர் பெருகும். நீர் கட்டு, நீர்கடுப்பு, நீர் எரிச்சல், முதலியவை குணமாகும்.

உளுந்தின் வேரை நிர்விட்டு மைபோல அரைத்து சூடாக்கி, பொறுக்கக் கூடிய சூட்டில் வைத்துக் கட்டிவர மூட்டு வீக்கம் குணமாகும்.
மேலும் அறிய

Friday, January 1, 2010

> 2010 MICROSOFTக்கு சவாலாக அமையுமா

தொழில்நுட்ப வளர்ச்சியில் ஈடுபட்டு வர்த்தகத்தை மேற்கொண்டு இயங்கும் எந்த ஒரு நிறுவனமும், தொடர்ந்து சிக்கல்களையும் சவால்களையும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கும். இந்த வகையில் உலகின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாப்ட் சவால்களைச் சந்தித்த வண்ணம் உள்ளது அனைவரும் அறிந்ததே.

2009 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தன் கட்டமைப்பில் பல சிக்கல்களை மைக்ரோசாப்ட் சந்தித்தது. இதன் பல பிரிவுகளில் அலுவலர்கள் வெளியே அனுப்பப்பட்டனர். இதன் காலாண்டு வருமானம் முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் மிகவும் குறைவாக இருந்ததாக அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் ஆண்டின் இறுதியில் விண்டோஸ் 7 கை கொடுக்க, மைக்ரோசாப்ட் தலை நிமிர்ந்தது. சிஸ்டம் பொதுமக்களுக்கு வெளியாவதற்கு முன் வெளியிட்ட சோதனைத் தொகுப்புகளே இதன் இமேஜை நிமிர்த்தின. அக்டோபரில் விண்டோஸ் 7 வெளியானபோது மைக்ரோசாப்ட் உறுதியான தளத்தில் இருந்தது.

இதன் சர்ச் இஞ்சின் பிங் மிக அருமையான இலக்குகளை முன்வைத்து மற்றவற்றிலிருந்து மாறுபட்ட இயக்கத்தைக் கொடுத்து வெற்றி பெற்றது. இதன் வழி விளம்பர வருமானமும் இதற்குக் கை கொடுத்தது. இதன் கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவில் வெளியான அஸூர் இன்னும் உறுதியான எதிர்காலத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு வழங்கியது.

இருந்தாலும் மைக்ரோசாப்ட் போன்ற உலகளாவிய பெரிய நிறுவனம் மேலும் பல காரணங்களால் பாதிக்கப்படுவது இயற்கையே. உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மைக்ரோசாப்ட் தப்ப இயலவில்லை. தற்போது பன்னாட்டளவில் பொருளாதார நிலை சீரடைந்து வருவதால், 2010 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குத் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் ஆண்டாகத் தான் இருக்கும்.

மொபைல் பிரிவு

மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 6.5 மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம், இங்கும் தன் வலிமையை நிரூபித்து நிலைக்க முடியும் என்று எண்ணியது. ஆனால் அது எடுபடவில்லை. ஏற்கனவே உறுதியாக இயங்கிக் கொண்டிருக்கும் பல நிறுவனங்களுக்குப் போட்டியாக நுழைந்து வாடிக்கையாளர்களைத் தன் பக்கம் இழுப்பது, வெற்றி பெற முடியாத சவாலாகவே மைக்ரோசாப்ட் 2009ல் கண்டது.

ஆர்.ஐ.எம்., பால்ம், ஆப்பிள் ஆகிய நிறுவனங்களின் வெற்றி, வாடிக்கையாளர்கள் ஒரே நிறுவனத்திலிருந்து தங்கள் போன்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தியது. மைக்ரோசாப்ட் நிறுவனமும் ப்ராஜக்ட் பிங்க் என்ற பெயரில் தன் மொபைல் போன்களை தயாரிக்கும் திட்டம் ஒன்றை அறிவித்தது. அதில் ஸூன் சர்வீஸ் இணைக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப் பட்டது. அப்படியானல் இன்னும் ஓராண்டு நாம் அதற்காகக் காத்திருக்க வேண்டும். ஐ போன்,பிளாக்பெரி, பால்ம் மற்றும் கூகுள் ஆண்ட்ராய்ட் ஆகியவற்றுடன், மொபைல் சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் போட்டியில் இயங்க முடியவில்லை. நல்ல ஒரு பார்ட்னர் நிறுவனத்துணையுடன் சாப்ட்வேர், சர்வீசஸ் ஆகிய இரண்டுடனும் இறங்கினால் தான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் மொபைல் சந்தையில் இயங்க முடியும். இல்லையேல் இந்தப் பிரிவை மறக்க வேண்டியதுதான்.

விண்டோஸ் 7

2007–09 ஆம் ஆண்டுகள் மைக்ரோசாப்ட்டிற்கு மிகுந்த சோதனையைக் கொடுத்தது. இதற்குக் காரணம் மக்களிடையே எடுபடாமல், பல பிரச்சினைகளை வாடிக்கையாளர் களுக்குக் கொடுத்து வந்த விண்டோஸ் விஸ்டா இயக்கத்தொகுப்பாகும். ஆனால் விண்டோஸ் 7 வந்தவுடன் அதில் விஸ்டாவின் இயக்கம் துளி கூட இல்லை என்ற செய்தியே கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு இனிப்பாக இருந்தது. தொடக்க விற்பனையும், விஸ்டா 7 குறித்து வந்த ஆய்வுக் குறிப்புகளும் மைக்ரோசாப்ட் நிலையைத் தூக்கி நிறுத்தியது. 2010ல் இந்த நிலையைத் தொடர்ந்து தக்க வைப்பதுதான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலையாய பணியாக இருக்கும்.

எம்.எஸ். ஆபீஸ்

மைக்ரோசாப் நிறுவனத்திற்கு, மற்ற எந்த சாப்ட்வேர் தொகுப்பினைக் காட்டிலும் அதிக வருமானம் தரும் தொகுப்பு அதன் ஆபீஸ் தொகுப்புதான். இலவசமாகக் கிடைக்கும் ஓப்பன் ஆபீஸ் மற்றும் ஸோஹோ தொகுப்புகள் ஆபீஸ் தொகுப்பிற்கு போட்டியா என்பது இன்னும் கேள்விக் குறிதான். சர்வர்களைக் கொண்டு அலுவலகப் பணிகளை இயக்கி வரும் பெரிய நிறுவனங்கள் தற்போது எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பைத்தான் விரும்புகின்றன. ஆனால் கூகுள் தற்போது மிக வேகமாகக் கொண்டு வரும் கிளவுட் கம்ப்யூட்டிங் அப்ளிகேஷன்கள், டேட்டா ஸ்டோரேஜ் போன்ற விஷயங்கள், மைக்ரோசாப்ட் நிலையைச் சற்று அசைத்துப் பார்க்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே அடுத்த 2010 ஜூனில் வெளியாக இருக்கும் ஆபீஸ் 2010 கூகுள் தரும் அப்ளிகேஷன்களைச் சமாளிக்க வேண்டியதிருக்கும். எனவே தன்னுடைய ஆபீஸ் தொகுப்பு எப்படி மற்றவற்றைக் காட்டிலும் சிறந்தது என்று காட்ட வேண்டிய சவாலை மைக்ரோசாப்ட் நிறுவனம் சந்திக்க வேண்டியதிருக்கும்.

பிங் சர்ச் இஞ்சின்

வரும் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் சர்ச் இஞ்சின் இலக்கு மிக எளிதான ஒன்றாக இருக்கும். விளம்பர வழி வருமானத்தைப் பெருக்குவதும், சர்ச் இஞ்சின் பிரிவில் பெரிய அளவில் இடம் பெறுவதும் ஆகும். தற்போது இந்தப் பிரிவில் 9.9% இடத்தை பிங் கொண்டுள்ளது. யாஹூவுடன் கொண்டுள்ள ஒப்பந்தம் மற்றும் பிங் தொடர்ந்து கொடுத்து வரும் புதிய வசதிகள் நிச்சயம் 2010 ஆம் ஆண்டில் இதனை உயரத்திற்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.

எழுதியவர் : KarthiK
மேலும் அறிய

> விநியோகஸ்தர் சசிகுமார்

தொட்டதெல்லாம் பொன் என்பார்களே... சசிகுமாருக்கு அப்படிதான் நடக்கிறது. இயக்குனராக, நடிகராக, தயா‌ரிப்பாளராக, விநியோகஸ்தராக எந்தத் துறையில் கால் பதித்தாலும் வெற்றி இவரது காலடியில்.

புதிய படத்தை இயக்குவதில் பிஸியாக இருப்பவர் 'கதை' படத்தின் மதுரை விநியோக உ‌ரிமையை வாங்கியிருக்கிறார். இதனால் கதைக்கு ஸ்டார் அந்தஸ்து கிடைத்திருக்கிறது.

எழுத்தாளன் ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள்தான் 'கதை' படத்தின் கதை. ஷான்குமார் என்ற அமெரிக்க ‌ரிட்டர்ன் படத்தின் ஹீரோ. மோகமுள் படத்தில் நடித்த அபிஷேக் படத்தை இயக்கியிருக்கிறார். நந்தா, மௌனம் பேசியதே படங்களை தயா‌ரித்த ராஜன் ராதாகிருஷ்ணன் தயா‌ரிப்பு.

முக்கியத்துவம் இல்லாமல் இருந்த இந்தப் படத்தின் விற்பனை சசிகுமார் மதுரை ஏ‌ரியாவை வாங்கிய பிறகு சூடு பிடித்திருக்கிறது. சசிகுமா‌ரின் அதிர்ஷ்டம் தங்களையும் அடிக்காதா என்ற ஆசைதான் காரணம். எப்படியோ... கதை தயா‌ரிப்பாளரின் கல்லா நிரம்பத் தொடங்கியிருக்கிறது.
மேலும் அறிய

> கமல் விஜய் T.Vயில்

விஜய் டிவி உலகநாயகன் கமல் 50 நிகழ்ச்சியை நடத்திய பிறகு அந்த சேனலின் விருப்பத்துக்கு‌ரியவராக மாறியிருக்கிறார் கமல். தொலைக்காட்சி வந்த நேரம், தொலைக்காட்சியால் சினிமா அழிந்துவிடும் என்று திரைத்துறையினர் அனைவரும் போராட்டம் நடத்தினர். அதில் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்தவர் கமல் மட்டுமே. எந்த டெக்னால‌ஜியையும் ஒதுக்கக் கூடாது, ஒதுக்க முடியாது என்பது கமலின் நிலைப்பாடு.

தொலைக்காட்சியை சினிமாவுக்கு சாதகமாகப் பயன்படுத்தியதில் கமலுக்கு கணிசமான பங்குண்டு. சரி, விஷயத்துக்கு வருவோம். கமலை வைத்து ஒரு புரோகிராம் தயா‌ரிக்கும் தனது விருப்பத்தை விஜய் டிவி கமலிடம் தெரிவித்திருக்கிறது. ஹிந்தியில் அமிதாப் நடத்தினாரே குரோர்பதி நிகழ்ச்சி... அதுமாதி‌ரி ஒரு நிகழ்ச்சியாம்.

இந்த ஐடியாவுக்கு கமலும் சம்மதம் தெரிவித்திருப்பதாக செய்தி கசிந்திருக்கிறது. 'குரோர்பதி' உச்சத்தில் இருந்த போது, அமிதாப் மாதி‌ரி நிகழ்ச்சி நடத்துவீர்களா என்று கமலிடம் கேட்டதற்கு, அதுதான் அமிதாப் பண்ணுகிறாரே என்று பதிலளித்தவர், எதுமாதி‌ரியும் இல்லாமல் புதிய நிகழ்ச்சி என்றால் யோசிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.

அந்த யோசனையை விஜய் டிவிக்காக மீண்டும் துசு தட்டியிருக்கிறாராம் கமல். இது உண்மையா என்பது புத்தாண்டில் தெரிந்துவிடும்.
மேலும் அறிய

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.